உலகின் நான்காம் பெரிய சுற்றுலா பொருளாதாரமாக உருவெடுக்கும் இந்தியா!

இந்திய சுற்றுலா துறை 2016 ஆம் ஆண்டில் 209 பில்லியன் டாலர் வருவாயையும், 2017 ஆம் ஆண்டில் 230 டாலர் வருவாயையும் ஈட்டியுள்ளது.

ப்​ரதீப்

அபரிதமான சாத்தியங்களை நம் நாட்டின் இயற்கை வனப்பு வாரி வழங்கியிருந்த போதும், அந்த அத்தனை சாத்தியங்களையும் ஓர் கட்டுக்குள் கொண்டு வருவதென்பது அரிதானதாகவே நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் கிராமங்களின் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்நாள் முழுவதையும் அதே மாவட்டத்திலும் அதே மாநிலத்திலுமே வாழ்ந்து முடிக்கின்றனர். இந்த பரந்த விரிந்த நாட்டின் எல்லையை அவர்கள் கடந்ததுமில்லை, கடக்க முற்பட்டதுமில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர் புதிய ரசனைகளை, புதிய அழகுகளை நாட்டிலிருக்கும் சாகச சாத்தியங்கள் அனைத்தையும் வெளி கொணர்வதிலும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். உலக சுற்றுலா மற்றும் பயண கவுன்சில் சீனா, அமெரிக்கா மற்றும் ஜெர்மன் என்ற வரிசையில் அடுத்தப்படியாக நான்காம் இடத்தில் இந்தியா இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது.

இந்தியாவிற்க்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2017 நம் நாட்டிற்கு சுற்றுலா வந்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அசலான வளர்ச்சி என்பது மறுஎழுச்சி பெற்று மிளிர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு சுற்றுலா துறையின் மூலமே சாத்தியமாகியுள்ளது. மொத்த பயணிகளில் 90 விழுக்காட்டினர் இந்த வகையை சார்ந்தவர்களே. இந்திய சுற்றுலா துறை 2016 ஆம் ஆண்டில் 209 பில்லியன் டாலர் வருவாயையும், 2017 ஆம் ஆண்டில் 230 டாலர் வருவாயையும் ஈட்டியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் அவர்களின் மிகவும் விருப்பமான சுற்றுலா இடமாக இருந்தது தென்கோடி மாநிலமான தமிழ்நாடு, அங்கிருக்கும் கோவிலுக்கும் ஆர்வமுடன் வருகை தரும் அனைத்து யாத்ரீகர்களுக்கும் நன்றி. கேரளாவில், 400க்கும் அதிகமான மிருகங்களின் வசிப்பிடமாக திகழும் 527 ஏக்கர் வனத்தில் அமைந்திருக்கும் “ஃபிரிஞ்ச் போர்ட்” என்ற ஐந்தறை கொண்ட தங்கும் விடுதியின் நிறுவனர் அஹ்மத் சமன்வாலா, “இந்தியர்கள் இறுதியில் தங்களின் சொந்த நாட்டை வெளிக்கொணர துவங்கிவிட்டனர். எங்களுடைய ஆரம்ப நாட்களின் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் நம் நாட்டை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆண்டுகள் செல்ல, நம் நாட்டின் முக்கியமான நகரங்களிலிருந்து உள்நாட்டு பயணிகள் வார இறுதிகளில் இங்கு வரும் போக்கு கணிசமான முறையில் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையை மையப்படுத்தி, தற்போது இதற்கு நல்ல சந்தை அமைந்துள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் நம் இந்திய சுற்றுலா துறையிலிருக்கும் ஒரே பிரச்சனை, இங்கு சுற்றுலா தளங்களின் பாதுகாப்பு தீவிரமான ஒன்றாக எடுத்துக்கொள்ள படவில்லை. சில பகுதிகளில், புலிகள் சரணாலயத்தில் புலிகளே இல்லை. புகைப்படம் எடுக்கப்பட வேண்டிய வளங்களை விட தன்னார்வமிக்க புகைப்பட கலைஞர்களே அதிகமாக உள்ளனர். வனவிலங்குகளை கண்கானிக்க பயன்படும் பயண வாகனங்கள் நிறுத்துமிடங்களில் மிக நெரிசலாக உணர்கின்றன. இந்த பிரச்சனைகள் அனைத்தும் மிக அதிகமாக அழுத்தமாக சொல்லப்படுவது உயரிய இடத்திலிருக்கும் ஹிமாச்சல பாலைவனங்களிலும், ஜம்மு&காஷ்மீர் லடாக் பகுதியிலும் தான், இந்த இடங்கள் பல ஆண்டுகளாக இந்திய இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதி.

ஆனால் தற்போது 2.5மில்லியன் இந்தியர்கள் வருடாவருடம் இங்கே வருகைபுரிகிறார்கள், பாலிவுட் திரைத்துரையினரால் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட இயற்கை வனப்புகளை காண படையெடுக்கின்றனர். தற்போது அங்கே 650 தங்கும் விடுதிகளும் மற்றும் வீட்டு விடுதிகளும், அதனோடு 4300 குடும்பங்கள் நில ரீதியாகவும் இம்மாவட்டத்தில் ஒத்துழைக்கின்றனர். நிலையான சட்டதிட்டங்கள் வகுக்கப்படாததால், அங்கு வரும் பார்வையாளர்களை உறிஞ்சும் செயல்தான் நடைபெறுகிறது. யாரும் தன்னுடைய பண எந்திரங்களை அணைத்து வைப்பதே இல்லை.

லடாக் போன்ற பகுதிகள் ஓர் தூய பரிசுத்தமான சுற்றுசூழல் காட்சியை மனதிற்குள் நிறுவ வல்லது. ஆனால் அங்கு வரும் பார்வையாளர்கள் ஆயிரம் பவுண்டுகளுக்கும் மேலான குப்பைகளை ஒவ்வொறு வருடமும் உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொறு கோடையிலும் 30,000 மேற்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்கள் லடாக் பகுதியின் திறந்தவெளி காட்டுப்பகுதியில் வீசி செல்கிறார்கள்.

அண்டை நேபாளத்திலிருக்கும் எவரஸ்ட் சிகரத்தில் 8 முதல் 10 மெட்ரிக் டன் அளவிலான சகல பொருட்களும் இருக்கும். ஆக்ஸின் கனிஸ்டர்கள் துவங்கி கூடாரங்கள் வரை, ஏன் சில சமயங்களில் மலை உயரத்தில் உடல்கள் கூட இருக்கும்.

மிக பிரபலமான மற்றும் முக்கியமான இயற்கை வளம் கொஞ்சும் சுற்றுலா பகுதிகளின் சுற்றுசூழல் பிரச்சனை தான் பிரதான கவலையே. வேகமாக பரவி வரும் சூற்றுசூழல் சீரழிவின் காரணமாக சில சுற்றுலா தளங்கள் அதன் வளர்ச்சியின் உச்சத்தை அடையும் முன்னரே அதன் வனப்பை இழந்துவிடக்கூடும் என்பதே நாடெங்கிலும் உள்ள சுற்றுலா துறை நிபுணர்களின் பிரதான கவலையுள் ஒன்று. இந்தியா அதன் சுற்றுலாத்துறையின் அனைத்து சாத்தியங்களையும் கண்கூடாக பார்க்க வேண்டுமெனில், பார்வையாளரின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுலா தலங்களை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும்.

(கட்டுரையாளர் G ப்​ரதீப்​, ​சமூக சேவகர், அறங்காவலர் சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேஷன்​​​)

×Close
×Close