scorecardresearch

இறுதி நாட்களை எண்ணும் கோட்டாபய ராஜபக்ச!

பைக்கியசோதி சரவணமுத்து: இலங்கையின் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.

இறுதி நாட்களை எண்ணும் கோட்டாபய ராஜபக்ச!
கோட்டாபய ராஜபக்ச. (AP புகைப்படம்/கோப்பு)

தமிழில்; ரமணி

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தீவிரமான, தொடர்ச்சியான நிர்வாக நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. நாட்டில் டாலர்கள் கையிருப்பில் இல்லை, நிதிக்கான சர்வதேச சந்தைகளுக்கு அணுகல் இல்லை, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது, பணவீக்கம் அதிகரித்துள்ளது, 13 மணி நேர மின்வெட்டு மற்றும் எரிபொருள், எரிவாயு, மருந்துகள், பால் பவுடர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறை நிலவுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் பதவி விலக வேண்டும் என்ற ஒரு எளிய செய்தியுடன் சாதாரண குடிமக்களின் பாரிய மற்றும் தன்னிச்சையான தெருப் போராட்டங்களால் இவை அனைத்தும் இலங்கையில் ஒரு நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளன.

அரசியலை விட்டு வெளியேறி அவர்கள் கொள்ளையடித்த பணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆளுகை மற்றும் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அவர்களிடம் அதற்கான திறன் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய இரண்டும் இல்லை. இப்போது திரும்பப் பெறப்பட்ட நிலையில் முன்பு அவசரநிலை மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கோட்டாபய ராஜபக்சவின் இழிவான சரிவு விரைவான வேகத்தில்  நடந்துள்ளது.  நவம்பர் 2019 இல், 69 லட்சம் பேர் வாக்களித்து  ஜனாதிபதி பதவிக்கு மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2020 இல் அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. பின்னர் அரசியலமைப்பு சட்டத்தின் இருபதாவது திருத்தத்தில்  ஜனாதிபதியின் ஆளுகை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை தடுக்கும்  முடிவுகள் நீக்கப்பட்டன.  அவரது அரசாங்கம் வரி அடிப்படையைச் சுருக்கி, ரசாயனப்பயன்பாட்டில் இருந்து விவசாயத்தை இயற்கை விவசாயமாக  மாற்ற முடிவு செய்தது, இதன் விளைவாக உணவு விநியோகத்தில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டது.

நெருக்கடியின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றியவுடன், ராஜபக்சேவின் அரசாங்கம் இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கு பிடிவாதமாக மறுத்து விட்டது.

நாடு அதன் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைத் தொடர்ந்து கடனுக்காக செலுத்தியது, இது அதன் டாலர் மதிப்பிலான கடனில் பெரும்பகுதியை சரி செய்ய உதவியது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷில் இருந்து நிதி உதவிகளைப் பெற்றதுடன், அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டாலர்கள் இல்லாமல் போனது.

எதிர்ப்புகளை அடுத்து ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தை அணுக முடிவு செய்தார். இலங்கை அரசானது ஆண்டுக்கு ஏறக்குறைய 7 பில்லியன் டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலா மற்றும் தேயிலையின் வாயிலாக கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்துடன் கூடிய இறையாண்மை பத்திர கொடுப்பனவுகளில் செலுத்த வேண்டும். ஆனால், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2019ஆம் ஆண்டு  250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் தவிர, உக்ரேனில் நடந்த போரினால் ஏற்கனவே இலங்கையின் சுற்றுலா மற்றும் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் தனது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்புச் செயலாளராக இருந்து விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் பிற வடிவங்களைச் சமாளிப்பதற்குத் தகுதியான ஒரு வலுவான, தீர்க்கமான தலைவராக தன்னைக் காட்டிக் கொண்டார்.

பௌத்த மதகுருமார்கள் மற்றும் அவர் பணியாற்றிய ராணுவத்தால் அவருக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ராஜபக்ச தனது நிர்வாகத்தில் பல தொழில்நுட்ப வல்லுனர்களையும், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருந்த  ராணுவ அதிகாரிகளையும் நியமித்தார். அவர்கள் தொற்றுநோய் கட்டுபாடுக்கான மேலாண்மைக்கு பொறுப்பேற்றனர் மற்றும் அமைச்சகங்களுக்கு செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் பல்வேறு பணிக்குழுக்களுக்கு அதாவது புராதன பௌத்த தலங்களின் மறுசீரமைப்பு மற்றும்  ஒரே நாடு, ஒரு சட்டம் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் நியமிக்கப்பட்டனர். சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பணிக்குழுக்கள் பரவலாக செயல்படுகின்றன. – ஒரே நாடு, ஒரே சட்டம் பணிக்குழு, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் உள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று கூறப்படும் படைகளின் உறுப்பினர்களின் பொறுப்புக்கூறலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கோட்டாபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மாவீரர்களை போர்க்குற்றவாளிகளாக மாற்ற மாட்டோம் என உறுதியளித்துள்ளார். மேலும், இரண்டு ராஜபக்சேக்களின் ஆட்சி காலத்திலும் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் மற்றும் உரிமை மீறல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ராஜபக்ச ராஜினாமா செய்வாரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அவர் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும், ராஜினாமா செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

ராஜபக்சே தனது பதவியில் நீடித்து நிலைத்திருப்பதற்காக போராடுகிறார். பதவி விலகினால்,  அவர் அரச தலைவராக அனுபவிக்கும் ‘வழக்கிலிருந்து விடுபடும் உரிமை’ யை அவர் இழக்க நேரிடும், அவருக்குப் பின் வரும் அரசாங்கம், ஊழல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அவரையும் அவரது கூட்டாளிகளையும் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்ற பொது மக்களின்  உணர்வை ஏற்கும்.         

மோசமான பொருளாதார நிலை மற்றும் வேகமாக குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதியும் எதிர்க்கட்சியும் வேகமாக செயல்பட வேண்டும். அவர் IMF க்கு கடிதம் எழுதி  முறைப்படி உதவி கோர வேண்டும், மேலும் அவர்களின் வாரியம் ஒப்புக்கொண்டு அதன்படி இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் கைக்கு வந்ததும், இலங்கை உலக வங்கியிடமிருந்து அவசரகால நிதியைப் பெற்று சர்வதேச சந்தைகளை அணுக முடியும்.

மக்களைப் பொறுத்த வரையில் பிரச்னை ஜனாதிபதி பற்றியது. அவர் தலைமை தாங்கும் எந்த அரசாங்கமும் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்காது. இதன் விளைவாக, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும், அவரை நாடுகடத்தவும், பொறுப்புடைமையில் இருந்து தப்பிக்கவும் அனுமதிக்கும் எந்த முயற்சியும் கூட தோல்வியடையும்.   அரசாங்கத்தில் இணைய வருமாறு அவர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்ததால், தற்போது அவர் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை கூட இழந்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, அவர் இரண்டாவது முறையாக போட்டியிட முடிவு செய்தால், 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். அவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.  ஆனால் இது ஒரு நீண்டகால செயல்முறை. தீவிரமான மற்றும் நீடித்த பொது மக்களின் எதிர்ப்பானது அவரை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கக்கூடும். அதன் பின்னர் பாராளுமன்றம் உடனடியாக அடுத்த ஒரு ஆட்சியாளரை நியமித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து, எதேச்சதிகாரத்தை வளர்க்கும் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லலாம்.

இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்களில் ஜனாதிபதி பதவியின் மீது ஆசை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களின் சுய  நலன்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்.

இலங்கை கிரேக்கத்தின் வழியில் செல்வதாகத் தெரிகிறது. அவைகளில் கொழுத்த பெரிய பொதுச் சேவை மற்றும் பாரிய இழப்பைச் செய்யும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் அடங்கும்.பொருளாதாரத்தின் கடுமையான கட்டமைப்புச் சிக்கல்கள் சரிசெய்யப்பட வேண்டும் . வரிக் குறைப்புகளைத் தவிர, பொருளாதார நெருக்கடியை ராஜபக்சக்கள் உருவாக்கவில்லை, ஆனால் அவர்கள் நிச்சயமாக அந்த சூழலை மோசமாக்கினர் மற்றும் அரசை மிக மோசமாக நிர்வகித்தார்கள்.

இவர்களின் பேராசையும் திறமையின்மையும் இலங்கையை மண்டியிட வைத்துள்ளது. அவர்கள் தங்களின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். போராட்டங்கள் அவசியம் தொடரும், தொடர வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் ஆட்சியால் ராணுவத்தை செயல்பட தூண்டும் , சட்டம் ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் ஊடுருவலுக்கு எதிரான பாதுகாவலராக இருக்க வேண்டும்

நேரம் மிகவும் முக்கியமானது.

இந்தப் பத்தி முதலில் 13ம் தேதியன்று  ‘Rajapaksa’s reckoning’.என்ற தலைப்பில் அச்சுப் பதிப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறுவனர் நிர்வாக இயக்குனர் ஆவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Gotabaya rajapaksa sri lanka economic crisis mahinda rajapaksa