ப. சிதம்பரம் பார்வை : பாஜக ஆட்சியில் பொருளாதாரம் தன்னிறைவு அடையுமா?

பாஜகவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படப்போகும் பிரச்சனைகள் என்னென்ன?

ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் : நான் இன்றைய இளைய தலைமுறையுடன் பேசுகையில் அவர்களின் கவனத்தை ஈர்க்க ட்ரங்க் கால் புக் செய்வது பற்றியும், ஸ்கூட்டர் வாங்குவதைப் பற்றியும் அடிக்கடி கூறுவேன். ஆனால் அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி ஒரு முடிவிற்கு மிக எளிதில் வந்து விடுகிறார்கள்.

நான் சொந்தமாக கதையை உருவாக்குகிறேன் என்று நினைக்கிறார்கள் அல்லது எனக்கு இன்றைய தொழில் நுட்பம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற முடிவிற்கு வருகிறார்கள். மிகவும் முக்கியமான மற்றொன்று அவர்களின் இறந்து போன தாத்தாக்களைவிட எனக்கு வயது அதிகம் என்று யோசிக்கிறார்கள்.

ஆனால் நான் சொல்லும் ஒவ்வொரு கதைகளிலும் உண்மை இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 65% மக்களுக்கு தெரியவே தெரியாது “பொருளாதார ரீதியில் மிகவும் முன்னேற்றம் அடைந்த நாட்டில் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று”.

பொருளாதார வளர்ச்சி பெற்ற நாட்களில் வாழ்க்கை எப்படி இருந்தது?

நம்முடைய தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முட்டாள்கள் இல்லை. நம்முடைய தலைவர்களில் நிறைய பேர் நன்றாக படித்திருந்தார்கள். சந்தேகமில்லை, அவர்கள் அனைவரும் ஆகச்சிறந்த அறிவாளிகள். சுயநலமில்லாமல் வாழ்ந்து வந்தவர்கள். நல்ல குடிமக்களாக அவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மேற்கொண்டார்கள். சுதந்திர இந்தியாவை பொருளாதார ரீதியாக தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கான பாதை அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை.

இந்தியா சுந்திரம் அடைந்த பின்பு 30 வருடங்களுக்கு பிறகு தான் தனிநபர் வருமானம் என்பது 1.3% என்று உயர்ந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5% ஆகவும் வளர்ச்சி பெற்றது.

இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக 1991ல் இருந்தது. ஆனால் சீனாவோ அந்த இலக்கை 1978லேயே அடைந்துவிட்டது.

ஆனால் இன்றைய பாஜக ஆட்சியில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கவனிப்போம். சந்தைக்கு ஆதரவாகவும் பிஸினஸ்ஸிற்கு ஆதரவாகவும் இருப்பதற்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் ஆரம்ப காலத்தில் உள் நாட்டு உற்பத்திக்கு பெரும் ஆதரவினை அளித்தார்கள்.

சுதேசி இயக்கத்தை முன்மொழிந்தார்கள். பாரதிய மஜ்தூர் சங் என்ற ஒரு வர்த்தக யூனியன் இருந்தது. அதில் வெளிநாட்டு முதலீட்டை மறுத்தார்கள்.

வரலாற்றில் இருந்து மறுவடிவம் கொடுக்கப்பட்ட சில முக்கியமான பொருளாதாரக் கொள்கைகள்

தேசிய நலனை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் வெகு நாட்களாக கிடப்பில் போட்டிருந்த பல பழைய கொள்கைகளை தூசித் தட்டி கொண்டிருக்கிறது பாஜக. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வகையில் அமைக்கப்பட்ட கொள்கைகள் ஒரு பார்வை.

சந்தை வளர்ச்சி

ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப் பெரிய சந்தைகளும், அதற்கான வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். இந்த சந்தைகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியினையும் சுதந்திரத்தையும் கட்டமைக்கிறது. ஒவ்வொரு நாடும் இதனை நன்கு உணர்ந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் சந்தைப் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. (ஸ்காண்டிநேவிய நாடுகள்).

பாஜகவின் சந்தைப் பொருளாதாரம் சந்தேகத்திற்குரியது. வணிகத்திற்கு ஆதரவாக இருக்கும் பாஜக சில முக்கியமான கொள்கைகளை மீட்டெடுத்து வந்தது. விலைக் கட்டுப்பாடு, தடைகள், உரிமங்கள், அனுமதிகள், விற்பனைக்கான அளவினைக் குறைத்தல் என 2014ல் இருந்த கட்டுப்பாடுகளை விட அதிக கட்டுப்பாடுகளை பாஜக கொண்டு வந்திருக்கிறது.

வர்த்தகத்தின் வளர்ச்சி என்பது இரண்டாம் உலகப் போருக்கு பின்பு தான் உச்சம் தொட்டது. வறுமையில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர். கவனிப்பாரற்று கிடந்த மிகச் சிறிய நாடுகள் கூட பெரிய அளவில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

உலக வர்த்தக மையத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் நாடுகள் கையெழுத்திட்டு வளரத் தொடங்கின. ஆனால் பாஜகவிற்கு இந்த அமைப்புகள் மீது நம்பிக்கை கிடையாது. அதனால் தான் என்னவோ உலக வர்த்தக மையத்தில் இந்தியா தன்னுடைய செல்வாக்கினை இழந்துவிட்டது.

விலைவாசி உயர்வு

பல்வேறு காரணங்களால் பாஜக தன்னுடைய வரி மீதான கொள்கைகளை மாற்றிக் கொள்ளவே இல்லை. அனைவரின் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டத்து.

அமெரிக்க அதிபர் ட்ரெம்பினை பார்த்து நரேந்திர மோடியும் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு செய்திருக்கிறார். அதனால் இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

பொருளாதார ரீதியாக ஒரு தன்னிறைவு என்ற நிலை ஆட்சியாளர்களின் உதவி இன்றி அடைய இயலாது. ஆனால் பாஜக என்ன செய்யும் தெரியுமா தங்களின் அதீத சக்திகளை பயன்படுத்தி நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல திட்டங்களை செயல்படவிடாமல் தடுத்துவிடும்.

முன்பெல்லாம் பொருளாதார மையம் தனித்து செயல்படும் வகையில் சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் பொருளாதார மையமும் தற்போது ஒற்றையாட்சியின் கையில் சிக்கிகொண்டு சீரழிகிறது.

முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close