/indian-express-tamil/media/media_files/2025/02/03/TZMvGEwYCMC3FzxrEuvN.jpg)
சென்னையில் கடந்த ஓராண்டாக புனரமைப்புப் பணிக்காக நதியின் முகத்துவாரம் மூடப்பட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் விளக்கப்படம்)
ரேகா ஜா எழுதியது.
ஒரு ரகசியம்: நீங்கள் நினைக்கும் போதெல்லாம் ஒரு நகரத்திற்கு முதல் முறையாக எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம். ஒரு புதிய கோணத்தில், புதிய பார்வையைப் பார்க்க வேண்டும். அப்போது நீங்கள் ஒரு புதிய இடத்தைக் காண்பீர்கள். நான் ஒவ்வொரு முறையும், முதல்முறையாக சென்னைக்கு வருகிறேன்.
ஆங்கிலத்தில் படிக்க: In me, a new gaze finds a new Chennai
நான் வளர்ந்த மெட்ராஸைப் பற்றிக் கேட்டால், சென்னையைப் பற்றி கண்முன் தோன்றுவது மென்மையான ஐஸ்கிரீம் கூம்புகள் கரைந்து பிரகாசமான-வெள்ளையாக கடற்கரை மணலில் விழுகின்றன; கிளைகளிலிருந்து கல்லால் அடித்த புளியம்பழம், அதைச் சாப்பிட்டதால், நாக்கில் ஏற்பட்ட வெடிப்பு; கடற்காற்றில் தவழும் புல்லாங்குழல்-இசை, எங்கிருந்தோ வகுப்பறைகளுக்குள் வரும் தாலாட்டுப் பாடல்கள்; ஆல மரத்தையும் பனை மரங்களையும் கடந்து சென்ற போது பள்ளி வாகனத்தில் கண்ட பகல் கனவுகள்.
என் இருபதுகளில், பல வருடங்கள் மற்ற கடலோரப் பகுதிகளில் வேலை செய்து படித்துவிட்டு, கூட்டாண்மை, அரசியல், அதிகாரம் பற்றிய புதிய ஆர்வத்தில் சென்னைக்கு வந்தேன். சென்னையில் பெரியார் திடலைப் பார்க்க முடிகிறது, அங்கு ஆல மரத்தின் கீழ் கல்லில் "கடவுள் இல்லை" என்று பொறிக்கப்பட்டுள்ளது - புனிதமான தெய்வ நிந்தனை ஒரு கோயில் நகரத்தின் பசுமையான இதயம் போன்ற பகுதியில் அமைதியாக குடி கொண்டுள்ளது. அது (அந்தச் சென்னை) ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை, ஒரு கவிஞர், ஆர்வலர் நினைவாலயமான, வள்ளுவர் கோட்டத்தில், எனக்குக் காட்டுகிறது - அங்கே நூற்றுக்கணக்கானோர் கூடி - "ஜனநாயகத்தை வேரறுப்பதை நிறுத்து" மற்றும் "வெறுப்புக்கு இங்கு இடமில்லை" என்று விளம்பரப் பலகைகளை எழுப்புகின்றனர்.
பின்னர், ஒரு கடினமான மன நிலையில், நான் சென்னையிடம் அதைக் குணப்படுத்தும் அமைதியிடத்தைக் கேட்டால், அது என் பாதையில், தொல்காப்பிய பூங்கா - என்ற சதுப்புநிலத்தால் சூழப்பட்ட ஒரு முகத்துவாரத்தை விரிக்கிறது, ஒரு சில நடைப்பயிற்சி செய்பவர்கள் மட்டுமே வந்து செல்லும் பசுமையான மற்ற வாழ்வினங்களைக் கொண்ட பகுதி. நான் தினமும் செல்கிறேன். அங்குதான் நான் "நீர்காக்கை", "வெள்ளை நாரை" மற்றும் "வாலாட்டிக் குருவி" போன்ற வார்த்தைகளை கற்றுக்கொள்கிறேன்; கரப்பான் பூச்சிகள், சிகப்பு பூச்சிகள் மற்றும் வண்டுகள் ஆகியவற்றைத் தவிர்த்து கவனமாக நடக்கக் கற்றுக் கொள்கிறேன். அங்குள்ள சிந்தனைமிக்க கல்வெட்டுகளிலிருந்து இந்தப் பழமையான, எளிதில் அழியக் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு எவ்வளவு முயற்சியுடன் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் நான் கற்றுக்கொள்கிறேன்.
ஒருநாள் மாலை, மற்றொரு நடைப் பயணி நின்று, "நீங்கள் கேள்விப்பட்டீர்களா? என்கிறார். அவர்கள் எல்லா இடங்களிலும் கான்கிரீட் போடப் போகிறார்களாம், மரங்களை வெட்டப் போகிறார்கள்." இதயம் மூழ்கிறது. ஒரு வாரம் கழித்து, நான் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை அலுவலகத்தில் ஒரு எரிச்சலுடன் பேசும் அதிகாரியின் முன் நிற்கிறேன், அவர்கள் பாதைகளை கான்கிரீட் போட மாட்டார்கள், அவர்கள் மரங்களை வெட்ட மாட்டார்கள் என்று சொல்கிறார். ஆனால் நிச்சயமாக: கான்கிரீட் வேலை செய்யப் பட்டுள்ளது, மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறது, கடந்த ஒரு வருடமாக புனரமைப்புக்காக முகத்துவாரம் மூடப்பட்டுக் கிடக்கிறது.
எனக்குள், என்னுடைய ஒரு புதிய பார்வை ஒரு புதிய சென்னையைக் காண்கிறது. இது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நீர்நிலைகளுடன் கூடிய நிலப்பரப்பை, நகர வளர்ச்சியை வெற்றிகொள்ள மேற்கொள்ளப்படும் இடைவிடாத முயற்சிகளின் இடையே, உருவாக்க விரும்புவதாகும்.
ஒடியூரில், ஒரு உப்பங்கழி நெடுஞ்சாலையைத் தடுக்க முயற்சிக்கிறது. காட்டுப்பள்ளியில், ஒரு கடற்கரை ஒரு பெரிய துறைமுகத்தை எதிர்க்கிறது. எண்ணூரில், தொழிற்சாலைகளும் மின் உற்பத்தி நிலையங்களும் விஷத்தின் மீது விஷத்தைக் கொட்டும் இடத்தில் ஒரு ஆறும் சிற்றோடையும் ஓடுகின்றன. நகர்ப்பகுதி சிறிய போராட்டங்களில் வெற்றி பெறுகிறது. வருடாந்திர வெள்ளம் மற்றும் இடைவிடாத மண் அரிப்பு ஆகியவற்றால் தண்ணீர் அது தான் சொல்ல நினைத்தைச் செய்கிறது. உயிரிழப்புகள், வகைப்படுத்தாமல், ஒரே மாதிரியானவை: எளிதில் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள்; கடல் சார்ந்த உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் அனைத்தும் மூச்சுவிட முடியாத நிலைமை, அவைகளுக்கு வாழ்விடம் இல்லை; ஒரு பெரிய நகரம், நிரந்தர வெள்ள அச்சுறுத்தலில்; மனசாட்சி கனக்கின்றது.
நான் சென்னையிடம் கேட்கிறேன்: இது சாத்தியமே இல்லையா? மனிதனை உந்தும் தேவைகளுக்காக மற்ற உயிரினங்களுடன் இணைந்து வாழ இயலாதா? இதை, அருகில் உள்ள, வேடந்தாங்கல் கற்பிக்கிறதே, அங்கு பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் நீர்ப்பறவைகளைப் பாதுகாத்து வருகின்றனர், எச்சம் என்ற உரத்தைத் தரும் அந்தப் பறவைகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற வகையில். பிரம்மஞான சபை வளாகத்தில் உள்ள ஒரு ஆல மரத்தை எட்டிப்பார்க்கத் தோன்றுகிறது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாப்பாகவும் உயிருடன் வைத்திருக்கவும், அதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை அனுமதித்திருக்கின்றனர். நான் சிறுவயதில் ஏறி விளையாடிய பெருங்கள்ளி மற்றும் கொன்றை மரங்கள்; நகங்களின் வண்ணமாக நாங்கள் அணிந்திருந்த செம்மயில் கொன்றை மரத்தின் மொட்டுக்கள்; நாங்கள் குன்றுமணி விதைகளை ரத்தினங்கள் போலச் சேகரித்தது, எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். நமது உண்மையான உந்துதல் என்பது, சென்னை நினைவுகள் எனக்கு நினைவூட்டுகின்றன, ஒரு தோழனாக, இணைந்து மனிதனல்லாதவற்றையும் உருவாக்குவதே ஆகும். என்றாவது ஒரு நாள் இதை நாம் நினைவில் கொள்வோம்.
எனது தற்போதைய சென்னையில், நான் என் நண்பனுடன் இரண்டு காபிகளை மெதுவாகக் குடித்துவிட்டு, நாங்கள் இருவரும் அமைதியாகப் படித்த கட்டுரைகளைப் பற்றி, காலை வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். இது தெளிவான வானத்துடன் கூடிய ஞாயிற்றுக் கிழமை. நாங்கள் வெளியில் செல்ல விரும்புகிறோம் என்பதை உணர்கிறோம். இறால் கறி மதிய உணவின் போது எங்கு செல்வது என்பது பற்றி பேசுகிறோம். கோட்டூர்புரம் நகர வனப்பகுதியில், புளியந்தோப்பில் பறக்கும் நரிகளை (வௌவால்) பார்க்கவா? அல்லது முதலைப் பண்ணைக்கு, முதலை வகைகள் மற்றும் உடும்பைப் பார்ப்பதற்கு? அல்லது பள்ளிக்கரணை அல்லது சோழிங்கநல்லூர் அல்லது உடைந்த பாலம், அங்கு நாரைகள் வகைகள், கூழைக்கடா மற்றும் ஆலா போன்ற பறவைகளைப் பார்க்க? நாங்கள் ஒரு பிரபலமான கடற்கரை சிற்றுண்டி உணவகத்தில் அமர்கிறோம், மூன்றாவது காபி நன்றாகத்தான் இருக்கும், ஆனால் நாங்கள் அங்கு சென்றதும், கடல் சத்தம் கேட்க முடியாத அளவுக்கு அங்கு ஒலிக்கும் இசை சத்தமாக இருந்தது, எனவே நாங்கள் கடற்கரையில் நடந்து செல்ல ஆரம்பித்தோம்.
16 வருடங்களாக நான் இதுவரை பார்த்திராத பனையூர் கடற்கரையில் நாங்கள் இருக்கிறோம். பாய்களில் உலர்த்தப்பட்டிருக்கும் மீனைக் கொக்குகள் கொத்திச் செல்கின்றன. நீர்க்காகங்கள் சிப்பிக்காக நீரில் பாய்ந்து மூழ்கின்றன. கைவிடப்பட்ட செருப்புகள், பாட்டில்கள், உடைந்த மரக் கட்டைகளில் கொட்டலசு
ரேகா ஜா அன்றாட அரசியலில் ஆர்வமுள்ள ஒரு கட்டுரையாளர்.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.