Advertisment

நிஜமும் நிழலும்

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு என்று பெருமை பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மொத்த பொருளாதார உற்பத்தி தலைகீழாக சரிந்தாலும் அதில் ஏற்றமும் உண்டு. மொத்த பொருளாதார உற்பத்தி இன்னும் வேகமாக சரிந்திருந்தால அதாவது மேலும் வீழ்ந்திருந்தால் நாம் மேலும் அதிக வளர்ச்சியை கண்டிருக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indias fast growing economy

 P Chidambaram

Advertisment

Indias fast growing economy : இந்தியாவின் பொருளாதாரம் (-)7.3 சதவிகிதம் மற்றும் (+)9.2 சதவிகிதம் என்று  இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. சீனா +2.3 சதவீதம் மற்றும் +8.5 சதவீதம்  என்று  பொருளாதார  ரீதியாக வளர்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.  

விரைவில் தேர்தல் வரும் நிலையில்  பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்கள், உத்தரபிரதேசம்  கோவா மற்றும் மணிப்பூர்  மாநிலங்கள் பொருளாதார ரீதியாக  வளர்ந்துள்ளதாக  ஒரு கருத்து பரப்பப் படுகிறது.  ஆனால் இது கடந்த ஜனவரி 7-8  நாட்களிலேயே முடிவுக்கும் வந்தது.

 2021-22 தேசிய வருமானத்தின் மதிப்பீடுகள்  கடந்த ஜனவரி 7 அன்று வெளியிடப்பட்டன.  இது  9.2 சதவீதமாக  சுட்டிக்  காட்டப் பட்டது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த வருடத்திய  -7.3 சதவீதம் என்ற கணக்கீட்டை தாண்டி 9.2 சதவீதம் வளர்ந்திருப்பதாக  சொல்லப் பட்டது. அரசின் செய்தி தொடர்பாளர்கள்  2020-21 இல் சரிவைத் துடைத்து வளர்ச்சியை பதிவு செய்வதாக சொல்வது உண்மையிலேயே நடந்து விட்டால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைவேன். இதில் உலக வங்கியின் மதிப்பீடு 8.3 சதவீதமாக இருக்கிறது. 

கொண்டாட்டங்கள்  முன்பே கொண்டாடப் படுவது அழகல்ல. 2019-20ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி  ரூ145,69,268 கோடி. 2020-21 ஆம் ஆண்டில், கோவிட் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.135,12,740 கோடியாக குறைந்தது. இந்த சரிவை நாம் சமன் செய்தாலும் மீண்டும் அதே இடத்துக்கே நாம் திரும்பியுள்ளோம்.  பொருளாதார நிபுணர்களின் கருத்து படி இந்த வளர்ச்சி  2021-22ல் வரலாம். ஆனால்  கோவிட்-19 மீண்டும்  உருமாறி எழுச்சி பெற்ற பிறகு இது நடக்குமா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.  

பொருளாதார  புள்ளி  விபரங்களின் படி பார்த்தால்  மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.145,69,268 கோடியை  தாண்டியுள்ளது. இது  ரூ.1,84,267 கோடியில் 1.26 சதவீத வித்தியாசம்.  அதாவது, புள்ளியியல் ரீதியாக இது  ஒரு சிறிய தொகை. ஒரு திட்டத்தில்  ஏதேனும் தவறு நடந்தால் திட்டமிடப்பட்ட அதிகப்படியான  பொருண்மைகள் மறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, தனியார் நுகர்வு சிறிதளவு குறைந்தாலோ அல்லது ஒரு சில சந்தைகளுக்கான ஏற்றுமதி தடைப்பட்டாலோ அல்லது முதலீடு சிறிது தாமதமானாலோ அதிகப்படியான ஆற்றல்   மறைந்துவிடும். 2021-22 ஆம் ஆண்டில், நிலையான விலையில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ. 145,69,268 கோடிக்கு சமமாக இருக்கும். அந்த எண்ணிக்கையை அடைவது இந்தியாவின் பொருளாதாரத்தின் உற்பத்தியின் அளவு  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-20 இல் இருந்ததைப் போலவே இருக்கும். இந்த அளவுக்கு பொருளாதாரம் சரிவடைய காரணம் தொற்றுநோய் மற்றும் திறனற்ற நிர்வாகமே.  

publive-image

உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற  கணிப்புக்குரிய பெருமை இந்தியாவுக்கு இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி செங்குத்தாக சரிந்ததால் வளர்ச்சி  கவர்ச்சியாக  தெரியலாம்.  மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அதிகமாக  சரிந்திருந்தால் அடுத்த கட்ட பொருளாதார ஏற்றம் இன்னும் அதிகமாக தெரியலாம்.  இந்தியாவின் பொருளாதாரம் (-)7.3 சதவீதம் மற்றும் (+)9.2 சதவீதத்தை பதிவு செய்யும் இரண்டு ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை  பார்த்தால்  சீனா +2.3 சதவீதம் மற்றும் +8.5 சதவீத விகிதங்களை பதிவு செய்துள்ளதை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. இதை வைத்தே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம்.  நாம் வீண் ஜம்பங்களில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.  

மேலும் ஏழையாகும்  இந்தியன்

2020-21ல்  ஒரு  இந்தியன் ஏழையாக இருந்ததை  2019-20 உடன் ஒப்பிடும்போது, 2021-22ல் மேலும் ஏழையாக இருப்பான் என்பதை  NSO குறியீடுகள் காட்டுகின்றன. மேலும் இந்தியர்கள்  2019-20 இல் செலவழித்ததை விட  அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைவாகச் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப் படுவார்கள்.

அடுத்த  மூன்று ஆண்டுகளில்  தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் நுகர்வு செலவு:

அடுத்த  மூன்று ஆண்டுகளில்  தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் நுகர்வு செலவுகளை கணக்கில் கொண்டால் கவலைப்படாமல் இருக்க இயலாது. அரசாங்க செலவினங்களை  அதிகமாக இருந்தாலும்  அரசாங்கத்தின்  இறுதி மூலதனச் செலவு (GFCE) முந்தைய ஆண்டை விட 2020-21 இல் ரூ.45,003 கோடி மட்டுமே அதிகமாக இருந்தது. அதேபோல, கடந்த ஆண்டை விட 2021-22ல் ரூ.1,20,562 கோடி மட்டுமே அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில் முதலீடுகளிலும் ஒரு தேக்கநிலை மற்றும் தள்ளாட்டம் நிலவுகிறது.  2021-22ல் மொத்த நிலையான மூலதனம் 2019-20ல் எட்டப்பட்ட அளவை விட சற்று (ரூ. 1,21,266 கோடி) அதிகரிக்கலாம்.  இது  கோவிட்  போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு  கண்டிப்பாக பொருத்தமாக இருக்காது.  

உண்மையான சோதனை

இதெல்லாம் ஒரு புறமிருக்க மக்களிடம்  எரிவாயு, டீசல் மற்றும் பொருட்களுக்கான விலை பற்றியே அதிக பேச்சு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பெட்ரோல். வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கவலையும்  மக்களிடம்  உள்ளது.

இந்திய பொருளாதாரத்தை கவனிக்கும்  அமைப்பான CMIE  நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.51 சதவீதம்  ஆகவும்  கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.74 சதவீதம் ஆகவும் இருப்பதாக கணக்கிட்டுள்ளது. இது தான் யதார்த்தமாக இருக்கிறது. வேலை வாய்ப்பை தர வேண்டியவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வாழ்வது தான் கொடுமை.  வேலையின்மை,  பருப்பு, பால், சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு  குழந்தைகளின் கல்வி  போன்றவை கவலையளிக்கும் அம்சங்களாக உள்ளன.

 இந்தியாவின்  நகர பகுதிகளில்  கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்த விதமான கற்பித்தலையும் பெறவில்லை. கல்வியை விட பாதுகாப்பு பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது.   தவறான சிந்தனைகள், வெறுப்பான வினைகள், டிஜிட்டல் யுக முறைகேடுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியே அனைவரின் கவனமும் உள்ளது.

மக்களின் உண்மையான கவலை குறித்து  ஆட்சி செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.  அவர்கள் தேர்தல் வெற்றி பற்றியே நிலைக்கின்றனர். பணிகளை முடிக்காமலேயே ஒரு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். எந்த வசதியும் இல்லாத மருத்துவ மனைகளை திறக்கின்றனர். எண்பது  சதவீத மக்கள் இருபது சதவீத மக்களுக்காக போராடுவார்கள் என்று முழக்கமிடுகின்றனர். இவை அனைத்தும்  இந்தியா வேகமாக வளர்ந்து வருவது நிழலா நிஜமா என்கிற பிரமையையே ஏற்படுத்துகின்றன. 

தமிழாக்கம் த . வளவன்   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India P Chidambaram Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment