இந்திய பொருளாதார நிலை : அச்சுறுத்தும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பு

imf indian economy forecast : நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த எதிர்பார்ப்புகளையும், அடுத்த இரண்டு ஆண்டுகளின் வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளையும் குறைவு என்றே அது கூறுகிறது

india economic slowdown, imf indian economy, imf indian economy forecast, india gdp, union budget 2020,
india economic slowdown, imf indian economy, imf indian economy forecast, india gdp, union budget 2020,

பன்னாட்டு நாணய நிதியமானது, உலகப் பொருளாதாரம் குறித்து அண்மையில் ஒரு கண்ணோட்ட மதிப்பீட்டை வெளியிட்டது. அதில், இந்தியப் பொருளாதார நிலை பற்றி ஒரு தெளிவான கணக்கீடு இடம்பெற்றுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த எதிர்பார்ப்புகளையும், அடுத்த இரண்டு ஆண்டுகளின் வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளையும் குறைவு என்றே அது கூறுகிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.8 சதவீதமாக வளர்ச்சியடையும் என்பது பன்னாட்டு நாணய நிதியத்தின் இப்போதைய எதிர்பார்ப்பு. இது, தேசிய புள்ளிவிவர அலுவலகம் கணித்த 5 சதவீதத்தைவிட சற்று குறைவு ஆகும். இதுவே, அடுத்த ஆண்டில் வளர்ச்சியானது 5.8 சதவீதமாக இருக்கும் என்று நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. இது, அதன் அக்டோபர் கணிப்பீட்டைவிட 1.2 சதவீதம் புள்ளிகள் குறைவானது.

இந்தியாவில் உள்ள சில தரப்பினர், நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் உலக அளவில் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் காணப்படும் மந்தநிலைதான் என்று வாதிடுகின்றனர். ஆனால், நாணய நிதியமோ, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, உள்நாட்டுப் பிரச்னைகளே முதன்மையான காரணம் என்கிறது. வங்கிசாரா நிதித் துறையில் ஒரு வகை இறுக்கமான நிலை காணப்படுவதால், கடன் வளர்ச்சியில் சரிவும் ஊரகப் பகுதி வருவாயில் மிகக்குறைவான வளர்ச்சியுமே உள்ளது. இந்த நிலைமையில் உள்நாட்டுத் தேவையானது எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் இந்த சரிவுப் பயணமானது, மற்ற வழிமுறைகளைவிட உலக அளவிலான வளர்ச்சிவாய்ப்புகளைக் குறைத்துவிட்டது.
உலகளாவிய வர்த்தக வளர்ச்சியானது சிறிது அமுங்கிப்போய்விட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியும். பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துப்படி, உலக வர்த்தக அளவின் (பொருட்கள் மற்றும் சேவைகள்) வளர்ச்சியானது, 2019 ஆம் ஆண்டில் வெறும் ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் 3.7 சதவீதத்தைவிடக் குறைவு என்பதைக் குறிப்பிடவேண்டியதில்லை. இது ஒருபக்கம் இருக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதியானது தேக்கநிலையில் இருந்துவருகிறது. ஆனபோதும், மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல, வங்காளதேசத்தின் ஆடை ஏற்றுமதி இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரமானது இந்த அளவுக்குக் கீழே போய்விட்டாலும், அண்டை நாடான வங்காளதேசமானது ஏறத்தாழ 8 சதவீதமாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு உலகளாவிய சவால்கள் இல்லை என்பது இதன் பொருள் அன்று. மத்திய கிழக்கு நாடுகளில் புவிசார் அரசியல் பதற்றத்தால், பெட்ரோலியத்தின் விலையேற்றம் ஏற்படக்கூடும். இது, பேரியல் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இன்றுவரை, இந்தியப் பொருளாதாரத்துக்கான சவால்கள் அதிகமாக உள்நாட்டைச் சேர்ந்தவையாகவே உள்ளன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டை பெரும் வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியானது, மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கவேண்டியதாக அமைந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின்படி, இந்த முறை அரசாங்கத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி சராசரியாக 5.7 சதவீதமாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல்செய்யப்படவுள்ள மைய அரசின் வரவுசெலவுத் திட்டமானது, அரசாங்கம் தன்னைப்பற்றி மறுபரிசீலனை செய்வதற்கும் நிலவும் இடறல்களை சரிசெய்வதற்கும் பொருத்தமான தருணம் ஆகும். அர்த்தமுள்ள ஒரு நிதித் தூண்டலுக்கான இறுக்கமான வெளியும் நிதித்தளர்த்தலின் வரம்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில், நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அது தெளிவுபடுத்தவேண்டும். தற்போதைய நிலைமையில், அதிக வளர்ச்சிக்கான தீவிர சீர்திருத்தங்களில் ஈடுபடுவது அவசரத்தேவையாகும். இதைப் பற்றி மிகையாக எதையும் கூறமுடியாது.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India economic slowdown imf indian economy india gdp

Next Story
விமர்சனங்களுக்கு இடையேயும் விடாமுயற்சி போராட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X