கேட்டலோனிய மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாய் காந்தியக் கொள்கைகள்…

மனிதம் வளருவதற்கான வழியில் தான் ஜனநாயகம் வளர வேண்டும்

Gandhian idea of non-violence, Catalonia Referendum
Gandhian idea of non-violence

 Ramin Jahanbegloo

Gandhian idea of non-violence : காந்தியின் வாழ்வு இன்றும் அனைவரையும் மாற்றும் சக்தியாகவே விளங்கி வருகிறது. அவர் இந்தியாவை தன்னுடைய கொள்கைகள், அமைதி மற்றும் சகிப்புத் தன்மையால் மாற்றினார். அதே தன்மைகளால் உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் அவர் மாற்றி இருக்கிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புதிய கொள்கைகளை உருவாக்கி, அதில் வாழ்ந்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக அவர் செயல்பட்டிருக்கிறார்.

மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, வாக்லாவ் ஜாவெல், தலாய்லாமா போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் தங்களின் வாழ்வை கட்டமைத்துக் கொள்ள உறுதுணையாக நின்றவர் மகாத்மா. பல்வேறு கலாச்சார பண்பாட்டு நிலவியல் அடிப்படையிலும் வேறுபட்டிருந்தாலும் லத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் போராடி சுதந்திரம் பெற காந்தியின் கொள்கைகள் மிக முக்கிய பங்காற்றியது. வன்முறைக்கு எதிரான குரலாக, வன்முறையற்ற, அகிம்சை முறையில், மரியாதை மிக்க அரசியல் போராட்டங்களை இன்றும் பல மக்கள் நம்பி முன்னெடுக்கின்றார்கள் என்றால் அதற்கு வழிகாட்டியாக இருந்தவர் காந்தி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

காந்தியின் சத்தியாகிரக போராட்டத்திற்கு முன்பு வரை ஒரு புரட்சி உருவானால் அது ரத்தத்தாலும் வன்முறைகளாலுமே கட்டமைக்கப்பட்டதாக இருந்தது. காந்தி போராட்டத்தின் கசப்பான அனுபவங்களாக அமைய இருந்ததை நேர்மறை எண்ணங்களாக மாற்றினார். அவருடைய புரட்சி வெறுப்பாலும், நம்பிக்கையின்மையாலும் உருவாகவில்லை. காந்தியக் கொள்கைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இடங்களிலும், ஜனநாயகத்தை காப்பாற்ற, அடிப்படை உரிமைகளை நிலை நாட்ட இன்றும் மக்கள் காந்தியக் கொள்கைகளை பின்பற்றி வருகிறார்கள். அதற்கு ஸ்பெயினில் இருந்து வெளியேற நினைக்கும் கேட்டலோனியா முக்கிய எடுத்துக்காட்டாகும்.

Gandhian idea of non-violence

ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் கேட்டலோனியா மக்கள். அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் அதற்காக வெறுப்பினை உமிழவில்லை. போராட்டங்கள், வன்முறைகளில் இறங்கவில்லை. அதே நேரத்தில் இது தான் என்னுடைய தலையெழுத்து என்று கழிவிறக்கம் கொண்டும் வாழவில்லை. அமைதி வழியில் போராட்டம் என்பது எந்த ஒரு சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வைப்பதற்கான சக்தியை தரும். இது தான் தற்போது கேட்டலோனியாவில் மக்கள் பின்பற்றும் காந்தியக் கொள்கைகள். சுதந்திரம் என்பது அதிகாரத்தில் பங்கேற்பது என சிசெரோ கூறியுள்ளார். ஆனால் கேட்டலோனியாவைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது மக்களின் தேவைகளை அறிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், நீதியை நிலை நாட்டுவதும் தான். அதுவே கேட்டலோனிய மக்களின் புரட்சிக்கு பெறும் உத்வேகமாக இருக்கிறது. நாங்கள் அன்பின் அதிகாரத்தை தான் வேண்டுகிறோம். அதிகாரத்தின் மீதான பற்று எங்களுக்கு இல்லை என்று சிசேரோ கூறியுள்ளார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறுகையில் ”தேவையான நீதியை அன்பு உறுதி செய்யும் போது தான் அதிகாரம் சிறந்து விளங்குகிறது. நீதிக்கு எதிராக நிற்கும் அனைத்தையும் அன்பால் வென்றிடும் நிலை தோன்றும் போது நீதி என்ற அமைப்பு சிறந்து விளங்குகிறது” என்று கூறியுள்ளார். கேட்டலோனியாவில் அகிம்சை முறை போராட்டங்கள் மட்டுமே மாற்றங்களை கொண்டு வரும். ஆனால் ஒரு போதும் ஸ்பெய்ன் போலிசார் நடந்து கொண்ட விதம் போல் மக்கள் கேட்டலோனியாவில் வழிநடத்தப்படமாட்டார்கள். அதிகாரமற்ற கேட்டலோனிய மக்களின் அதிகாரமாக அமைந்திருப்பது இந்த அகிம்சை போராட்டம் தான். அதனால் தான் எந்த வழியில் ஒரு போராட்டத்தை நடத்திச் சென்று வெற்றி பெற வேண்டும் என காந்திய கொள்கைகளை பின்பற்றும் கேட்டலோனியர்கள் அறிந்துள்ளனர். இவர்களின் இந்த போராட்டம், கேட்டலோனியாவில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளிலும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும், ஜனநாயக ரீதியிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது இவர்களின் போராட்டம்.

காந்திய கொள்கைகளை பின்பற்றும் கேட்டலோனியா, ஜனநாயகம் என்பது அதிகாரம், நிர்வாகம், தேர்தல், நீதி அமைப்பு, மற்றும் வாக்களித்தல் மட்டுமே இல்லை. ஜனநாயம் என்பது எண்ணமும் வாழ்வை நடத்தும் முறையுமே ஆகும். அங்கு சமூக – அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் வன்முறையை ஒழித்து அகிம்சை வழியில் நடத்தப்படுவதாய் இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா போன்ற பிராந்தியங்களில் மக்களின் அடிப்படை தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து அவர்கள் வாழ்வை மேம்படுத்துவதற்கு பதிலாக அவமானப்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள இயலாது. மனிதம் வளருவதற்கான வழியில் தான் ஜனநாயகம் வளர வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சி நடத்துபவர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் ஜனநாயகம் பயணிக்க வேண்டும்.

அடிமை சங்கிலிகளில் இருந்து மனிதம் விடுதலை செய்யப்படும் போதே அறிவொளி பிறக்கிறது என இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தத்துவ அறிஞர் இம்மானுவேல் காண்ட் கூறினார். அறிவார்ந்த சங்கிலியில் இருந்தும் தங்களின் பிணைப்பை மக்கள் நீக்கிக் கொண்டால் தான் மனிதனால் சுயமாக யோசிக்கவும் செயல்படவும் இயலும். கோழைத்தனம், கட்டாயப்படுத்துதல் போன்ற காரணங்களால் மக்கள் அந்த இணைப்பில் இருந்து வெளியே வரவில்லை. அறிவார்ந்த முறையிலும், தார்மீக ரீதியிலும் முதிர்ச்சி அடைந்த மக்களால் மட்டுமே அகிம்சையற்ற முறையில் போராட்டங்களை மேற்கொள்ள இயலும். இது அதிகார மையத்தைப் பற்றி மட்டுமே யோசிக்காமல், அறிவார்ந்த, தார்மீக விடுதலையையும் நிச்சயம் உருவாக்கும். ஒற்றுமையும், விடுதலைக்கான பற்றுதலும் இருக்கும் ஒரு சமூகம் எந்தவிதமான பிணைப்பிலும் தங்களை இணைத்துக் கொள்ள மாட்டார்கள். அதுவே அந்த சமூகம் சுதந்திரம் நோக்கி பயணிப்பதை உறுதி செய்கிறது.

இங்கு வாழும் மக்கள் மனமுதிரிச்சி தான் கேட்டலோனியாவில் காந்திய போராட்டங்களை முன்னெடுக்க வைத்தது. சத்தியாகிரகப் போராட்டம் தான் இவை அனைத்திற்கும் முன்னோடி. இதுவே கேட்டலோனிய மக்களின் போராட்டத்துக்கு தேவையான அனைத்து வித தார்மீக, அறிவார்ந்த ஒத்துழைப்பை வழங்கியது. கேட்டலோனியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு நேர் கோட்டில் பயணிக்கவில்லை. ஆனால் ஒரு நாள் கேட்டலோனிய மக்களின் மரியாதையையும், தேவையையும் காந்திய கொள்கைகள் நிலை நிறுத்தும்.

இக்கட்டுரை இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பிரசுரம் செய்யப்பட்டது. இதனை எழுதியவர், ஜிந்தால் க்ளோபல் பல்கலை கழகத்தின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gandhian idea of non violence is shaping political struggle in spain

Next Story
இந்தியாவிற்கும், உலகத்திற்கும் காந்தி ஏன் தேவைப்படுகிறார்- நரேந்திர மோடி, Sri lanka Election presidential Results Live srilanka election, sri lanka election, sri lanka elections, gotabaya rajapaksa, sri lanka news,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express