Coomi Kapoor
Inside Track: Savarkar No RSS Fan : இந்துத்துவாவை அதிகம் பின்பற்றும் மக்களால், இந்துத்துவ சித்தாந்தங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விநாயக தர்மோதர் சாவர்க்கர். ஆனால் இம்மக்கள் ஒன்றை மறந்துவிட்டனர். அது அவருடைய சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பழைமைவாதங்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பழமைவாதங்களை அடிப்படையாக கொண்டு இன்று கட்டமைக்கப்படும் அரசியல் நகர்வுகளுக்கும், பார்வைகளுக்கும் என்றுமே எதிரானவராகவே இருந்துள்ளார் சாவர்க்கர்.
வைபவ் புராந்தரே சமீபத்தில் சாவர்க்கர் குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய இந்துத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட இந்துத்துவ தலைவராக இருந்திருக்கிறார் சாவர்க்கர் என்பது வெளிப்படையாகிறது. அந்த புத்தகத்தில், “சாவர்க்கர் பசு வழிபாட்டினை வேண்டாம் என்று கூறியவர் என்றும், பூஜைகள் மற்றும் பண்டிகைகளுக்கு பணம் வாங்குவதை விட்டுவிட்டு ஏழைகளுக்கு இந்துத்துவாவினர் அதிகம் கொடுக்க வேண்டும்” என்றும் கூறியதாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் “மக்கள் எதை உண்ண விரும்புகிறார்களோ அதை உண்ணட்டும். அவர்களால் எந்த பண்டங்களை விலை கொடுத்து வாங்க இயலுமோ அதை வாங்கி உண்ணட்டும்” என்றும் அவர் கூறியதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
Inside Track: Savarkar No RSS Fan : கோல்வாக்கரின் சித்தாந்தங்களுடன் ஒன்று சேராத சாவர்க்கர்
1950-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, "சைவ உணவு உண்பவர்கள் மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளையும் உண்ண வேண்டும்" என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வாக்கருடனான சாவர்க்கரின் உறவு அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. மிக ஆரம்பக் கட்டத்திலேயே இந்தியாவின் உயர்ந்த ஆன்மீக மரபு அதன் பழைமைகளில் தான் இருக்கிறதே ஒழிய புறத்தோற்றங்களில் இல்லை என்பதை சாவர்க்கர் உணர்ந்து கொண்டார். அதனால் தான் கோல்வாக்கரின் சந்நியாசி தாடியையும் கூட அவர் பெரிதும் ஆதரிக்கவில்லை. கோல்வாக்கர் தன் சகோதரன் பாபுராவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, பிற்கு அவை தன்னுடைய சொந்த கருத்துகள் என்றும் கூறியதாக நினைத்துக் கொண்டிருந்தார் சாவர்க்கர். "ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ்-இல் இளைஞர்கள் சேர்கின்றார்கள். அதைத் தவிர்த்தும் சொந்த வாழ்வில் சில மகத்தான காரியங்களை அவர்கள் செய்ய வேண்டும்" என சாவர்க்கர் ஒரு முறை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.