சி.ராஜ்மோகன்
தனியார் துறையின் வளர்ச்சி, ஐக்கிய அரபு அமீரகம், லக்சம்பர்க் போன்ற நாடுகளின் முயற்சி, இதையெல்லாம் கருத்தில்கொண்டு, டெல்லி உடனடியாக, இந்திய விண்வெளி நடவடிக்கைகளில் புதிய மாதிரிகளை நோக்கி நகரவேண்டும்.
விண்வெளி பற்றி எண்ணும்போது, நீங்கள் அதிக சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளைத்தான் நினைப்பீர்கள். ஐரோப்பா விண்வெளி ஏஜென்சியின் கீழ் ஜரோப்பாவின் கூட்டு முயற்சியையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும் ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஈர்க்கக்கூடிய விண்வெளி திட்டங்களையும் பார்த்திருப்பீர்கள். விண்வெளி திட்டங்கள் அனைத்தும் ஒரு நாட்டின் ராஜதந்திரமாகவோ அல்லது தேசத்தின் கௌரவமாகவே பெரிய நாடுகளில் பார்க்கப்படுகிறது. விண்வெளியில் தங்களின் இருப்பை நிரூபிக்கும் நோக்கத்தில் அந்நாடுகள் குறிபிடத்தக்க வளங்களை முதலீடு செய்கின்றன.
தங்களின் பலத்தை நிரூபிக்க சக்தி வாய்ந்த நாடுகளுக்கு மட்டும் விண்வெளி ஒன்றும் விளையாட்டு மைதானம் கிடையாது என்று வளைகுடா நாடுகளில் உள்ள ஜக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. நீங்கள் எதையும் சந்தேகிப்பவர் என்றால், ஒரு மில்லியன் மாத்திரமே மக்கள்தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், ஆறு லட்சமே மக்கள்தொகை கொண்ட லக்சம்பர்க்கின் மக்கள் தங்களுக்கும் விண்வெளியில் இடம் வேண்டும் என்பது பகட்டான ஒன்றாக தெரியவில்லை என்று நீங்கள் கருதலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆனால் அவர்கள் இருவரையும் இந்த எள்ளல் நிறுத்தவில்லை. அவர்கள் தொடர்ந்து விண்வெளி செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இவ்விரு நாடுகளும், விண்வெளியில் அவர்களுக்கு இடம் தேடிக்கொண்டிருப்பது, டெல்லிக்கு ஒரு நினைவூட்டல் ஆகும். விண்வெளியில் விரைவாக நடந்துவரும் சக்தி வாய்ந்த மாற்றங்களை ஏற்று, அவற்றை கடைபிடிக்க வேண்டும். எவ்வித அளவு கட்டுப்பாடுகளும், ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் திட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. அமெரிக்காவின் 3 பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, உலகளவில் பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் கூட்டுவைத்துக்கொண்டு தனது கனவை இந்தாண்டின் இறுதியில் நிறைவேற்ற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரக ஆய்வை இந்த ஆண்டில் ஏவுவதற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இஸ்ரோவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் திட்டத்திற்கு உடன் சேர்ந்து பணியாற்றுகிறது. கடந்த ஆண்டு அமீரகத்தின் முதல் விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மசூரி அமெரிக்க ரஷ்ய விண்வெளி மையத்தில் ஒருவாரம் தங்கி ஆய்வு செய்தார்.
விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவது அல்லது செவ்வாய் ஆய்வு போன்ற அமீரகத்தின் கண்கவர் திட்டங்கள் அந்த நாட்டை உற்சாகப்படுத்தியுள்ளதுடன், அந்த பிராந்தியம் மற்றும் அதை தாண்டியுள்ள நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. விண்வெளி திட்டம் குறித்து அமீரகத்தின் மனதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளது. விண்வெளி துறையில், அசுர வளர்ச்சியடைந்து வரும் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகும். ஹைட்ரோகார்பன்கள் மீதான அதன் நம்பிக்கையில் இருந்து விலகி, அமீரகத்தின் பொருளாதாரத்தை பெருக்க அதிக முயற்சி எடுத்து வருகிறது.
லக்சம்பர்க்கும் இதே திட்டத்தை வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டின் மத்தியில் தான் அந்நாடு விண்வெளி துறைக்குள் நுழைந்தது. லக்சம்பர்கையும் பொருளாதார பெருக்கத்திற்கான தேவையே இயக்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் லக்சம்பர்க், தனது இரும்பு மற்றும் ஐரோப்பியாவின் வங்கிகள் மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. அந்நாடு தற்போது விண்வெளி துறையில் உள்ள வணிகத்தை பெரிய வாய்ப்பாக கருதுகிறது. விண்வெளி நிறுவனங்களுக்கு செயற்கைகோள் இயக்கத்தில் இருந்து, எதிர்காலத்தில் ஆஸ்ட்ராய்டுகள் மற்றும் மற்றபொருட்களில் இருந்து வெளிவரும் கழிவுகளை பிரித்தெடுப்பதில், விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஏற்படுத்த, நிறைய ஒழுங்குமுறை படிகளை லக்சம்பர்க் எடுத்துள்ளது. தற்போது லக்சம்பர்க்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீத வளர்ச்சியை விண்வெளி துறை வழங்கி வருகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 2 பொது ஆராய்ச்சி நிறுவனங்கள், அந்நாட்டில் விண்வெளி துறையை விரிவுபடுத்துவதற்காக இயங்கிவருகின்றன.
அமீரகம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய இரண்டு நாடுகளும், உலகில் அவர்களின் அளவிற்கு இருக்கும் எல்லைகளை தங்கள் புதிய மேம்பாட்டு சிந்தனைகள் மற்றும் செயல்திறன் மூலம் கடந்து, புகழடைய விரும்புகின்றன. ஆனால் உலக விண்வெளி நடவடிக்கைகளை மாற்றிவரும் அடிப்படை மாற்றமின்றி அவர்களின் விண்வெளி சாகசங்கள் சாத்தியம் கிடையாது.
20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், அரசின் நிதி, வழிகாட்டல் மற்றும் மேலாண்மையுடன், தேசிய விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாக்கப்பட்டதாக ஆனது. விண்வெளியில் ராணுவ பயன்பாடுகள் மற்றும் நிலவில் தரையிறங்குவது போன்ற கவுரவமான திட்டங்கள் தோன்றியது போன்வற்றால், ஏற்கனவே விமான துறையில் உள்ளதுபோல், தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. போயிங் மற்றும் லூக்ஹீட் ஆகிய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் விண்வெளி ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஆனால், பென்டகனும், நாசாவும் இந்நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
20ம் நூற்றாண்டு இறுதி பத்தாண்டுகளில், விண்வெளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. செயற்கோள் அடிப்படையிலான தொலைதொடர்பு, கடற்பயணம், ஒளிபரப்பு மற்றும் வரைபட வழிகாட்டி என்று அதன் எல்லை எல்லா துறையிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பிட்ட வணிகத்துறை பரிமாணங்களையும் அது வழங்குகிறது. 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட டிஜிட்டல் புரட்சி உலக பொருளாதாரத்தையே மாற்றியது. அதில் விண்வெளித்துறையின் வணிகம் விரைவாக எல்லையின்றி வளரத்துவங்கியது. விண்வெளித்துறையின், உலகளவிலான வர்த்தகம், தற்போது 400 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அது 2040ம் ஆண்டில் டிரில்லியன் டாலராக எளிதில் வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் வளர்ச்சியை உதரணமாக காட்டலாம். விண்வெளி மையத்திற்கு புதிதாக தளவாடங்கள் வழங்க பணியமர்த்தப்பட்டவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நாசாவை விட அதிகளவிலான ராக்கெட்களை ஏவிவருகின்றனர். தனியார் துறை நுழைந்தவுடன், ராக்கெட் ஏவுவதற்கான செலவு குறைக்கப்ட்டதுடன், மீண்டும் உபயோகப்படுத்தப்பட்ட ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏவுவதற்கான செலவு குறைந்தவுடன், தனியார் நிறுவனங்கள் பேராவலுடன் தயாராகிவிட்டன. ஸ்பேஸ் எக்ஸ் 100க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை பூமிக்கு கீழே உள்ள ஆர்ப்பிட்டில் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதன் மூலம் நவீன இணையதள சேவை கிடைக்கும். அமேசான் பூமிக்கு கீழே உள்ள ஆர்பிட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்களுடன் வலைபின்னல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அமேசானின் ஜெப் பேசோசும், மஸ்க்கும் சேர்ந்து விண்வெளி சுற்றுலா மற்றும் நிலா மற்றும் செவ்வாயில் மனிதர்கள் தங்குவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர். நிலவில் ஆய்வு குறித்து பெரிய நிறுவனங்கள் மட்டும் திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு இஸ்ரேலைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும், நிலவுக்கு ஒரு லூனார் லேண்டரை அனுப்பியது. ஆனால் அந்த லேண்டர் விக்ரமை போல் செயலிழந்தது. ஒரு காலத்தில், தேசிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே செய்து வந்த வேலைகளில் தற்போது தனியார் துறை களமிறங்கிவிட்டது.
உலகளவிலான விண்வெளி வியாபாரத்தின் இந்த மாற்றங்களுக்கு வெகுதொலைவில்தான் இந்தியா உள்ளது. முந்தைய காலங்களில், இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் வளங்களின் தட்டுப்பாட்டால், விண்வெளித்துறையில் தொடர்ந்து முன்னேறுவது கட்டுப்படுத்தப்பட்டது. தேசிய விண்வெளி திட்டத்தில், தனியார் துறையின் பங்களிப்பை இஸ்ரோ ஊக்குவித்தாலும், அரசின் ஆதிக்கத்தால், அதன் மாதிரிகள் 20ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே உள்ளன.
தனியார் துறையின் வளர்ச்சி, ஐக்கிய அரபு அமீரகம், லக்சம்பர்க் போன்ற நாடுகளின் முயற்சி, இதையெல்லாம் கருத்தில்கொண்டு, டெல்லி உடனடியாக, இந்திய விண்வெளி நடவடிக்கைகளில் புதிய மாதிரிகளை நோக்கி நகரவேண்டும். தனியார் துறையின் சக்திவாய்ந்த பங்களிப்பு மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு ஒரு நல்ல சூழல் இந்தியாவுக்கு தேவை. இந்தியா விண்வெளி துறை துவங்கியபோது இருந்த சாதகமான சூழலை தவறாக பயன்படுத்தி, செய்ய வேண்டிய மறு சீரமைப்பு, சீர்திருத்தம் செய்வதில் தாமதப்படுத்திவிட்டது பரிதாபமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
தமிழில் : R.பிரியதர்சினி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.