Advertisment

பெண் ராணுவ வீரர்கள் ராணுவத்துக்கு எவ்வாறு பயனளிக்கின்றனர்?

அலுவலர்கள் பற்றாக்குறையை போக்க உதவும். ஆணாதிக்க நிலைப்பாட்டையும் சமாளிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How women cadets benefit the army

சுனந்தா மேத்தா

Advertisment

How women cadets benefit the army : 1992ம் ஆண்டு குறுகிய சேவை ஆணையத்தின் வாயிலாக மருத்துவத்துறை அல்லாத துறைகளில் பணியாற்றுவதற்காக இந்திய ராணுவத்தில் முதல் முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த தற்காலிக நிலையில் இருந்து, இந்த நாட்டின் பெண்களுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சரியான இடத்தைக் கொடுப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு 30 ஆண்டுகாலம் பிடித்திருக்கிறது.

போரில் பங்கேற்பது உள்ளிட்ட ராணுவத்தின் எந்த ஒரு பிரிவின் பணியிலும் சேருவதற்கு பெண்களுக்கு இடம் அளிக்கும் வகையில் ,தொடர்ந்து இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்தையும், தேசிய பாதுகாப்பு அகாதாமியின் நுழைவாயிலையும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஆண்டின் ஜனவரி 15ம் தேதி ராணுவ தினத்தை உண்மையிலேயே கொண்டாட ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. இந்த முன்னெடுப்பானது, பாதுகாப்புப்படை அமைப்பு முறையில் வீரர்களின் எண்ணிக்கையை மட்டுமின்றி தரத்தையும் நிச்சயமாக மாற்றும். இப்போதைக்கு ராணுவப்படைக்கு இரண்டுமே அவசியம் தேவையாகும்.

பாதுகாப்புப்படையில் கடந்த 30 ஆண்டுகளாக பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையானது பரிதாபமான நிலையில் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.2008ம் ஆண்டில் இருந்து கல்வி, சட்டம் சார்ந்த படைப்பிரிவுகள் மற்றும் 2020ம் ஆண்டில் போர் சாராத மேலும் 8 பிரிவுகளில் நிரந்தர பணியிடங்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட போதிலும் கூட இந்த எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மிகவும் அண்மையில் 2020ம் ஆண்டின்படி, இந்திய ராணுவத்தில்(மருத்துவப் படைப்பிரிவை தவிர்த்து) பெண் அதிகாரிகளின் எண்ணிகையானது வெறும் 3 சதவிகிதமாகவே இருக்கிறது. இதை அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது அங்கு 16 சதவிகிதம் பெண்களும், பிரான்சில் 15 சதவிகிதம் பெண்களும், ரஷ்யா, இங்கிலாந்து இரண்டு நாடுகளிலும் தலா 10 சதவிகிதம் பெண்களும் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப்படைகளில் பணியாற்றுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

பொதுவாக இந்த தொடக்கமானது இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் அதிகாரிகள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதாக அமையும். ஒரு மாதத்துக்கு முன்பு மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கூறுகையில், ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் பணியிடங்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று கூறினார். ராணுவத்தில் விரும்பி சேரும் திறன், தகுதிகள் வாய்ந்த இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ராணுவ அதிகாரிகளின் மகன்கள் முன்பெல்லாம் தங்கள் தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்ற விரும்பினர். ஆனால், இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. கடந்த சில பத்தாண்டுகளாகவே பெருநிறுவனங்களின் உலகை நோக்கியே அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

ஆனால், இப்போது ராணுவ அதிகாரிகளின் மகள்கள் தாங்களாக முன்வந்து ராணுவத்தின் நிரந்தர பணிகளில் குறிப்பாக போர் பிரிவுகளில் சேர விரும்புகின்றனர். அவர்கள் இதை மிகவும் சவாலான மற்றும் நிறைவான வாழ்க்கையாக பார்ப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பல தலைமுறைகளாக இந்திய குடும்பங்களின் வாரிசுகள் ஆயுதப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர் என்ற இந்த பாரம்பர்யம் எப்போதுமே உள்ளது என்ற நிலையை இது ராணுவத்துக்கு திரும்பவும் கொண்டு வந்திருக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி ராணுவத்தில் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஆண்கள் இருக்கின்றனர் என்றுஅடிக்கடி கூறப்படுகிறது. பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த ஒளியானது ஆணாதிக்கத்துக்கு எதிராக போர் புரிவதற்கு, உதவும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர் அதிகாரி ஒருவரை நேர்காணல் செய்தேன். அவர் ராணுவத்தில் போர் பிரிவுகளில் சேரும் பெண்கள் பற்றிய தனது அவநம்பிக்கையை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒருமுறை வேண்டுமென்றே தான் ஒரு சூழலை உருவாக்கியதாக கூறினார். ஒருமுறை வாகனம் ஒன்று பழுதானதால், அதில் பயணித்த ஆண் அதிகாரியும், பெண் அதிகாரியும் தள முகாமில் ஒரு இரவை கூட கழிக்கவில்லை என்றார். இது அவருக்கு ஒரு விஷயமாகப் படவில்லை. மூத்த அதிகாரி அந்த பெண் மீது புரிதல் குறைபாட்டில் இருந்த து மட்டுமின்றி, அவரிடம் வெளிப்பட்ட அந்த சூழ்ச்சி சூழலுக்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராணுவத்தில் அவர் பழகிய நெறிமுறையே இதற்குக் காரணம் என்று அந்த ஆண் அதிகாரி கூறினார்.

ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளும் உத்தரவு கட்டுப்பாடு பதவி நிலைகளை பெற வேண்டும் என்று 2020ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது செயல்முறை ரீதியாக, நடைமுறை ரீதியாக, கலாசார ரீதியான பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் இதற்கு அனுமதிக்க முடியாது என்று ராணுவம் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இப்படியான விவாதக் கூற்றின்படி பெண் அதிகாரிகளுக்கான கட்டளைப் பணிகளை மறுப்பது என்பது பாரபட்சமானது என்றும், திரும்ப, திரும்ப தங்களது கருத்துக்கு ராணுவம் வலுவூட்ட முயற்சிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இருப்பினும், போர்ப் படைக்குள் நுழைய, அவர்கள் தங்களின் மன தடைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம்.

தேசிய ராணுவ அகதாமியில் அண்மையில் நடந்த அணிவகுப்பு ஆய்வின்போது பேசிய ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவின் வார்த்தைகள் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்துகின்றன. ராணுவத்தில் பாலின சம ன்பாடு நிலவும் வகையில் எடுக்கப்பட்ட முடிவினை அவர் வரவேற்றுள்ளார். மேலும் இளைஞர்களை விடவும் இளம் பெண்கள் அதிக விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். இந்த அணிவகுப்பின் போது இறுதியாக பேசிய அவர், இங்கு இன்று நான் நிற்கும் இந்த இடத்தில் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் பெண்கள் நிற்பார்கள் என்று கூறினார்.

இப்போதில் இருந்து 40 ஆண்டுகளுக்குள் நம்மில் யாரேனும் இருப்போமா என்று தெரியவில்லை. நான் ஒரு நிலையான ராணுவ குழந்தை என்ற வகையில், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் தேசிய ராணுவ அகதாமியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண் போர் வீரர்கள், அவர்களின் கண்களில் ஒரு பிரகாசத்துடனும், அவர்களின் துள்ளலான வீரநடையுடனும், மற்றும் அவர்களின் தோள்களில் நவீன துப்பாக்கிகளுடனும் ஆண் வீரர்களுக்கு இணையாக அணிவகுப்பில் இடம் பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு காணமுடியும்.

இந்த பத்தி முதலில் 15ஆம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Women and the force’என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் மேத்தா சுனந்தா புஷ்கரின் அசாதாரண வாழ்க்கை மற்றும் இறப்பு(The Extraordinary Life and Death of Sunanda Pushkar ) என்ற புத்தகத்தையும் எழுதியவராவார்.

தமிழில் பாலசுப்பிரமணி கார்மேகம்

Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment