Advertisment

சாதி, மத, பாலின, வர்க்க பேதம் கடந்த சமமான கல்வி இந்தியாவில் சாத்தியமா?

இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியினை போதிக்க இயலுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Higher Education In India

Higher Education In India

சுர்ஜித் எஸ். பல்லா

Advertisment

சமீபத்தில் நான் எழுதிய ‘நியூ வெல்த் ஆஃப் நேசன்ஸ்’ (New Wealth of Nations) என்ற புத்தகத்தில் பல்வேறு நாடுகளில், கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுருக்கின்றேன். சமீபகாலமாக இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியா தனது பட்ஜெட்டின் மூன்று சதவீதத்தினை அடிப்படைக் கல்விக்கும், மேலும் 3%த்தினை உயர்கல்விக்கும் அளிக்கின்றது. 2018-19 நிதியாண்டில் ரூ.220,000 கோடி ரூபாயினை உயர்கல்விக்காக ஒதுக்கியிருக்கின்றது மத்திய அரசு.

இந்தியாவில் கல்வி மற்றும் அதற்கான தேவைகள், அதனை அடையும் முறைகள் என அனைத்திலும் குழப்பமான சூழலை உருவாக்கி வைத்துவிட்டோம். ஆரம்ப கல்வியின் தரத்தினையும் , பள்ளிக் கல்வியின் தரத்தினையும் உயர்த்தாமல் விட்டுவிட்டு, இந்திய தொழில்நுட்பக் கல்வி மையங்களான ஐஐடியின் தரத்தினைத்தான் நாம் உயர்த்திக் கொண்டே போகின்றோம். ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் இந்த சமூகத்தில் ஏற்கனவே பெரிய இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே அணுகும் இடங்களாக இருக்கையில் மேலும் மேலும் நாம் ஏன் அதனுடைய தரத்தினை உயர்த்துவதற்காகவே செயல்பட வேண்டும்?

வர்க்க ரீதியாக பார்க்கும் போது, சாதி மற்றும் மதம் என இரு பிரிவுகளையும் கடந்து பாதிக்கப்படுவர்கள் ஏழைக் குழந்தைகள். அவர்களால் தரமான ஆரம்ப கல்வியினைக் கூட பெற இயலாது. பள்ளிக்கு செல்ல இயலும் அளவிற்கு ஓரளவு வருமானத்துடன் இருக்கும் குடும்பமோ ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் குறைவான அளவில் இருக்கும் அரசு பள்ளிகளில் அடிப்படைக் கல்வியினை பெறுவதற்காக பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றார்கள். ஒரு வேளை இக்குழந்தைகள் மேற்படிப்பு படிக்கச் செல்வார்கள் எனில், அவர்களால் மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டு முன்னேற இயலாது.

இந்த ஏற்றத்தாழ்வுகளை பூசி முழுக அரசோ சில மோசமான முன்னெடுப்புகளை எப்போதும் மேற்கொண்டு வரும். அதன்படி, ரிசர்வேஷன் என்ற பெயரில் போதுமான தகுதியற்ற மாணவர்களுக்கும் கூட மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கித்தருவார்கள். ஜெனரல் கோட்டாவில் ஐஐடியில் படிக்க தகுதி மதிப்பெண் பத்து என்றால், இடஒதுக்கீடு முறையில் உள்வரும் மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண் ஐந்தாக குறைந்துவிடுகின்றது.

ஐஐடி கான்பூரின் கட் ஆப் மதிப்பெண்கள் வெளிவிடப்பட்ட போது, ஜெனரல் கோட்டாவில் உள்வரும் மாணவர்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களில் பாதி மதிப்பெண்கள்  இருந்தால் போதும் எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள் உள்ளே வந்துவிடுகின்றார்கள். தரமான அடிப்படை கல்விக் கூட இல்லாமல் பெரிய கல்வி நிறுவனங்களுக்குள் படிக்கு வரும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் பட்சத்தில் இட ஒதுக்கீடு முறையில் அவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கிவிடுகின்றது.

மேல்தட்டு மக்கள், இந்த கல்வி அமைப்பில் இருக்கும் சாதக பாதகங்களை அறிந்து நடந்து கொள்கின்றார்கள். நல்ல தரமான பள்ளிகளில் அதிக அளவு பணம் செலுத்தி தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்து நல்ல தரமான உயர்கல்வியினைத் தரும் அரசு கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றார்கள். இதனால் அவர்கள் உயர் கல்விகளில் அதிக அளவு முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்று கருதுகின்றார்கள்.

உலகில் வெகு சில நாடுகளே சராசரியான பள்ளிக் கல்வியினைப் பெறுவதற்கு அதிக அளவு பணம் செலவு செய்கின்றது. அதில் இந்தியாவும் ஒன்று.  இந்நாடுகள் சராசரி கல்லூரிப்படிப்புக்கு செலவு செய்யும் பணத்தை விட ஐந்து மடங்கு பள்ளிக்கல்விக்காக செலவு செய்கின்றார்கள்.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள்

சுமார் ஐந்தரை லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது வெளிநாடுகளில் படித்து வருகின்றார்கள். அவர்களில் சுமார் 2,00,000 பேர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் சராசரியாக ’டியூசன் ஃபீஸ்’ மட்டுமே 30,000 அமெரிக்க டாலராகும். 2,00,000 மாணவர்கள் என்னும் போது அவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தும் மதிப்பு மட்டும் ரூ. 40,000 கோடியாகும். மீதமிருக்கும் 3.5 லட்சம் மாணவர்களுக்கு இச்செலவு என்பது பகுதியாக குறையும் பட்சத்தில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆகும் செலவு 75,000 கோடி ரூபாய் ஆகும். சராசரியாக ஒவ்வொரு மாணவனும் அமெரிக்க நாட்டு கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் படிக்கின்றான் எனும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் செலவு செய்யும் பணத்தின் மதிப்பு 25,000 கோடி ரூபாயாகும்.

இந்தியாவில் இருக்கும் மொத்த மாணவர்களின் உயர்கல்விக்கும் மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் நிதியே 25,000 கோடி தான் என்பதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்திய பல்கலைக்கழக கட்டண முறை

எப்போதெல்லாம் இந்திய கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றனவோ அப்போதெல்லாம் மாணவர்கள் போராட்டம் தான் நடத்துகின்றார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்திற்கான டியூசன் ஃபீஸ் வெறும் ரூ. 3000 மட்டுமே. ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு படிக்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். அவளுடைய பள்ளிக்கட்டணம் 23,000 என்பது குறிப்பிட்ட பெருநகரங்களில் வாழும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சராசரி கட்டணமாகும். ஒரு வேளை அவள் டெல்லியில் படிக்கின்றாள் எனில் அதற்கான கட்டணம், மேலே கூறிய 23,000 என்பது ஐந்திலிருந்து ஏழு மடங்காக அதிகரிப்பதிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அப்பள்ளிக் கல்வியினை முடித்துவிட்டு இந்திய அரசால் நடத்தபப்டும் ஒரு மானுடவியல் சார்ந்த கல்லூரிக்கு செல்கின்றாள் எனில் அவள் கட்ட வேண்டிய தொகை வெறுமனே 4000 ரூபாய் என்று தான் இருக்கும். அரசு பொறியியல் கல்லூரிக்கு என்றால் ஒரு வருடத்திற்கு அவள் கட்ட வேண்டிய தொகை 25,000 மட்டுமே. சராசரியாக 14,000 ரூபாய் மட்டுமே அவள் ஒரு வருட கல்விக் கட்டணமாக வழங்குகின்றாள்.

நம் கல்வி முறையிலும் கட்டண முறையிலும் அதிக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பள்ளிக் கல்விக்கு கட்டப்பட்ட அதே 40,000 ரூபாயினை அவள் கல்லூரிக்கும் செலுத்தும் நிலை ஏற்பட்டால், அவள் கூடுதலாக 26,000 ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருடமும் 11 மில்லியன் மாணவர்கள் கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கின்றார்கள். அதில் 5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் தான். அவர்கள் அரசு கல்வி நிறுவனங்களை தேற்ந்தெடுக்கும் போது அவர்களால் 40,000 ரூபாயை சர்வ சாதாரணமாக கட்டலாம். அதனல் அரசிற்கு ஆண்டொன்றிற்கும் சுமார் 13,000 கோடி ரூபாய் கிடைக்கும். இப்பணத்தினை வைத்துக் கொண்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்தினால் அங்கிருந்து வரும் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் சந்திக்கும் சவால்களை ஏற்கும் விதத்தில் வளர்க்கப்படுவார்கள்.

பிரதம அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பகுதி நேர உறுப்பினராக செயல்படும் சுர்ஜித் எஸ். பல்லா அவர்கள் 22/06/2018 அன்று இந்தியன் எக்பிரஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரை

தமிழில் நித்யா பாண்டியன் 

Nithya Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment