காஷ்மீரின் கடந்த காலத்தில் இருந்து டெல்லி பாடம் படிக்கவே இல்லை

ஆகவே, ஜம்மு-காஷ்மீரின் வரலாறுகளை தெரிந்து கொள்வது இங்கே நமது கடமையாகிறது

அருண் பிரகாஷ்

கட்டுரை ஆசிரியர் முன்னாள் கடற்படை தளபதி ஆவார்

 

பிரிவு 370 இன் கீழ் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும் , ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கும்  மக்களிடம் ஒரு உற்சாகமான வரவேற்பைப் பெற்றுள்ளன என்றால் அது மிகையாகாது.

இந்த இரண்டு செயல்கள் பாஜக-வின்  நீண்ட நாள் கொண்டாடப்பட்ட கனவுகளை மெய்ப்பட வைத்தாலும் ,  இச்செயல்களின்  அடிப்படை சாராம்சத்தையும், தொலைநோக்கு பார்வையில்  சிந்திக்கா விட்டால் இது பயனற்றதாகவும் எதிர் வினையாகவும் மாறக்கூடும். ஆகவே, ஜம்மு-காஷ்மீரின் வரலாறுகளை தெரிந்து கொள்வது இங்கு நமது கடமையாகிறது

அக்டோபர் 26 ஆம் தேதி, பாகிஸ்தான் பழங்குடி படையெடுப்பை எதிர்கொண்ட மகாராஜா ஹரி சிங், ஜம்மு-காஷ்மீர் இணைப்பை கையெழுத்திட்டு, அம்மாநிலத்தை இந்தியாவின் கட்டுபாட்டுக்குள்  கொண்டு வந்து இன்றோடு  72 ஆண்டுகள் ஆகின்றன. அப்பாகிஸ்தான் பழங்குடியினர்   ஸ்ரீநகர் விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில், பரமுல்லாவில் கற்பழிப்பு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டதால், இந்திய இராணுவத்திற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற நேரம் கிடைத்தது.

நமது  இராணுவமும் விமானப்படையும்    படையெடுப்பை பின்னுக்குத் தள்ளுவதற்காக  தொடர்ந்து 14 மாதங்கள் கடுமையாக போராடின. என்ன இருந்தாலும்,இன்று  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்லப்படும் முசாபராபாத்-கோட்லி-மிர்பூர் பெல்ட்டை நம்மால் மீட்டேடுக்க முடியாமல் போனது நமது அடிப்படை இயலாமையையும் ,  சொந்தமான நல்ல முதிர்ச்சியான  போர் யுக்திகள் இல்லாமல் போனதே முக்கிய காரணம்.

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் வெற்றியாலும், இணைப்பு ஒப்பந்தத்தாலும் ஒரு”துண்டிக்கப்பட்ட” பாகிஸ்தானை ஒப்புக் கொண்டதால்  கடுமையாக ஏமாற்றமடைந்தார் அதன் தலைவர் முகமது அலி ஜின்னா.

அவரது “இரு தேசக் கோட்பாடு” இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் தருணத்தில் அர்த்தமில்லாமல் போனது , ஏனென்றால் புதிய “பாகிஸ்தானை” விட இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருந்தனர். மேலும், தேவராஜ்ய பாக்கிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரைப் போலல்லாமல், இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் முழு மற்றும் சம குடிமக்களாக இருந்து வருகின்றனர். பின் எப்படி பாகிஸ்தான் மதத்தின் பெயரால்  72 ஆண்டுகளாக காஷ்மீரை உரிமை கோர அனுமதித்தோம்.

1950 கள் மற்றும் 60 களில் பள்ளத்தாக்கின் சிறிய நகரங்களில் வளர்ந்த இந்த கட்டுரை ஆசிரியர்க்கு  காஷ்மீரைப் பற்றிய நினைவுகள் உள்ளன. முஸ்லீம், இந்து மற்றும் சீக்கிய மதங்களின் காஷ்மீரிகளிடையே நல்லிணக்கம் நிலவியிருந்தாலும் – அவர்கள் ஒருவருக்கொருவர் வீடுகளில் சாப்பிட்டு, ஒன்றாக பண்டிகைகளை கொண்டாடியிருந்தாலும்  – காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவிற்குள்  இல்லை என்பதில்  எல்லோரும் தெளிவாகவே இருந்தனர். இந்தியா மீதான சராசரி காஷ்மீரியின் அணுகுமுறை தெளிவற்றதாகவே இருந்தது. ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்திற்கு  இந்தியா பெரும் நிதி உதவிகள்  வழங்கியதை, காஷ்மீரிகள் பெருமளவில் ஏற்றுக்கொண்டனர்.  ஆனால் அதே மக்கள்  ஒவ்வொரு மாலையும் ரேடியோ மூலமாக பாக்கிஸ்தானுடன் இணைந்தனர். ரேடியோ மூலம்  காஷ்மீர் மக்களின்  மத உணர்வுகளை பாகிஸ்தான் ஒருபோதும் விளையாடத் தவறவில்லை.ரேடியோவில்  இந்திய இராணுவத்தின் “அட்டூழியங்கள்” என்று தலைப்பில் பேசியது மற்றும் பாரதிய “ஆக்கிரமிப்பு” என்ற கதையையும் கட்டமைக்க ஆரம்பித்தது.

ஜம்மு-காஷ்மீர் தனது சொந்தக் கொடியைப் பறக்க விட்டிருந்தது.  , “பிரதமர்” ஷேக் அப்துல்லா,மாநிலத்தின் ஷெர்-இ-காஷ்மீர் ஆகா இருந்தார்  . 1953 ஆம் ஆண்டில்,  காஷ்மீரின்  மன்னர் ஆக ஆசைப்பட்டு  அமெரிக்கர்களுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு  இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்.  ஜம்மு-காஷ்மீர் வன்முறையில் வெடித்தது. என் தந்தை, அப்போது பாரமுல்லாவின் மாஜிஸ்திரேட் ஆகா இருந்தார். அன்று அவர்  தலையில் இரத்தத்தோடு வீட்டிற்கு வந்தது  எனக்கு நினைவிருக்கிறது. இன்றைக்கும் நாம் பார்க்கும் காட்சிகளைப் போல், அப்போதும் அங்கு  கல் வீச்சு இருந்தது, கிளர்ச்சியாளர்கள் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவர். சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கிச் சூடு நடத்தும் , பலர் கொல்லப்படுவர்,முடிவில் காஷ்மீர் மையான அமைதிக்கி செல்லும் . எனவே ஜம்மு-காஷ்மீரில் 1953 முதல் இன்று வரை ஒரு சின்ன மாற்றம் கூட அங்கு இல்லை  என்பது தெளிவாகவே தெரிகிறது.

காஷ்மீருக்கு இந்தியா கண்மூடித்தனமாக கொட்டிய கோடிக்கணக்கான காசுகள் தான் பொது மக்களிடையே அதிருப்தி உருவாக  மிகப்பெரிய காரணமாய் இருந்தது.  ஏனெனில் இந்த நிதிகளில் 95 சதவீதம் வரை அரசியல்வாதிகள் மற்றும் இணக்கமான அதிகாரிகளின் பைகளில் தான் சென்றது. சராசரி காஷ்மீர் விவசாயி மோசமான வறுமையில்  தான் வாழ்ந்தார்கள். குளிர்காலம் வந்தால் பிழைப்பிற்காக  வட இந்தியாவை முழுவதும் காஷ்மீர் தொழிலாளர்கள் ஒரு அகதிகள் போல் வெளியேறுவார்கள். காஷ்மீரின் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் திறமையற்ற நிர்வாகிகள் இந்திய கைக்கூலிகளாகவும் சுரண்டல்காரர்களாகவும் அம்மக்கள்  கருதினர்.

வெறுமனே பணத்தை வீசுவதன் மூலமும், மாநிலத்தை ஆட்சி செய்ய தவறான கட்சிகளை ஆதரிப்பதன் மூலமும், புது தில்லி காஷ்மீரிகளை போசமாக அந்நியப்படுத்தியது. எனவே, காஷ்மீரை மக்களை வெல்வதற்கான ஒரு  தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ -க்கு தேவையான நிலத்தை நாம் உருவாக்கினோம்.  அங்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ காஷ்மீர் மக்களிடம் தேசத்துரோகத்தின் விதைகளை விதைத்தது.

இந்தியாவின் தவறான தன்மை இதோடு முடிவடையவில்லை. இந்த மனச்சோர்வின் அடையாளமாகத் தான்   நபிகள் நாயகத்தின் புனித நினைவுச்சின்னம் திருட்டு, ரூபையா சயீத்தை கடத்தல், ஹசரத்பால் ஆலயத்தை முடக்கம்  செய்தல், சரர்-இ-ஷெரீப் ஆலயத்தை கைப்பற்றி எரித்தல், காஷ்மீர் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றுதல், கார்கில் ஊடுருவல்கள் மற்றும் ஐசி -814 கடத்தல். இவையே , இன்றைய காஷ்மீரிகளின் வரலாற்று சம்பவங்களாய் உள்ளன.

இந்த வரலாற்று கதைகளை நாம்  மறுஆய்வு செய்யும் பொது தான், 1947 முதல் இன்று வரை இந்திய அரசு  எதையும் கற்றுக்கொள்ளத்  முன்வரவில்லை  என்பது அப்பட்டமாக நினைவூட்டுகிறது. காஷ்மீரீயை அவர் ஒரு இந்தியர் என்று பணத்தாலோ, ஜாக்பூட்டாலோ, தோட்டாக்களாலோ  நம்ப வைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புல்வாமா குண்டுவெடிப்பு பின்னியில் இருப்பது உண்மையில் ஒரு உள்ளூர்க்காரன் என்றால், காஷ்மீர் இளைஞர்களின் தீவிரமயமாக்கலையும் அவர்கள் இந்தியாவில் இருந்து அந்நியப்படுவதையும் தடுக்க ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரரில் தற்போதைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், உள் அமைதியின்மை மற்றும்  வெளிப்புற தலையீட்டால் அங்கு  வன்முறையை நாம் எதிர்பார்க்கலாம். இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதில் தான் நம்மக்கான எதிர்காலம் உள்ளது. அவர்களிடம் துப்பாக்கியை நீட்டப் போகிறோமா? அல்லது  நீடித்த எதிர்காலத்தை கொடுக்கப் போகிறோமா?  என்பதை தான் நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும்.

இந்த சிக்கலான காலங்களில், 19 வயதான காஷ்மீர் கதாநாயகன்  மக்பூல் ஷெர்வானியின் தியாகத்தை நினைவில் கொள்வோம். அக்டோபர் 1947 இல், பரமுல்லாவில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துவதில் ஷெர்வானி வெற்றி பெற்றார். அதனால் தான் ஸ்ரீநகரில் தரையிறங்கும் இந்திய துருப்புக்களுக்கு  கொஞ்சம் நேரம் கிடைத்து பாகிஸ்தான் பழங்குடியினரின் விரட்டி அடித்தனர். மக்பூல் ஷெர்வானியின்  சூழ்ச்சியைக் கண்டுபிடித்த பாகிஸ்தானியர்கள் ஷெர்வானியை ஒரு மர சிலுவையில் அறைந்து சுட்டுக் கொன்றனர்.  இந்திய இராணுவம் தனது நன்றியைத் தெரிவுக்கும் வகையில்  அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்தது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close