Advertisment

ஹிஜாப் பிரச்னையில் விடுபட்ட குரல்களைக் கேளுங்கள்

சானியா மரியம் : முஸ்லீம் பெண்களின் குரல்கள் குழந்தைத்தனமாக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன, மேலும் கல்வி அல்லது ஹிஜாப், இந்தியத்தன்மை அல்லது முஸ்லீம் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
ஹிஜாப் பிரச்னையில் விடுபட்ட குரல்களைக் கேளுங்கள்

கர்நாடகாவின் வகுப்பறைகளில் ஹிஜ்ஜாப் அணிவது தொடர்பான தொடர் சர்ச்சை, முக்காடு, ஆணாதிக்கம் மற்றும் முஸ்லீம் பெண்களின் நிலை பற்றிய பழைய விவாதங்களை மீண்டும் கிளப்பியிருக்கிறது. எவ்வாறாயினும், பழக்கமான வாதங்கள் மற்றும் எதிர் வாதங்களின் கூச்சல்களுக்கு இடையே, கல்வி கற்பதை முன்னெடுத்த, நம்பிக்கை கொண்ட முஸ்லீம் பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின் இன்றியமையாத குரல் விடுபட்டதாகத் தெரிகிறது:

Advertisment

ஏகாதிபத்திய சக்திகளால் உலகளாவிய ரீதியில் கடத்தப்படும், ஓரம்கட்டப்பட்டு ஆண் ஒடுக்குமுறையால் மூளைச் சலவை செய்யப்படும் பாதிக்கப்பட்டவர்களாக உணரப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஒற்றைக் கதை, உள்நாட்டிலும் பெரும்பான்மை சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. "முல்லா" வின் பிரதிநிதியான முஸ்லீம் ஆண்களின் பிடியில் இருந்து முஸ்லீம் பெண்களை "விடுவிக்க" சமூகத்தின் பல்வேறு பிரிவுகளால் இது போன்ற கதை பெரும்பாலும் தூண்டப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் காட்சி மற்றும் இலக்கியப் பிரதிநிதித்துவங்களில் இந்த ஒற்றைக் கதை ஒருவித பரவலைக் கொடுத்ததாக நம்புவது எளிது. இந்தக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான திரைப்படங்கள், புனைகதைகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்கள் எனும் சொற்பொழிவுகளில் முஸ்லிம்கள் எதனுடன் ஈடுபட வேண்டும் என்பதை பொருத்துகிறது. முஸ்லீம் பெண்களின் அவலநிலை மீதான இந்த ஆவேசம், முஸ்லீம் பெண்களை "காப்பாற்றுதல்" என்ற தார்மீக அறப்போரை தொடர்ந்து அங்கீகரித்து சட்டப்பூர்வமாக்குகிறது.

கர்நாடகாவில் பள்ளி வாசலில் முஸ்லீம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முக்காடு மற்றும் புர்காவை கழற்ற வைக்கும் இதயத்தை உடைக்கும் படங்கள். அல்ஜீரியாவில் முஸ்லிம் பெண்களை பகிரங்கமாக வெளிப்படுத்த பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நன்றாக ஒழுங்கமைப்பட்ட நடன நிகழ்ச்சிகள். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரிலான அமெரிக்காவானது ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது வீசப்பட்ட குண்டுவீச்சுகள் ஆப்கானிய முஸ்லீம் பெண்களை "காக்கும்" நோக்கம் என்பதாக நியாயப்படுத்தப்பட்டது.
இந்திய முஸ்லிம் பெண்களை "காப்பாற்ற" முத்தலாக் எதிர்ப்பு சட்டம் முஸ்லீம் ஆண்களை குற்றவாளியாக்கியது. இந்த செயல்பாட்டில், முஸ்லீம் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, அவர்களின் நடைமுறைகள் குற்றமாக்கப்படுகின்றன, மேலும் முஸ்லிம் பெண்களின் குரல்கள் சுவீகரிக்கப்படுகின்றன.
ஊடகங்களில் ஹிஜ்ஜாப் வரிசையின் செய்தித் தொடர்பாளர்களான ஆரிப் முகமது கான், தஸ்லிமா நஸ் ரீன், ஜாவேத் ஆனந்த் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோர் நவீன ஹிஜ்ஜாப் அணிந்த முஸ்லீம் பெண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. வலதுசாரிகள், தாராளவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகளுக்கு இடையேயான கோடுகள் முஸ்லீம் பெண்கள் மீதான பரஸ்பர பரிதாபத்தால் மங்கலாகின்றன.

இந்தக் குரல்கள் காலனித்துவவாதிகளைப் போலவே நமக்காகச் சிந்திப்பதாகவும், நாம் செய்ய வேண்டிய தெரிவுகளை வரையறுப்பதாகவும் கூறுகின்றன. முஸ்லீம் பெண்கள் தங்கள் நம்பிக்கையின் மதிப்புகளின் மீது தங்கள் அர்ப்பணிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதானது அவர்கள் செய்ய வேண்டிய சரியான தேர்வாக கருதப்படவில்லை.

ஹிஜாபி முஸ்லீம் பெண்கள், தங்கள் ஆடைகளின் தெரிவு விருப்பத்தை பாதுகாக்க, தெருக்களில், சுதந்திரத்தின் நற்பண்புகளைப் போதிப்பவர்களால் தொடர்ந்து கேட்கப்படாமல் இருக்கின்றனர், . முஸ்லீம் பெண்களின் உரிமைகள் தெரிவு, சுதந்திரத்தின் மதிப்புகள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே வரையறுப்பதில் ஒரு தொல்லை உள்ளது, அவை சமூகத்திற்குள் இருக்கக்கூடாது என்று திட்டமிடப்பட்டவையாகும்.

முஸ்லீம் பெண்கள் ஒடுக்குமுறையின் இத்தகைய கட்டமைப்பானது முஸ்லீம் பெண்களின் உடல்களை ஆன்லைனில் ஏலம் விடுவது அல்லது 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரி முஸ்லீம் பெண்களின் கருவூட்டல் போன்றவற்றில் முஸ்லிம் பெண்களை குறிவைப்பது என அதிகரித்து வரும் போக்குகள், அவர்களைப் பாதிக்கும் பிற கவலைகளை மட்டுப்படுத்துகின்றன.

ஒரு வேளை, வகுப்புவாத கலவரங்களில் முஸ்லிம் பெண்களின் உடல்கள் விலைமதிப்பற்ற உடைமையாக வேட்டையாடப்படும் போது, ​​இத்தகைய பாலியல் ரீதியிலான மிக மோசமான நிகழ்வுகள் நேரிடுகின்றன. இந்திய முஸ்லீம் பெண்களை விடுவிப்பது குறித்து வலதுசாரிகள் முன் வைக்கும் இந்தச் சொற்பொழிவுகள், அன்றாட வன்முறைச் செயல்களில் இருந்தும், இஸ்லாமோஃபோபியாவிலிருந்தும் முஸ்லீம் பெண்களை விடுவிக்கும் விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிக்கப்படுகிறது.

இந்தியாவில் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இயக்கவியல் வேறுபட்டது. அதனை ஒரு குறுகிய வரம்புக்குள் உட்படுத்துவதற்கு முன்பு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் அடக்குமுறையின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் வரலாற்று விளக்கங்கள் பெரும்பாலும் மத மற்றும் கலாச்சார விளக்கங்களுக்குப் பதிலாக மட்டுமே, சிறிய அளவிலோ அல்லது கருத்தியல் வேறுபாடோ இன்றி புறக்கணிக்கப்படுகின்றன.

பொதுவாகவே பெண்கள் படும் துன்பங்கள் எண்ணற்றவை., குறிப்பாக முஸ்லீம் பெண்கள் அனுபவிக்கும் பல துன்பங்களுக்கு வறுமை, உடல்நலக்குறைவு, குறைந்த கல்வித் தரம், பொது வசதிகள் போதுமான அளவு பயன்படுத்த முடியாமை, அவர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் இழைக்கப்படும் அரசியல் வன்முறைகள் போன்றவற்றை காரணங்களாகக் கூறலாம்.

ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது பற்றிய கவலைகள், மதக் காரணங்கள் இணைக்கப்பட்டாலன்றி. ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிஜ்ஜாப் சர்ச்சை குறித்த சலசலப்பு, அவர்களின் தெரிவு செய்யப்பட்ட கவலைகளின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது. .

இந்திய அரசியல் உரையாடலில் முஸ்லீம் பெண்கள் வாய்மூடி மெளனிகள் அல்ல. ஹிஜ்ஜாப் மற்றும் புர்கா அணிந்திருந்த அதிக எண்ணிக்கையிலான ஷஹீன் பாக் பெண்களின் மீள் தன்மை மறந்துவிடக் கூடாது. பெருகிவரும் பெரும்பான்மையான இந்தியாவின் மாறிவரும் தன்மையைப் பாதுகாப்பதில் இந்தப் பெண்கள் எதிர்ப்பை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயல்பாட்டில், அவர்கள் தங்கள் சகோதரர்கள், கணவர்கள் மற்றும் தந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டு, இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என அதற்காக பெரும் விலையை அவர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் மிகவும் பாதிக்கப்படப்படும்போது, பொது சமூகங்களின் வாயில் காவலர்கள் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்.

எந்தவொரு சமூகத்திலும் உள்ள பாலின பாகுபாடு மற்றும் வன்முறையை நிவர்த்தி செய்வதற்கான எந்தவொரு உண்மையான ஈடுபாடும் ஒரு சர்வாதிகார கருத்தாக்கம் மற்றும் சுதந்திரத்தை மட்டும் நிலைநிறுத்துவதன் மூலம் மிகைப்படுத்தப்பட முடியாது.

முஸ்லீம் பெண்களின் குரல்கள் குழந்தைத்தனமாக நிராகரிக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் கல்வி அல்லது ஹிஜாப், இந்தியத்தன்மை அல்லது முஸ்லீம் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட சித்தரிப்பு, நமது விருப்பங்களை நியாயப்படுத்தும்படி நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருக்க, நம்மைத் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
வகுப்பறைகளில் நமது அன்றாட வாழ்வு, தொழில்சார் இடங்கள் சட்டமியற்றுதல் மற்றும் மறுவடிவமைத்தலுக்கான நீதிமன்றங்களாக மாறியிருக்கின்றன. -கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் மதிப்பிடப்படுவோமோ என்ற அச்சத்தில் நமது நியாயங்கள் தொடர்ந்து மெருகூட்டப்படவோ செம்மைப்படுத்தப்படவோ செய்யப்படுகின்றன.

முஸ்லிம்களின் நடைமுறைகள் என்ற கவுரவத்தை விவாதத்தின் மொழி பறித்து விடக்கூடாது. கல்லூரி வாசல்களுக்கு வெளியே பொது இடங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து விடுவது அவர்களை ஆன்லைனில் ஏலம் விடுவதற்கு சமமான செயல்தான். ஏனெனில் இந்த இரு செயல்களிலும் நம்மை அவமானப்படுத்துகிறார்கள் மற்றும் கொடுமைப்படுத்துகிறார்கள். மீடியா சேனல்களில் எங்கள் குரல்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயமாக தெருக்களில் இருக்கிறோம், நாங்கள் எங்கள் நடைமுறைகளின் படி இருப்பதற்கான உரிமைக்காக போராடுகிறோம்.

இந்தக் கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் பிப்ரவரி 24 அன்று ‘Speaking for myself’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் ஐஐடி-பம்பாய்-மோனாஷ் அகாடமியில் முனைவர் பட்டம் பெற்றவர். முஸ்லீம் பெண்கள் ஆய்வு என்ற முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்பையும் நடத்தி வருகிறார்.

தமிழில்: ரமணி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Hijab Row Hijab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment