இந்தியாவில் மந்தநிலை… அமெரிக்காவில் உயரும் பொருளாதாரம்! ட்ரம்பின் வெற்றி அது தான்!

குஜராத்தை அதிரவைக்கும் அளவில் அதிபர் டிரம்புக்கு தரப்பட்ட வரவேற்பு, காந்தியின் கருணைக்கும், கண்ணியத்திற்கும் அவமரியாதை செய்ததாகும்.

Coronavirus outbreak US announces 2.9 million dollars
Coronavirus outbreak US announces 2.9 million dollars

D. Raja

Donald Trump succeeded in boosting American economy : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க, குஜராத்தில், நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்ட அதிகப்படியான பொதுச்செலவு, கவனத்தை ஈர்ப்பதில் நாட்டம் காட்டியது போலவும், முற்றிலும் அமெரிக்காவுக்கு அடிமைபோன்ற தோற்றத்தை காட்டியதாகவும் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க, குஜராத்தில், நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்ட அதிகப்படியான பொதுச்செலவு, கவனத்தை ஈர்ப்பதில் நாட்டம் காட்டியது போலவும், முற்றிலும் அமெரிக்காவுக்கு அடிமைபோன்ற தோற்றத்தை காட்டியதாகவும் உள்ளது. டிரம்பின் வாகன அணிவகுப்பு பாதையில் இருந்த குடிசைப்பகுதிகளை மறைக்க சுவர் கட்டியது, மிகக்கேவலமான செயலாக கருதப்படுகிறது. வறுமையை ஒழிக்காமல், விருந்தினர்கள் வரும்போது அவர்கள் கண்களில் படாதவாறு, அவர்களுக்கு தெரியாமல், அதை மறைக்க முயல்வது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த செயல் இந்தியர்களின் கண்ணியத்தை குறைத்து காட்டுவதாகும்.

To read this article in English

இந்தியப் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மந்த நிலையை அடைந்து வரும் வேளையில், பொது நிதியை நினைத்தபோதெல்லாம் வெட்டியாக செலவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. புனித சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தபோது, பார்வையாளர்களின் புத்தகத்தில், அவர் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்திருந்தார். ஆனால் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை குறிப்பிட மறந்துவிட்டார். அதுவும் நாம் தற்போது காந்தியின் 150வது பிறந்த நாளை தேசம் முழுவதும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இது ஆசிரமத்தின் நெறிமுறைகள் மற்றும் பண்பாட்டு மரப்பிற்கு மாறாக இருந்தது. 1930 வரை சபர்மதிதான், சத்தியாகிரகத்தின் துவக்க இடம் மற்றும் சுதந்திர போராட்டத்தின் கருவாக இருந்தது. அந்த ஆண்டில்தான் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. குஜராத்தை அதிரவைக்கும் அளவில் அதிபர் டிரம்புக்கு தரப்பட்ட வரவேற்பு, காந்தியின் கருணைக்கும், கண்ணியத்திற்கும் அவமரியாதை செய்ததாகும்.

மேலும் படிக்க : ட்ரம்ப் விசிட் ஹைலைட்ஸ்: 36 மணி நேர பயணம் முடிந்து அமெரிக்கா கிளம்பினார்

அந்த முழு கண்கவர் வரவேற்பு வைபவமே ஏதோ கடவுளையோ அல்லது முதலாளியையோ அடிமைகள் வரவேற்பது போல் இருந்தது. அது இந்தியாவின் மதிப்பை குறைத்துக்காட்டுவதாக இருந்தது. மேலும், அகிம்சை பேசும் காந்தியின் மண்ணை தேர்ந்தெடுத்து, அமெரிக்கா இந்தியாவுக்கு பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை விற்பனை செய்யும் என்று டிரம்ப் பேசியது எவ்வளவு துயரமானது!

இந்த வேளையில் காந்தியின் வார்த்தைகளை நான் நினைத்து பார்க்கிறேன். அமெரிக்கர்கள் வந்து என்ன சேவை உங்களுக்கு நாங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டால், நான் கூறுவேன், நீங்கள் உங்கள் மில்லியன் டாலர்களை எங்கள் முன் ஆட்டினால், எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள் மற்றும் எங்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க வைக்கிறீர்கள். ஆனால், நான் பிச்சைக்காரனாக இருப்பது குறித்து கவலைகொள்ள மாட்டேன். உங்கள் பொறியாளர்கள் மற்றும் வேளாண் நிபுணர்களை எங்களுக்கு சேவை செய்யப்பணித்தால், அவர்கள் எங்களுக்கு தன்னர்வ பணியாட்களாக வரவேண்டு தவிர, எஜமானர்களாகவோ, கடவுளாகவோ அல்ல என்று 1936ம் ஆண்டில் மகாத்மா காந்தி எழுதியுள்ளார்.

மேலும் படிக்க : ட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு

காந்தியின் இந்த வார்த்தைகளையே, முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணனும், அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் இந்தியா வந்தபோது, தனது விருந்து உபச்சார விழாவில் பேசும்போது கூறினார். கிளிண்டன் வருகையின்போது, அதை வரவேற்ற வாஜ்பாய் அரசு, கிளிண்டனை கவரும் வகையில், டெல்லியை அழகுபடுத்தும் பணியை 24 மணி நேரமும் செய்தது. இந்தியாவின் வைஸ்ராய் டெல்லிக்கு வந்நதால் எப்படி வரவேற்கப்படுவார், அப்படியிருந்தது என்று ஒரு இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய துணைக்கண்டமே ஒரு ஆபத்தான இடம். காஷ்மீர் அணு ஆயுத போருக்கு சாத்தியமுள்ள இடம் என்று கிளிண்டன் கூறியிருந்தார். அதற்காக அப்போதைய குடியரசு தலைவர் ஆர். கே. நாராயணன் அவரை கண்டித்தார். மேலும் அவர், இதுபோன்ற ஆபத்தான, பீதியை ஏற்படுத்தக்கூடிய விளக்கங்கள், யார் அமைதியை குலைத்து, தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிக்கிறார்களோ அவர்களிடம் இருந்துதான் வரும். நாங்கள் முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள எங்களிடம் இருந்து அல்ல. ஆனால், மாறாக அதுபோன்ற வாக்குறுதியை அளிக்காதவர்களிடம் இருந்தும் கூட வரலாம்.

கிளிண்டன் பீதியை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளை பேசுகிறார் என்று வெளிப்படையாக கருத்து கூறிய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணனே, அனைவரும் கிளிண்டனை புகழ்ந்துகொண்டிருந்த வேளையில், இந்தியாவின் மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்றியவர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஹிரென் முகர்ஜி கூறினார். இப்போது கே. கே.ஆர்.நாராயணனைப்போல் யாரும் இந்தியா மற்றும் இந்தியர்களின் கண்ணியத்தை கட்டிக்காக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதோ, ஆனால், இந்திய பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும்போது, இந்திய அரசிடம் வர்த்தகம் செய்து, அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தின்கொண்டதில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி, அமெரிக்காவுடன் உலகளவிலான கூட்டு ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ளது. அது இந்தியாவின் சுதந்திர வெளிநாட்டுக்கொள்கையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது.

எனவே இந்தியர்களாகிய நாம், நாட்டையும், அதன் நலனையும் பாதுகாக்க ஒன்றிணையவேண்டும். அதுவே எதிர்காலத்திற்கு உள்ள ஒரே நம்பிக்கை.

டி.ராஜா, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்

தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் ஆர். பிரியதர்ஷினி

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Donald trump succeeded in boosting american economy when india is in a slowdown

Next Story
இன்றைய அரசியல் பேரினவாதத்தைவிட உணவின் வரலாறு ஏன் பெரிதாக உள்ளது?biryani, shaheen bagh, caa protests, டெல்லி, பிரியாணி, உணவு அரசியல், ஷாஹீன் பாக், delhi elections, food politics, delhi shaheen bagh, yogi adityanath, manoj tiwari, ajmal kasab, Tamil indian express, ie tamil article
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com