ப.சிதம்பரம்
2022-23 முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தேசிய புள்ளிவிவர அலுவலக அறிக்கையின் மதிப்பீடுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் 13.5 சதவீத வளர்ச்சி விகிதம் இருக்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது. இதையே ஒட்டு மொத்த மதிப்பு கூட்டல் (GVA) அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை 12.7 சதவீதமாக இருக்கிறது. ரேட்டிங் ஏஜென்சிகள், வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகள் 13 சதவீதம் முதல் 16.2 சதவீதம் (ஆர்பிஐ) வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை குறித்து பெருமைப்படலாம் என நான் நினைக்கிறேன்.
இருப்பினும், புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய உலகம் உள்ளது. நிஜ உலகில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு தேசிய புள்ளிவிவர அலுவலகம் யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள், யார் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள் என்பதைப் பற்றியது தான் இந்தக் கட்டுரை.
2019-20 மற்றும் 2021-22க்கான தொடர்புடைய புள்ளி விவரங்களைக் கொண்ட அட்டவணையை நான் தயாரித்திருக்கிறேன். இதில் 2022-23 முதல் காலாண்டிற்கான எண்களைச் சேர்த்துள்ளேன். 2020-21 ஆண்டில் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்டாக நீடித்ததால் இந்த ஆண்டின் எண்களை நான் அட்டவணையில் சேர்க்கவில்லை. 2019-20 ஒரு சாதாரண இயல்பான ஆண்டு என்பதை என்றும் 2021-22 ஆண்டு மீட்பு ஆண்டு என்றும் நாம் சொல்லிக் கொள்ளலாம். 2022-23 ஒரு முழுமையான மீட்சி பெற்ற ஆண்டு என நாம் நம்பலாம். எனவே, 2019-20, 2021-22 மற்றும் 2022-23 க்கான எண்களில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
இது தவிர சம்பந்தப்பட்ட துறையின் செயல்திறனால் பாதிக்கப்படும் நபர்களின் புள்ளியில் இருந்து எண்களைப் பார்க்க வேண்டும். ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயம், வனவியல், மீன்பிடித்தல் போன்ற முக்கிய தொழில்கள் நாட்டின் பெரும்பான்மையான குடும்பங்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. மேலும் சுரங்கம், குவாரி' மற்றும் கட்டுமானம் போன்ற தொழில்களும் முக்கியமானவை. காரணம் இரண்டு துறைகளும் திறன் குறைந்த அதிகம் படிக்காத தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்துகின்றன. இவை தவிர நிதி, ரியல் எஸ்டேட் நிபுணத்துவ சேவைகளும் முக்கியமானவை. காரணம் இவற்றில் அலுவலகத்தில் அமர்நது, நல்ல உடையுடன் வேலை செய்பவர்கள் அதிகம் இங்கு ஒப்பிடுவதற்கான அளவீட்டு ஆண்டாக இருப்பது 2019-20. வளர்ச்சி பெறும் எந்த நாடும் அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக வளர வேண்டும் அல்லது அளவீட்டு ஆண்டை விட அதிகமாக வளர்ச்சி பெற வேண்டும்.
கோவிd தொற்றுநோய் ஆண்டின் (2020-21) மோசமான செயல்திறனைக் காட்டிலும் 2021-22 இல் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளளது. ஆனால் துறைவாரியாக வளர்ச்சி என 2019-20 ஆண்டை ஒப்பிட்டால் வேளாண்மை துறையை தவிர பிற துறைகள் வளர்ச்சி பெறவில்லை. இயல்பான உற்பத்தி அளவை எட்டவில்லை என்பது GVA புள்ளிவிவரங்களில் இருந்து தெளிவாகிறது. அதில் ஒரு கசப்பான பாடம் உள்ளது. தொற்றுநோய் வருடம் அல்லது தொற்று நோய் இல்லாத வருடம் என்றில்லை. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் பிழைப்புக்காக தங்கள் வயல்களில் உழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வீட்டில் இருந்து வேலை செய்யும் வீட்டில் இருந்து வேலை செய்யும் எந்த சொகுசான வேலை முறை அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.
இன்னமும் மீட்சி இல்லை
எனவே, 2022-23 இல் நாம் எதிர்பார்க்க வேண்டிய வளர்ச்சி 2021-22 க்கு மேலான வளர்ச்சி அல்ல, மாறாக 2019-20 ல் வளர்ச்சி. முந்தைய ஆண்டின் (2021-22) காலாண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் அளவீட்டு ஆண்டான 2019-20ன் முதல் காலாண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அது கவலை அளிக்கிறது. வேளாண்மை போன்ற துறைகளில் தான் வளர்ச்சி தொடர்கிறது. நிதித்துறை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இதர துறைகளில் இன்னமும் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படவில்லை.
இதில் நான் தொழிற்சாலைகள் மூலமான உற்பத்தியை நான் சேர்க்கவில்லை. இந்த புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது வளர்ச்சிக்கான விபரங்களை நாம் சரியாக தெரிவிக்கவில்லை. தொடர்புடைய மூன்று ஆண்டுகளின் முதல் காலாண்டில் உற்பத்தியின் மதிப்பு கூட்டல்: ரூ. 565,526, 577,249 மற்றும் 605,104 கோடி. வளர்ச்சியின் அடிப்படையில், 2022-23 இன் முதல் காலாண்டின் 2019-20 ஐ விட 7 சதவீத வளர்ச்சி அதாவது 2021-22 ஐ விட 4.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. போதுமான புதிய முதலீடு அல்லது குறைந்த தேவை அல்லது இரண்டும் காரணமாக உற்பத்தி வளர்ச்சி இன்னும் மந்தமாகவே உள்ளது என்பதே எனது முடிவு. இதனால் சிறு குறு நடுத்தர தொழில் துறை இன்னமும் வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறவில்லை என்ற முடிவுக்கே வருகிறேன்.
மெதுவான தொடக்கம்
எதிர்காலத்தில், குறிப்பாக வேலைவாய்ப்பில் என்ன தாக்கங்கள் இருக்கும் என்பது புள்ளி விபரங்களின் படி முக்கியமான கேள்வி குறித்து தனியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்படி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை அப்படியே இருக்கும், மேலும் விவசாயம் அல்லாத வேலைகளில் சிறிய நகர்வு இருக்குமே தவிர பெரிய முன்னேற்றம் இருக்காது. சுரங்கம் மற்றும் 'கட்டுமானம்' 2019-20 ஐ விட சற்று சிறப்பாக இருக்கும். வலுவான வளர்ச்சியுடன் கூடிய மறுமலர்ச்சி இல்லாவிட்டால், திறமையற்ற மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் மத்தியில் வேலையின்மை அதிகமாக இருக்கும். உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெளிப்படையாக போதுமானதாக இல்லை. இது தவிர சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொழில் பிரிவுகளை அரசு புத்துயிர் பெற வைக்க தவறி விட்டது. திறமையான அலுவலக பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் சேவைத் துறையின் பெரும்பகுதி இன்னும் புத்துயிர் பெறவில்லை, இதனால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதை சொல்லலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி வரும் 2022-23ல் காலாண்டு வாரியான வளர்ச்சி 16.2, 6.2, 4.1 மற்றும் 4.0 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது ஒரு குறையும் வளர்ச்சி விகிதம் என்பதை கவனிக்க வேண்டும். முதல் காலாண்டில் 13.5 சதவீத வளர்ச்சியுடன் தொடங்கினோம். அது கூட ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டை விட குறைவு தான். இந்த மெதுவான ஆரம்பம் மீதமுள்ள பிற மூன்று காலாண்டுகளில் வளர்ச்சி விகிதத்தில் எப்படி இருக்கும் என்று முன்பே அறிவிக்குமா?
தமிழில் : த . வளவன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.