சௌமியா தெச்சம்மா, எழுத்தாளர்,
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் கற்பிக்கிறார்
The Hindi scare: சுவாரசியம் இல்லாமல் போகும் கடந்த கால இந்தி தினங்களைப் போல இல்லாமல், இந்த ஆண்டு இந்தி தினம் சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியில் செய்த டுவிட்டில், “இன்று ஒரு மொழியால் நாட்டை ஒருங்கிணைக்கும் வேலையை செய்ய முடியும் என்றால், அது அதிகம் பேசப்படுகிற இந்தி மொழியாகத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தின் செல்வாக்கு நம்மீது நிறைய உள்ளது. அதன் உதவியின்றி இந்தியில் பேச முடியாது.” என்று கூறினார். மேலும், “வெளிநாட்டு செல்வாக்கால் மொழிகள் தொலைந்துவிட்டால், நாம் நம் கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்படுவோம்.” என்று அமைச்சர் கூறினார்.
சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு போதுமான அளவில் ஒன்றுபடவில்லை என்று நாம் கருதுகிறோமா? நாட்டை ஒன்றினைக்கும் காரணி தேவை எனில் இந்தியாவை பிரிப்பது என்ன? ஒன்றிணைப்பது ஒரு மொழியாக மட்டுமே இருக்க முடியுமா? அந்த மொழி இந்தியாக இருக்க வேண்டுமா?
காலனியத்தின் அனைத்து தீமைகளையும் அடிக்கடி கூறும் நாடான இந்தியா, ஒரு நாடு, ஒரே மொழி என்ற மிகவும் ஐரோப்பியமய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது விந்தையானது. ஒரு மொழி ஒரு தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கருத்து காலனியம் நமக்களித்த பரிசுகளில் ஒன்று. அது காலனிய நாடுகளில் நவீன தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிக்கலான செயல்முறை மற்றும் கலாச்சார ஒற்றுமையைப் பற்றிய கேள்விகளை உள்ளடக்கியது.
மொழியைத் தவிர குறிப்பாக அதன் எழுதப்பட்ட வடிவத்தை தவிர பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் ஒரு நாடு வரலாறு மற்றும் கலாச்சார தொடர்ச்சியை எவ்வாறு கோர முடியும்? ஒரு தனித்துவமான சிறந்த கடந்த காலத்தின் கலாச்சார தொடர்ச்சி திட்டத்திற்கு மொழியும் இலக்கியமும் முக்கியமாக இருந்தன. ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய திட்டங்களைக் கொண்டிருந்தன. அந்நாடுகள் அவற்றை காலனியாக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டன. பல மொழிகள் மற்றும் இயங்கியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் தேசிய மொழிகளை ஒரு உயர் வர்க்கம் மற்றும் தனித்திருத்தல் திட்டத்தின் மூலம் ஏற்றுக்கொண்டன. இன்று மொழியியல் குறித்த இந்த யோசனையை இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் உள்பட பல பகுதிகளிலிருந்து குடியேறியவர்களால் எதிர்க்கப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து போன்ற விதிவிலக்குகள் உள்ளன. ஒரு தேசிய மொழியின்றி நீண்டகாலமாக உறுதியான நாடாக உள்ளது.
ஒரு தேசம், ஒரு மொழி என்ற கருத்தை ஆங்கிலம் நமக்கு அளித்தது என்பதற்காக ஆங்கிலத்தின் மீதான நமது பகைமை நம்மை குருட்டுத்தனமாக்குகிறது என்பது முரணாக இருக்கிறது. துணைக் கண்டத்தின் வரலாற்றில் எந்த நேரத்திலும் பின் காலனியத்தில் ஒரு மொழி அல்லது ஒரு கலாச்சாரத்தின் மூலம் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மாண்டரின், ரஷ்யன் அல்லது உருது மொழி திணிப்பு போன்ற திட்டங்கள் அவற்றைத் தொடங்கியவர்களின் அனைத்து நோக்கங்களையும் அரிதாகவே நிறைவேற்றியுள்ளன. உருது பாகிஸ்தானை ஒன்றிணைக்கிறதா? அனைத்து சர்வாதிகார ஆட்சிகளும் - கம்யூனிஸ்ட், ராணுவஆட்சி, வலதுசாரி அல்லது சமூக-நலவாத ஆட்சிகூட பன்மை பற்றிய கவலையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏனெனில் அவை அதிகாரத்திலிருந்து கேள்வி கேட்பதற்கு வழிவகுத்திருக்கிருக்கின்றன. பன்மை என்பது குழப்பமானது. அதே சமயத்தில் ஒற்றையாட்சி நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. இதைப் பொறுத்தவரை, நாட்டின் வரலாறு, அதன் மக்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் கலாச்சாரங்களின் சுமையை இந்தி தக்கவைக்க வேண்டுமா? அது அவ்வாறு செய்ய முடியுமா?
அமித்ஷா மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்: “நமது பண்டைய தத்துவம், நமது கலாச்சாரம் மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகள் ஆகியவற்றைப் பாதுகாக்க, நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்துவது முக்கியம். மேலும், இந்தி என்ற குறைந்தபட்சம் ஒரு மொழியாவது தேசத்திற்குத் தெரிய வேண்டும்” என்கிறார். நம்முடைய பண்டைய தத்துவம் கலாசாரம் என்ன என்பது மற்றொரு விவாதத்திற்குரிய ஒரு விஷயம். ஆனால், இந்தி அதுபோன்ற வரலாற்றை எடுத்துச் செல்வதற்கான சாதனமாக இருக்குமா?
மிகச் சரியாக இந்தி என்றால் என்ன? நவீன தரமான இந்தி மொழி ஆரம்ப கால காரிபோலி பேசுபவர்கள் மற்றும் துணைக்கண்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து பல்வேறு மொழிகள் பேசுபவர்களின் தொடர்புகளிலிருந்து உருவானது. தற்போது முன்வைக்கப்படுவது தரப்படுத்தப்பட்ட மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி என்றாலும், இந்தி பேச்சு மொழி பெரும்பாலும் பாரசீக மொழியாலும் பிறகு ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பல மொழிகளைவிட இந்தியின் வரலாறு மிகவும் சமீபத்தியது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பல மொழிகளை விட இந்தி சமீபத்தியது என்று கூறுகிறது.
இத்தகைய சமீபத்திய மற்றும் மாறுபட்ட வரலாறு கொண்ட மொழி ஏன் இன்று மிகவும் முக்கியம் ஆகிறது? ஆங்கிலத்தைப் பற்றி என்ன அச்சுறுத்தல் இருக்கிறது? இது மட்டும்தான் கலாச்சாரா உணர்வா? இது மட்டும்தான் சொந்தமானதா? அல்லது இது மட்டும்தான் சில சமூக பொருளாதார சமத்துவமற்ற தன்மையை குறிக்கிறதா? இந்தி ஆங்கிலத்தின் தொடர்பில் பல சமச்சீரற்ற தன்மையைக் குறிக்கிறது. ஆனால், இந்தி 780-க்கும் மேற்பட்ட பிற இந்திய மொழிகளுடன் தொடர்புடையது. குறிப்பாக சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி, சாதியுடனான அதன் தொடர்பிலிருந்து விடுபட முடியாது. அநேகமாக அது விடுபடவே முடியாது. அதனால்தான் இந்தியாவின் பெரும்பாலான விளிம்புநிலை சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்கள் ஆங்கிலத்தை விரும்புகின்றன. சாதி நினைவுகள் இல்லாத இயக்கத்தை வழங்குகிற ஒரு மொழி ஆங்கிலம்.
பன்முகத்தன்மை அதுவே முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு பேச்சு மொழியிலும் நிரம்பியிருக்கும் அறிவு அமைப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். ஒரு மொழி அதன் சொந்த வரலாறு, இலக்கியம் (வாய்மொழி இலக்கியம் அல்லது எழுதப்பட்ட இலக்கியம்), உள்ளூர் பொருளாதாரத்துடனான உறவு, மக்களின் வாழ்க்கை, அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும், அவர்களைச் சுற்றியுள்ள பிற மொழிகளுடனான உறவுகளையும் புரிந்துகொள்ளும் வழிமுறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மொழியியலாளர் நான்ஸி டோரியன் எழுதுகிறார், “நல்ல பல மக்கள் குறிப்பாக சுதந்திரமான மொழிகளைப் பேசுபவர்கள் தாங்களாகவே தங்களது மூதாதையர்கள் மொழியைக் கைவிட்டு அதற்குப் பதிலாக அவர்களுடைய குழந்தைகளுக்கு வேறு சில மொழியைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் நிலையை கொண்டுவர முடியும் என்று கற்பனை செய்வது சிக்கலாகவே இருக்கும்.” என்று குறிப்பிடுகிறார்.
பல மொழிகள் என்றால், எதிர்ப்பு, அதிகாரம், பலதரப்பட்ட வாழ்க்கை உலகங்கள், பலதரப்பட்ட அறிவுமுறை மற்றும் இயக்கம் என்பதைக் குறிக்கிறது. அதனால்தான், அனைத்து சர்வாதிகார ஆட்சிகளும் இத்தகைய எண்ணிக்கையை அழிக்க முற்படுகின்றன. எதிர்ப்பை மறந்துவிட்டு, சொந்த மொழியில் பேசுபவர்களைப் போல ஒரு மக்கள் வேறு மொழியில் எப்படி பேச முடியும்? யாருடைய மொழி இங்கு தேசிய மொழியாக்கப்படுகிறது? எதேச்சதிகாரத்தின் முதல்படி மொழியை அழிப்பதுதான். பேச்சை அழிப்பதுதான். கலாச்சார ஆய்வறிஞர் மாதவ பிரசாத் வாதிடுவது போல, ஆங்கிலம் என்றால் பெரும்பாலான இந்தியர்களால் அணுக இயலாததாக இருக்கும்வரை அது நவீன ஜனநாயகத்துக்கு ஒரு தடையாக இருக்கிறது. அதற்காக இந்தி ஜனநாயகத்திற்கு வரமாக இருக்க முடியுமா? தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பொறுத்தவரை கல்வி, மொழி என எல்லாவற்றிலும் இந்தியை ஊக்குவிப்பதில் ஜனநாயக நோக்கத்தைக் கண்டறிவது கடினம்.
டோனி ஜோசப், மரபியல், தொல்லியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் செய்த சமீபத்திய ஆய்வுகள், ஹரப்பா நாகரிகம் சமஸ்கிருத / வேத கலாச்சாரத்திற்கு முந்தையது என்று சுட்டிக்காட்டுகிறது. இதன் பொருள் சமஸ்கிருதம் ஒருபோதும் ஹரப்பா நாகரிகத்தின் மொழியாக இருக்கவில்லை. ஹரப்பா நாகரிகத்தின் குறிப்பிடப்படாத மொழியை ஆரம்பநிலை திராவிட மொழி என்று சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர். அதனால், நாம் திராவிட மொழி குழுவை - அல்லது ஒரு திராவிட மொழியை தேசிய மொழியாக அறிவிக்கலாமா? நான் எனது மொழியான கோடவாவுக்கு வாக்களிக்கிறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.