Pratiksha Baxi
Jamia JNU Violence Gargi College violence : பெண்களின் உரிமைகளை இந்த கூட்டத்தினர் பெரிதாக மதித்தாக தெரியவில்லை. கல்லூரியில் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம், இரக்கமற்ற பாலியல் வன்முறை அரகேறும் இடமாக மாறியது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியில் பிப்ரவரி 6ம் தேதி கலாச்சார திருவிழாவின்போது மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை தண்டனைகளிலிருந்து ஆண்கள் கூட்டம் தப்பித்ததை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இந்த வன்முறை குறித்த செய்திகள் வெகுஜன ஊடகங்களை வந்தடைவதற்கு நான்கு நாட்கள் ஆனது. நடுத்தர வயதுள்ள ஆண்கள், குடித்துவிட்டு கல்லூரியின் சுவர் ஏறிகுதித்து, நுழைவுச்சீட்டின்றி கல்லூரிக்குள் நுழைந்து, அத்துமீறலில் ஈடுபட்டு, ஆனால் தண்டனைகளில் இருந்து தப்பித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம், போலீஸ் மற்றும் காவலர்கள் ஆகிய அனைவரும் அவர்களின் கடமையில் இருந்து தவறிவிட்டார்கள்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
கைது நடந்தபோதும் கூட, குற்றம் நடைபெறுவதை தடுக்காமல் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பலவந்தமாய் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததற்கு கல்லூரி நிர்வாகத்தையோ அல்லது போலீசாரையோ பொறுப்பாக்கவில்லை. போராட்டக்காரர்கள் ஒரு மோசமான நெருக்கடியை ஏற்படுத்திவிட்டனர். இதுகுறித்து பொதுமக்களும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கலகக்காரர்கள் அங்கிருந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். சிசி கேமராக்கள் மற்றும் செல்போன் கேமராக்களின் முன்பாகவே எல்லா கொடுமைகளும் அரங்கேறியிருக்கிறது. வன்முறையாளர்கள் தங்கள் உடலே தங்களின் ஆயுதமாக கருதுகிறார்கள். மேலும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர்கள் இதிலிருந்து எளிதாக தப்பிவிட முடியும் என்று.
பெண்களின் உரிமைகளை இந்த கூட்டத்தினர் பெரிதாக மதித்தாக தெரியவில்லை. கல்லூரியில் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம், இரக்கமற்ற பாலியல் வன்முறை அரகேறும் இடமாக மாறியது. இது கலகக்காரர்களுக்கு வன்முறைக்கான புதிய வழியை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் 15ம் நாள் ஜாமியா மிலியா வளாகத்தில் போலீஸ் நுழைந்து, அங்குள்ள மாணவர்களை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தியது. நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது இரக்கமின்றி கண்ணீர் வாயுவை பாய்ச்சியது. பெண்கள் உடலில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்த மாணவிகளின் சாட்சியங்கள் நடுங்க வைக்கிறது. அந்த இரவில்தான் விசாகா தீர்ப்பு எழுதப்பட்டது.
துரோகிகளை சுடுங்கள் என்ற முழக்கம் கேட்டது. அப்போது துப்பாக்கிகள் ஜாமியா மாணவர்களை குறிவைத்தது. யாரும் பொறுப்பேற்கவில்லை. ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை. ஒருவரிடமும் விசாரனையும் நடைபெறவில்லை. அதற்கான ஆதாரங்கள் தேசிய தொலைக்காட்சிகளிலும், அதன் நேரலை பதிவுகளிலும், படங்களிலும், சாட்சிகளிலும், மருத்துவ சட்ட சான்றிதழ்களிலும், உண்மை கண்டறியும் குழுக்களின் ஆய்வறிக்கைகளிலும் இருந்தன. ஒரு ஜாமியா மாணவருக்கு கூட இழப்பீடு கிடைக்கவில்லை. நீதி கிடைப்பதற்கான செயல்கள் இன்னும் துவங்கவே இல்லை.
ஜாமியா வன்முறை முடிந்து 20 நாட்கள் கழித்து, தாக்குதல் நடத்தியவர்கள் வலுவான ஆயுதங்கள் மற்றும் குச்சி, கற்களுடன் ஜனவரி 5ம் தேதி மாலை ஜேஎன்யூ வாசலில் நின்றனர். அனைத்து தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் ஒரு மாதம் கழித்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாக அளவிலும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆசிரியர்கள் மீது கற்களை வீசினர். விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.
முஸ்லிம் மாணவர்களை குறிவைத்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களை கூட விட்டுவைக்கவில்லை. ஆசிரியர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேல் டிரோனை போலீசார் பறக்கவிட்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பல்கலைக்கழகம் தொடர்ந்து பாதுகாப்பற்றதாக உள்ளது. இன்னும் நிறைய அதிர்ச்சி சம்பவங்கள் அந்த வளாகத்தில் நடந்துள்ளது.
ஜேஎன்யூவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருந்தர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஜேஎன்யூ வன்முறையை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், போராளிகள், வக்கீல்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் அல்லது அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மாணவப்போராளிகள் காவலில் வைத்து தாக்கப்பட்டனர் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
போரட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாமியா மாணவர்கள் பிப்ரவரி 11ம் தேதி டெல்லி போலீசாரின் வன்முறை குறித்து குற்றம்சாட்டினர். சட்டத்தை கடைபிடிப்பவர்கள் பெண்கள் உடலின் மீது செலுத்திய வன்முறை குறித்து குற்றச்சாட்டுகள் உள்ளது. காவலில் பாலியல் வன்முறை மற்ற பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் மீது அதிகளவில் நிகழ்த்தப்பட்டது. இந்த அரசு தவறிழைத்தால் தண்டனை கிடைக்காது என்ற மனநிலையையும், அதை எதிர்க்கும் மாணவர்களையே அதற்கு தண்டிக்கலாம் என்ற கலாச்சாரத்தையே வளர்த்துள்ளது. சட்டம் மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவு அடிப்படையில் ஏன் மாறிவிட்டது?
கட்டுரையை எழுதியவர் ஜேஎன்யூ பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர்.
தமிழில்: R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.