Advertisment

இலங்கையிடம் இந்தியாவின் ராஜதந்திரம் பலிக்குமா?

தமிழர்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி குறித்து இலங்கைக்கு அறிவுறுத்தும் எந்த தகுதியும் இந்தியாவிற்கு இப்போது இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india sri lanka relations gotabaya rajapaksa s jaishankar china - இலங்கையிடம் இந்தியாவின் ராஜதந்திரம் பலிக்குமா?

india sri lanka relations gotabaya rajapaksa s jaishankar china - இலங்கையிடம் இந்தியாவின் ராஜதந்திரம் பலிக்குமா?

Nirupama Subramanian

Advertisment

இலங்கை ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற சில நாட்களிலேயே இந்திய-இலங்கை உறவில் இரண்டு விரைவான வளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, இருபது ஆண்டுகளாக இருந்த நடைமுறையை மாற்றி முதல் நபராக கொலும்புவிற்கு சென்று புதிய ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதற்கு முன்பு வரை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தான் தங்கள் முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயனமாக இந்தியா வருவார்கள். இந்தப் பழக்கத்தை “டெல்லிக்கு பூஜை செய்தல்” என நக்கலாக இலங்கை ஊடகம் விவரிக்கும்.

இப்போது முதல் தடவையாக கொலும்புவிற்கு பூஜை செய்துள்ளது இந்தியா. இது கோத்தபயவிற்கு மிகுந்த திருப்தியை தந்திருக்கும். ஆறு வருடங்களுக்கு முன்பு இதே கோத்தபய, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ரானுவ செயலாளராக இருந்த போது, ஏன் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்ததை இந்தியாவிடம் கூறவில்லை என அவரை டெல்லிக்கு வரவழைத்து கோப்பபட்டது இந்திய அரசு. ஆகவே சீனாவிற்கு முன்பே புதிய அட்சியை நாம் வாழ்த்த வேண்டும் என இந்தியா அகலக்கால் எடுத்து வைத்துள்ளதாகவே ஜெய்சங்கர் வருகையை நாம் பார்க்க வேண்டும்.

இரண்டாவது, இலங்கையில் இருந்து ஜெய்சங்கர் திரும்பியதும் சமாளிக்கும் விதமாக, “தமிழ் சமூகம் விரும்பும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிறைவேற்றும் தீர்வான தேசிய மறுநிர்மாண நடைமுறையை இலங்கை அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்” என இந்தியாவின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி கோத்தபயவிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார் என இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இப்போது தான் முதல்முறையாக தமிழர்களின் பிரச்சனைகள் மீதான தங்கள் ஆர்வத்தை அழுத்தமாக இந்தியா கூறியுள்ளது.

இவ்விரண்டு வளர்ச்சிகளை சேர்த்து பார்க்கும்போது ராஜபக்சே குடும்பத்துடனான கரடு முரடான உறவை சீர்செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவே தென்படுகிறது. ஆனால் அதே சமயத்தில், சீனாவிற்கு ஆதரவான நிலையை தடுக்கவும் கோத்தபயவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் ஒரு கருவியாக தமிழர் பிரச்சனையை கையில் எடுக்கவும் தயங்காது.

ஜெய்சங்கரின் கொலும்பு பயனம் நல்ல பலனை கொடுத்துள்ளது. தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயனமாக கோத்தபய வியாழனன்று டெல்லிக்கு வருகை புரிந்துள்ளார். ஒருவேளை அவர் சீனாவிற்கு முதலில் சென்றிருந்தால், தோற்ற மேலாண்மையில் கவனமாக இருக்கும் இந்திய அரசாங்கம் மக்கள் முன் அவமானப்பட்டிருக்கும்.

ஆனால் அதை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். ஏனென்றால், விரைவில் சீனாவிற்கு செல்லவுள்ளார் கோத்தபய. தமிழர் பிரச்சனையை பொருத்தவரை, இந்த சமயத்தில் இந்தியாவின் அழுத்தம் சற்று அதிகப்படியாகவே தோன்றுகிறது.

தமிழ் அரசனை வீழ்த்திய இலங்கை அரசனான துட்டகேமனு, சிங்கள-புத்தர்களின் சின்னமாக கருதப்படுகிறார். இவரது புகழ் மகாவம்ச காவியத்தில் கூறப்பட்டுள்ளது. அனுராதாபுரத்தில் இந்த மன்னர் கட்டிய ருவான்வெலிசியா கோவிலில் வைத்து தான் தற்போது பதவியேற்றுள்ளார் கோத்தபய.

அதுமட்டுமல்லாமல் போர் குற்றம் சாட்டப்பட்டவரை ரானுவ செயலாளராகவும் நியமித்துள்ளார். இலங்கையின் சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து இந்தியா மற்றும் உலகளாவிய கவலைகள் பற்றி புதிய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோத்தபய ராஜபக்சேவை தேர்ந்தெடுத்த புதிய இலங்கை அப்படியே புதிய இந்தியாவை மாதிரியாக கொண்டுள்ளது. கோத்தபயவின் பெரும்பான்மை வெற்றி, இந்தியாவில் பாஜக பெற்ற வெற்றி போலவே உள்ளது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே வகுப்புவாத வன்முறையை தூண்டும் சிங்கள்-புத்த தீவிரவாத குழுவான பொது பல சேனா, இந்துத்துவா மீதும் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்கள் முதல் “புத்த மதத்தை பாதுகாப்பது” மற்றும் “நரேந்திர மோடி போன்ற தலைவர்” போன்றவற்றின் மீதும் ஆர்வம் கொள்வதில் ஆச்சர்யம் இல்லை. முக்கியமாக பொது பல சேனாவோடு கோத்தபயவிற்கு தொடர்புள்ளது.

தனக்கு “எதிராக” வாக்களித்தவர்கள் எனக்கு தேவையில்லை என கோத்தபய கூறியுள்ளார். போர் நினைவுகள் காரணமாக தமிழர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கு பெரும்பான்மையினரின் கோபத்தை சந்தித்து வருவதால் இஸ்லாமிய சமூகமும் அவருக்கு வாக்களிக்கவில்லை. 51 உறுப்பினர் கொண்ட அவரது அமைச்சரவையில், 49 சிங்களவர்களும் இரண்டு தமிழர்களும் உள்ளனர். இதில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை.

இந்தியாவின் பெரும்பான்மைவாதம் மட்டுமல்லாமல், காஷ்மீரை இந்தியா எப்படி கையாள்கிறது என்பதை தாராளவாத மேற்குலக ஜனநாயக நாடுகள் மற்றும் ஜெய்சங்கர் கூறும் “தாராளவாத அங்கில ஊடகங்கள்” பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இதேப்போன்ற பிரச்சனைகள் கொண்ட மற்ற நாடுகளும் பார்த்து வருகின்றன. மேற்குலக நாடுகள் இவற்றை கவலையோடு பார்க்கின்றன. ஆனால் பிந்தையவர்களோ வியப்போடு பார்க்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணகர்த்தாவாக இருந்த கோத்தபயவிற்கு, கீழ்படியாமல் இருக்கும் மக்களை எப்படி கையாள்வது என்பதை சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், உலக மேடையில் காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாள்வது நிச்சியம் கோத்தபயவை ஊக்கப்படுத்தியிருக்கும். இந்தியாவைப் பற்றி நியூயார்க்கில் உள்ள ஊடகம் என்ன நினைக்கிறது என்பது குறித்து எனக்கு கவலையில்லை என வெளியுறவு துறை அமைச்சர் ஒருமுறை கூறியுள்ளார். இலங்கை ரானுவத்தின் மீதான போர் குற்ற விசாரணைகள் “பக்கச்சார்பான மேற்குலக அரசு சாரா நிருவனங்களால்” திணிக்கப்பட்டது என புதிதாக பதவியேற்ற ஜனாதிபதிபதியின் முதல் அறிக்கையே கூறுகிறது. டெல்லியில் அல்லது சென்னையில் உள்ள பத்திரிக்கை இலங்கையை பற்றி என்ன எழுதுகிறது என்பது பற்றி தனக்கு கவலையில்லை என்று கூட ஒருவேளை கோத்தபய இனி கூறலாம்.

சுருக்கமாக கூறினால், தமிழர்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி குறித்து இலங்கைக்கு அறிவுறுத்தும் எந்த தகுதியும் இந்தியாவிற்கு இப்போது இல்லை. இந்தியாவின் காஷ்மீர் நிலைப்பாடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, கும்பல் படுகொலை மற்றும் தற்போது பொதுவாக காணப்படும் வெறுப்பு செயல்கள் ஆகியவற்றிற்கு எதிராக இந்த வார்த்தைகள் அளவீடாக கொள்ளப்படும்.

தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவின் மேல் அவர்கள் நம்பிக்கையிழந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. 2009-ம் ஆண்டு போர் முடியும் தருவாயில் வடக்கு இலங்கையில் குடிமக்கள் கொலப்பட்ட போது பாராமுகமாக இருந்த இந்தியாவின் முடிவை கூட மறந்துவிடலாம். ஆனால், 2015-ம் ஆண்டு பதவியேற்ற இலங்கை அரசாங்கத்திடம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்துமாறு கூற கூட இந்தியாவால் முடியவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளாக சீனாவின் கை ஓங்கியதால் கவலைப்பட்டு கொண்டிருந்த இந்தியா, தமிழர்களின் பிரச்சனையை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளது. 2015-ம் ஆண்டு யாழ்பானத்திற்கு வருகை புரிந்த முதல் இந்திய பிரதமரான நரேந்திர மோடி, புதிய அரசாங்கத்தோடு கொஞ்ச காலம் “பொறுமையாக இருங்கள்” என அறிவுறுத்தினார். தற்போது தமிழ்ச் சமூகம் நம்பிக்கையற்றுப் போய் உள்ளது.

தனது உயரிய பீடத்தை இழந்தாலும், டெல்லியிடம் வேறு தெரிவுகளும் உள்ளது. இலங்கைக்கான இந்தியாவின் அடுத்த தூதராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இதற்கு முன்பு இதுபோல் செய்யவில்லை என்பதோடு இதன் மூலம் சாதாரண அறிக்கையை விட பலமான சமிஞ்யை கொடுத்துள்ளது இந்தியா. சீனாவைப் போல் இந்தியாவால் செலவழிக்க முடியாவிட்டாலும் ஆஃப்கனிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் போல் சீனாவையும் இலங்கையையும் நன்கு தெரிந்த ஒருவரை சிறப்பு தூதுவராக நியமிக்கவுள்ளது. இலங்கையில் இழந்த செல்வாக்கை மீட்கவும் நண்பர்களை சேர்க்கவும் மற்றொரு தொடக்கமாக இது அமையும்.

nirupama.subramanian@expressindia.com

தமிழில் V Gopi mavadiraja

India Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment