மத்திய அரசின் பல்வேறு மட்டத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை தீர்க்க, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பணிகளுக்கான விதிமுறைகளில் திருத்தம் கொள்வது என்ற மத்திய அரசின் முயற்சிக்கு பல்வேறு மாநில அரசுகள் தெரிவித்திருந்த கவலைகளை அண்மை கால ஊடக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இப்போதைய விதியின்படி, மாநிலங்களில் இருக்கும் அதிகாரிகள் தாங்களே முன்வந்து மத்திய அரசு பணிக்கு விருப்பம் தெரிவிப்பதாக இருக்கிறது. இப்படி விருப்பம் தெரிவிக்கும் அதிகாரிகளில் இருந்து காலியாக உள்ள இடத்துக்கு அல்லது விரைவில் காலியாக உள்ள இடத்துக்கான பதவிக்கு மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும்.
இது போன்ற முறையில், சம்பந்தபட்ட மாநில பிரிவில் பணியாற்றும் அதிகாரியின் அனுபவத்தின் அடிப்படையில் மத்திய பணிகளுக்கு அவர் கருத்தில் கொள்ளப்படுவார். இந்த முறையில் தேர்வு இறுதி செய்யப்பட்ட உடன், உத்தரவு வெளியிடப்படும். மத்திய பணிக்கு வர விரும்பும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மாநில அரசு அவரை விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் சில ஒதுக்கீடுகளை இதற்காக பின்பற்றுகின்றன. அதற்கு அப்பாற்பட்டு மாநில அதிகாரிகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பதில்லை.
கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசின் பணிகளுக்கு விரும்பி செல்லும் அதிகாரிகள் எண்ணிக்கை சீராக சரிந்து வருகிறது. 1960களில் செயலாளர் மட்டத்துக்கு கீழ் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட, இணை செயலாளர் மட்டத்தில் கூட மத்திய அரசுக்காக அதிகாரிகள் கிடைப்பது சிக்கலாகி இருப்பது அதிகரித்திருக்கிறது.
பொதுவாக, மாநிலங்களின் மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கையில் 25-30 சதவிகிதம் பேர் மத்திய அரசின் பணியில் இருந்தனர். தற்போது பல்வேறு மத்திய அமைச்சகங்களில் 10 சதவிகிதம் பேர்தான் பணியாற்றுகின்றனர். உபி, பீகார், ஒடிசா மற்றும் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கையானது 8 சதவிகிதத்துக்கும் 15 சதவிகிதத்துக்கும் இடையே இருப்பதாக சில அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது.
ஒரு காலகட்டத்தில் மத்திய பணிக்குச் செல்வது ஒரு அதிகாரியின் திறமையாக கருதப்பட்டது. தேர்வு முறை கடினமாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக போதுமான அளவுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படாததே அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மத்திய பணியுடன் ஒப்பிடும்போது மாநிலங்களிலும் சிறப்பான பணி சூழல் இருப்பதும் ஒரு முக்கியமான காரணமாகும். விதிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யும்போது, அது மத்திய மற்றும் மாநிலங்களின் பணிகளுக்கான அதிகாரிகள் பற்றாக்குறையை சமன் படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மாநிலங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த மாநிலத்துடன் இணைந்து அதனை தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கும் அதற்கான பொறுப்புகள் உள்ளன.
விதிகளில் திட்டமிடப்பட்டுள்ள மாற்றமானது மேற்குறிப்பிட்டதன் அடிப்படையில், தெளிவாக குறைகூறுவதாக இருக்க முடியாது. தடம்மாறி செல்வதை சரி செய்வதே இதன் குறிக்கோளாகும். மாநிலங்களுக்கான அதிகாரிகள் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்போது, 40 சதவித மூத்த ஆதிகாரிகளின் பதவியானது மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியிடங்களை தயாராக வைத்திருப்பதற்கான உள்ளமைக்கப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அதிகாரிகள் தேர்வு கடந்த காலங்களில் போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்று கருதினால், திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள விதிகளானது, மத்திய-மாநில அரசுகள் சமமான அளவில் பற்றாக்குறையை பகிர்ந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தவிர, காலியிடங்கள் குறித்த காலத்தில் நிரப்பப்படுவதில் இருந்து, மாநில அரசுகள் அவசியம் பதில் அளிக்கும் வகையிலான மற்றும் தேர்வு செய்யப்பட்ட அதிகாரியை விடுவிப்பதற்கான கால வரம்புக்கான பரிந்துரை இருக்க வேண்டும்.
எனினும், மாநிலங்களின் பல்வேறு கவலைகள் தீர்க்கப்படுவதாக இருக்க வேண்டும். மத்திய அரசு பணிக்கு போக விரும்பும் அதிகாரிகளின் பட்டியலை எப்போது மாநில அரசுகள் தர வேண்டும் என்பதையும், இதனை மாநில அரசு மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் சொந்த தேவைகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சம அளவில் மத்திய அரசு பணிக்கான பெயர்களை வழங்க வேண்டும். மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகளை ஒதுக்கீடு செய்யும் பட்டியலை தயாரிக்கும் பணியானது மத்திய அரசின் தலையீடு இன்றி இருக்க வேண்டும்.
ஒரு அதிகாரி தங்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், அது குறித்து மாநில அரசுகு பரிந்துரைக்கலாம். இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு வேளை இதற்கு மத்திய அரசுக்கு அந்த அதிகாரியை அனுப்புவதை மாநில அரசு விரும்பவில்லை என்றால், பணி விதிகளின் கீழ் அவ்வாறு செய்ய அவர்களுக்கு(மத்திய அரசுக்கு) அதிகாரம் இருந்தாலும் மாநில அரசின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். மத்திய அரசின் இது போன்ற அதிகார நடைமுறையானது கடந்த கால அனுபவங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இது சிறப்பான பணியாளர் மேலாண்மையைக் கொண்டிருக்காது.
அதிகாரிகளின் பணி சூழலை மேம்படுத்துவதில்தான் இயக்குநர் மற்றும் துணை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் பணியிடங்களின் சிக்கலை நிர்வகிப்பதன் வெற்றி அடங்கி இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மத்திய அரசுப் பணிக்கு செல்ல ஏராளமான அதிகாரிகள் விருப்பத்துடன் இருக்கும்போது, அதிகாரிகள்பட்டியலை அளிப்பதற்கு மாநில அரசுக்கு நெருக்கடியாக இருக்கும். சிலர் மட்டுமே விரும்பும் பட்சத்தில், அதிகாரிகளை டெல்லி பணிக்குச் செல்லும்படி மாநில அரசு வற்புறுத்த வேண்டியிருக்கும். இந்த மட்டத்தில் உள்ள அதிகாரிகள், டெல்லியின் வாழ்க்கை சூழலுக்கான செலவுகள் அதிகரிப்பு, போக்குவரத்து, குழந்தைகளின் கல்வி ஆகியவை குறித்து கவலைப்படுகின்றனர். இது போன்ற சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.
டெல்லிக்கு மத்திய அரசுக்கு பணிமாறுதல் செய்யும்போது பணி மாறுதல் காலகட்டத்திற்கு அலவன்ஸ் தருவது நல்லதொரு விருப்பமாக இருக்கும். சமஸ்கிருதி போன்ற புகழ்பெற்ற கல்வி மையங்களில் அதிகாரிகளின் குழந்தைகளை சேர்ப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
மாநில அரசும் இந்த விவகாரத்தில் விரோதமற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் ஒத்துப்போக வேண்டிய தேவையிருக்கிறது. திருத்தப்படும் விதிமுறையானது, பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒரு முறையை மட்டும், எங்கே தேவையிருக்கிறதோ அந்த இடத்தில் அதிகாரிகளை பகிர்வதை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால், அத்துமீறல் குறித்த மாநிலங்களின் அச்சத்தை மத்திய அரசு அகற்ற வேண்டும்.
மத்திய அரசுக்கு வரும் ஆண்டுகளில் இயக்குநர் மற்றும் துணை செயலாளர் மட்டத்திலான பற்றாக்குறை ஏற்படும். மூத்த பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை கொண்டு இந்த இடைவெளியை குறைப்பது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் உயர்ந்த தகுதியுடன், சில ஆண்டுகளுக்கு நிர்வாக ரீதியிலான காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த பத்தி முதலில், 28ம் தேதியிட்ட அச்சு இதழில் Sharing the cadre’என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் முன்னாள் அமைச்சரவை செயலாளரும், திட்டக் கமிஷனின் உறுப்பினரும் ஆவார்
தமிழில் ஆகேறன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil