ஊரடங்கை வெற்றிகரமாக்குவது எப்படி?

சுகாதார துறையின் திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மனநல மற்றும் சமூக விளைவுகள் குறித்து பேசவேண்டும்.

india lockdown, coronavirus india lockdown, coronavirus india news updates, coronavirus india cases, social distancing, indian express opinion
india lockdown, coronavirus india lockdown, coronavirus india news updates, coronavirus india cases, social distancing, indian express opinion

ரவிக்குமார் சொக்கலிங்கம், கட்டுரையாளர்.

பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, நாட்டின் 1.3 பில்லியன் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தினாலும், அதை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். வெளிப்படையாக கூறினால், சில சிரமங்களை முக்கிய தேவைகளாக கருதி சகித்துக்கொள்ள வேண்டும். மற்ற நாடுகள் ஏற்கனவே எதிர்கொள்ளும் பேரழிவுகளின் அளவைப்பொறுத்து நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகமிக அவசியமாகிறது. முக்கியமான சேவைகள் தடைபடாதவகையிலும், தொடர்ந்து நடக்கும் வகையிலுமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் இதுபோன்ற நேரங்களில் பின்தங்கிய மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். பொருளாதார நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலும் அதை செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகள் கணிசமான அளவு துயரத்தை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஏற்படுத்தும். தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கு நமக்கு கொஞ்சம் நேரம் கிடைத்திருப்பதை நாம் உணரவேண்டும். அந்த நேரத்தை நாம் வீணாக்கக்கூடாது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டவுடன், தொற்றுநோய் பரவலின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்காது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஊரடங்கின்போது சுகாதார பணியாளர்களை பாதுகாப்பது: இந்தியாவில் சுகாதார பணிகளின் நிலை நலிவடைந்துள்ளது. நமது சுகாதாரத்துறையில் உள்ள மனிதவளம், அதில் நாடு முழுவதிலும் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகியவை இங்கு நீண்ட காலம் தீர்க்கப்படாத குறைகளாக உள்ளன. 2016ம் ஆண்டு எண்ணிக்கையின்படி, கோவாவில் 10 ஆயிரம் பேருக்கு 41.6 மருத்துவர்களும், அதே சட்டிஸ்கரில் 3 முதல் 4 மடங்கு குறைவாகவும் உள்ளனர். பிகாரில் ஒரு லட்சம் பேருக்கு 4.8 செவிலியர்களும், அதேநேரத்தில் கேரளா கோட்டயத்தில் 396.6 செவிலியர்களும் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகள்தான் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு வகையான முடிவுகள் கிடைப்பதற்கு காரணமாகின்றன. இந்த பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யமுடியாமல் போகலாம், இதனால்தான், தற்போதுள்ள பணியாளர்களை பாதுகாப்பது கட்டாயமாகிறது. பரிசோதனைகள் அதிகளவில் கிடைக்கும்போது, தேசிய அளவில் ஆணை பிறப்பிதன் மூலம், சுகாதார பணியாளர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். ஒருமுறை பரிசோதிப்பதுடன் மட்டுமின்றி, அவர்களை தொடர்ந்து பரிசோதிப்பதையும் உறுதி செய்யவேண்டும். இதுபோன்ற ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே, உலகம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் இறப்புவிகிதம் அதிகரித்ததற்கு காரணமாகும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும், உடனடியாக சிசிச்சையளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படவேண்டும். தனிநபர் பரிசோதனையுடன், pooled testing எனப்படும், ஒட்டுமொத்த பரிசோதனையும் செய்யவேண்டும். இதன் மூலம் இஸ்ரேலில், ஒரே நேரத்தில் 60 பேர் வரை பரிசோதித்து சரிபார்க்கப்பட்டது. அதன் முடிவுகளை இணையதளத்தில் வெளியிடவேண்டும். தொழில்நுட்பத்தை தாராளமாக பயன்படுத்தவேண்டும். தனிநபர் பாதுகாப்பு (PPE – Personal Protective Equipment) கருவிகளை அனைவரின் பயன்பாட்டுக்கும் விடுமளவிற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்கு நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலை முதலாளி முன்வந்து, அரசுடன் இணைந்து தனிநபர் பாதுகாப்பு கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான மற்ற பொருட்களை பெருமளவில் தயாரிப்பதற்கு முன்வரவேண்டும்.

நோய் தொற்று குறித்த தகவல்களை அளித்தல்: உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய தனிமைப்படுத்தல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. வரும் வாரங்கள் வளர்ந்துள்ள இரண்டு விஷயங்களை நம் கண் முன் நிறுத்தும்: ஒன்று அறிகுறி காட்டாத நபர்களிடம் இருந்து அமைதியாக தொற்று பரவியிருக்கும். இரண்டாவதாக, கோவிட் – 19 தொடர்பான சேவைகளை பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் மருத்துவமனைகளில் காட்டியிருப்பார்கள். நம்மிடம் தற்போது 1,251 உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை அடர்த்தியை பொறுத்து, இந்தியாவின் முதல் நோயாளி உறுதிசெய்யப்பட்ட கால அளவை பொறுத்து, இத்தாலி அல்லது அமெரிக்காவோடு ஒப்பிடும்போது பரவல், கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பதை கணிக்க முடிகிறது. இரு நாடுகளும் அவர்களின் முதல் நோயாளியை இந்தியா உறுதி செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக உறுதிசெய்திருந்தனர். பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து, இந்தியாவில் குறைந்தளவிலான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்ற விளக்கத்தை குறிப்பிட்டால், இத்தாலி அல்லது அமெரிக்காபோல், அதிகளவிலான மக்கள் மருத்துவமனைக்கு வரவில்லை. இறப்பு விகிதமும் அதிகரிக்கவில்லை. எனினும், மற்ற நாடுகளில் ஏற்பட்டதைப்போல், லேசான மற்றும் கடுமையான அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் பெருகும் நேரத்தில்தான் நாம் இருக்கிறோம். ஏற்கனவே கூறியதைப்போல், தற்போது உள்ள சமூக இடைவெளிக்கான ஊரடங்கு போன்ற முயற்சிகளின் விளைவாக, தொற்று தற்போது வரை நம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஒருங்கிணைந்த முயற்சிகள் அதிகளவில் பரவும் ஆபத்தை தடுக்கும். ஊரடங்கின்போதே பரிசோதனை திறன்களை விரிவாக்கி, தொற்று பாதித்துள்ளவர்கள் மற்றும் தொற்று ஏற்பட சாத்தியமுள்ளவர்களை கண்டறிந்து, குறிப்பாக அறிகுறி காட்டுவதற்கு முன்னாலே அவர்களை தனிமைப்படுத்துவதை கட்டாயமாக மேற்கொள்ளலாம். இதன்மூலம் தொற்று குறித்த தகவலை சமூகத்திற்குள்ளேயே உருவாக்கலாம். இது ஊரடங்கை தளர்த்தும்போது, அதிகளவில் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்க பெருமளவில் உதவும்.

பாதுகாப்பான வீடுகளை நிறுவுவது: குறிப்பாக அவர்கள் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையெனில், நோய் தொற்று ஏற்படாதவர்களுக்கும் பாதுகாப்பான வீடுகள் ஒதுக்கப்படவேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, மாவட்ட அளவில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் ஒதுக்கப்படவேண்டும். அப்போது தான் அவர்களை பாதுகாப்பாக கண்காணிக்க முடியும். மாவட்ட மருத்துவமனைகள் அல்லது சமூக சுகாதார மையங்களை தனிமைப்படுத்துவதற்கு ஒதுக்கிவிட்டு, பள்ளிகளை பாதுகாப்பான வீடுகளாக மாற்ற வேண்டும். 17 மாநிலங்கள் கோவிட் – 19க்காக சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இது எஸ்மா எனப்படும் அத்யாவசிய சேவைகள் தடுப்பு சட்டம் மூலம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

உளவியல் சிக்கல்கள் குறித்து: முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமுள்ளது என்பதை உணர்ந்து, அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தி, அத்யாவசிய தேவைகளைக்கூட பெற முடியாத வகையில் செய்துவிடக்கூடாது. மருந்தகங்கள் அவர்களுக்கான மருந்துகளை தடையின்றி தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவேண்டும். மாநில அரசுகள் தங்களிடம் ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகளின் மூலம் மதிய உணவு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். முறைசார் துறை பணியாளர்கள் தங்களின் சம்பளத்தை தொடர்ந்து பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி, மூன்று மாதங்கள் வரை வாடகை இல்லாமல் செய்ய வேண்டும். வங்கிகள், வீட்டுக்கடன் வட்டி மற்றும் இஎம்ஐகளை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தள்ளுபடி செய்ய வேண்டும். மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கவேண்டும். ஒரு சாமானிய மனிதன் அனுபவிக்கும் பிரச்னைகளை முழுமையாக குறிப்பிடாதபோதும், இந்த நேரத்தில் இங்கு அதிகப்படடியான தேவையாக இருப்பது சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளை குறைத்து, மனித வாழ்க்கையை பாதுகாப்பது மட்டுமே.

ஊரடங்கின் முடிவு

நாம் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், தொற்றால் பாதிக்கப்படாதவர்களையும் பிரித்து வைக்க வேண்டியது நமது இலக்காக இருக்க வேண்டும். பல நாடுகள் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி மூலம் தனிமைபடுத்தப்பட்ட நபர்களை கண்காணித்ததுபோல் நாமும் செய்ய வேண்டும். இது அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் அத்துமீறல்தான் என்றாலும், அது தற்காலிகமான ஒன்றாக இருப்பதுடன், பொது நலன் கருதிய செயல் என்பதால், அதை செய்யவேண்டும். பரிசோதனை செய்வதில் உள்ள எல்லா சிக்கல்களையும் விரைவாக களைந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களிலும் பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பிரச்னை மீண்டும் உருவெடுக்கும் வாய்ப்பை குறைக்க பெருமளவு உதவும். மாநில வாரியான மையங்கள் நோய் தொற்றுக்கு ஆளான நபர்களின் எண்ணிக்கை, பரவல், சேவைகளை பயன்படுத்திய விதம் மற்றும் அந்தந்த மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த அளவீடுகள் ஆகிய முக்கிய தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். இது அதிகளவிலான சுகாதார தேவைகள் உள்ள மாநிலங்களுக்கு வளங்களை வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.

ஊரடங்கு முடிந்தவுடன்

தயாராக இருப்பது முக்கியமானது. இந்த வைரஸ் குறித்த முழுமையான விவரம் இதுவரை தெரியாத நிலையில், ஒரு நிச்சயமற்றதன்மையும், அச்சமும் ஏற்படுகிறது. அரசு தினமும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, இந்த வைரஸ் குறித்து பரபரப்பை ஏற்படுத்தாமல், மனஅழுத்தத்தை தணிக்கும் வகையில், நியமிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகள் மூலம் விளக்கமளிக்க வேண்டும். பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து பொதுமக்களை பங்குதாரர்களாகக்கொண்டு, அவர்களுக்காக பணியாற்ற இதைவிட சிறந்த வாய்ப்பு அமையாது. இந்த தலைமுறை சந்தித்ததிலே இது ஒரு மிகப்பெரிய சவாலாகும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த உலகத்திற்கு ஒற்றுமையே சிறந்தது, பிரிவினைகள் கூடாது என்று காட்டவேண்டும். சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொதுப்பணிகள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் புது தரநிலை உருவாக்கப்பட உள்ளது. தற்போது நாம் அரசை விரைவாக விமர்சிக்கிறோம், சமூக வலைதளங்களில் மற்றவர்களை கிண்டல் செய்கிறோம், அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் அல்லது மதத்தின் அடிப்படையில் ஒருவரை ஆதரிக்கிறோம். இந்த வெறுப்புண்ர்வுகளையெல்லாம் கடந்து நாம் ஒரு பெரிய நோக்கிற்காக உண்மையாக இருக்க வேண்டும். நாம் மொழி, மதம் ஆகியவற்றால் பிரந்துவிடக்கூடாது. ஆனால் தளர்ந்துவிடாத நம்பிக்கையுடன் எதிர்த்து போராடுவதற்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாரபட்சம், சார்பு ஆகியவற்றால் பிரிந்து விடக்கூடாது. சந்தேமின்றி, சிரமத்தை சந்திக்க நேரிடும், சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும், சிலரை இழக்க நேரிடலாம். ஆனால் சந்தேமேயின்றி மனித இனம் வெற்றியடையும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நாம் இப்பெருந்துயரத்தின் உயரத்தை ஒரு நாள் திரும்பி பார்ப்போம். நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து, ஏனெனில் இங்கு அனைவரும் சமம்.

இக்கட்டுரையை எழுதிய ரவிக்குமார் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் அமெரிக்கா, செயின்ட் லூயிசில் உள்ள மருத்துவ மையத்தின் மன நல ஆலோசகர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India lockdown coronavirus india lockdown covid 19 india cases social distancing

Next Story
வசந்தத்தின் இடி முழக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com