Delhi Elections Arvind Kejriwal : மோடியைப்போல் கெஜ்ரிவாலும் அதற்கு மாற்று இல்லை (TINA) என்ற காரணியை எதிர்த்தார். 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி செய்ததுபோல், பாஜகவும் அதன் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர் கெஜ்ரிவாலுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.
2019ம் ஆண்டு மே மாதம் ஒரு நாடாளுமன்ற இடத்தைக்கூட பிடிக்காத ஆம்ஆத்மி கட்சி ஒன்பதே மாதங்கள் கழித்து பிப்ரவரி மாதம் 2020 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்திருப்பது, அது நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் பாடங்களை கற்றுள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் மோடிபோல் பிரச்சாரம் செய்துள்ளதும் தெரிகிறது.
ஆம்ஆத்மி கட்சி மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் பல இலவச சலுகைகளை வழங்கியது. கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தியது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இணக்கம், அரசு பள்ளிகளின் தரம், உள்கட்டடைப்பை உயர்த்துவது, மொஹாலா கிளினிக் வடிவில் வீட்டிற்கு அருகிலேயே சுகாதார மையங்கள் போன்ற திட்டங்களை அமல்படுத்தியது.
அரவிந்த கெஜ்ரிவாலிடம் மக்கள் கேள்வி கேட்டும் வகையிலான கூட்டங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி, கெஜிரிவாலை உயர்த்திக்காட்டும் பிரச்சாரம் நடைபெற்றது. கெஜிரிவாலை உயர்த்திக்காட்டும் படங்கள், விடியோக்கள், விளம்பரபதாகைகள், ஸ்லோகன்கள் ஆகியவை அவர்தான் ஆம்ஆத்மி மற்றும் டெல்லியை சேர்ந்தவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டன. நன்றாக முடிந்தது ஐந்து ஆண்டுகள், தொடர்ந்து செல்லுங்கள் கெஜ்ரிவால் போன்ற ஸ்லோகன்கள் மக்களை கவரும் வகையிலும், வாக்காளர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கும் வகையிலும் இருந்தன.
கெஜிரிவாலின் பிம்பம் ஒரு போராளியைப்போல் மாற்றப்பட்டது. அதாவது, நரேந்திர மோடியோ, கவர்னரோ, தேர்தல் ஆணையமோ, யாரிடமும் நியாயத்திற்காக சண்டைபோடுபவராக காட்டப்பட்டது. மேலும் உண்மையான அரசில் நம்பிக்கை கொண்டவர்போல் சித்தரிக்கப்பட்டதுடன், எவ்வித சர்சைகளிலும் சிக்காதவராக இருந்தார். அதனாலேயே அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் ஷாகின் பாக் குறித்தும் வாய் திறக்காதவராகவே இருந்தார்.
தீவிரவாதி என்று தாக்கியபோதும், நான் டெல்லியின் மைந்தன் என்று பாசம் காட்டினார். மோடி எப்படி தன் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் குஜராத் மற்றும் 5 கோடி குஜராத் மக்களின் மீதான தாக்குதல் என்று மாற்றினாரோ, அதேபோல் தன் மீதான குற்றச்சாட்டுக்களை கெஜ்ரிவால், டெல்லி மைந்தன் மீதான குற்றச்சாட்டுகளாக திசை திருப்பினார்.
பாஜவின் பிரச்சாரத்தை எதிர்க்க கெஜ்ரிவால் முஸ்லிம்களுக்கு ஆதரவாளராக சித்தரிக்கப்பட்டார். அவரது படங்களை முஸ்லிம்களில் அணியும் தொப்பிகளில் இடம்பெறச்செய்து, அவரது வீடியோக்களை, அவர் முன்னிலையில் ஆம்ஆத்மியின் சர்ச்சைக்குரிய எம்எல்ஏ அமானதுல்லா கான், இமாம்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தார். அதே நேரத்தில் கெஜ்ரிவால், அனுமன் கோயிலுக்கு சென்று, அனுமன் ஸ்லோகங்களை உச்சரித்துக்கொண்டு இந்துக்களையும் பகைத்துக்கொள்ளவில்லை. வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கீ ஜே என்று தனது பிரச்சாரங்களின் இறுதியில் கூறி தனது சேதப்பற்றையும் நிரூபிக்க தவறவில்லை.
2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மோடியை சாடிக்கொண்டிருந்த கெஜ்ரிவால், 2019ம் ஆண்டு ஆக்ஸ்ட்டுக்கு பின்னர் அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு, மோடி மத்தியிலும், ஆம்ஆத்மி டெல்லியிலும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டவராக இருந்தார். 2019ம் ஆண்டு தேர்தலில் மோடிக்கு வாக்களித்தவர்கள்தான் 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ஆம்ஆத்மிக்கு வாக்களிப்பார்கள் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.
மாநிலத்தில் ஓரங்கட்டப்பட்ட காங்கிரஸ் மற்றும் அதன் ஒட்டுமொத்த தோல்வி ஆம்ஆத்மி கட்சிக்கு தேர்தலில் உதவியது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்ற சிறுபான்மையினர், சேரிகளில் வசிப்பவர்கள், காலனிகளில் வசிப்பவர்கள், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் என்ற காங்கிரசின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கியும் ஆம்ஆத்மிக்கு மாறியது. முஸ்லிம்கள் பாஜகவை தோற்றகடிப்பதற்காக ஆம்ஆத்மிக்கு வாக்களித்தனர்.
பாஜகவின் அரசியலை பிடிக்காதவர்கள் கெஜ்ரிவாலுக்கு வாக்களித்தார்கள் என்பதற்கு பதில் இல்லை. ஆம்ஆத்மியின் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா வெறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால், ஆம்ஆத்மி எம்எல்ஏவான வகுப்புவாத கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட, டெல்லி தலைமை செயலாளரை நடுராத்திரியில் தாக்கிய வழக்கில் தொடர்புடைய, மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அமானதுல்லா கான் ஓக்லாவில் இருந்து 70 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு கணிசமான முஸ்லிம் வாக்குகள் உள்ளது.
பாஜவின் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியான சேரியில் வசிப்பவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்பது தாமதமாக வந்தது மட்டுமின்றி அது பயனாளிகளை சென்றடையவில்லை. மற்றொரு பெரிய வாக்குறுதியான 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகள் முறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும், பாஜகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறவில்லை.
பாஜக குறித்து பேசுகையில், முதலமைச்சர் வேட்பாளரின்றி பாஜவின் அமைப்பு ஒழுங்கற்று இருந்தது. இந்த சாதுர்யமான எதிரியை வீழ்த்த தெளிவான திட்டம் அதனிடம் இல்லை. மோடியைப்போல் கெஜ்ரிவாலும் அதற்கு மாற்று இல்லை (TINA) என்ற காரணியை எதிர்த்தார். 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி செய்ததுபோல், பாஜகவும் அதன் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர் கெஜ்ரிவாலுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.
டெல்லி முனிசிபல் கார்ப்ரேஷனின் ஊழல் மற்றும் அதன் திறனற்ற தன்மையும் பாஜகவுக்கு பாதகமாக அமைந்தன. தெளிவான பார்வையில்லாமல் 3 டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்களையும், 7 எம்பிக்களையும் வைத்திருந்தும் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கடைசியாக அமித்ஷா வந்தவுடன், ஷாகின் பாக் பிரச்னை கவனம் பெற்றது. இந்த சூறாவளி பிரச்சாரம் குறைவானதாகவும், மிகத்தாமதமானதாகவும் இருந்தது. இது 2015ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்த வாக்குவிகிதத்தை 2020ல் 38 ஆகவும், ஏற்கனவே இருந்த 3 இடத்தை 8ஆகவும் உயர்த்தியுள்ளது. ராமர் கோயில், குடியுரிமை திருத்தச்சட்டம், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஆகிய தேசிய பிரச்னைகளுக்கான பொதுவாக்கெடுப்பாக இதை கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தேர்தல் டெல்லிக்கும், டெல்லிவாசிகளுக்குமான தேர்தல் என்று வாக்காளர்களை திருப்திப்படுத்துவதில் கெஜ்ரிவால் வெற்றிபெற்றுள்ளார். இதே தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடந்திருந்தால், பாஜகவே வெல்லும், மோடியே மத்தியில் மறுக்கவியலாத தலைவராக இருந்திருப்பார் என்று ஒரு கருத்துகணிப்பு தெரிவித்திருந்தது.
மத்தியில் மோடி, டெல்லியில் கெஜ்ரிவால் என்ற கருத்தை கெஜ்ரிவால் புத்திசாலித்தனமாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டுரையை எழுதியவர் ஒரு சட்ட வல்லுநர்
தமிழில்: R.பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.