Advertisment

சுய விமர்சனம் கொண்ட மதசார்பற்றவர்கள் தேவை !

நமது குடியரசின் இரண்டாவது இயல்புக்கு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பு கொள்கையை மறுநிர்மாணம் செய்வதுதான் மதசார்பின்மைக்கு ஒரே வழி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India needs its secularists to engage in open, self-critical debate

India needs its secularists to engage in open, self-critical debate

ரமேஷ் வெங்கடராமன்

Advertisment

இந்திய மதசார்பற்றாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். விவாதக்களத்தில் ஆழ்ந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மதசார்பின்மை என்ற அடையாளத்தின் கீழ் வைத்து, தாங்கள் இழுத்துச் செல்லப்படுவதாக மேலும், மேலும் அதிக இந்துக்கள் உணர்கின்றனர்.

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

மதசார்பின்மையை நோக்கிய இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டத்தின் கடமை என்பது தீவிர அச்சுறுத்தில் உள்ளது. இது வெறுமனே பா.ஜ.க-வின் ஆட்சியினால் மட்டும் அல்லாமல், வலுவான தேர்தல் தீர்ப்பினால் இந்த ஆட்சி அமைந்திருப்பது, இந்தியாவின் மதசார்பின்மை நெறிமுறைகளை குறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை தீர்மானிக்கப்பதாக இருக்கிறது. மேலும் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக, மதசார்பின்மை மீதான பெரும் அவநம்பிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

அமிர்தசரஸ், கோவா, லடாக், ஐதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை என்று இந்தியா முழுவதும் பல தரப்பட்ட நகரங்களுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, அண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீது உணரப்பட்ட சீற்றத்தின் உண்மையை கண்டேன். பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் குறைக்கப்பட்டது, முத்தலாக்குத் தடை, அயோத்தியா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இப்போதைய சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவை இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு நல்லவிஷயமாக தோன்றியது மட்டுமின்றி, நடுத்தர மக்களிடமும் இந்த எண்ணம் அதிகரித்திருந்தது.

இந்த பெரும் பகுதியினர், சிந்தனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். மதரீதியாக மட்டுமின்றி பரந்த தாராளமய இந்துக்கள் , தாமாக இயந்திர தன்மையோடு முஸ்லீம் எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்த பிரிவில் பெரும்பாலானவர்களிடம் திருவாளர்கள் மோடி மற்றும் ஷாவின் வெறுப்புணர்வு அரசியல் பண்படாத பெருந்தன்மை ரசிக்கக்கூடியதாக இல்லை என்று கண்டறியப்படுகிறது. இந்து ராஜ்யத்தை அடைவதும் வெகுதூரத்தில் இருக்கிறது. எனினும், பெரும்பாலானோர் இப்போது, சங் பரிவாரிடமிருந்து மதசார்பற்ற விமர்சனத்தை பெறுகின்றனர்.

அதே போல, இந்துக்கள் மீதான அக்கறைகள் புறக்கணிப்படுகின்றன என்ற குற்றசாட்டு, முஸ்லீம்களுக்கான சிறப்பு உரிமைகள், சிறப்புரிமை சட்டம், தேசப்பற்று ஆகியவை பற்றி வலதுசாரி குழு முன்பு பாதுகாத்து வைத்த கேள்விகளை நீண்டகாலத்துக்கு விலக்கி வைத்திருக்க முடியாது. உண்மையில், ஒட்டு மொத்தமாக கடந்த நாற்பது ஆண்டுகள் இல்லாதவகையில், கடந்த சில மாதங்களாக பிரதான இந்துகள்ளிடம் இருந்து முஸ்லீம்கள் கேள்வியை அதிகமாக என்னால் கேட்கமுடிகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்த வகையான வெளிப்படையான கருத்துகளைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை நோக்கிய தங்கள் கடைமைகளை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தும் அனைத்து அரசியல் கருத்துகள் கொண்ட இந்தியர்கள் உருவானதை எனக்கு நினைவுப்படுத்தியது. ஏழ்மையான, பலவிதமான, பிளவுபட்ட இந்தியாவானது ஒரு சர்வாதிகாரி, அல்லது அதீத அதிகாரம் படைத்த ஒருவர், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், செயல்மிக்க குடியரசுத்தலைர் ஆகியோரில் ஒருவரின் கீழ்தான் ஒழுங்கான வளர்ச்சி பெறும் என்று 1970-களில், 1980-களின் தொடக்கத்தில் வைக்கப்பட்ட வாதங்களை பலர் நினைவு படுத்துகின்றனர்.

இந்த விவாதங்கள் ஒரு நல்ல விஷயம். கேள்விகள் அற்ற அரசியலமைப்பு நீடித்த ஒன்றாக இருக்காது. இந்தியாவின் அரசியலமைப்பை நாட்டுக்கு மேலிருந்து கீழாக அரசியலமைப்பின் அவை கொடுத்தது. இந்த அமைப்பின் உறுப்பினர்களில் முக்கால்வாசிப்பேர், மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனினும், வழங்கப்பட்ட அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. பெரும்பாலான மக்கள், நமது அரசியலமைப்பை வடிவைப்பது குறித்து அதிகம் சொல்லவில்லை. இன்றைக்கு, அவசரகாலகட்டம் மற்றும் அதன் பின்னர் வந்த தருணங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தியர்களுக்கு மத்தியில் கொடுக்கப்படுவதற்காக ஜனநாயகம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இடது, வலது அல்லது மையம் என நமது பாராளுமன்ற நடைமுறை, மற்றும் மைய ஆட்சி அரசாங்கம் ஆகியவற்றுக்கு யார் ஒருவரும் தீவிரமான சவால்களாக இல்லை. மதசார்பின்மை, இதே போன்ற அந்தஸ்தை அவசியம் அடைய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, சங்க் பரிவாரிடம் இருந்து எழும் போலி மதசார்பின்மை எதிர்ப்பு சொல்லாடல் எனும் இடைவிடா மத்தள ஒலியை கேட்ட பிரதான இந்துக்கள், எப்படி முஸ்லீம் சிறுபான்மையினர் நடத்தப்பட வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்திருக்கின்றனர். ஏன் அரசியலமைப்பானது, மதசார்பின்மையை வலியுறுத்தி இன்னும் சிறந்த உணர்வை உருவாக்குகிறது என்பதன் மீது கருத்தளவில், வலுவான , தெளிவான பரிமாற்றங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பிரச்னை என்னவென்றால் இந்தியாவின் மதசார்பின்மை இழையை பாதுகாப்பது பற்றிய விருப்பம் கொண்டிருப்போர், இந்த விவாதத்தில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

மதசார்ப்பற்றவற்றுக்கான நிகழ்வுகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதை விடவும் அதன் முன்னணியினர் நாதுராம் கோட்சேவை துணைக்கு அழைத்தும், அவர் பேசியதைச் சுட்டிக்காட்டியும் விமர்சகர்களை களங்கப்படுத்தி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மதசார்ப்பற்ற தன்மை, என்பது தன்னளவில் நாட்டுக்கு நல்லது என்று வழங்கப்பட்டதை மதசார்ப்பற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் செய்வது போல, அரசியலமைப்பின் ஆதரவை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த ஆவணத்தின் மதசார்ப்பற்ற உந்துதல்தான் சந்தேகப்படுவதாக மாறிவிட்டது, மறுநியாயப்படுத்துதல், துணிச்சலான தேவையை உணர வேண்டும்.

சுயநேர்மையான அணுகுமுறையுடன், மோடி ஆட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் யார் ஒருவர் மீதும் அரசியலமைப்பை தூக்கி எறிவதும், பக்தாஸ், சங்கிகள் அல்லது சாடிவாலாக்கள் என்று அவர்களை சித்தரிப்பது, இங்கிலாந்தின் தன்னிகரற்ற சுதந்திரம் பிரெக்ஸிட் போரில் எப்படி இழக்கப்பட்டது என்பதை எனக்கு நினைவு படுத்துகிறது. வெளிப்படையான சரியான அவர்களின் பரந்த நோக்கமுள்ள உலகப்பார்வைக்கு வெளியே அவர்கள் கருத்து கொண்டிருந்தனர். ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற வாக்களித்தவர்கள் புனிதமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், தவறாக வழிநடத்தப்பட்ட இனவாதிகள், சிறிய அளவு இங்கிலாந்து வாசிகளும் இருந்தனர்.

இதே போன்ற நாட்டாண்மைக்காரத்தனமான மனப்பான்மை டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களை நோக்கியும் இருப்பது, இந்த ஆண்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் மீண்டும் வெற்றி பெறும் முயற்சியைத் தடுப்பதாகவும் இருக்கும். விவாதக்களத்தில் ஆழ்ந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மதசார்பின்மை என்ற அடையாளத்தின் கீழ் வைத்து, தாங்கள் இழுத்துச் செல்லப்படுவதாக மேலும், மேலும் அதிக இந்துக்கள் உணர்கின்றனர்.

இந்த மாறுதலுக்கு உட்பட்டசூழலில் நாட்டின் மதசார்பின்மை இழையை பாதுகாப்பதற்கு, நடுத்தர வர்க்கத்தினருடன் மரியாதையுடன் தொடர்பு கொள்வதற்கு, மதசார்பின்மைக்காக வாதிடுபவர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றனர்.

மதசார்பின்மையை ஒரு புதிய, கொள்கையுடன்(தனிநபர் சம உரிமை, ஆழ்மனதின் சுதந்திரம், தனிப்பட்ட பழக்கங்கள்), நடைமுறைக்களத்தில்(நாட்டின் குடிமகன்களில் ஏழில் ஒரு பகுதியினரை மரியாதைக் குறைவாக நடத்தும் எந்த ஒரு நாடும் மலர்ச்சி பெறாது) அவர்கள் அவசியம் உருவாக்க வேண்டும். வித்தியாசங்களுக்கும் அனுமதி, மரியாதைக்குரிய நீண்டவரலாறு, ஒத்திசைவான பாரம்பர்யம், வாழு, வாழவிடு என்ற அதன் கலாசாரத்துடன் வலுவாக வேர்விட்டிருக்கும் மதசார்பின்மை, இந்துமதத்தின் பன்மை என்றெல்லாம் அடிக்கோடிடப்பட்டு இந்தியா என்பது இந்துக்களுக்கான நாடு என்று சொல்லும் பெரும்பான்மையானவர்களுக்கு, அவர்கள் கவனத்தை ஈர்க்கின்ற எதிர்வினையை உருவாக்க வேண்டும்.

ஆனால், மிகவும் முக்கியமானது, தீவிரமான மதசார்பின்மைவாதிகள் கொஞ்சம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இது கொள்கைகளை ஏமாற்றக்கூடியதல்ல. சில வலதுசாரி குற்றசாட்டுகள் பேரினவாதம் என்ற ஆரவார மொழியில் சொல்லப்படிருந்தாலும் நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கும் போலி மதசார்பின்மையையாவது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக, காங்கிரஸ், இதர இடதுசாரி கட்சிகள் முஸ்லீம்களின் வாழ்க்கையை முன்னேற்ற பெரும் அளவில் ஏதும் முன்னெடுக்காமல் அவர்களை வாக்கு வங்கியாகவே சுரண்டுகின்றனர் என்பதை எந்த ஒரு புறநிலை பார்வையாளரும் தீவிரமாக மறுக்க முடியாது.

இதற்கிணையாக, முஸ்லீம்களுக்கு ஆதரவாக நாட்டின் எல்லையில் சில பகுதிகளின் புள்ளிவிவரங்ள் மாற்றத்துக்கு உட்படுத்தும் வகையில் சட்டவிரோத குடியேற்றங்கள் அரசியல் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக பெரும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தவிர, முற்போக்கான பொது சிவில் சட்டத்துக்கான இயக்கம், தனிப்பட உரிமைகளுக்காக, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை ஆகியவற்றுக்காக விசுவாசத்தை முகத்தில் தாங்கிக் கொள்ளுதல் என்பதை விடவும் முஸ்லீம் தனிநபர் சட்டங்களைத் தற்காத்துக் கொள்வது, அந்த சமூகத்தின் தனிச்சிறப்பாகும்.

சுருக்கமாக, நடைமுறையில் மதசார்பின்மை எங்கெல்லாம் சமரசம் செய்து கொள்ளப்படுகிறதோ அதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வது முஸ்லீம் எதிர்ப்பு அல்ல. இதைவிடவும், வெளிப்படையானதில் இருந்து நியாயமான மனதுடன் கூடிய விமர்சனத்தை , மதசார்பற்றவர்கள் அனுமதித்து, மேலும் நம்பகத்தன்மையுடன் கூடிய சாதகமான நிகழ்வை அவர்கள் உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலத்தின் மீது சிகப்பு விளக்கு மின்னுகிறது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் ஒரு புறம் இருந்தபோதிலும் பா.ஜ.க இந்துத்துவாவை பின்தொடர மேலும் துணிந்தால், நடுத்தரப் பிரிவினர் உண்மையில் மதசார்பின்மை மீதான நம்பிக்கையை இழப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

மேலும் படிக்க : Explained : காஷ்மீரில் இன்டர்நெட் ஷட்டவுன் வழக்கின் தீர்ப்பு, கருத்து சுதந்திரத்தை திறக்கின்றது

முஸ்லீம்களுக்கு எதிரான மசோதா, ஒழுங்குமுறை சார்ந்த பாகுபாடுகள், போலீஸ், குடிமைப்பணி, கல்வி முறை ஆகியவற்றில் ஊடுருவி இருக்கும் மதவெறி மனப்பான்மையை திரும்பப் பெற பா.ஜ.க அல்லாத அரசுகள் போராடுகிறன்றன. எனவே இவைகள் விரைவில் சமூகம் முழுவதற்கும்பரவக் கூடும்.  இந்த கவலைக்குரிய நேரத்தில், தர்க்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் மதசார்ப்பற்றவர்களைவிடவும், திறந்தமனப்பான்மையுள்ள, சுய விமர்சன விவாதம் கொண்ட மதசார்பற்றவர்கள் இந்தியாவுக்குத் தேவை. நெருக்கடி நிலைக்குப் பின்னதான ஜனநாயகம் போல, அரசியலுக்கு அப்பாற்பட்ட, நமது குடியரசின் இரண்டாவது இயல்புக்கு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பு கொள்கையை மறுநிர்மாணம் செய்வதுதான் மதசார்பின்மைக்கு ஒரே வழி.

இந்த கட்டுரை முதலில் 2020, ஜனவரி 6-ம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ‘Secularism’s Brexit moment’ என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் தனியார் பங்கு முதலீட்டாளர் மற்றும் மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர்

தமிழில் : கே. பாலசுப்ரமணி

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment