டெல்லிக்கு உண்மையான சவால் என்பது, பெய்ஜிங்க் உடனான அதன் செலவு பிடிக்கக் கூடிய பிராந்திய தகராறை நிர்வகிப்பதுதான். தொடர்ந்து, சீனாவுடன் அதிகரித்து வரும் அதிகார ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.
சி.ராஜா மோகன்
லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுடன் சீனா ஏன் புதிய ராணுவ சிக்கலை துரிதப்படுத்தியது? டெல்லியில் இது குறித்து பல்வேறு விளக்கங்கள் சுற்றி வருகின்றன. அதில் எப்போதுமே எளிதான ஈர்க்கக் கூடிய ஒன்று-இது எல்லாமே அமெரிக்காவினால்தான் என்பதுதான். இந்தியா வாஷிங்க்டன் உடன் நெருங்கிப் பழகுவதால்தான் பெய்ஜிங்கின் கோபத்துக்கு ஆளானது என்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான குவாட் குழுவில் இடம்பெறுவதற்காக இந்தியா ஒரு புதிய உற்சாகத்தைக் கொண்டுள்ளது . இதுதான் டெல்லிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சீனாவை ஊக்குவித்தது என்று சொல்லப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சீனாவின் இதர நாடுகளுடனான பிரச்னைகள் தொடர்பாக எப்படி இந்த கோட்பாட்டை பிடித்துக்கொண்டிருக்க முடியும். தெற்கு சீனா கடல் பக்கம் நாம் திரும்பிப் பார்க்கலாம். தகராறுக்கு உரிய கடல் பகுதியில் சீனா துணிவோடும், ஆவலுடனும் அதன் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.பெய்ஜிங் மற்றும் ஜகர்தா இடையேயான பிராந்திய தகராறு குறித்த பதற்றங்களை சேகரிப்பதில் இருந்து நாம் தொடங்குவோம்.
இதுவரை, பிராந்திய தகராறு தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத கடினமான நிலையில்தான் உள்ளது. பெய்ஜிங் உடனான பிராந்திய பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்கு குறைந்த பட்சம் தென்சீனக் கடலில் தூரம் என்பது உத்தரவாதமாக இல்லை. தெற்கு சீனா கடல் விவகாரத்தில் பெய்ஜிங் உடன் எந்தவித பிராந்திய தகராறுகளும் இல்லை என்று ஜகர்தா உறுதியாகச் சொல்கிறது. ஆனாலும், அங்கே பிரச்னை இருக்கிறது.
நீங்கள் அபாயமான சிக்கல் வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால், சிக்கல் உங்கள் கதவைத் தட்டிக்கொண்டு வரத்தான் செய்கிறது. குறிப்பாக, ஒரு பெரிய அதிகாரத்துக்கு இதில் தொடர்பு இருந்தால்? தமக்குச் சொந்தமான குட்டையில் சேறைக் கலக்குவதாக ஆட்டுக்குட்டி மீது ஓநாய் குற்றம்சாட்டுவது பற்றிய ஈசாப்பின் கதையை நினைவில் கொள்ளுங்கள். ஆட்டுக்குட்டியானது, தண்ணீர் குடிப்பதற்காகவே அதில் இறங்கியதாக கூறியது. சேறை கலக்கவில்லை என்கிறது. நிச்சயமாக அது செய்யவில்லை எனினும், அதனை சாப்பிடுவதில் இருந்து ஒநாய் நிறுத்தியதா?
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ஜகர்தா தன்னுடைய கடல்பகுதியில் உள்ள அதன் நேச்சுனா தீவுகளுக்காக சீனாவை சமாளித்து வருகிறது. நேச்சுனா தீவுகள் சீனாவின் நிலப்பகுதியில் இருந்து 1500 கி.மீ க்கு அப்பால் இருக்கிறது. ஆம். நீங்கள் படித்தது சரிதான்.-1500 கிமீ. நேச்சுனா தீவுகள், சீனா உரிமை கோரும் வரையறுக்கப்படாத தெளிவற்ற நிலையில் உள்ள தெற்கு சீன கடலின் 80 சதவிகிதப் பகுதிக்கு அப்பால்தான் இருக்கிறது. நேச்சுனா தீவுகளுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த பொருளாதார மண்டலம் என்ற அந்தஸ்தை இந்தோனேஷியா வழங்கியதில்தான் இப்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த கடல்பரப்பின் மீது வரலாற்று ரீதியாக உரிமை இருக்கிறது என்று சீனா சொல்கிறது. இந்த கடல்பகுதியில் மீன்பிடி படகுகளை அனுப்பி இருக்கின்றோம் என்று சொல்கிறது. சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜகர்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ச்சியான ராஜந்திர ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியது. நேச்சுனா தீவுகள் இந்தோனேஷியாவின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை கோடிட்டு காட்டும் வகையில் இந்தோனேஷிய அதிபர் அங்கு சென்று வந்தார். நேச்சுனா தீவுகளுக்கு அருகே சீனாவின் மீன்பிடிப் படகுகள் எப்போதாவது மூழ்கும். இவையெல்லாம் பெய்ஜிங்கிடம் ஒரு விளைவை ஏற்படுத்தி வருகிறது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தலைமையிடம் இது குறித்து சந்தேகத்துக்கு இடமின்றி எடுத்துக் கூறினார். “இந்தோனேஷியா தரப்பில் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ சீனாவுக்கு அது தொடர்பான கடல் பகுதியில் உரிமையும் ஆர்வும் உள்ளது .எது ஒன்றும் இந்த புறநிலை உண்மையை மாற்றாது” என்று கூறி உள்ளார்.
பிராந்திய தகராறுகள் குறித்து இந்தோனேஷியா உணர்வுப்பூர்வமாக ஒரு மிதமான தொனியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அதன் சக ASEAN உறுப்பு நாடுகளிடம் வாதங்களை எடுத்து வைத்து வருகிறது. இன்னொரு புறம் சீனாவும் இதரநாடுகளிடம் இது குறித்து வாதங்களை முன் வைக்கிறது. தெற்கு சீனா கடல் தகராறில் அமைதியான தீர்வை ஜகர்தா முன்னெடுக்க விரும்புகிறது. ஜகர்தா-வாஷிங்க்டன் இடையிலான உறவுகள் காரணமாக சீனா இதை பிரச்னையாகக் கருதலாம்.
இந்தோ-பசிபிக் அணுகுமுறையில் அமெரிக்காவை ஜகர்தா ஆதரிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒரு சொந்த கருத்தை உருவாக்க அதிக முயற்சி எடுத்தது. இந்த விஷயத்தில் ASEAN உறுப்பு நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தது. மிகவும் மோசமான குவாத்தில் இந்தோனேஷியா உறுப்பினராக இல்லை. அதன் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசேரா நாடுகளுடையது. 1955-ம் ஆண்டு பண்டுங் மாநாட்டை நடத்திய வகையில் இந்தோனேஷியா அணிசேரா நாடுகள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர் மட்டுமல்ல சாம்பியனும் கூட.
ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் பழைய காலத்திய ராணுவ கூட்டாளி பிலிப்பைன்ஸ் கதையைப் பொறுத்தவரை, அணிசேரா கொள்கையைக் கொண்ட இந்தோனேஷியா சீனாவுக்கு பிரச்னையாக இருப்பதை நன்றாக மேம்படுத்துகிறது. அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே 2016-ம் ஆண்டு பதவிக்கு வந்தபோது, அமெரிக்காவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் ஒரு விலகலை கடைபிடிக்கும் என்று தீர்மானித்தார். பெய்ஜிங்க் உடனான, பிராந்திய தகராறில் உண்மையான கடல் வழி குறித்து ஏற்ற ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் சீனாவை ஆதரித்தார்.
இந்த ஆண்டின் பிப்ரவரியில், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் செயல் பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை மனிலா அறிவித்தது. ஆனால், கடந்த வாரம், அமெரிக்கா உடனான ராணுவ ஒத்துழைப்பு ரத்து தீர்மானத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.
காரணம்; மணிலா சொந்தம் கொண்டாடும் தெற்கு சீனா கடல் தீவுகள் விஷயம், சீனாவின் புதிய நிர்வாக மாவட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் மீது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் , இடைவிடாத ராணுவ அழுத்தம் கொடுத்து வருகிறது.
தவறு செய்வதை தவிர்ப்பதற்கு மிகுந்த முயற்சியில் ஈடுபடும் ஜகர்தா அணி சேரவும் இல்லை மணிலாவும் அமெரிக்கா உடனான அதன் கூட்டணியை முறிக்க தயாராக இருக்கிறது. சீனா உடனான பிராந்திய மோதல்களில் கையை முறுக்கிக்கொண்டு வரும் பெய்ஜிங்கின் தற்போதைய அணுகுமுறையில் இருந்து விடுபட நினைக்கிறது. சீனாவின் நடத்தைக்கான ஆதராம் குறித்து புத்தி ஜீவிகள் வாதிடும் போது, பொது அறிவுடன் கூடிய விவசாயிகள், வெற்றுப்பார்வையில் பொய்யான பதில்களை சுட்டிக்காட்டலாம். அந்த ஒன்றில் சரியோ, தவறோ பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் சீனா நீண்டகாலமாக உரிமை கோரி வருகிறது. இன்னொரு விஷயத்தில் மண்டல அதிகார நடுநிலைத்துவத்தில் சீனாவுக்கு ஆதரவாக வியத்தகு மாற்றம் இருக்கிறது. கடந்த காலங்களைப் போல அல்லாமல், சீனாவுக்கு இப்போது ராணுவ பலம் இருக்கிறது. சிறிய மற்றும் துண்டுப்பகுதிகளாக மட்டும் இருந்திருந்தால், பிராந்திய அந்தஸ்தை மாற்றும் வகையில் அது சொந்தம் கொண்டாடுவதை சிறப்பாக செய்திருக்கும். இதைத்தான் தெற்கு சீன கடல்பகுதியில் சீனா செய்து வருகிறது. லடாக்கில் நிலைமை வேறு பட்டதாக இருக்காது.
வட இந்திய விவசாயி ஆக இதனை தொகுக்கலாம். பெரிய குச்சியுடன் இருக்கும் அவன், சொந்தமாக ஒரு எருமையை பெறப்போகிறான். நீங்கள் விரும்பினால், ஒரு பாசாங்கான வழியில் இதே விஷயத்தை சொல்ல்லாம். கிரேக்க மேதை துசிடிடிஸிடம் திரும்பலாம். “வலிமையானவர்கள் என்ன முடியுமோ அதைச் செய்கிறார்கள். வலிமை குன்றியவர்கள் அவர்கள் செய்வதை சகித்துக் கொள்கின்றனர்.”
டெல்லிக்கு உண்மையான சவால் என்பது, பெய்ஜிங்க் உடனான அதன் செலவு பிடிக்கக் கூடிய பிராந்திய தகராறை நிர்வகிப்பதுதான். தொடர்ந்து, சீனாவுடன் அதிகரித்து வரும் அதிகார ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்த கட்டுரை முதலில் கடந்த 9-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Raja Mandala: It’s not about America’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் The Indian Express நாளிதழின் சர்வதேச உறவுகளுக்கான கட்டுரைகள் அளிக்கும் ஆசிரியர் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசியன் ஆய்வுகள் மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.