Advertisment

வடக்கு எல்லைகளில் ராணுவம் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Indian army intelligence : குறிப்பிட்ட பொருளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சொற்பொருளில் தேவையற்ற முக்கியமற்ற பிழைகளை தேடுவதை நாம் தவிர்க்க வேண்டும். களத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு இது ஒரு பெரிய சேவையாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டம்: பெருமளவு இடங்களில் படை விலக்கம் என சீனா அறிவிப்பு

நொடிக்கு நொடி செயல்படும் நுண்ணறிவு, கண்காணிப்பு கருவிகள் ஆகியவை கள அமைப்புகள் வசம் அவசியம் இருக்க வேண்டும். தொடர்புகள் அற்ற, இயக்கமற்ற போர்முறையைக் கொண்ட நவீன வெளிப்பாடுகளைக் கொண்ட எதிர்காலத்துக்கு நாம் திட்டமிடவேண்டிய தேவை இருக்கிறது.

Advertisment

ராகேஷ் சர்மா

புதிய சீனாவானது, பொறுப்புடமை (உள்ளது உள்ளபடியே), மிகப்பெரிய அதிகாரம், வலுவானதாக இருக்கிறது. அதன் தீவிரமும், தீர்க்கமும் , உலகின் முன்னணி இடத்தில் அதனைக் கொண்டு நிறுத்தும் சக்திகளாக இருக்கின்றன. சீன மக்கள் விடுதலை ராணுவத்துக்கான வேலைவாய்ப்புகள் ராணுவம் தொடர்புடைய வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்புக்கு அந்த நாட்டின் மத்திய ராணுவ கமிஷனே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அனைத்து முக்கியமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எடுக்கும் அமைப்புகள், பொலிட்பீரோ, பொலிட்பீரோ நிலைக் கமிட்டி ஆகியவை தெளிவாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சீன மக்கள் குடியரசின் தலைவர், கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச்செயலாளர், மத்திய ராணுவ கமிஷனின் தலைவரின் கீழும், மக்கள் விடுதலை ராணுவம் தீவிர தேசியவாதம் எனும் நடிப்பில் தேர்ச்சி பெற்றதாக இருக்கிறது. பெரும்பாலான ஜனநாயக நாடுகள் போல அல்லாமல், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் மத்திய ராணுவ கமிஷனின் கீழ் செயல்படுகிறது. அது ராணுவ கொள்கையை முழுவதுமாக கட்டுப்படுத்துவதாகவும் தவிர வெளியுறவுக் கொள்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த நிகழ்வுகள், அதற்கும் அதிகமாக கடந்த எட்டு ஆண்டுகளில், குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகள் மூலம் உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோடு என்பது கடுமையான குறைபாடுகளைக் கொண்ட கருத்து என்பது தெளிவாக வெளிப்படுகிறது. 1981-ம் ஆண்டில் இருந்து இந்தியாவும்சீனாவும் இது குறித்து விவாதித்து வருகின்றன. 1988-ம் ஆண்டு முதல்2005-ம் ஆண்டு வரை கூட்டு பணிக்குழுக்களுக்கு இடையே சந்திப்புகள் நடந்துள்ளன. சிறப்பு பிரதிநிதிகளைக் கொண்ட 22 சுற்று கூட்டங்கள் நடந்துள்ளன. கூடுதலாக பல்வேறு உச்சி மாநாடு அளவிலான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மத்திய ராணுவ கமிஷன்/சீன மக்கள் விடுதலைப்படை ஆகியவற்றுடன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் இடத்தில் 40 ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே நடந்த எல்லைக் கோடு குறித்தான வரையறுத்தல் எல்லை நிர்ணயம் சாத்தியப்படவில்லை.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச சாதகமாக மாற்றக்கூடிய எண்ணத்துடன் அறுதியற்ற இயல்பாக வேண்டுமென்றே உறுதியான வகையில் சீனா செயல்படுகிறது. பங்கோங் த்சோவின் விரல் 4/5 –ல் ஊடுருவல் நடந்துள்ளது மற்றும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே குல்வானினும் எல்லை மீறி ஊடுருவல் நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக, மிகவும் கணக்கிட முடியாத வகையில் எந்த வித வரலாற்று அடிப்படையும் அற்று , ஷயோக் ஆற்றின் முகத்துவாரம் மற்றும் குல்வான் ஆற்று பகுதிகளுக்கு உரிமை கோரும் சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. இது போன்ற மேலாதிக்க பேராசையை அந்த நாடு வளர்த்தெடுப்பதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை முனிட்டு 2021-க்குள் இடைக்கால நவீன மயமாக்கல் இலக்கை அடைவதற்காக தகவல்தொழில்நுட்ப போர்கள பயன்பாடுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த இணை செயல்பாடுகளை அடைவதற்கான ஆரம்ப கட்டத்தில் அந்த நாடு உள்ளது. மே-ஜூன் மாதங்களில் கிழக்கு லடாக் பகுதிகளில் நடந்த நிகழ்வுகள் அதற்கான பெரிய சோதனைக்களங்களாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக, சீன மக்கள் விடுதலை ராணுவம் முன்னேறுதல், தள்ளுதல், குதிரைகள் மூலம் ஊடுருவுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இவை நம் நாட்டுடனான மோதல்களின் சாட்சியங்களாக இருந்தன. இந்தியா உடனான ஒப்பந்தங்களை புறகணிப்பது குறைவாக இருந்தது.

பாங்கோங் த்சோ மற்றும் கால்வான் ஒரு புதிய காட்சியை நமக்கு வெளிப்படுத்துகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கூர்மையான முட்கம்பிகள் சுற்றப்பட்ட ராடுகள், கைமுட்டியில் மாட்டிய பித்தளை நக்கிள்ஸை கொண்டு எதிராளியை தாக்கும் சிறிய ஆயுதம் போன்றவற்றை உபயோகித்துள்ளது. திட்டமிட்டு முன்கூட்டியே தயாராக இருந்திருக்கின்றனர். சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் பிரிவுகள் அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதல் ஆயுதங்களைக் கொடுத்து உபயோகிக்க பயிற்சி அளித்தது போல நன்றாகத் தயாராகி இருக்கின்றனர். சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் இந்த முறையிலான காட்டுமிராண்டித்தனத்தில் எந்தவித ராணுவ நீதியும் இல்லை.

அனைத்து வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வழங்கப்படும் கருத்துகள் பேரழிவுக்கான முக்கியமான செய்முறையாக பொது மற்றும் ராணுவத்தின் கருத்தை பாதிக்கிறது. விஷயங்கள் குறித்து விவாதிப்பது ஒரு விஷயம், ஆனால், படைகளின் தொடர்புகள் குறித்து விவாதிப்பது, பழக்கப்படுத்தப்படவில்லை. கால்வானில் தொடர்பில் இருந்த 16 பீகார் என்ற பிரிவு சூப்பர் உயரமான பகுதியில் இரண்டு ஆண்டுகள் பணி செய்வதற்கான பயணத்தை முடித்திருக்கிறது. அது நல்ல பயிற்சியாகவும், கடும் குளிரிலும் ரோந்து மேற்கொள்வதற்கும் டெப்சாங் பீடபூமியில் ஆதிக்கம் செலுத்துவதற்குமான நல்ல பயிற்சியாகும். பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் படைகள், செயற்கை கோள் படங்கள் அல்லது ஆடம்பரமான ஸ்லைடுகளை வைத்துக் கொண்டு நிபுணர்கள் சொல்வதை விடவும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் கள நிலவரத்தை புரிந்து வைத்திருக்கின்றன. இடத்தின் விவரங்கள், என்ன மாதிரியான ஊடுருவல் அல்லது மீறுதல் என்பது குறித்து லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கமாண்டிங் அதிகாரிகள் மற்றும் கமாண்டர்கள் வல்லுநர்களை விடவும் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

படைகளால் மற்றும் கமாண்டர்களால் எதிரிகளை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ராணுவ முடிவுகள் அல்லது உந்துதல்கள் குறித்து தொலைகாட்சி ஸ்டுடியோகளில் விவாதங்கள் அல்லது டுவீட்டர் நிகழ்வுகளில் மெத்தப் படித்த நிபுணர்கள் மேற்கொள்வது அடிப்படையில் அரசியல் கட்சிகளை குறிவைக்கும் மறைமுக குத்தல் பேச்சுகளாகும். உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் சிரமங்களுடன் போரிடுபவர்களின் நம்பிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாகும்.

சீனாவின் படைகளை ஏதோ ஒரு பகுதியில் அல்லது கிழக்கு லடாக்கில் எதிர்கொளும் அமைப்புகள் அல்லது இந்திய ராணுவப் பிரிவுகள் வக்கிரமான அல்லது நம்பிக்கைக்கு ஒவ்வாத சீனபடைகளுக்கு எதிராக நல்ல நம்பிக்கை மற்றும் கவுவரத்தை கடைபிடிப்பதில் வரம்புகள் இருக்கின்றன. இந்திய ராணுவம் வடக்கு எல்லைப் பகுதிகளில், படைகளை ஈடுபடுத்துவதற்கான விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் உத்திகளை வகுக்க வேண்டும். கடந்த கால ஒப்பந்தங்கள் படைகளின் தந்திரமான உத்திகளை கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் சீனப்படைகள் அலட்சியத்துடன் செயல்படுகின்றன. கைகளில் மாட்டி எதிரியைத் தாக்கக் கூடிய நக்கிள்களை இந்திய ராணுவம், குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. சூழ்நிலை மீண்டும் எழுந்தால் எதிர்கொள்ளும் வகையில் ராணும் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும்.

அரசியல் மட்டத்தில், நாடாளுமன்றம், கமிட்டிகள் என பிரதித்துவ‍ அமைப்புகள் விளக்கங்கள் கேட்கும்போது வழக்கமான விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும். இது அரசியல்வாதிகளின் உரிமையாகும். எனினும், இந்த உடனடி நிகழ்வில், அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்று வரும் சூழல்கள் முன்கணிப்புகள் குறித்து விளக்கப்பட வேண்டும். பிரதமரின் சுருக்கமான கருத்துகள் சூழலுக்கு வெளியே புரிந்து கொள்ளப்பட்டன. பிரதமர், கால்வான் ஆற்றுப் பகுதியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டார். ஆனால், அவரது கருத்துகள் அந்த ஒட்டு மொத்த பகுதிக்கானது என்று புரிந்து கொள்ளப்பட்டது. கடுமையான அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டது. பின்னர், இவை விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டன இது சிக்கலுக்குத் தீர்வாக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் தேசிய ஒற்றுமை இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை பொருத்தவரையிலான விஷயங்களில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். மென்மையான அணுகுமுறையுடனோ அல்லது அரசியல் பலிபீடத்தில் மறைக்கப்படுவதாகவோ இருக்கக் கூடாது.

அதே போல, தேசிய பாதுகாப்பின் வரம்புகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, அமைப்பானது வதந்தி பரப்புவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தகவல் வெற்றிடமாக இல்லாமல் தேசத்துக்கு உரிய தகவலைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்

சீன ராணுவம் எப்போதுமே கிழக்கு லடாக் பகுதியில் குறிப்பாக தவ்லாலத்-பேக்-ஓல்டி, சிப்-சாப் ந தி, டிராக் ஜங்க்ஷன், காரகோரம் பாஸ் பகுதிகளில் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது. வடக்கு எல்லைகளில் நிர்வாக நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தின் கீழ் செயல்படும் இந்தோ-திபெத்ய எல்லைப் படையின் பிரிவு அளவுக்கு நெருக்கமான படைகளை நிறுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நொடிக்கு நொடி செயல்படும் நுண்ணறிவு, கண்காணிப்பு கருவிகள் ஆகியவை தேவையான அளவில் செயல்படும் அளவுக்கு கள அமைப்புகளிடம் அவசியம் இருக்க வேண்டும். அதிகாரத்துவத்தின் பிரமையால் அவை தாமதப்படுத்தப்படக் கூடாது.

தொடர்புகள் அற்ற, இயக்கமற்ற போர்முறையைக் கொண்ட நவீன வெளிப்பாடுகளைக் கொண்ட எதிர்காலத்துக்கு நாம் திட்டமிடவேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பிட்ட பொருளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சொற்பொருளில் தேவையற்ற முக்கியமற்ற பிழைகளை தேடுவதை நாம் தவிர்க்க வேண்டும். களத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு இது ஒரு பெரிய சேவையாக இருக்கும்.

இந்த கட்டுரை முதலில் Securing the future என்ற தலைப்பில் 24-ம் தேதியிட்ட நாளிதழில் வெளியானது. கட்டுரையாளர் லே பகுதியில் உள்ள 14 படைப்பிரிவின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்க் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment