VIKRAM S MEHTA
கட்டுரை ஆசிரியர் ப்ரூக்கிங்ஸ் இந்தியாவின் தலைவர், மற்றும் புரூக்கிங்ஸ் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வகர்.
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பே தவறாக உள்ளதா ? அல்லது தற்காலிக தடுமாற்றமா ? அரசாங்கம் பணப்புழக்கத்தை கையில் எடுக்க வேண்டுமா ? தனியார் கார்ப்பரேட் துறையை இன்னும் அதன் துயரங்களில் சிக்க அனுமதிக்க வேண்டுமா? போன்ற கேள்விகள் பொருளாதார மந்தநிலை குறித்து கடந்த சில வாரங்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த பல தரப்பட்ட கேள்விகள் ஆச்சரியமளிப்பதாக இல்லை.
மூன்று பொருளாதார வல்லுநர்கள் ஒரு அறைக்குள் வாதாடினால் நான்கு வெவ்வேறு கருத்துக்களை முன்வைப்பார்கள் என்பது அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கருத்து. ஆனால், தற்போது கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நமது பொருளாதாரத்தைப் பற்றிய விவாதம் அரசியல் மற்றும் நிர்வாக சித்தாந்தங்களின் அடிப்பபடையில் மட்டுமே வாதிடப்படுவதாக தோன்றுகிறது.
உதாரணமாக, நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் “கடந்த 70 ஆண்டுகளில் யாரும் நம்ப முடியாத அளவில் இந்திய நிதித்துறை குழப்பத்தில் உள்ளது என்று கூறுகிறார்”. ஆனால், பிரதம மந்திரியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சற்று நம்பிக்கையாகவே இந்திய நிதித்துறையைப் பார்க்கிறார். அவர் கூறும்போது "சில துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன, அரசாங்கம் பண புழக்கத்தை தூண்ட தேவையில்லை ( fiscal stimulus ) " என்கிறார். இன்னும் ஒரு படி மேலே போனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி " பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை கடுமையாக விமர்சித்துள்ளார்". மேலும், நிதி ஆயோக் எந்தவொரு நிர்வாக அதிகாரமும் இல்லாத ஒரு சிந்தனைக் குழு மட்டும் தான் என்பதை காட்டமாக நினைவூட்டுகிறார்.
பொருளாதார சிந்தனையில் இத்தனை கருத்து பேதைமைகள் இருப்பது கவலைப்பட வேண்டிய விஷயங்கள் தான். அடுக்குகளால் இணைக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையும் எடுக்கும் தனிப்பட்ட முடுவுகளால் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்யவும், மக்கள் தலைவர்களின் குரல்களை கேட்கவும் இந்தியாவில் ஏதேனும் பொருளாதார அமைப்பு இருக்கிறதா ? என்றும் இன்னும் நாம் கேட்காமல் இருப்பது ஆச்சர்யப்படத்தான் வைக்கின்றது. உதாரணமாக, ஆடோமொபைல் துறை எடுத்துக் கொள்வோம்.
போக்குவரத்து வாகனங்களுக்கான தேவை (பயணிகள் கார்கள், கனரக வணிக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்) 19/20 நிதியாண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டை விட 2.3 சதவீதம் குறைந்துள்ளது. இது 2001 ல் இருந்து ஆட்டோமொபைல் துறையில் மிகக் கடுமையான சரிவாகும். இது முற்றிலும் அரசாங்கக் கொள்கையின் விளைவு என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. ஆட்டோமொபைல் தொழிற்துறை இயல்பாகவே ஆழமான கட்டமைப்புடையது, மேலும் ஒவ்வொரு வாகன நிறுவனமும் அதன் தற்போதைய சந்தை சிக்கல்களைத் தடுக்கும் பிரத்தியேகங்களை ஆராய்ந்து சுய பரிசோதனையும் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசாங்கத்தின் கொள்கையால் தொழில் மந்தமடையவில்லை என்று யாரும் வாதிட முடியாது. ட்ரக்ஸின் அதிகபட்ச சுமை சுமக்கும் திறனை அதிகரிப்பதற்கான கடந்த ஆண்டு அரசாங்கம் எடுத்த முடிவால் கனரக வர்த்தக வாகனங்களுக்கான சந்தையிலிருந்தே அது வெளியேறியது. கனரக வர்த்தக வாகனங்களின் தேவை, அரசாங்க முடிவால் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. வங்கிகளும் நிதியளிப்பதில் பொதுவான கட்டுப்பாடை கடைபிடித்ததால், விற்பனையாளர்களுக்கு மூலதனமும், நுகர்வோருக்கு வாகன வாங்கிக்கடன்களும் குறைத்துவிட்டது. ஒரு காலத்தில் மொத்த வாகனத்தின் விலையில் 90 சதவீதம் வரை கடன் வாங்கிய நுகர்வோர், தற்போது 65 சதவிகிதம் பெறுவதே ஆச்சரியமாய் உள்ளது .ஆனால்,வாகன கடன்கள் வங்கிகளுக்கான வாரக்கடனில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே என்பதையும் நாம் இவ்விடத்தில் மறந்து விட முடியாது. வாகனம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இறுக்குவது மற்றும் பி.எஸ் VI எமிஷன் விதிமுறைகளை வேகமாக நடைமுறைப் படுத்தபடுவது போன்ற முடிவுகளால் அத்துறையில் அதிகமான தாக்கங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள முடிவுகள் அனைத்தும் தனித்தனியாய் பார்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் அவைகள் ஓரிடத்தில் கூடும்போது கடினமான முனைகளைப் பெறுகின்றன. ஏனென்றால், வாகனத் தொழில், நமது உற்பத்தித் துறையின் மையத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபியில் 49 சதவீதம் ஆட்டோமொபைல் துறையில் இருந்துதான் வருகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) கருத்துப்படி, இது நேரடியாகவும் மறைமுகமாகவும் 37 மில்லியன் வேலைகளை ஆதரிக்கிறது. இந்த ஆட்டோமொபைல் தயாரிப்புகள் வீழ்ச்சி அடைந்தால் நமது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பல சிற்றலைகளை ஏற்படுத்தும். ஆட்டோ வேல்யூ செயினில் (அசல் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள்) பணிபுரிபவர்களில் 5-7 சதவீதம் பேர் வேலை இழந்துவிட்டதாகவும், ஒப்பந்த பணியமர்த்தல் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சியாம் மதிப்பிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகனத் துறையிலிருந்து ஜிஎஸ்டி வசூல் 2018 முதல் பாதியில் நிதி அமைச்சகத்தால் பெறப்பட்டதை விட 6,000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது என்றும் சியாம் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் தொழிலுக்கு அரசு மானியம் வழங்குவதற்காக இந்த புள்ளிவிவரங்களை நான் மேற்கோள் காட்டுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் இயக்குனராய் இருப்பதால் , மானியம் வழங்க வேண்டும் என்று நான் எழுதினால் நான் விமர்சனத்திற்குள் ஈர்க்கப்படுவேன் என்பது எனக்கு தெளிவாக தெரியும். ஆனால் பொருளாதார நிர்வாகத்தில் ஒத்திசைவு இல்லாததன் விளைவுகளை நிரூபிக்க,தொலைநோக்கு பார்வை மூலம் துறைசார் முயற்சிகள் பார்க்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே நான் இங்கு முயற்சி செய்து வருகிறேன்.
நவம்பர் 2008 இல், உலகளாவிய நிதி நெருக்கடி உச்சத்தில் ஐ இருக்கும்போது , எலிசபெத் ராணி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் விரிவாக்க விழாவில் கூடியிருந்த பொருளாதார வல்லுனர்களிடம் "ஏன் இந்த நிதி நெருக்கடியை உங்களால் யூகிக்கமுடியவில்லை என்று கேட்டார். கல்வியாளர்கள் ஜூலை 2009 எலிசபெத் ராணிக்கு கடிதத்தால் பதிலளித்தனர். அக்கடிதத்தில் நெருக்கடிக்கான,பொருளாதார ஒழுங்குமுறை மற்றும் நடத்தை காரணங்களை பட்டியலிட்டனர். அதில், முக்கிய அம்சங்களாய் இருப்பது " அனைவரும் தங்கள் தங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்திகிறார்கள், ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பி ற்க்கு ஏற்படும் அபாயங்களை அவர்கள் புரிந்து கொள்வதாய் இல்லை" என்று எழுதியிருந்தனர். தனி நபர்களின் தவறுகள் சிறிதாக இருந்தாலும், இந்த அபாயங்களின் கூட்டு தாக்கம் ஒரு முறையான சரிவைத் தூண்டும் என்பதை நாமும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நமது நிர்வாக எந்திரம் செங்குத்தாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் ஒரு குறிகிய வட்டத்துக்குள் யோசனை செய்கினறனர் . அரசு எந்திரங்களில் இருக்கும் ஒரு சிலரே தொலைநோக்கோடு பார்க்கும் இடத்தில் இருகினற்னர், ஏன்..... பார்க்கவும் ஆசைப்படுகின்றனர்.
அனைவரையும் கலந்து ஆலோசித்து ஒரு கூட்டு பொருளாதார முடிவை செயல்படுத்த, அதற்கு வசதி செய்ய எந்த அமைப்பும் நிம்மிடம் இல்லை. நித்தி ஆயோக் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உள்ளது (இரண்டாவதின், பணி என்ன என்பதை என்னால் தெளிவாக கூறமுடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் ). ஆனால் சமீபத்திய உரையாடல்களைப் பார்க்கும் பொழுது(மேலே படிக்கவும்) பொருளாதாரத்தின் பரந்த அளவிலான துறைசார் முன்முயற்சிகளை தொடங்க அவ்விரண்டிலும் நிர்வாக அதிகாரம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.
இந்த விஷயத்தில் பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன, நான் ஒன்றும் வித்தியாசமாய் சொல்லவில்லை. அமெரிக்காவின் ரஹ்ம் இமானுவேல் 2008 நிதி நெருக்கடியின் போது ஒரு "கடுமையான நெருக்கடியை" வீணாக்க வேண்டாம், செய்ய முடியாத ஒன்றை செய்வதற்கான வாய்ப்பாய் இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தியது தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் நாம் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய கட்டயாத்தில் உள்ளோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.