இந்தக் கதை உண்மையாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் உருவாக்கப்பட்டதா ? உண்மை , அந்த மனிதர் அறிந்துகொள்ளப்படாத ஏவுகணையாய் இருந்தாலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருக்கிறார் . தன்னில் இருக்கும் சாதாரண தன்மையிலிருந்து அசாதாரண செயல்களை செய்து முடிக்காதவரால் அந்த பெரிய இடத்திற்கு சென்றிருக்கமுடியாது . ஒப்பந்தத்தை உருவாக்குபவன் என்பதில் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நடந்த சந்திப்பின் போது தனது ஆட்சியின் பெயர்சொல்லும் அளவிற்கு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளார் . அதன் அடிப்படை சாராம்சம் ஆப்கானிஸ்தான் குழப்பத்தில் இருந்து அமெரிக்காவை வெளியில் கொண்டுவருவதே. தலிபானை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இது சாத்தியமாகாது . அதற்கு, பாகிஸ்தானின் முழுமையான ஒத்துழைப்பு தேவை.
தனது இராணுவ மற்றும் உளவுத்துறை தளபதிகளோடு வாஷிங்டனுக்கு பயணம் சென்றிருந்த இம்ரான் , அங்கு அல்குவைதா தலைவர் மற்றும் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லாடனை சுற்றி வளைக்க உதவி செய்த அமெரிக்கா மருத்துவரை தனது நாட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யும் அறிவிப்பின் மூலம் , ஆப்கானிஸ்தான் விவரங்களுக்கு முழு மனதோடு ஒத்துழைப்பு தருவதாக சிக்னல் காட்டியுள்ளார். இதனால் இம்ரானுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? எல்லா பாகிஸ்தான் பிரதமர்களும் தனது அவமானத்தை துடைக்கும் துடுப்பு சீட்டான - காஷ்மீர் பற்றிய வார்த்தைகள் . டிரம்பும் அதற்கு கட்டாயமாக்கப்பட்டார் .
அவரது காஷ்மீர் பற்றிய பேச்சில் மூன்று அதிர்வுகள் இருந்தன
ஒன்று, “நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் இருந்தேன், அந்த சந்திப்பினிடையே காஷ்மீரைப் பற்றி பேசினோம்”.
இரண்டாவதாக, “அவர் உண்மையில் என்னிடம் ,‘ நீங்கள் ஒரு மத்தியஸ்தராகவோ அல்லது நடுவராகவோ இருக்க விரும்புகிறீர்களா, நான், ‘எங்கே?’ என்று சொன்னேன், அவர் “காஷ்மீர்” என்று கூறினார். என்ன?!
மூன்றாவதாக, மோடி தனது காரணத்தை வெளிப்படையாகக் கூறினார் - "ஏனெனில் இது பல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது". நான், அது உள்ளது ' என்று சொன்னேன்
ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் டிரம்ப் - மோடிக்கும் இடையே ஒரு சந்திப்பு அல்ல, பல சந்திப்புகள் நடந்தன. ஒன்று, இரு தரப்பினருக்கும் இடையிலான 40 நிமிட முறையான சந்திப்பு, அதில் இரு தரப்பிலிருந்தும் படை அதிகாரிகள் இருந்தன - தெளிவாக இவை “தலையணை பேச்சு” இல்லை .பின்னர், இருவரும் இரவு உணவில் அருகருகே அமர்ந்திருந்தனர், ஆனால் அந்த உரையாடலை ஒரு இணை செயலாளர் கண்காணித்து, மோடியின் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு, சொல்லப்பட்டவற்றின் சுருக்கமான பதிவை வைத்திருக்கிறார். பின்னர், lounge-யில் ஒரு சந்திப்பு நடந்தது ( ஆனால் இது மற்றவர்களுக்கு கேட்கும்படியாக இருந்திருக்கும் ). இறுதியாக, நடைக்கூடத்தில் ஒன்றாக நடக்கும்போது - யாரும் சுற்றி இல்லாத இடத்தில். அப்படியானால் டிரம்ப் தெளிவாக விவரிக்கும் அந்த காஷ்மீர் உரையாடல் எங்கு நடந்தேறிருக்கும். பழைய நினைவுகளை நாம் நியாபகப்படுத்தினால் , 2015-ல் நடந்த பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் தற்செயலாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புடன் நடந்த சந்திப்பின் பயனாய்தான் நமது பிரதமர் ஷெரிஃப்பின் பேத்தியின் கல்யாணத்திற்கு பாகிஸ்தானிற்கு யாரும் எதிர்பாராத வகையில் பயணம் செய்தார் .
சந்தர்ப்ப சூழலால் மோடி சொல்லவந்த கருத்துக்களை டிரம்ப் தவறுதலாக புரிந்துக் கொண்டுள்ளாரா ? பாகிஸ்தானின் நேரடி உறவைத் தவிர்த்து , India-US-Pak முக்கோண இயக்கத் ததில் india -US இணைப்பை மையப்படுத்துவதன் மூலம் ;பாகிஸ்தானிற்கு, தெற்காசியாவில் தனது பாரம்பரிய நட்பு நாடான அமெரிக்காவிடம் India-US “strategic partnership என்ற அளவிற்க்கு தனது அங்கீகாரத்தை அதிகரிப்பது, அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர் என்ற போர்வையில் அதனோடு சவாரி செய்து பாகிஸ்தான் ஆதரவு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தோடு சண்டை போடுவது , மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஜ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்றோர்கள் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை பயன்படுத்துவது ,FATF பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் grey இடத்திலிருந்து black இடத்திற்கு மாற்ற அமெரிக்காவை நம்புவது , நமது Wing commander மீட்க அமெரிக்காவை நாடுவது, பாலகோட் மீதான குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானின் எதிர் நடவடிக்கையைத் தடுப்பது ; மற்றும் இது போன்ற செயல்கள் . பாகிஸ்தானின் நேரடி உறவை தவிர்த்ததால் அமெரிக்கா இயல்பாகவே மெல்ல நமது இடைத்தரகராகிவிட்டனர் . மேலும், பாகிஸ்தான் வெப்பத்திலிருந்து வெளிவர உதவிய அமெரிக்காவை நாம் அதிகமாகவே பாராட்டுகின்றோம் . டிரம்ப் இந்த புகழை இந்தியாவின் நன்றியுணர்வின் ஒப்புதலாக எடுத்துக்கொள்கிறார், மேலும் "நல்லது" செய்வதற்கான தூண்டுதலாய் உணர்கிறார் .
ஒசாகாவில் டிரம்பை மோடி சந்தித்தபோது, அடுத்த சில வாரங்களுக்குள் வாஷிங்டனில் டிரம்ப் இம்ரானை பார்ப்பார் என்று அவருக்குத் தெரியும். இருபது ஆண்டுகளாக வெற்றியில்லாமல் ஆப்கனில் நடைபெறும் சண்டையிலிருந்து தனது படைகளை வெளியேற்றுவதால் , தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது டிரம்ப்-பின் பிரதான முன்னுரை என்பதும் தெளிவாக தெரிந்திருந்தது . அவ்வாறானால் வாஷிங்டன் ,இஸ்லாமாபாத்தை சமாதானப்படுத்தியாக வேண்டும் . ஆனால் அதற்கு ஏற்படும் விலை இருமடங்கு . முதலாவதாக , தாலிபான்களால் இயக்கப்படும் ஆப்கானிஸ்தான் அரசில் இந்தியாவின் தலையீட்டை அப்புறப்படுத்தி பாகிஸ்தான் தனது செல்வாக்கை வேரூன்ற முடியும் , இன்னொன்று தனது அமெரிக்க பயணத்தை தொடர்ந்து ஏற்படக்கூடிய எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள காஷ்மீர் தொடர்பான பரிசை இம்ரானுக்கு வழங்கினார்.
பிரிவினை மற்றும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக இருந்த அமெரிக்காவுடனான கூட்டணியை புதுப்பிப்பதாக இம்ரான் தனது நாட்டிற்கு இதன் மூலம் உறுதியளித்துள்ளார்.அவரும் அவருடன் வாஷிங்டனுக்கு வந்த இராணுவ புலனாய்வு குழுவும் தலிபான்களை அமைதி மாநாட்டு மேசையில் வரவழைத்து வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் military operational-லிருந்து அமெரிக்கா தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ளும் ஒப்பந்தம் வருங்காலத்தில் வரும் . அப்போது,அங்கே மோடிக்கு இடம் கிடையாது
அதனால்தான் செப்டம்பர் மாதம் மோடி வாஷிங்டனுக்கு பயணம் செய்கிறார் . ஆப்கானிஸ்தானில் நெருங்கும் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் செல்வாக்கை எதனையாவது காப்பாற்றுவதற்கான கடைசி முரற்சியாய் இது அமையும் . ஒவ்வொரு தருணத்திலும் IND-PAK உறவை மனதில் வைத்துக் கொண்டு அமெரிக்காவை வானளவு பாராட்டிய வார்த்தைகளின் பிரதிபலிப்பாய் டிரம்ப் இன்று தன்னால் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க மோடி விருப்பப்படுகிறார் என்ற எண்ணத்தை அடைகிறார் .
இதனால் இந்துத்துவாவிற்கு என்ன லாபம் என்றால் அமித் ஷா மற்றும் அவர்களுது சகாக்களுக்கு ஒரு தொடக்கம் கிடைக்கிறது . அமெரிக்கா எதிர்ப்பு இல்லாத நிலையில், காஷ்மீரின் பாதுகாப்பான Article 370 and 35A முற்றிலும் நீக்கிவிட்டு வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் ஒன்றிணைக்க முடியும் . மக்கள் தொகையை மாற்றியமைத்து Kashmiriyat நீக்கிவிட்டு ஹிந்துதுவா வை மலரவைக்க முடியும் . டிரம்ப் பின் நாக்கின் தவறுதலாய் உளறப்பட்ட காஷ்மீர் வார்த்தைகள், மோடிக்கு பிடித்தமான இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு என்ன செய்ததோ, அது போன்று இந்தியா -காஷ்மீருக்கு செய்யக் கூடிய தன்மைகளாய் உள்ளன
இந்த கட்டுரை முதன்முதலில் ஜூலை 25, 2019 அன்று print பதிப்பில் ‘Much ado about something’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.