Advertisment

இடஒதுக்கீட்டுக் கொள்கைகள்; சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டுமா?

India’s reservation policies need to be examined: வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களும் சுரண்டப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது உயர் சாதியினருடன் இணையாக அல்லது சமமாக கருத்தப்பட வேண்டுமா என்பதே ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் எழுப்பியுள்ள விவகாரத்தின் முக்கிய அம்சம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rss, reservation, rss on servation, mohan bhagwat,இடஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ், rss on reservation system, quota, caste discrimination, sc st quota, obc quota, caste reservation

rss, reservation, rss on servation, mohan bhagwat,இடஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ், rss on reservation system, quota, caste discrimination, sc st quota, obc quota, caste reservation

ஃபைஜன் முஸ்தபா, எழுத்தாளர், துணைவேந்தர்,

Advertisment

நல்சர் சட்டப் பல்கலைக்கழகழம், ஐதராபாத்,

“சமத்துவமின்மையின் மோசமான வடிவம் சமத்துவமற்ற விஷயங்களை சமமாக்க முயற்சிப்பதாகும்” என்று அரிஸ்டாட்டில் கூறினார். இந்தியாவில் எல்லாவகையான ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அதில் வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களும் சுரண்டப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது உயர் சாதியினருடன் இணையாக அல்லது சமமாக கருத்தப்பட வேண்டுமா என்பதே ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் எழுப்பியுள்ள விவகாரத்தின் முக்கிய அம்சம். அவர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, எதிர்க்கட்சி அவரை தேவையில்லாமல் குறிவைக்கிறது. இட ஒதுக்கீடுகள் மூலம் சமூக நீதிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் தகுதியை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்களுக்கும் இடையில் ஒரு இணக்கமான சூழ்நிலையில் இடஒதுக்கீடு குறித்த விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக, ‘தகுதி’ மற்றும் ‘செயல்திறன்’ ஆகியவற்றுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாது. இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸ்-க்கு தெளிவு இல்லை. அதனால்தான், அது பல குரல்களில் பேசுவதோடு மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் பகவத் கூட அவருடனேயே முரண்படுகிறார்.

காங்கிரஸ் உடனடியாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவை தலித் எதிர்ப்பாளர்கள் என்று கூறியுள்ளது. அது இன்னும் மறுக்கப்படுவதாக தெரிகிறது. 2019 பொதுத் தேர்தலில் சாதியை பொருத்தமற்றதாக்குவது மட்டுமல்லாமல், தலித் வாக்கு வங்கி என்று அழைக்கப்படுவதற்குள் கணிசமான அளவு ஊடுருவுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் குறிப்பிடத்தக்க வெற்றியை அது கவனிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.சி, எஸ்.டி) இட ஒதுக்கீடு ஆரம்பத்தில் வெறும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டது. ஆகையால், 10 ஆண்டுகளுக்கு மட்டுமே அது செய்யப்பட்டது. எனவே, 370 வது பிரிவு போல இல்லாமல், அது எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை. இந்த இட ஒதுக்கீடு உண்மையில் தற்காலிகமானது. வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, இடஒதுக்கீட்டிற்கு அடிப்படை உரிமை இல்லாததால் அது பலவீனமான நிலையில் உள்ளது. பிரிவு 15 மற்றும் 16 ஆகியவை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி-க்கு ஆதரவாக இடஒதுக்கீடு செய்ய முடிவு செய்தால், அது சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக கருதப்படாது என்று விதிகளை செயல்படுத்துகின்றன. அதுவே கைவிடப்படுகிறது. ஆகையால், எந்தவொரு அரசாங்கமும் எப்போது வேண்டுமானாலும் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சுதந்திரம் இருக்கிறது. பிரிவு 370-ஐ திருத்தியதோடு அதன் ஆட்சியாளர்களுக்கு அளித்துவந்த நிதியையும் ஒழித்திருக்கிறது. அரசியலமைப்பிற்கு முந்தைய புனிதமான உடன்படிக்கைகள், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான பூனா ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களுக்கும் இனி எந்த புனிதமும் இல்லை.

இடஒதுக்கீடு குறித்த விவாதத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோரிக்கை விடுப்பது இது முதல் முறை அல்ல. செப்டம்பர் 2016-இல் நம்முடைய இடஒதுக்கீடு கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவர் இதேபோன்ற அழைப்பைக் விடுத்தார். மேலும், இந்த வேலையை மேற்கொள்ள ஒரு அரசியல் சார்பற்ற குழுவை அமைக்க பரிந்துரைத்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “முழு தேசத்தின் நலனுக்காக உண்மையிலேயே அக்கறை கொண்ட மக்கள் குழுவை அமைப்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சமூக சமத்துவத்திற்காக, சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு , எந்த வகையிலான இடஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும்.” என்று கூறினார். இடஒதுக்கீடு ஒழிக்கப்படுவதை பகவத் ஆதரிக்கவில்லை என்றாலும், பாஜக அவர் கூறியதை விரைவில் மறுத்தது. டிசம்பர் 2016-க்குள்ளாக, பகவத் அப்படியே மாற்றிப் பேசினார். அவர் அடுத்த சுற்று சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக இடஒதுக்கிட்டை ஒப்புக் கொண்டார், மேலும் அவர், “சமுதாயத்தில் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை” என்று கூறினார். இதனிடையே, ஆர்.எஸ்.எஸ்ஸின் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் மன்மோகன் வைத்யா ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் வாதிட்டார். அவர் “இது சமத்துவக் கொள்கைக்கு எதிரானது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆனால், அது இடஒதுக்கீடாக அல்ல.” என்று கூறினார். அது மற்றொரு மோசமான விளைவை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ் இணை செயலாளர், “பின்தங்கியவர்கள் இடஒதுக்கீடுக்கு தகுதியானவர்கள்.” என்று தெளிவுபடுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ்.-சும் பாஜகவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள் என்பதால், மகாராஷ்டிராவில் பாஜக அரசு சமீபத்தில் மராட்டியர்களுக்கு இடஒதுக்கீட்டை அளித்தது ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினம். இருப்பினும், மண்டல் கமிஷன் அவர்களை முன்னேறிய சாதி என்று அடையாளம் கண்டுள்ளது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர்களாக கருதுவதற்கு இரண்டு முறை மறுத்துள்ளது. இந்த செயல்பாட்டில், பாஜக அரசு இடஒதுக்கீடு குறித்த 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பைக் கூட மீறியது. இதேபோல், பாஜக அரசுகள் ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் மற்றும் குஜராத்தில் பட்டிதார்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்தன. இந்த இட ஒதுக்கீடு குறித்து புதிய மற்றும் அரசியல் ஆதிக்க குழுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், மோடி அரசாங்கம் கூட பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களின் ஒரு புதிய வகையை உருவாக்கி, அவர்களுக்கு தற்போதுள்ள ஒதுக்கீட்டிற்கு மேல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. ஜர்னைல் சிங் (2018) வழக்கில் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக மோடி அரசு உச்ச நீதிமன்றத்திலும் வாதிட்டது. பாஜகவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. உண்மையில், அது புதிய குழுக்களுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்க விரும்புகிறது.

உண்மையில் பகவத்தின் வாதத்தில் சில தகுதிகள் உள்ளன. நம்முடைய இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய சில சிக்கல்களை நாம் ஆராய வேண்டும்: கீழே உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு ஏணியில் நன்மைகள் எவ்வளவு தூரம் உள்ளன? எஸ்.சி, எஸ்.டி-க்களுக்குள் ஒரு முன்னேறிய பிரிவு இடஒதுக்கீட்டின் அனைத்து நன்மைகளையும் ஏகபோகமாக்கியுள்ளதா? கிரிமி லேயர் முறையை எஸ்.சி, எஸ்.டி-களுக்கும் நீட்டிக்க வேண்டுமா? இடஒதுக்கீட்டின் நன்மைகள் கல்வியில் சேர்க்கை அல்லது வேலைவாய்ப்புகளில் மட்டும் இருக்க வேண்டுமா? பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு திரும்ப பெற வேண்டுமா? பிற்படுத்தப்பட்ட நிலையை எவ்வாறு வரையறுப்பது? சமூக பின்தங்கிய நிலையை பொருளாதார பின்தங்கிய நிலைக்கு மாற்ற வேண்டுமா? மண்டல் கமிஷனால் அடையாளம் காணப்பட்ட சமூக மற்றும் கல்வியில் பிந்தங்கியதற்கான 11 அளவீடுகள் இந்திரா சாவ்னி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அங்கீகாரம் அளித்தது காலாவதியாகிவிட்டதா? அதில் திருத்தம் தேவையா? இட ஒதுக்கீடு தனியார் துறைக்கு நீட்டிக்கப்பட வேண்டுமா? இதேபோல், சில மாநிலங்களில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி எண்ணிக்கை 75 சதவீதத்திற்கு மேல் இருந்தால், இட ஒதுக்கீட்டின் 50 சதவீத உச்ச வரம்பை நாம் இன்னும் வலியுறுத்த வேண்டுமா? பூர்த்தி செய்யப்படாத பதவிகள் அடுத்த ஆண்டுகளுக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிற ‘முன்னோக்கி கொண்டு செல்லுதல்’ விதிக்கு விமர்சனப் பூர்வமான பரிசோதனை தேவை. இதேபோல், ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர்களின் உயர் அதிகாரியாக மாறும்போது, இடஒதுக்கீடு பிரிவில் இல்லாத அதிகாரிகள் விரக்தியடைவதால், மூப்புத்தன்மை குறித்த ‘பணி மூப்பு பதவி உயர்வு’ விதி தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும்.

Mohan Bhagwat Bjp Rss India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment