Sanjaya Baru
டிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பனிப்போருக்கு முந்தைய காலத்தின் அமெரிக்க அதிபர் முதன்முதலாக இந்தியா வந்த 20ம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அதற்கு ஒரு மாதம் முன்னதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இந்தியா வருகிறார். 2000மாவது ஆண்டு மார்ச் மாதத்தில் பில் கிளிண்டன் வந்தபோது, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு உறவில் புதிய கட்டத்தை துவங்கிவைத்தார். இந்தியாவின் அணு சக்தியை மறைமுகமாக ஆதரிப்பது, காஷ்மீர் பிரச்னையை மொத்தமாக புதைக்கும் வகையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள கட்டுப்பாட்டு கோட்டை, சர்வதேச எல்லையாக கண்காணிப்பது, இந்தியர்களுக்கு நுழைவு விசாக்களை அனுமதிப்பது ஆகியவை அதன் சாதகங்கள் ஆகும். இதன் மூலம் கணிசமான அளவு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பனிப்போர் காலத்திற்கு பின் அமெரிக்க சமூகத்தில், இந்தியாவின் பங்கு குறித்த புதிய மதிப்பீட்டின் பின்னணி மற்றும் சீனா எழுச்சியின் பின்னணி ஆகியவற்றிற்கு எதிராக கிளின்டனின் வருகை இருந்தது. இந்த புதிய சிந்தனையை காண்டோலிசா ரைஸ் என்பவர், வெளியுறவுத்துறை தொடர்பான பத்திரிக்கையில் ஒரு முக்கியமான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஜனநாயக இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் விருப்பம் எனில், அதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சீனாவின் திடீர் எழுச்சி, முஸ்லிம் அடிப்படைவாதம், ஜிகாதி தீவிரவாதம் புவி அரசியல் தொடர்பாக இந்தியாவின் பொருளாதாரத்தை உலகமயமாக்கலை நோக்கி செலுத்தியது. இந்த புதிய சிந்தனையின் தாக்கத்தால், அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதில் அடுத்த படியை எடுத்துவைத்தார். அணுசக்தி துறையை இருநாடுகளும் சேர்ந்து உயர்த்துவதற்கு முயற்சி எடுத்தார். அது வெளிப்படையாக இந்தியாவை அணு ஆயுத நாடாக அங்கிகரித்தது. அமெரிக்க அதிபர்களான கிளிண்டன் மற்றும் புஷ் ஆகியோர் இந்திய அமெரிக்க இருதரப்பு உறவை அடிப்படையில் மாற்றியமைத்தனர்.
பாரக் ஒபாமா மட்டுமே தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை இந்தியா வருந்துள்ள ஒரே அமெரிக்க அதிபர் ஆவார். அவரது முதல் வருகை, அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சாதகமாக வாக்களிக்காமல், அவர் செய்த முந்தைய தவறுகளை சரிசெய்யவே உதவியது. ரிச்சர்ட் ஹால்புரூக்கிடம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்குமாறு அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியது. அவரின் இரண்டாவது வருகை, முக்கியத்துவம் பெற்றுவரும், ‘மக்களுக்காக மக்கள்’ உறவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக இருந்தது. இந்திய பாதுகாப்பு துறையின் விற்பனையை அதிகரிப்பது என்ற குறிக்கோளுடனும், பிரதமர் மோடி பாதுகாப்பு துறைக்கான கொள்முதலுக்கு அதிகம் செலவழித்தற்காகவும் இருந்தது. அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின்போது, அமெரிக்க காங்கிரசை சேர்ந்தவர்கள், இதை 126க்கு 123 ஒப்பந்தம் என்று அழைத்தனர். ஏனென்றால், 123 ஒப்பந்தத்திற்கு அவர்கள் சாதகமாக வாக்களிப்பார்கள். அதற்குபதில் இந்தியா 126 போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிக்கொள்ளும். அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதற்கிடையில் பிரான்சுக்கு ரபேல் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஆனால் அமெரிக்க போர் விமானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
ஒபாமா இறுதியாக புஷ்ஷின் மாதிரியை ஏற்றுக்கொண்டார். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே புதிய உறவு ஏற்பட அடித்தளம் அமைத்துக்கொடுத்த பெருமை அதிபர் புஷ்ஷையே சேரும். இருதரப்புக்கும் நன்மை ஏற்படக்கூடிய கட்டமைப்பை புஷ் உருவாக்கியிருந்தார். ஆனால், வாஷிங்டன்னுக்கு டிரம்ப் வந்த பின்னரும், இந்தியாவில் இந்து பெருபான்மைவாதம் கடைபிடிக்க துவங்கியபின்னரும், இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டது. எல்லா வர்த்தகத்திலும், டிரம்பின் “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” கொள்கை, இந்தியாவின் சிறப்பு மற்றும் வித்யாசமானவைக்கு இடம் கொடுக்கவில்லை. 60 ஆயிரம் டாலர் ஆண்டு தேசிய வருமானம் கொண்ட அமெரிக்கா, ஆண்டு தேசிய வருமானம் தோராயமாக 2 ஆயிரம் டாலர் கொண்ட இந்தியாவிற்கு, வளர்ந்த பொருளாதாரம் கொண்ட அமெரிக்கா வர்த்தக கொள்கைகளில் எவ்வித சலுகையும் கொடுக்கவில்லை. சீனாவின் 15 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், இந்தியாவின் 3 டிரில்லியன் டாலர் வர்த்தக்தை சேர்த்துப்பார்ப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை செய்வதுமாகும். பணக்காரர்களின் முன்னேற்றம் குறித்த இவர்களின் விமர்சனங்களே இந்தியா வளர்கிறது என்ற போலி நம்பிக்கையைக்கொடுக்கிறது.
புஷ் மற்றும் ரைஸ் ஆகியோரின் சித்தாந்தத்தை ரிபப்ளிகன் கன்சர்வேட்டிவ் கட்சியினரோ அல்லது டெமாக்ரெடிக் லிபரல்ஸ் கட்சியினரோ ஆதரிக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. இதில் சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. தற்போது இருநாடுகளின் வலதுசாரிகளிடமும் இந்திய அமெரிக்க உறவு சிக்கிக்கொண்டது. இந்த சூழல் டிரம்பின் வருகையால் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய – பாகிஸ்தான் உறவுகளில் கிளிண்டன் – புஷ் கட்டமைப்பை விட்டு விலகிச்சென்று. ஒபாமாவின் முதல் அணுகுமுறையான, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவையும் நுழைக்க வேண்டும் என்பதற்கு அருகில் சென்றார். ஒபாமாவை முதலில் இயக்கியவைகளுக்கும் டிரம்பின் நோக்கங்களுக்கும் வித்யாசம் இல்லை. குறிப்பாக, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயோன சர்ச்சைக்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. டிரம்பின் முயற்சிகள் பெரிய பாதகத்தை ஏற்படுத்திவிடாது என்று இந்தியா நம்புகிறது.
இந்தியாவில் அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அமெரிக்கா செல்லும் இந்தியார்களுக்கான விசா அதிகரிப்பு குறித்து அதிகம் பேசப்படும் ஏற்படுகிறது. இவை இரண்டும் அமெரிக்க கார்பரேட்களின் ஆர்வத்தினால் நடைபெறுகிறது. மோடி அரசின் வர்த்தக கொள்கையால், எந்த சலுகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தியா, அமெரிக்காவிற்கு செய்யும் நன்மை என்னவெனில், பாதுகாப்பு சாதனங்களை அதிகம் வாங்கவேண்டும் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை சிறிது எளிதாக்க வேண்டும். இந்த அரசியல் சூழல் மாறினாலும், இந்திய, அமெரிக்க வர்த்தக உறவில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருசாராருக்கும் சாதகமான சூழ்நிலையை அமெரிக்கா ஏற்படுத்துகிறது. ஆனால், இது நடுநிலைமை கிடையாது.
இது அமெரிக்க வாழ் இந்தியர்களை சிதறிப்போக வைக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகளையும், அங்குள்ள இந்தியர்களையும், இந்திய மூளைகளை இந்தியாவில் இருந்து எடுத்துக்கொள்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. இதை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவில் ஏற்பட்ட செல்வ இழப்பைப்போன்றது என்று தாதாபாய் நவ்ரோஜி19ம் நூற்றாண்டிலே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாததால், இந்திய திறமைசாலிகள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கர்கள் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றனர். இந்திய பணக்காரர்கள் இதை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவின் வளம் அங்கு செல்கிறது.
புஷ்-ரைஸ் ஆகியோரின் கொள்கை பனிப்போருக்கு பிந்தைய இந்திய அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் கொள்ளைகள் இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்ற முயற்சி செய்கின்றது. இந்த உறவை சமநிலையில் வைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. டிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரையை எழுதியவர் பிரதமருக்கு ஊடக ஆலோசகராக இருந்தவர்
தமிழில் : R. பிரியதர்சினி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.