தற்போதைய இந்தியாவின் வர்த்தகம் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் வகையில் உள்ளது. சமூக சமநிலையை உருவாக்கும் வகையில் இந்திய வணிகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போது நாட்டில் பெரும்பான்மை சமுதாய மக்களின் ஆழ்மனதில் உள்ள அதிருப்தி மற்றும் எதிர்ப்புணர்வு போன்றவை சிறு தூண்டுதல்களால் மிகப்பெரிய கோபமாக வன்முறை போராட்டமாக மாறிவிடுகிறது. ஆனால் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் அரசுக்கு எதிரானது போல் தோன்றினாலும் அவை அரசுக்கு எதிராக மட்டுமல்லாது நமது நாட்டின் தொழில் வர்த்தக வளர்ச்சிக்கு எதிரானது என்பது தான் உண்மை. 3வது தொழில்புரட்சிக்கு தகுந்தவாறு இந்திய வர்த்தக சூழல் மாறியுள்ளதா என்றால் இல்லையென்றே கூறலாம். இந்திய வர்த்தகம் தொடர்ந்து தொல்லைகளை சந்தித்து வருகிறது. வர்த்தகத்திற்கான சந்தை வாய்ப்பு குறைந்து வருகிறது. கடன் வசதியும் தடைப்பட்டு வருகிறது. கடும் போட்டி காரணமாக லாபமும் குறைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்;ச்சி பாரம்பரிய வர்த்தக முறையில் பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழல் வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது. எனவே வர்த்தகத்தில் என்ன செய்யலாமென்ற கேள்வி எழலாம். ஆனால் அவற்றுக்கென பொதுவான ஒரு தீர்வு என்பது இல்லை. ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் தனது வளர்ச்சிக்கான குறிப்பிட்ட செயல் திட்டத்தை வரைய வேண்டியுள்ளது. ஆனால் இந்த வகையில் வளர்ச்சிக்கான அனைத்து வர்த்தக நிறுவனங்களும் பொதுவான வளர்ச்சிக்கான சாதனை மைல்கற்களை தாண்ட வேண்டிள்ளது. கடந்த 150 ஆண்டுகளாக வர்த்தக நிறுவனங்களில் வளர்ச்சிக்கான மைல்கற்களை கடந்தால்தான் வர்த்தக நிறுவனம் சரியான வளர்ச்சி பாதையில் செல்வதாக கருத இயலும்.
வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்கான விடை, பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த நிலையிலும் சாதனைகளை எட்டுவதில் தான் உள்ளது. வர்த்தகம் சார்ந்த சூழல்களில் மாற்றம் ஏற்ப்பட்டாலும், அதன் குறியீடுகள், இலக்குகள் நிரந்தரமாகவே உள்ளன. இதற்கான விடையை வரலாற்று சம்பவத்தின் பின்னணியில் கற்பனை செய்து தீர்வு காணலாம். கடந்த 1914ல் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள டாவோஸ் நகரில் மேற்கத்திய உலக வர்த்தக ஜாம்பவான்கள் ஒன்று கூடினர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உலகின் பெரும் பணக்காரரும் பெட்ரோலிய பொருட்களின் நிறுவனங்களின் கூட்டமைப்பை வலுப்படுத்திய ஜான் டி. ராக்பெல்லர், பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து தடையற்ற விலை மதிப்புக்கேற்ற பொருட்கள் விற்பனை தொடரை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார லாபத்தை உறுதி செய்த மோர்ஸ் கோட், குறைந்த செலவில் மிகத்தரமான இரும்பு உற்பத்தியை உருவாக்கி இத்துறையின் வர்த்தகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவருமான ஆண்ட்ரு கார்னிக், தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரித்து அவற்றை பொருத்தி மிகப்பெரிய அளவில் வாகன உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பணியாளர்களை நியமிக்கும் திறன் கொண்ட ஹென்றி போர்டு உலக அளவில் ரசாயன மற்றும் மருந்து பொருட்கள் விற்பனையில் 80 சதவகித இலக்கை எட்டிய ஜெர்மன் நாட்டின் நிறுவனங்களான பேயர் மற்றும் பேஸ்ப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் ஒன்று கூடி விவாதித்துள்ளனர். அவர்கள் விவாதம் எவ்வாறு நடைபெற்றிருக்குமென்பதை நாம் கற்பனை செய்து பார்த்தால் அவர்கள் அனைவரும் உற்பத்தி பொருட்களின் தரம் விலைக்கட்டுப்பாடு பொருளாதார ரீதியிலான உற்பத்தி அளவு, புதுமை, தலைமைப் பண்பு மற்றும் லட்சியத்துடன் கூடிய ஆளுமை போன்ற அடிப்படை சித்தாத்தங்களின் முக்கியத்துவம் குறித்தே விவாதம் செய்திருப்பார்கள் என்பது தெளிவு.
அவர்கள் ஒன்று கூடியது வேண்டுமானால் அருமையான கற்பனை நினைவாக இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வு சொல்லும் தகவல் அதுவல்ல. இந்த காரணங்களால் தான் வர்த்தகர்கள் தங்கள் தொழில் திறனில் முதன் முறையாக நீராவித்திறன் மற்றும் தந்தி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றனர். இரண்டாவதாக மின்சாரம், பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் அவற்றை மக்களிடையே கொண்டு செல்லும் விதம் மூலம் தொழில் புரட்சியை உருவாக்கினர். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கடந்து இந்த தொழில் புரட்சி உருவானது மிகப்பெரிய சாதனையாகும்.
பிரெஞ்சு பழமொழி ஒன்று “அதிகளவில் மாற்றங்கள் இருந்தாலும், அவை அப்படியே தான் இருக்கும்” என்று குறிப்பிடுகிறது. இந்த பழமொழி குறித்து பல்வேறு வகையான கருத்து கூறலாம். ஆனால் வர்த்தகத்தை பொறுத்தவரை அதற்கான வாய்ப்புகளும் தன்மைகளும் மாறலாம். ஆனால் வர்த்தக நிறுவனங்களின் வெற்றிக்கான அடிப்படை பண்புகள் என்றென்றும் மாறிவிடும் உலக சூழ்நிலைக்கேற்ப தன்னை எதார்த்த நிலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய வர்;த்தகம் எவ்வாறு 3வது தொழில்புரட்சிக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது? குறிப்பாக கணிணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கேற்றவாறு எப்படி மாறியுள்ளது என்று ஒப்பிட்டுப்பார்த்தால், பல இந்திய வர்த்தகர்கள் அந்த கண்ணோட்டமேயின்றி இழந்துள்ளனர் என்றே கூறலாம்.
அவர்கள் உலகமயமாதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தங்கள் வணிக வெளியில் பின்பற்றாமல் அதன் மதிப்பை உணராமல் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது. ஆவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உரிமம் மற்றும் அனுமதி என்னும் பழைய நடைமுறை தொடர்வதற்கும் வர்த்தகர்களே காரணம். இதன் விளைவாக கடுமையான போட்டி சூழலை சந்திக்க இயலாமல் தங்கள் வர்த்தகம் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு வர்த்தக சந்தையில் முதல் 20 இடங்களை பிடித்த இந்திய நிறுவனங்களையும், 2019ம் ஆண்டு முதல் 20 இடங்களை பிடித்த இந்திய நிறுவனங்களின் பட்டியல்களை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே இந்த 2பட்டியல்களிலும் இடம்பெற்றுள்ளதை நாம் காணமுடியும். 1990ம் ஆண்டு முதல் 20 இடங்களை பிடித்த நிறுவனங்களில் பெரும்பான்மை நிறுவனங்கள் பரம்பரையாக ஒரே குடும்பத்தால் நிர்வாகிக்கப்பட்ட நிறுவனங்களாகும். 2019ம் ஆண்டு பட்டியலில் தகவல் தொழில்நுட்பம் நிதி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதில் வேதனையான வி~யம் என்னவென்றால் 1990ம் ஆண்டு முதல் 20 இடங்களில் இருந்த பெரும்பான்மை நிறுவனங்கள் தற்போது பட்டியலில் இல்லவே இல்லையென்பதுதான்.
உலக பொருளாதார பேரவையை நிறுவிய கிளாஸ் ஸ்கவாப், உலகில் தற்போது நிலவி வரும் சந்தை சூழல் 4வது தொழில்புரட்சிக்கு வழிவகுத்துள்ளது என்கிறார். இது ஏற்கனவே ஏற்ப்பட்ட 3தொழிற்புரட்சிகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது. 4வது தொழில்புரட்சி உலகெங்களிலும் இயங்கவல்ல, இணையதளத்தின் அடிப்படையிலான தொடர்பை கொண்டது, செயற்கை நுண்ணறிவு மரபணு வகைப்படுத்தும் தொழில்நுட்பம், “நேனோ” எனப்படும் நுண்ணிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் வாயிலாக நிகழக்கூடியது. மேலும் அதே வேளையில் 4வது தொழிற்புரட்சி உருவாக்கப்ட்ட தொழில் அமைப்புகளுக்கும் அரசாங்க நடைமுறைகளுக்கும் இடையே தற்போதுள்ள நம்பிக்கையின்மையை மேலும் அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எதிர்ப்பு போரட்டங்களின் மனநிலையே இதற்கு தகுந்த சான்றாகும்.
அயோத்திய வி~யத்தில் விலகி இருத்;தலில் எந்தவொரு கொண்டாட்டமும் தேவை இல்லை என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்படுகிறது. எந்த வழியில் தீர்ப்பு வந்தாலும் அது பொருட்டல்ல என்ற மனநிலையை இருதரப்பினரும் பின்பற்ற வேண்டுவதுபொன்ற சூழல் வலியுறுத்தப்படுகிறது.
அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான “அழிவுக்கெதிரான போராட்டம்” என்ற அமைப்பு பொதுமக்களிடம் ஒரு கருத்தை வலிறுருத்தி வருகிறது. அது என்னவென்றால் அம்மக்கள் தங்களது அரசுகளிடம் சுற்றுச்சூழலில் கரியமில வாறு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பதுதான். உலகம் முழுவதிலும் 6மில்லியன் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி சாலைகளிலும் விமான நிலையங்களிலும் மறியல் போரட்டங்களை நடத்தியுள்ளனர். இதே போல சீனா அரசின் உத்தரவான ஹாங்காங் நாட்டிலிருந்து போரட்டக்காரர்களை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து ஹாங்காங்கில் எதிhப்பு போரட்டம் நடைபெறுகிறது.
இதே போல முன்பில்லாத அளவில் சிலி நாட்டின் தலைநகரான சாண்டிhயாகோவில், மெட்ரோ ரயில் கட்டண உயர்வு கொள்கை முடிவை எதிர்த்து மிகப்பெரிய போரட்டங்கள் நடைபெறுகின்றன. லெபனானில் வாட்ஸ் அப்; செய்திகளுக்கு வரிவிதிக்கும் அரசின் முடிவை எதிர்த்து வன்முறை போராட்டங்கள் கடந்தாண்டு நடைபெற்றன. பிரானஸ் நாட்டில் பெட்ரோலிய எரிபொருட்கள் விலையுயர்வு மற்றும் விலை அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை கண்டித்து மஞ்சள் உடற்கவசம் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மேலே குறிப்பிட்டுள்ள இவையனைத்தும் சமூக குறையாடுகளின் சில தோரணங்களாகும். இது போன்று மேலும் பல குறைபாடுகளை குறிப்பிட இயலும். இதில் குறிப்பிடத்தக்க வி~யம் என்னவென்றால் மக்களின் ஆழ் மனநிலையில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியின்மை நிலவுவதுதான்;, அது பொதுவெளியில் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்த சிறு தீப்பொறியே போதுமானது என்பதையும் எடுத்துக்காட்டுவதை உணர முடிகிறது. இந்த அதிருப்தியின்மை அரசாங்கததிற்கு எதிரானது மட்டும் அல்ல. இது வர்த்தக உலகத்தையும் குறிவைத்தே நடக்கிறது என்று சொல்ல முடியும். வர்த்தகர்களும் சமூக சமன்பாடற்ற சூழ்நிலைகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ காரணமாக உள்ளதாக போரட்டக்காரர்கள் கருதுகின்றனர்.
எனவே இந்திய வர்த்தகத்திற்கு சவாலாக உள்ளது எதுவென்றால் நவீன டிஜிட்டல், உயிரியல் மற்றுமு; இயந்திர தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியதோடு அல்லாமல், வர்த்தக நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதுதான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியை இணைக்கும் பாலமாக வர்த்தக மாதிரிகள் உருவாகாவிட்டாலும், கண்டிப்பாக இவற்றிற்கிடையிலான இடைவெளியை குறைக்கும் விதத்தில் அமைய வேண்டும். சமூக அவநம்பிக்கையை மாற்றும் வகையில் வர்த்தகம் செயல்பட வேண்டும். ஆனால் வர்த்தகத்திற்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகும். இதில் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வின் அணுகு முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம் என்பது வெறும் கால அட்;டவணையுடன் கூடிய பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுக்கழிப்பிடங்கள் போன்றவற்றை கட்டிக் கொடுப்பது என்பது மட்டுமல்லாது, சமூக வெறுப்புணர்வுக்கான அடிப்படை காரணிகளை குறிப்பாக சமூக அநீதி ஒடுக்குமுறை கட்டுப்பாடுடன் கூடிய நடைமுறை லஞ்சம், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றையும் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கு வர்த்தக நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு தற்போது ஒதுக்கி வரும் நிதியை அதிகரிக்க வேண்டும். மக்களின் நீடித்த வாழ்வாதார திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், வர்த்தகத்தை அது செலவிடும் தொகையை விட கூடுதல் லாபத்தை ஈட்டித்தரும் வகையிலும் அதிக உத்வேகத்துடன் வர்த்தக செயல்பாடு அமையும் வகையிலும் சூழ்நிலை ஏற்படும். எந்தெந்த வர்த்தக நிறுவனங்கள் வெற்றிபெறுமென்றால் அவை தங்களின் வர்த்தக அடிப்படை கோட்பாடுகளை கண்ணும் கருத்துமாக பின்பற்றுவகோடில்லாமல் மாறிவிடும் வர்த்தக சூழல்களுக்கேற்றவாறு தயக்கமின்றி தங்களை தயார்படுத்திக் கொள்வதில்தான் அவற்றின் வெற்றியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.