Tavleen Singh Writes : காஷ்மீர் முன்பை விட பெரிய தலைவலியாக மாறும்

ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டது பற்றி ஆராயும்போது, ​​ஜம்மு-காஷ்மீர் தற்போதைய ஆளுனரிடம் பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்...

Tavleen Singh

தவ்லீன் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னணி கட்டுரையாளர்.

இன்றைய நாட்களில் ஒரு அரசியல் தலைவரை விட பாகிஸ்தான் பிரதமரின் வெளிப்பாடு  ஒரு ஜிஹாதி போதகர் போல் தெரிகிறது. 370 வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து,  இம்ரான் கான் ஆற்றிய அனைத்து உரைகளிலும் ஒரு விதமான கோபம் தட்டுப்படுகிறது. அணுசக்தி யுத்தத்தை அச்சுறுத்தியுள்ளார். காஷ்மீரின் ‘இணைத்தல்’ ஒரு போர்க்குற்றம் என்று அறிவித்து,  இனப்படுகொலை மற்றும் இன அழிப்பிறிக்கு சமம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேச்சு கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய அவரது உரை . விரோத மனோபாவத்தை தாண்டி, அதிலுள்ள அறியாமை தான் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த உரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய குடியரசின்  தலைவரான இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ்ஸின்  சித்தாந்தங்களை குறித்த தனது வரலாற்று பகுப்பாய்வை  கொடுத்தார். அதில் மிகவும் கவினிக்கப் படவேண்டிய வாதங்கள் “முஸ்லிம்களின் மீதான வெறுப்பு மற்றும்  நாஜி ஜெர்மனி போன்ற  இனமேன்மை மனப்பான்மை போன்றவைகளின் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தம்.  இந்துக்கள் முதல் தர குடிமக்களாகவும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவும் இருக்கும் ஒரு நாடாக இந்தியாவை உருவாக்கும் அவரின் நடவடிக்கை ஹிட்லருக்கு ஒப்பானது. ஜெர்மனியில் ஹிட்லர் செய்ததை இந்தியாவில் செய்ய மோடி விரும்புகிறார்….செய்து கொண்டிருக்கிறார். இதனால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை  ரத்து செய்ததை  இன அழிப்பாய் தான் பார்க்க முடிகிறது”என்பது தான்.

மேலும், உலகம் அச்சுறுத்தும் ‘பாசிச’ அணுசக்தி நாடாக இந்திய இருப்பதால், முஸ்லிம்களின் உரிமைகள் கேள்விக் குறியாக இருப்பதால் காஷ்மீரின் சுதந்திரத்திற்காக இறக்கும் வரை போராடுவேன் என்றும், ‘காஷ்மீரின் தூதராக’ ஒவ்வொரு சர்வதேச மன்றத்திற்கும் சென்று உலகத் தலைவர்களிடம் இந்தியாவின் அபாயாங்களை புரிய வைப்பேன் என்று தனது உரையை முடித்தார்.

ஆனால், இந்த உரை உண்மையா ?  ஜிஹாதி இராணுவ வீரர்களே அணுசக்தி பட்டனைக் கட்டுப்படுத்தும் அந்த பாகிஸ்தானை விட இந்திய அபாயகரமான நாடா?

காஷ்மீர் என்பது  இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் இன்னும்   ‘முடிக்கப்படாத அத்தியாயம்’ என்றும், இந்தியாவில் இருந்து பறிக்கப்படும் வரை பாகிஸ்தான் முழுமையடையாது  என்றும் குழந்தைகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்.

இதை செய்ய பல தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் துர்பாக்கியமானது  இஸ்லாமிய பயங்கரவாதத்தை காஷ்மீரி இஸ்லாத்தின் தன்மையை மாற்றுவதற்கும்,  காஷ்மீர் மக்களை மேலும்  ஜிகாதிகளாக மாற்றுவதற்கும் பயன்படுத்தியது தான்.

இதனால்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டு தசாப்தங்களாக கொதித்து நிற்கிறது, ‘ஆசாதி’ இயக்கத்தின் இளம் காஷ்மீர் தலைவர்கள் பின், ஏன் இப்போது ஷரியத்தை திணிக்கக் கோருகின்றனர்? இந்த நீண்ட கால அமைதியின்மையை மனதில் கொண்டு தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ‘மத்தியஸ்தம்’ செய்யச் சொல்வது சரியான தருணம் என்று இம்ரான் கான் நினைத்தார்.

இப்போது காஷ்மீர் டெல்லியில் இருந்து நேரடியாக ஆட்சி செய்யப்படுவதால், அது மற்றவர்களுக்கு  செல்லும் வாய்ப்பு வியத்தகு முறையில் குறைந்துவிட்டன. அதன் சிறப்பு நிலை நீக்கப்பட்டதற்கு இதுவே முதல் காரணம். இந்தியாவுக்குள் காஷ்மீரை ஒன்றிணைக்கும் செயல்முறை முடிந்ததும், இந்த சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் வழங்கப்படக்கூடாது என்ற அடிப்படை உண்மையால், 370 வது பிரிவை நீக்கியதை பெரும்பாலான இந்தியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே, பெரும்பாலான இந்தியர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று நம்பும் ஒன்றைத் தான் பிரதமர் செய்திருக்கிறார்.

இதை சொல்லும் அதே வேளையில், நமது காஷ்மீர் பிரச்சினை முன்பு இருந்ததை விட டெல்லிக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை. தகவல்தொடர்பு இருட்டடிப்பு எவ்வளவு காலம் நீடிக்க முடியும்? ஸ்ரீநகரில் சுகாதார வசதிகள் சரிந்து வருகிறது  என்று  செலுத்தியதற்காக கடந்த வாரம் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டது பற்றி ஆராயும்போது, ​​ஜம்மு-காஷ்மீர் தற்போதைய ஆளுனரிடம் பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். காஷ்மீரின் அரசியல் யதார்த்தங்கள் மாறியதிலிருந்து ஒரு மரணம் கூட ஏற்படவில்லை என்று பெருமையாக சத்ய பால் மாலிக்  நேர்காணல்களில் சொல்லி வந்தாலும், அமைதியைக் கொண்டுவருவதற்கான ஒரு யுக்திகளை அவர் இதுவரை வகுக்கவில்லை என்பதே அப்பட்ட உண்மை.

ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதிலும், நிருபர்கள் பள்ளத்தாக்கு வரை சென்று இந்திய இராணுவத்தின் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் குழந்தைகளையும், கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறும் பெண்களையும் சந்திக்கின்றனர். ஆனால், இந்த கதைகளை நம்புவதற்கு எனக்கு சற்று கடினமாகவே உள்ளது.

உதாரணமாக, தொண்ணூறுகளில் ஜம்மு-காஷ்மீரில்  கிளர்ச்சி நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்போதும், ​​சித்திரவதை மற்றும் கற்பழிப்பு  போன்ற தகவல்கள் பரப்பப்பட்டன. பரமுல்லாவிற்கு  அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்று இந்த கதைகளை ஆராய்ந்தேன். அங்கு ஒரு பெண், இந்த கிராமத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்திய படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்ன விதம் இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை.

பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்கள் ஒருபோதும் நடந்ததில்லை  அல்லது அவை இப்போது நடக்கவில்லை என்று அர்த்தம் கொல்ல வேண்டாம். இந்திய ராணுவப் படை அவ்வாறு செய்திருந்தால் அது  பயங்கரமான தவறு. பிரதமர் இப்போது தனிப்பட்ட முறையில் காஷ்மீரை ஆளும் பொறுப்பில் இருக்கிறார், எனவே அவர் பெயரில் நடக்கும் மோசமான விஷயங்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த வாரம் பிபிசி அறிவித்தபடி, ஒரு வன்முறை இராணுவ ஒடுக்குமுறை ஜம்மு-காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது என்றால், அமைதியை வெல்லும் வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பதை  இந்திய பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close