ஆசிய பூனைகளும் மேற்கத்திய குரங்குகளும்

Asian casts and Western Monkeys: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து ஒரு கதை புவிசார் அரசியல் மற்றும் சரவதேச உறவுகள் துறை மாணவர்களுக்கு ஒரு பாடம் நடத்துகிறது....

சஞ்ஜயா பாரு, எழுத்தாளர்

Asian casts and Western Monkeys: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து ஒரு கதை புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறை மாணவர்களுக்கு ஒரு பாடம் நடத்துகிறது. சிறிது அதிகமாக உள்ள உணவுக்கு சண்டையிடுகிற இரண்டு பூணைகளுக்கு இடையில், சமமான பங்கை உறுதி செய்வதற்காக நடுவராக முயன்ற ஒரு குரங்கு ஒரு தராசைக் கொண்டுவருகிறது. கேக்கின் ஒரு பகுதி மற்றதைவிட பெரிதாக இருப்பதைப் பார்க்கும் குரங்கு பெரிய துண்டாக கடித்து விழுங்கி அவற்றை சமமாக்குகிறது. அதன்பிறகு, அதிகமாக கடித்துவிட்டிருப்பதை கண்டறிந்து, மீண்டும் சம பங்கை உறுதிப்படுத்த மறுபுறம் கடித்தால் போதும் என்று அந்த பூனை முழு கேக்கையும் விழுங்கும் வரை அது தொடர்கிறது.

பிளவும் ஆட்சியும் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் தந்திரோபயமாக உள்ளது. ஜப்பான் மற்றும் கொரிய நாடுகள் சண்டையிடுவதும், சீனாவும் இந்தியாவும் சண்டையிடுவதும், அரேபியர்கள் மற்றும் ஈரானியர்கள் சண்டையிடுவதும் என பல ஆசிய பூனைகள் ஒருவர் வாலை ஒருவர் துரத்திக்கொண்டிருக்கின்றனர். இதன் பின்னணியில் ஆசியா முழுவதும் இந்த மேற்கத்திய குரங்குகள் நடுவர்களாக விளையாடுகின்றன.

கடந்த கால் நூற்றாண்டில் இந்த கதைதான் ஆசியாவின் புவிசார் பொருளாதார உயர்வு அல்லது மறுஎழுச்சியாக இருந்தது. ஆசியர்கள் இடையே இந்த ஆண்டின் கவனம் பல புவிசார் அரசியல் சண்டைகளுக்கு மாறுவதாக தெரிகிறது. விரைவாக வீழ்ந்துகொண்டிருக்கிற பிரிட்டன், அதன் தலைநகரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழைய தெற்காசிய சண்டைகளுக்கு வசதி செய்து மேடையாக மாறும் என்ற கருத்து பூனைகளின் அறியாமை என்பதைப் போல அதே அளவுக்கு குரங்கின் கடந்த கால ஆடம்பரத்தின் பிரமைகளும் இடம் பெற்றுள்ளன.

அதே போல இல்லாவிட்டாலும், சீனா தனது எல்லைகளின் ஒரு புறத்தில் உள்ள பிரதேசங்கள் தொடர்பான விஷயங்களில் இந்தியாவை கேள்வி கேட்பது என்பது பல அயலவர்களுடனான சண்டைகள் காரணமாக அது ஒரு கற்பனை. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு சீன தலைமை அதிகாரி தனது இந்தியப் பிரதிநிதியிடம், இந்தியாவும் சீனாவும் கைகுலுக்கும்போது முழு உலகமும் அவர்களைப் பார்க்கிறது என்று கூறினார். அதில் கூறப்படாதது என்னவென்றால், சிலர் நம்பிக்கையுடனும், மற்றவர்கள் அக்கறையுடனும் பார்ப்பார்கள் என்பது. இன்று, சீனாவும் இந்தியாவும் ஜம்மு-காஷ்மீரின் நிலை குறித்து சண்டையிடும் போது, முழு உலகமும் அவர்களைப் பார்க்கிறது, சிலர் நம்பிக்கையுடனும், மற்றவர்கள் அக்கறையுடனும் பார்க்கிறார்கள் என்று மீண்டும் கூறலாம். இந்த நேரத்தில் நம்பிக்கை என்னவென்றால், சண்டையிடும் ஆசியர்கள் மேலெழும் ஆசியாவின் கதைகளை கொண்டுவந்து நிறுத்துவார்கள் என்பதுதான்.

2007 ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் நிறுவனரும் வழிகாட்டியுமான மறைந்த லீ குவான் யூ சீனாவும் இந்தியாவும் ஆசிய விமானத்தின் இரட்டை என்ஜின்கள் என்றும் இரண்டு என்ஜின்களும் சேர்ந்து கண்டத்தை ஒட்டுமொத்தமாக வளர்ச்சியின் ஒரு புதிய பாதையில் உயர்த்தும் என்றும் கூறினார். ஒரு பத்தாண்டுகளுக்குள்ளாகவே, இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையில் மட்டுமல்லாமல், பல ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறும் ஒரு கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோமா? ஆசிய விமானத்தை தரை இறக்கி ஆசிய நூற்றாண்டு என அழைக்கப்படும் அதன் விடியலை தாமதப்படுத்துகிறோமா? ஆசியாவின் ஸ்திரத்தன்மை இல்லாமல் அதன் எதிர்காலம் பாதுகாப்பானது என்று சீனா கற்பனை செய்கிறதா?

ஹார்வர்ட் அறிஞர் எட்வர்ட் லுட்வாக் அற்புதமாக எழுதியுள்ள தனது ‘தி ரைஸ் ஆஃப் சீனா மற்றும் மோதலின் தர்க்கம்’(2012) என்ற தனது புத்தகத்தில் கருத்தாக்கம் செய்துள்ளபடி, அமெரிக்கா இப்போது சீனாவின் புவிசார் பொருளாதாரக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பது இரகசியமல்ல. நிச்சயமாக, சீனர்கள் இதைப் புரிந்துகொள்கிறார்கள். அப்படியானால், அவர்கள் அண்டை நாடுகளில் பலருடன் சண்டையிட்டு, அவர்களில் பலரை மேற்கு நோக்கித் திருப்பி, சமநிலையைத் தேடப் பார்க்கிறார்களா? பிரிட்டனைப் போன்ற சக்தி தீர்ந்து போன ஒரு நாடு ஹாங்காங்கில் மனித உரிமைகள் குறித்து அக்கறை காட்ட தைரியம் இருக்குமா? மாறாக அது ஆசியாவைச் சுற்றியுள்ள கவலைகளிலிருந்து துணிவை வெளிப்படுத்துமா? அது இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் லண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்தை சீர்குலைக்க அனுமதிக்குமா? மாறாக அது உண்மையில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை எதிர் பார்க்கிறதா?

ஆசியாவின் முக்கிய சக்திகளுக்கு ஒட்டுமொத்த கண்டத்தையும் நோக்கிய ஒரு பொறுப்பு உள்ளது. எந்தவொரு சக்தியும், எவ்வளவு பெரியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தாலும், கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்ப முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவை அமெரிக்கா அதன் கொல்லைப்புறமாக மாற்றியது போல ஆசியா ஒருபோதும் சீனாவின் கொல்லைப்புறமாக மாறாது. சீனாவின் புவிசார்-பொருளாதாரக் கட்டுப்பாட்டில் அமெரிக்கா வெற்றி பெற்றால், அது சீனா அதன் அண்டை நாடுகளுக்கு ஐயங்களை நீக்கி உறுதியளிக்க இயலாமையே காரணமாக இருக்கும். அதன் பிறகு, ஆசியர்கள் மீண்டும் மேற்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்துவையே விரும்புவார்கள்.

ஆசியா முழுமைக்கும் உண்மையான மற்றும் தற்போதைய சவால் அதன் வளர்ச்சி இயந்திரங்களை குறைப்பதே ஆகும். நிச்சயமாக, உலகளாவிய வளர்ச்சி இயந்திரம் தானாகவே குறைந்து வருகிறது. ஆனால், பெரும்பாலான ஆசிய நாடுகளில் மந்தநிலை வெறும் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மந்தநிலை இன்னும் சவாலானது. ஏனெனில் இது நிதி மற்றும் பணவியல் கொள்கை தலையீட்டால் தீர்க்கப்படக்கூடிய ஒரு சுழற்சி வீழ்ச்சி அல்ல. அது அவசர கால சரிசெய்தலைக் கோரும் ஆழமான வேரூன்றிய கட்டமைப்பு அடித்தளங்களைக் கொண்டுள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. தொழிலாளர் உற்பத்தித்திறனில் சற்று போதிய முன்னேற்றம், சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதங்களை குறைத்தல், செல்வம் மற்றும் வருமானத்தின் ஏற்றத்தாழ்வுகளால் கட்டுப்படுத்தப்படாத சற்றே போதிய தேவை ஆகியவை இந்திய பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளும் கட்டமைப்பு காரணிகளாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.சீனா உட்பட பல ஆசிய பொருளாதாரங்கள் வளர்ச்சிக்கு கட்டமைப்பு

தடைகளை எதிர்கொண்டுள்ளன. உலகளாவிய புள்ளிவிவரங்கள் மற்றும் வருமான விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகளாவிய வளர்ச்சியின் வேகத்தை மீட்டெடுக்கும் எந்தவொரு நம்பிக்கையும் ஆசிய வளர்ச்சி செயல்முறையை மீளமைப்பதைப் பொறுத்துள்ளது. ஆனால், வளர்ச்சி ஆசியாவிற்கு திரும்புவதற்கு, ஆசிய கண்டத்திற்கு புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. பல்வேறு காரணங்களுக்காக ஆசியா அத்தகைய ஸ்திரத்தன்மைக்கு திரும்புவதற்கு மேற்கு நோக்கி எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பா பார்வை மற்றும் திறன் பற்றாக்குறையால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது சொந்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்த உலகளாவிய வளர்ச்சியை சீர்குலைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கத் தலைமைக்கு லுட்வாக்கின் ஆலோசனை என்னவென்றால், சீனாவின் புவிசார் – பொருளாதாரக் கட்டுப்பாட்டை நாடுவது ஆகும். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசியாவின் ஒட்டுமொத்த புவிசார் – பொருளாதாரக் கட்டுப்பாட்டை நாடுவது போல் செயல்பட்டுள்ளார். உண்மையில், ஐரோப்பாவில் பலரும் அவரை ஐரோப்பாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சீர்குலைப்பவராகவே பார்க்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவைப் பொறுத்தவரையில், அவர்களின் வளர்ச்சியின் அனைத்து நம்பிக்கையும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த பின்னணியில், கண்டம் முழுவதும் ஆசிய தலைமைகள் எதிர்காலத்திற்கு ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன்னர், சீனாவும் இந்தியாவும் அந்த வகையான தலைமையை கண்டத்திற்கு வழங்க முடியும் என்று ஆசியா முழுவதும் நம்பப்பட்டது. இன்று, அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆசியாவின் எதிர்காலத்தை ஆசியர்கள் வடிவமைக்கவில்லை என்றால், அதை யார் விரும்புவார்கள்? இந்த கேள்வி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் அடுத்த சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close