உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய நோயை மட்டும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் கொடியக் கொரோனா தாக்குதலையும், அண்டை நாடானப் பாகிஸ்தானின் துப்பாக்கித் தாக்குதலையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய நோயை மட்டும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் கொடியக் கொரோனா தாக்குதலையும், அண்டை நாடானப் பாகிஸ்தானின் துப்பாக்கித் தாக்குதலையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது.
India faces disease and war, India faces coronvirus covid-19 disease and war , இந்தியா எதிர்கொள்ளும் நோயும் போரும், இந்தியா, பாகிஸ்தான், கொரோனா வைரஸ், கோவிட்-19, Pakistan attack on Indian Army at Border, Coronavirus mission, covid-19, India, Dr Kamala Selvaraj article
முனைவர் கமல செல்வராஜ், கட்டுரையாளர்
Advertisment
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய நோயை மட்டும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் கொடியக் கொரோனா தாக்குதலையும், அண்டை நாடானப் பாகிஸ்தானின் துப்பாக்கித் தாக்குதலையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாகக் கொரோனா என்ற ஒற்றைச் சொல் மந்திரத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதுமுள்ளப் பத்திரிகை, டி.வி. உட்பட அனைத்து சமூக ஊடகங்களும் இந்த ஒற்றைச் சொல் மந்திரத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றன.
உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் வீட்டிற்குள்ளையே அடைபட்டுச் செய்வதறியாதுத் திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உலகத் தலைவர்களும் இந்த ஒற்றைச் சொல் மந்திரத்திலிருந்து எப்படித் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றலாம் என்ற ஏகச் சிந்தனையில் மட்டுமே உள்ளனர்.
Advertisment
Advertisements
அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டு மக்களையும் காப்பாற்றி, அமெரிக்கா – சீனா போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகிலுள்ள பெருவாரியான நாடுகளுக்குக் கொரோனாவுக்கான பாதுகாப்பு பொருள்களையும் மருந்து வகைகளையும் வழங்கி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று, உலக நாடுகளின் நாயகனாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி இந்தியா உலக ரட்சகனாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில், தற்பொழுது இந்தியாவின் இராணுவ தலைமை தளபதி நரவனே வெளியிட்டிருக்கும் ஒரு தகவல், நாட்டின் மீது சிறிதளவேனும் பற்று கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அவர் வெளியிட்டிருக்கும் தகவல் “உலக நாடுகளுக்கு இந்தியா மருந்தை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் போது, பாக்கிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது” என்பதுதான். நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதால் போர் நிறுத்த நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்த நடைமுறைகள் அனைத்தையும் மீறி, இந்தியாவின் எல்லைகள் முழுவதிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு திசைகளிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி, இந்திய இராணுவ வீரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி ஏராளமான இராணுவ வீரர்களின் இன்னுயிரைப் பழலிவாங்கியுள்ளனர்.
மேலும், அவர் கூறியுள்ள தகவலில் “கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை 1,114 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தின் உச்சத்தை எட்டிய மார்ச் மாதத்தில் மட்டும் 411 முறை தாக்கியுள்ளது.
அதோடு ஊரடங்கு கடுமையாக உள்ள காஷ்மீரில் கிராம மக்கள் மீது நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணியும் இரண்டு சிறுவர்களும் இறந்துள்ளனர்” என்ற தகவலையும் மிகவும் கவலையோடுத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இந்த அளவிற்கு நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் இன்னும் அறியாமலே இருக்கின்றார்கள். ஏனென்றால், நம் நாட்டிலுள்ளப் பத்திரிகை, டி.வி. போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவுமே இதைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் இல்லை. இதிலிருந்து இந்திய மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் கொரோனாவைப் பற்றி மட்டுமே கவலைபட்டுக் கொண்டிருக்கும் போது, நம் நாடு இப்படிப்பட்ட போர் தாக்குதலின் துயரத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்த கொரோனா பரவுவதற்கு சீன நாடுதான் காரணம் என அமெரிக்கா, அதன் மீது கடுமையானக் கோபத்தில் உள்ளது. சீனா மீது நேரடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதே சீனாவுக்கு, இந்தியா முகக் கவசம், கையுறை, மருந்து பொருள்கள் என 15 டன் பொருள்களை அனுப்பி வைத்திருக்கிறது என்றால், நம் நாட்டின் பெருந்தன்மையும், மனிதாபிமானமும் எங்கே இருக்கிறது என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
நம் நாட்டிலிருந்து கொரோனாவிற்கான மருந்து பொருள்களைப் பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட “இந்தியா இஸ் குட், மோடி இஸ் கிரேட்” எனப் பாராட்டியுள்ளார்.
ஆனால், பாழாப் போன பாகிஸ்தான் மட்டும், தன் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எப்படியாவது காப்பாற்றுவதற்கான வழியைப் பார்க்காமல், “எரிகிற வீட்டில் பிடுங்குகிற கொள்ளி மிச்சம்” என ஊருக்குள் பேசும் பழமொழிக்கு ஏற்ப நம் நாட்டின் மீது மனிதாபிமானமற்ற முறையில் மறைமுகப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
இராமாயண யுத்தம் நடக்கும் போது போருக்குக் கொண்டு வந்த அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதப்பாணியாக நின்ற இராவணனைப் பார்த்த இராமன், “இன்று போய் நாளை வா” என்று கூறி போர் தர்மத்தைக் கடைபிடித்தப் பாரம்பரியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்தியர்கள் என்பதையும், தர்மம் ஒரு நாள் வெல்லும் என்பதையும் பயங்கரவாதத்தைப் பரப்பும் பாகிஸ்தான் புரிந்து கொண்டால் நல்லது.
இந்த கட்டுரையை எழுதியவர், முனைவர் கமல.செல்வராஜ்
அருமனை. அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"