சல்மா
குரானில் ஜீவனாம்சம் தரலாம் என்று இருப்பதை பிளேவியா ஆக்னஸ் என்கிற செயற்பாட்டாளரின் மேற்கோள்களை காட்டி பொது வெளியில் வாதிடும் இஸ்லாமிய அமைப்பினர் எதன் அடிப்படையில் இந்த அநீதிகளுக்கு எதிராக பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு எழுகிர முக்கியமான கேள்வி.
குரானுக்கு மாற்றாக நடைமுறையில் இருக்கும் விஷங்கள் இரண்டு விதமான பாதிப்புக்களை முன்னெடுக்கிரது.
ஒன்று இன்றைக்கு இந்திய அளவில் இஸ்லாமிய மணவிலக்கு குறித்த மோசமான ஒரு பிம்ம்பத்தை கட்டமிக்கப்பட்டு இருப்பதற்கும், தமது சமூகத்து பெண்களே கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
இந்த இரண்டு விஷயங்களையும் யார் சரி செய்திருக்க வேண்டும். யாருக்கு அந்த பொறுப்புகள் உண்டு?
மதத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கியதில் அந்த அமைப்புகளுக்கு பங்கே இல்லையா?
தங்களை அதிகாரமிக்கவர்களாக முன்னிறுத்தி பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியபடி இருக்கிற ‘யாரிடமிருந்தும்’ தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிற ந்லையில்தான் அந்த பெண்கள் அமைப்பு பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக நீதிமன்றத்தை அணுகின குடும்பமும், சமூகமும் கைவிட்ட பிறகு நிராதரவான அவர்கள் செல்ல விரும்புவது நீதிக்கான ஒரு இடம். அது நீதிமன்றமாகத்தானே இருக்க முடியும்?
இன்றைக்கு இந்த முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் வேறு ஒருவரும் தலையிட கூடாது என்று கதறுவதும் தலையிடும் உரிமை பெற்ற அவ்வமைப்பு இத்தனை ஆண்டு காலமும் என்ன செய்து கொண்டு இருந்தது. இந்த கேள்விக்கான ஒரு பதிலைத் தான் தேட வேண்டுமே தவிர வேறு எதுவும் இல்லை.
இஸ்லாம் இஜ்திகாஜ் என்றொரு வழிமுறையைஇ தன்னிடத்தில் வைத்திருக்கிறது. அதன் பொருள் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப நடைமுறையில் மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்கி கொள்வதை அது அனுமதிக்கிறது. அதனை தான் இன்று இந்த அமைப்புகள் செய்ய வேண்டியதிருக்கிறது. இலங்கை மற்றும் அராபிய நாடுகள் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவி, இந்த மாதிரியான பிரச்னைகளை கண்காணிக்கவும், சரி செய்யவும் முயல்கின்றன. அப்படி ஒரு அமைப்பாவது இங்கு உருவாக்க இயலாதது யாருடைய தவறு?
தாங்களும் செய்ய மாட்டோம் அரசும் தலையிடக் கூடாது என்று சொல்வதை கேட்பதற்கு தயாராக நமது சமூகத்துப் பெண்கள் இல்லை என்ற உண்மையை முதலில் ஜீரணிக்க வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய உங்களால் இயலாது எனில் அது கைகளை மீறிப் போவதையும், தடுக்க இயலாது. நீதிமன்றங்கள் தங்களது உரிமைகளை உறுதி செய்வதை யாரும் தடுக்க இயலாது எனில் அது கைகளை மீறிப் போவதையும் தடுக்க்க இயலாது. நீதிமன்றங்கள் தங்களது உரிமைகளை உறுதி செய்வதை யாரும்ம் தடுக்க இயலாது என்று பெண்கள் நம்புகிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்ட இந்த முத்தலாக் நடைமுரை இங்குள்ள பல ஆயிரம் பெண்களது வாழ்வை சீரழிக்க முடியும் என்றால் அதை தடுப்பதற்கோ, சீர் செய்வதற்கோ முயல்வதை விட்டுவிட்டு இஸ்லாமியர்களது உணர்வுகளை தூண்டி விட்டு, அதில் பயனடைவதை யாராக இருந்தாலும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெண் சிசு கொலைக்கு எதிராக பேசிய ஒர் மதத்தில் முத்தலாக் பேரில் மாபெரும் அநீதி நடக்கும் என்றால், அதற்கான முழு பொறுப்பையும் இஸ்லாமிய அமைப்புகள்தான் ஏற்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு போராடும் பெண்களின் மீதோ ஜனநாயக அமைப்புகளின் மீதோ விழுந்து பிராண்டுவது நியாயமாகாது.
மதத்தை அரசியலாக்க மோடி மற்றும் பிஜேபியும், மதத்தின் வழியே தங்களுக்கான அதிகாரத்தை தக்க வைக்க இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போடுகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட பெண்களின் பேரால் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள். நீங்கள் நீதியை மறுக்கும் காரணத்தினால் அவர்கள் நீதி குறித்து பேச விரும்புகிறார்கள். வேடிக்கை...
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, அதிகமும் விலகி இருந்துவிட்டாயிற்று. சபானு வழக்கின் போதே விழித்து இருக்க வேண்டும். இப்போது பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க விரும்புவதாகவும், தலாக்க்கை ரத்து செய்யவோம் என சொல்வதற்கும், அவர்களது மத அடிப்படைவாதம் மட்டும் காரணமா என்ன?
(கட்டுரையாளர் சல்மா, சிறந்த கவிஞர். அரசியல்வாதி. திமுக உறுப்பினராக இருக்கும் இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி. சமூக நலவாரிய தலைவராக பணியாற்றியவர். மூன்று கவிதை தொகுப்புகளை வெளிடுட்டுள்ளார்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.