பின்லாந்துபிரதமர், வாரம் நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தைத் தெரிவித்துள்ளார். இது ஒரு பழைய யோசனைதான். ஆனால், கடைசியில் இதைக் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது.
பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், உலகின் மிகவும் இளவயதில் அரசின் பொறுப்பில் இருக்கும் இவர், ஒய்வு பற்றி பேசி இருக்கிறார். சானா மாரினின் நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற இந்த திட்டம் புதிய செய்தி அல்ல. வேலை நேரங்களைக் குறைத்தல் குறித்த இயக்கம் பல ஆண்டுகளாக வளமான பொருளாதார நாடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. வேலை குறித்த ஆலோசனையில் பெரும் இடையூறு, இயந்திரமயத்தைக் கொண்டு வருதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் சூழல் குறித்த கவலை ஆகியவற்றின் வழியே வாழும் தலைமுறையில் நாம் இருப்பதால்,இந்த தலைமுறையின் பிரதிநிதியாக இருக்கும் மாரினுக்கு இது குறித்த சிந்தனை எழுந்திருக்கிறது. இது சமூகத்தில் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகளின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல் தாக்கங்கள் மகாத்தானதாக இருக்கலாம்.
குடியேறிய வாழ்க்கையின் ஒரு நாளின் தொடக்கத்தில் இருந்து, தொழில்முறையானது கார்பன்டர், ஸ்மித் என்ற, ஒரு அடையாளத்தைத் தருகிறது. ஆனால், வேலை போன்ற முக்கியத்துவமாக ஓய்வு மற்றும் கலாசாரம் முக்கியத்துவம் ஆகும்போது, பொறியாளர் ஆக இருப்பவர்கள், பெயிண்டர் ஆக அல்லது அதிவேக விளையாட்டாளர்களாக சுய அடையாளமாக முக்கியத்துவம் பெறுவார்கள். இது போன்ற வேறு வேலைகள் எப்படி சமூகத் தொடர்புகளுக்கு மாற்றாக இருக்க முடியும்? இதற்கிடையே, குறைந்த வேலை, அதிக கலாசாரம் என்பதன் விளைவு தீங்கற்றதாக இருக்கத் தேவையில்லை. இ.எம்.ஃபார்ஸ்டர் என்பவர் எழுதிய ஒரே ஒரு அறிவியல் புனைக்கதையான த மிஷின் ஷாப்ஸ் என்ற கதையில், எதிர்கால சமூகம் தனித்த உற்பத்தி மற்றும் கலாசார நுகர்வு கொண்டதாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார். கலாசாரத்தை உலக அளவில் விநியோகிக்கும் மிஷின் நின்று விட்டால், வாழ்க்கை நிலைகுலைந்து விடும். எது எப்படியோ, குறைந்த வேலை, அதிக ஓய்வு நேரம் என்ற கருத்தாக்கம், உலகின் மக்கள் தொகைக்கு ஒரு அறிவியல் புனைவு போன்று இருக்கலாம். ஆனால் அவர்கள் வாழ்க்கைக்காக , உயிருடன் இருக்க வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ருப்பினும், ஒரு நாட்டின் தலைவர் ஒரு நல்லெண்ணத்துடன் அதிக ஒய்வு எனும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மாற்றத்துக்கான அறிகுறியாகும். தோர்ஸ்டீன் வெல்பன், ஒய்வு கருத்து எனும் வகுப்பில்,” அதன் சுயமாகவோ, அதன் காரணங்களுக்காகவோ ஒய்வான வாழ்க்கை அழகானது. உலகின் நாகரீக ஆண்களின் கண்களில் உன்னதமான ஒளியைக் கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார். ஒய்வு வகுப்பு குறித்த அவரது ஆய்வு வளர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்டது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தின் எதிர்காலம் வித்தியாயமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.