India,s electric vehicle push will lead to brighter greener future: நாட்டின் பருவநிலை மாற்றத்துக்கான கடமைகளை நிறைவேற்றுதல் என்பது உற்பத்தி துறைக்கு ஊக்கமூட்டுவதற்கு உதவுவதாகவும் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
உலகிலேயே இந்தியா
மின்னணு போக்குவரத்துக்கு மாறுவது என்பது, போக்குவரத்துறையில் கார்பன் வாயு பயன்பாட்டை குறைப்பதற்கான சர்வதேச யுக்தியின் வாக்குறுதியாகும். உலகளாவிய ஈவி30@30(2030ம் ஆண்டுக்குள் மின்னணு வாகனங்கள் என்ற இலக்கு) இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தருகின்றன. 2030ம் ஆண்டுக்குள் புதிய வாகனங்களில் 30 சதவிகிதம் மின்னணு வாகனங்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இதன் குறிக்கோளாகும். அண்மையில் கிளாஸ்கோ நகரில் நடந்து முடிந்த சிஓபி26ல் பருவநிலை மாற்றத்துக்கான ஐந்து அம்சங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு தெரிவித்தார். பிரதமர் மோடி,
புவி வெப்பமயமாதலை குறைக்கும் வகையில் கார்பன்வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச பருவநிலை நிகழ்ச்சிநிரலில் மின்னணு வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிப்பது முன்னெடுக்கப்பட்டது. ஒட்டு மொத்த கச்சா எண்ணைய் தேவைகளில் தோராயமாக 100 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம், நாட்டின் ஒட்டு மொத்த ஆற்றல் பாதுகாப்பு சூழலை முன்னெடுப்பதில் பங்களிப்பதாகவும் இருக்கும். இதற்கு மின்னணு வாகன உற்பத்தி தொழில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இந்த தொழிலில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கூடுதலாக பல்வேறு மின்பாதை ஆதரவு சேவைகளின் வாயிலாக மின்னணு வாகனங்கள் , மின் பாதையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பான வலுவான மின்பாதை இயக்கத்தை நிர்வகிக்கும் விதமாக புதுபிக்கத்தக்க ஆற்றல் செயல்முறையை தருவதற்கு உதவும்.
சர்வதேச மின்னணு போக்குவரத்து புரட்சி என்பது இன்றைக்கு, மின்னணு வாகனம் என்ற சீரான உயர்வை நோக்கி வளர்ச்சி பெறுவதாக இருக்கிறது. இன்றைக்கு விற்பனையாகும் நூறு கார்களில் இரண்டு கார்கள் மின்னணு ஆற்றல் கொண்டதாக விற்பனை ஆகிறது என தோராயமாக மதிப்பிடப்படுகிறது. இன்றைய இந்த நிகழ்வு, மின்னணு வாகன உயர்வின் சீரான வளர்ச்சியை வரையறுப்பதாக இருக்கிறது. மின்னணு வாகன விற்பனையானது 2020ம் ஆண்டில் 2.1 மில்லியனை தொட்டுள்ளது. சர்வதேச மொத்த மின்னணு வாகனங்கள் 2020ம் ஆண்டு 8.0 மில்லியன் ஆக இருந்தது. சர்வதேச வாகன இருப்பு மற்றும் 2.6 சதவிகித சர்வதேச கார்கள் விற்பனையில் மின்னணு வாகனத்தின் எண்ணிக்கை ஒரு சதவிகிதமாகும். பேட்டரி விலையின் வீழ்ச்சி மற்றும் மின்னணு கார்களின்செயல் திறன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக உலக அளவில் மின்னணு வாகனங்களுக்கு தேவை எழுந்துள்ளது.
2020-30 ஆண்டில் இந்தியாவின் பேட்டரிகளுக்கான ஒட்டு மொத்த தேவை என்பது தோராயமாக 900-1100 ஜிகாவாட் ஆக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பேட்டரிகள் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி கட்டமைப்பு இல்லாதது கவலை தருவதாக இருக்கிறது. அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கு இறக்குமதியை மட்டுமே நம்புவதாக இருக்கிறது. மிக குறைந்த மின்னணு வாகனங்கள் செயல்முறை மற்றும் ஆற்றல்துறையில் பேட்டரி இருப்பு ஆகியவை இருந்தும் கூட அரசின் புள்ளிவிரத்தின்படி 2021ம் ஆண்டு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள லித்தியம்-ஐயன் செல்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்தியா இன்னும் வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டி உள்ளது. சர்வதேச உற்பத்தியாளர்கள் பேட்டரி உற்பத்தியில் போட்டி போட்டுக்கொண்டு உயரத்தை எட்டி வருகின்றனர். ஜிகாஃபாக்டரிகள் முதல் டெராஃபாக்டரிகள் வரை விரைவாக முன்னேறி வருகின்றனர்.
அரசின் இ-வாகனங்கள் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி (2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் ஆற்றல் திறன் இலக்கு) முன்னெடுப்புகளை கருத்தில் கொண்டு அண்மை கால தொழில்நுட்ப இடையூறுகளுக்கு இடையே, நாட்டின் நிலையான வளர்ச்சியை முன்னெடுக்க பேட்டரி இருப்பு என்பது சிறந்த வாய்ப்பாகும். தனிநபர் வருவாய் மட்டம் அதிகரித்து வரும் சூழலில் மொபைல் போன், யூபிஎஸ், லேப்டாப், பவர் பேங்க் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. இவற்றுக்கு மேம்பட்ட வேதியியல் பேட்டரிகள் தேவையும் ஏற்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் பெரும் பொருளாதார வாய்ப்புகளில் ஒன்றாக மேம்பட்ட பேட்டரி உற்பத்தியானது இருக்கும்.
நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்னணு வாகனங்களை முன்னெடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் (FAME) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை (ரூ.10,000 கோடி)வேகமாக மேற்கொள்ளும் திட்டம், மேம்பட்ட வேதியியல் பேட்டரிக்கான (ஏசிசி) நுகர்வோர் தரப்பிலிருந்து உற்பத்தியோடு-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (பிஎல்ஐ)(ரூ.18,100 கோடி) விநியோகஸ்தர்கள் தரப்புக்கும், இறுதியாக மின்னணு வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கான (ரூ.25,938கோடி) ஆட்டோ மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை திட்டமும் அண்மையில் தொடங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் உற்பத்திக்கு முன்னும்பின்னுமான இந்த அனைத்து ஒருங்கிணைப்பு வழிமுறைகள் வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மையான சுற்றுச்சூழல் மின்னணு வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை நோக்கி இந்தியா திரும்பும். இது நாட்டின் அந்நிய செலவாணியை பாதுகாப்பது மட்டுமின்றி, மின்னணு வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி பெற செய்வதுடன், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தந்துக்கு இணங்க செயல்படுவதற்கும் உதவும்.
மூன்று திட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக ரூ.1,00,000 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும். தவிர, நாட்டின் நேரடி அந்நிய முதலீடு மற்றும் முழுமையான உள்ளூர் விநியோக சங்கிலி மேம்படுவதுடன் மின்னணு வாகனங்கள் மற்றும் பேட்டரி தேவை உருவாகும். இந்த திட்டம் எண்ணெய் இறக்குமதி கட்டணத்தை சுமார் ரூ. 2 லட்சம் கோடியாப குறைக்கவும், இறக்குமதி ரசீது பரிமாற்றமானது சுமார் ரூ. 1.5 லட்சம் கோடியாகவும் இருக்கும்.
பிரதமரின் தொலைநோக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்முனைவோர் ஆகிய இருவரையும் நாட்டிற்கு பயனளிக்கும் கூட்டுப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டும் என்று நம்புகிறேன்.
‘Driving into the future’.என்ற தலைப்பிலான கட்டுரை 2021, டிசம்பர் 1ம் தேதியிட்ட அச்சு இதழில் முதலில் பிரசுரமானது. கட்டுரையின் எழுத்தாளர் மத்திய கனரக தொழிலகங்கள் துறை அமைச்சராவார்.
தமிழில் ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil