தட்டில் இருந்து கலப்பை வரை: வேளாண் பட்ஜெட்டும் விலைவாசி உயர்வும்

காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. சீனா இந்தியாவை விட நான்கு மடங்கு உற்பத்தி செய்து முதல் இடம் வகிக்கிறது.

அசோக் குலாட்டி, ரிதிகா ஜூன்ஜா

பசுமை புரட்சியானது விவசாயிகளுக்கும் சந்தைக்கும் இடையே முன்னும் பின்னுமாக ஒரு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி 1 -ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தக்கல் செய்து பேசும் போது, ரூ. 500 கோடி முதலீட்டில் பசுமை புரட்சி திட்டத்தோடு இணைந்த வெண்மை புரட்சியை அறிவித்தார். மூன்று நாள் கழித்து, பெங்களூருவில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை மறுத்தார். மேலும், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்குத்தான் முன்னுரிமை. ஆங்கிலத்தில் அவர் TOP என குறிப்பிட்டது, (T for tomatoes) தக்காளி, (O for onions) வெங்காயம், (P for potatoes) உருளை என்க்குபதுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

வெண்மை புரட்சியானது இந்தியாவின் பால் உற்பத்தியை பல மடங்கு உயர்த்தியது. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2016 – 2017 -ஆம் ஆண்டு 164 மில்லியன் மெட்ரிக் டன் பாலை, இந்தியா உற்பத்தி செய்தது. அமுல் நிறுவனம் சிறு விவசாயிகளுக்கு 75 – 80% விலை கிடைக்குமாறு செய்தது. இதேபோல் பசுமை புரட்சியிலும் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். இத்திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கவும், சந்தையில் விலை அதிகமாவதை தடுப்பதும் ஆகும். மேலும், விவசாயிகள் உற்பத்தி பொருட்களை சாலையில் தேக்கிவைப்பதையும் தடுக்கலாம்.

காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்தியா 180 மில்லியன் மெட்ரிக் டன் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. சீனா இந்தியாவை விட நான்கு மடங்கு உற்பத்தி செய்து முதல் இடம் வகிக்கிறது. கீழ்காணும் வரைபடம் 2003-2004-ஆம் ஆண்டிற்கான காய்கறி உற்பத்தியையும், உருளை, வெங்காயம், மற்றும் தக்காளி உற்பத்தி சதவிகிதத்தையும், 2003-2004 & 2017-2018-ஆம் ஆண்டிற்கான ஆரோக்கியமான உற்பத்தி வளர்ச்சியையும் குறிக்கிறது.

operation-greens
இதில் முக்கிய பிரச்சனையே உற்பத்தி அதிகமாகும் போது விலை சரிந்து விடுவது தான். நமது நாட்டில் போதிய அளவு சேமிப்பு கிடங்குகள் இல்லாததே இதற்கு காரணம். அதனால் விவசாயிகளுக்கு நான்கில் ஒரு பங்கு விலையே கிடைக்கிறது.

பசுமை புரட்சி, விவசாயிகளுக்கு நுகர்வோர் செலுத்தும் விலையில் இருந்து காய்கறிகளுக்கு குறைந்தபட்சம் 65% விலையும், பாலுக்கு 75% விலையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வெண்மை புரட்சியில் உள்ள முக்கிய கொள்கையே பசுமை புரட்சியிக்கும் பொருந்தும். அதன் கொள்கைகள்:

1) பெரும் நுகர்வோர் மையத்திற்கும், பெரும் உற்பத்தி மையத்திற்கும் இடையே குறைந்த எண்ணிக்கையிலான இடைத்தரகர்கள் இருக்க வேண்டும்.

2) நவீன கிடங்குகள் மூலம் சேமிப்பு தளவாடங்களில் முதலீடு செய்தால் சேதாரங்கள் குறையும். உதாரணமாக, விவசாயிகளிடம் தற்போதுள்ள கிடங்குகள் மூலம் 25 – 30% காய்கறிகள் வீணாகின்றன. ஆனால் குளிர்ச்சாதன கிடங்குகள் மூலம் காய்கறி வீணாவதை 10 சதவிகிதத்துக்கும் கீழ் குறைக்கலாம்.

3) பதப்படுத்துதல் தொழிலையும் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். சராசரியாக, நான்கில் ஒரு பங்கு உற்பத்தியை பதப்படுத்த வேண்டும். நமது இந்தியா, பதப்படுத்தலில் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து மிகவும் பின்தங்கியுள்ளது.

ஆகையால், மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையில் பதப்படுத்துதல் தொழிலுக்கு 100% ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. உணவுத்துறை அமைச்சகம், பசுமை புரட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். இவ்வாறு முன்னும் பின்னுமாக ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் விலைவாசி ஏற்றத்தாழ்வுகளை அரசு சுலபமாக கையாள முடியும். அதே சமயம், விவசாயிகளுக்கு நுகர்வோரிடமிருந்து நல்ல விலையும் கிடைக்கும். இது அனைவருக்கும் வெற்றிதரும் தீர்வாக அமையும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் 19.02.18 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : சுதா சார்லஸ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close