ஆசிரியர் பயிற்சி கல்வியில் திட்டமிடல், நடைமுறை, கொளகை மற்றும் அமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவை போதுமான அளவுக்கு இல்லாத சூழல் நிலவுகிறது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதனை அவசியம் சரி செய்ய வேண்டும்.
Amitabh Kant , Sarah Iype
காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறியும் தெர்மாமீட்டரின் பணியுடன் ஒப்பிடுகையில், பள்ளி கல்வி அமைப்பில், ஆசிரியர் பயிற்சி கல்வியின் தரமதிப்பீடு நிலை சோதனை செய்யப்படுவதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் தொடர்ந்து பிரச்னைகளின் மையமாக இருக்கின்றனர். பள்ளி கல்விமுறையை கற்றலாக மாற்றுவது என்பது ஒரு சிக்கலான சவாலாக இருக்கிறது. உண்மையில், கிராமங்களில் இருந்து வரும் 5-ம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளில் பாதிப்பேர் எளிதான இரட்டை இலக்க கழித்தல் கணக்கைக் கூட போடத்தெரியாமல் இருக்கின்றனர். பொதுப்பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் 67 சதவிகிதக் குழந்தைகள் கணிதத்தில் திறன் அடிப்படையிலான மதிப்பீடுகளில் 50 சதவிகித த்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இவற்றின் மூலம் கற்றல் நெருக்கடியில் இருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இன்னொருபுறம், குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருக்கும் காட்சிகளையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. சில மாநிலங்களில் கிட்டத்தட்ட சரியாக இது 60-70 சதவிகிதமாக இருக்கிறது. உண்மையில், நாடு முழுவதும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. இன்னொருபுறம், 17,000-த்துக்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இளநிலை கல்வியியல்(பி.எட்)., தொடக்கல்வியில் பட்டயம் ஆகிய படிப்புகள்மூலம் ஆசிரியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. முழுமையாக இயங்கும் நிறுவனங்களில் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பயிற்சி இடங்களைக் கணக்கில் கொண்டால், இந்த நிறுவனங்கள் ஆண்டு தோறும் தேவைப்படும் 3 லட்சம் ஆசிரியர்களுக்கு மாறாக, ஒவ்வொரு ஆண்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான புதிய ஆசிரியர்களை உருவாக்குகின்றன. விஷயங்களை முன்னோக்கி பார்த்தால், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 94 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மொத்த பள்ளி ஆசிரியர்களில் ஐந்தில் ஒரு மடங்கு ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சி கல்வி முறை உருவாக்குகிறது.
இந்த வெளிப்படையான தோராயமான அளவு தவிர, தரம் குறித்த அம்சத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமின்றி, அதிக ஆசிரியர்கள் உருவாக்கப்படுவது பற்றியும், தவிர அவர்கள் தரம் குறைவான ஆசிரியர்களை உருவாக்குவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுதவிர பள்ளிகள் முழுவதும் கற்றலின் இழிந்த நிலையை இது எதிரொலிப்பதாக இருக்கும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்களில், ஆசிரியராக நியமிப்பதற்கான தகுதி நிர்ணயத்தை அண்மைகாலங்களில் 25 சதவிகிதம் பேர் கூட கொண்டிருக்கவில்லை. இங்கே தகுதியை நாம் எப்படி பெறுவது என்ற பொருத்தமான கேள்வியை இது எழுப்புகிறது?
இதற்கான பதில், ஆசிரியர் பயிற்சி கல்வியில் திட்டமிடல், நடைமுறை, கொளகை மற்றும் அமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவை போதுமான அளவுக்கு இல்லாத சூழலாக இருக்கிறது. இந்தியாவில் ஆசிரியர்களுக்கான கல்வி அளிக்க க்கூடிய கடமையுடன் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், அதன் நான்கு மண்டல குழுக்கள்(வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு) ஆகியவை சட்டத்தால் நிறுவப்பட்டன. எனினும், இந்த சட்டமானது, மண்டல குழுக்களுக்கு சரியான அளவு அதிகாரத்தை வழங்கவில்லை. படிப்புகளுக்கான இணைப்பு அனுமதியை மட்டுமே வழங்குகிறது.இந்த கவுன்சில் பலன்றறதாக இருக்கிறது. நெறிதவறிய ஊக்கத்தொகைகள், பரந்த அளவிலான முறைகேடு, வணிகமயம் ஆகிவற்றின் காரணமாக, தரக்குறைவான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டன. 2004-ம் ஆண்டுக்கும் 2014-ம் ஆண்டுக்கும் இடையேயான பத்தாண்டுகளில், இந்த மண்டல குழுக்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்தது. இதில் 90 சதவிகித கல்வி நிறுவனங்கள் தனியார் நடத்துபவை ஆகும். இதில் பெரும்பாலானவை ஒரே ஒரு படிப்புடன் 50 மாணவர்களுடன் மட்டும் செயல்படும் தன்னாட்சி அமைப்புகளாகும். உண்மையில், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நிதி ரீதியாக சாத்தியமற்றவையாக இருக்கின்றன. சில நிறுவனங்கள் போலியான முகவரியில் சிறிய அறைகளில் இயங்குகின்றன. சில நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஆசிரியர் பயிற்சி பட்டத்தை விற்கின்றன. பிற உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து இவை தனித்தீவுகளாக இயங்குகின்றன. இந்த நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு, அங்கீகரிப்பதற்கு எந்த முறையும் இல்லை. இதன் விளைவாக, ஆசிரியர் பயிற்சி கல்விக்குள் நுழைய தகுதிவாய்ந்த, உந்துதல் கொண்டவர்களை மட்டுமே சேருவதை உறுதிசெய்யக் கூடிய தேர்ந்தெடுப்பதற்கான முறையான அமைப்பு இல்லை.
மேலும் தெளிவாகப் பார்த்தால், வழங்கப்பட்ட படிப்புகள், மண்டலங்கள் முழுவதும் முரண்பாடுகளைக் காணமுடிகிறது. மூன்றில் ஒரு பகுதி ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உ.பி-யில் இருக்கின்றன. உ.பி-யில் உள்ள காசிப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு மட்டும் 300 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. தோராயமாக பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் வடக்கு மண்டலத்தில் உள்ளன. அதிக ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட 17 ஆசிரியர் பயிற்சி கல்வி பாடத்திடடங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் பி.எட்., டிஇ.எல்.இடி (D.El.Ed)என்ற இரண்டு பாடத்திடடங்களை மட்டுமே வழங்குகின்றன. மோசமான திட்டமிடலின் புள்ளியை வலுப்படுத்தும் வகையில் இது இருப்பதால், மேல்நிலைப்பள்ளிகளில் பாடரீதியிலான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வைக்கிறது. ஆசிரியர் பயிற்சி மேற்படிப்பு படித்தவர்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது. (ஆனால், நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் பத்து சதவிகிதம் மட்டுமே எம்.எட் படிப்பை வழங்குகின்றன.)
10 ஆண்டுகளுக்கு முன்பு, புதுப்பிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி படிப்புகளே இன்னும் இருப்பதால், காலாவதியான இந்த படிப்புகளில், கலவையான சவால்கள் இருக்கின்றன. மேலும் அரசின் சார்பில் ஆசிரியர் பயிற்சி கல்வியை கண்காணிப்பதற்கு பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. இந்த அமைப்பு முறையின் காரணமாக, இந்தப் பிரிவில் தீவிர சீர்திருத்தங்கள் செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நம்பகத்தன்மை கொண்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் எந்த ஒரு சீர்திருத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இது நாள் வரையில் எத்தனை ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை குறித்த விவரங்களோ, மாணவர்கள் எண்ணிக்கை குறித்தோ, படிப்புகள் குறித்தோ துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. இது போன்ற புள்ளிவிவரங்கள், இந்த துறையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு உபயோகமாக இருக்கும். ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை மண்டல அளவில் அதிகரிப்பதற்கும், படிப்புக்கு ஏற்றவாறு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்உதவும். இது சரியான திட்டத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்பதை யார் ஒருவரும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
எண்களை ஒருங்கிணைப்பதற்கு அப்பால், ஒரு துல்லியமான மதிப்பீடு மற்றும் அங்கீகாரமுறை உயர் தரமான ஆசிரியர்பயிற்சி கல்வியை அவசியம் முன்னெடுப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு கவுன்சில், உயர் கல்வியில் தரத்தை நிர்ணயம் செய்வதற்கான பொறுப்புடமை கொண்ட அமைப்பாகும். இது 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 30 சதவிகிதத்தை மட்டுமே மதிப்பீடு செய்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்விக்கு மட்டும் விரிவான முன்னோக்கை கொடுக்க வேண்டும். தற்போதைய திறன் வரம்புகளை, பல அங்கீகாரங்களை அளிக்கும் முகமைகளைக்கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். ஒரு பொதுவான அங்கீகாரக் கட்டமைப்பை , தொடர்புடைய அனைத்துத் தரப்பினர் உள்ளிட்டோர் பரந்த அளவில் எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஆலோசனை செயல்முறையின் வழியே வடிவமைக்கப்பட வேண்டும். தரம் குறைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களை களையெடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்க, மீதமுள்ள தரமான நிறுவனங்களை மேம்படுத்தி ஊக்குவிக்கவும் ஒரு வெளிப்படையான, நம்பகத்தன்மையுடன் கூடிய அங்கீகார முறையை உருவாக்க வேண்டும்.
பாடத்திட்டம் தரத்தை நிர்ணயிப்பதில் இன்னொரு முக்கியமானதாக இருக்கிறது. இது முறையாக சீரமைக்கப்பட வேண்டும். நமது ஆசிரியர் பயிற்சி கல்வி முறை, சர்வதேச தரத்தை அடைவதை பாடத்திட்டம் திருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கருத்தளவில், ஆசிரியர் பயிற்சி கல்வி பாடத்திட்டங்களுக்கான உள்ளீடு, நல்ல தரமான கற்பித்தல் ஆகியவற்றை நல்ல கலவையாக கொடுக்க வேண்டியதற்கான தேவை இருக்கிறது. ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பாடரீதியிலான குறிப்பிட்ட திட்டங்களை பலதரப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட வேண்டும் என்பதை நோக்கிய ஒரு மாற்றத்துக்கு வல்லுநர்கள் இப்போது ஆதரவு தெரிவிக்கின்றனர். தவிர இது, 70-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் தேவைப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அனுப்பக் கூடிய அளவுக்கான வழியாக சாத்தியப்படும் வகையில் இருக்கும்.
இறுதியாக, நிர்வாக விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்படும் வகையிலும், பல்வேறு முகமைகள் வழியே பணி திட்டங்களை உருவாக்குவதற்கான பொறுப்புடமை மற்றும் உரிமையை தெளிவாக உருவாக்கும் வகையில் நன்றாக கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் வழியே செயல்படுத்தும் வகையிலும் சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு, ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த, நம்பகத்தன்மையுடன் கூடிய ஆசிரியர் பயிற்சி கல்விமுறையை மீட்டெடுக்கும் இதன் நோக்கம் , சாத்தியமான செயலாக மாற்றம் காணப்படுவதற்கான தேவை இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் மிகப்பெரிய தொழிலாளர்கள் கட்டமைப்பை இந்தியா கொண்டதாக இருக்கும். இப்போது உயர்கல்வி சூழல் அமைப்பில் நுழையக் கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதுதான் இதன் பொருளாகும். இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்புவோருக்கு சிறந்த தரமான ஆசிரியர் பயிற்சி கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துவதே காலத்தின் முக்கியத்தேவையாக இருக்கிறது.
இந்த கட்டுரை முதலில் மார்ச் 4-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Teaching the teacher’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. காந்த் நிதி ஆயோக்கின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். சாரா ஐபே நிதி ஆயோக்கில் இளம் அறிஞராக இருக்கிறார் கட்டுரையில் இடம் பெற்ற கருத்துகள் அவர்களுடைய சொந்த கருத்துகளாகும்.
தமிழில் : பாலசுப்பிரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.