Advertisment

அம்பேத்கரின் தேசியவாதத்தை முகர்ஜியின் அரசியல் வாரிசுகள் ஏற்கவில்லை

Babasaheb Dr B.R.Ambedkar and Kashmir issues: அம்பேத்கர் வாதிட்ட தேசியவாதம் குறித்த அத்தகைய கருத்தும், அதிலிருந்து வரும் விளைவுகளும் சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் அவரது அரசியல் சந்ததியினருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

author-image
WebDesk
Sep 06, 2019 16:25 IST
New Update
jammu and kashmir special status, jammu and kashmir article 370, abrogating article 370, jammu and kashmir

jammu and kashmir special status, jammu and kashmir article 370, abrogating article 370, jammu and kashmir

வேலரியன் ரோட்ரிக்ஸ்

Advertisment

(கட்டுரையாளர், மங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யுவில் அரசியல் அறிவியல் கற்பித்தவர்)

அரசியலமைப்பின் 370வது பிரிவு திருத்தத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. பாஜகவின் பல தலைவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த பி.ஆர்.அம்பேத்கர் கூறியதாக ஒரு கதையை கட்டமைக்க முயற்சித்தார்கள். அவர்களில் சிலர், இந்த விவகாரத்தில் தனது கருத்துக்களையும் அக்கறைகளையும் பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் இணைத்துள்ளனர். முகர்ஜி ஜம்மு காஷ்மீரை பார்வையிட கட்டாய அனுமதிக்கு எதிராக ஒரு போராட்டத்தை வழிநடத்தியதோடு அம்மாநிலத்தை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கக் கோரினார்.

அம்பேத்கர் மற்றும் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக கூட்டாளிகளாக உருவெடுத்ததாக காட்டப்பட்டது. நேரு ஜம்மு காஷ்மீரின் தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பதன் மூலம், இந்தியாவின் தேசிய ஒருங்கிணைப்புக்கு சர்தார் படேலின் உறுதியான முயற்சிகளைக் குறைத்ததாகவும் காட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அம்பேத்கரின் நிலைப்பாட்டைப் பற்றி நாம் அறிந்தவற்றைக் கொண்டு இந்த கதையின் பரப்பு எந்தளவுக்கு நீட்டிக்கப்படுள்ளது?

அக்டோபர் 11, 1951 அன்று இடைக்கால நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரின் ராஜினாமா உரையில், காஷ்மீர் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. மாநிலம் மீதான நேரு அரசாங்கத்தின் கொள்கை குறித்து தனது கருத்து வேறுப்பாட்டை அவர் மேற்கோடிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு சரியான தீர்வு காஷ்மீரின் பிரிவினை என்று அவர் வாதிடுகிறார்.

‘இந்தியாவின் விஷயத்தில் நாங்கள் செய்ததைப் போல, இந்து மற்றும் பௌத்தர்களின் பகுதியை இந்தியாவுக்கும் முஸ்லிம்களின் பகுதியை பாக்கிஸ்தானுக்கும் கொடுங்கள். அல்லது நீங்கள் விரும்பினால், போர் நிறுத்த பகுதி, பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு லடாக் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரித்து பள்ளத்தாக்கில் மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அம்பேத்கர் அதற்கான பின்வரும் காரணங்களை மேற்கோளிட்டுள்ளார். முதலாவதாக, மாநிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் அது குறித்த பாக்கிஸ்தானின் போர்த்தன்மை மிக்க கூற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில், காஷ்மீரின் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக பாக்கிஸ்தானுக்கு இழுக்கப்படுவார்கள். மறுபுறம், பொது வாக்கெடுப்பு மூலம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், அதன் பிறகு, பாக்கிஸ்தானின் உரிமைகோரல் தீர்க்கமாக அகற்றப்படலாம். இரண்டாவதாக நேருவின் கொள்கையின் விளைவாக ஸ்ரீநகரில் மக்களை கவர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதுபோன்ற திட்டமிருந்தால், பாக்கிஸ்தானுடன் ஆயுதமேந்தி நிற்பது இந்தியாவின் பாதுகாப்புக்கொள்கையின் நிரந்தர அம்சமாக இருக்கும்.

மேலும், அது இந்தியாவில் மக்களின் நிலையை மேம்படுத்துவதற்கு சரியாக பயன்படுத்தபட வேண்டிய வளங்களை தின்றுவிடும். இந்தியாவின் பாதுகாப்புச் செலவு யூனியன் வருவாயில் பாதிக்கும் மேலானது என்று அவர் உணர்ந்தார். மூன்றாவதாக, ஜம்மு காஷ்மீர் கொள்கை வட்டங்களில் மூழ்கியிருக்கும் அதிகப்படியான கவனம் பல அவசர கவலைகளை புறக்கணிக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு பாக்கிஸ்தான் உருவாக்கத்தில் இருந்து பிரச்னை எழுந்திருக்கிறது. நான்காவதாக நேருவின் ஆட்சியின் வெளியுறவுக்கொள்கை காரணமாக சுதந்திர காலகட்டத்தில் உலக அரங்கில் இந்தியா அதன் சமூக மூலதனம் மற்றும் நற்பெயரை இழந்துள்ளது. இதில், ஜம்மு காஷ்மீர் முக்கியமாக உருவெடுத்துள்ளது.

அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த பிறகு உடனேயே 1951 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி கூட்டமைப்பு அறிக்கையில் பல வாதங்களை மீண்டும் கூறினார். இந்த சூழலில், ஷேக் முகமது அப்துல்லா தனது சுயசரிதையான தி பிளேசிங் சினாரில் இந்த வாதங்களை சிறிதும் கவனிக்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்திருந்தாலும், பழமைவாத இந்து அரசியல்வாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்த அம்பேத்கரின் நிலைப்பாட்டை கண்டனம் செய்தனர்.

அம்பேத்கரின் 370 வது பிரிவு விமர்சனம் அதனை நியாயப்படுத்துதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவர்களால் இயக்கப்படுகிறது. அக்டோபர் 17, 1949 அன்று அரசியலமைப்பு சபையில் அந்த ஷரத்தை (பின்னர் ஷரத்து 306 ஏ) கொண்டுவரும்போது, என்.கோபாலசாமி அய்யங்கார் இது சிறப்பு ஏற்பாடாக செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். ஏனெனில், இந்த குறிப்பிட்ட ஒருங்கிணைப்புக்கு அந்த குறிப்பிட்ட அரசு தயாராகவில்லை. மற்ற மாநிலங்களின் விஷயத்தில் நிகழ்ந்ததைப் போல ஜம்மு காஷ்மீர்கூட சரியான நேரத்தில் கனியும் என்பது இங்குள்ள அனைவரின் நம்பிக்கையாகும். அவர் மேலும் கூறுகையில், “இந்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு சில விஷயங்களில் தங்களை அர்ப்பணித்துள்ளது. அவர்கள் குடியரசுடன் தங்கியிருப்பார்களா அல்லது அதிலிருந்து வெளியேற விரும்புகிறார்களா என்பதைத் தீர்மானிக்க மாநில மக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலைக்கு அவர்கள் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர். அமைதியான மற்றும் இயல்பு நிலைமைகள் மீட்டெடுக்கப்படுவதாகவும் பொதுவாக்கெடுப்பின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதாகவும், மேலும், வழங்கப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களின் விருப்பத்தை அறிய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” அத்தகைய கொள்கை நடவடிக்கை ஒருபோதும் எடுக்கப்படவில்லை என்று அம்பேத்கர் நினைத்தார். மேலும், மாநில பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு வழிவகுத்தார். 1919 ஆம் ஆண்டில் சவுத்பரோ கமிட்டிக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து நியமனம் மூலம் பிரதிநிதித்துவத்தை அம்பேத்கர் தொடர்ந்து எதிர்த்தார். 1951 ஆம் ஆண்டில் அந்த ஷரத்து மாநில சுயாட்சியை பாதுகாக்கும் பெயரில் ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்ததாக அவர் உணர்ந்தார்.

காஷ்மீர் தொடர்பாக நேருவின் கொள்கைகள் மீது அம்பேத்கரின் தாக்குதல் கடுமையாக இருந்தபோதிலும், இந்து தேசியவாதம் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி குழுவைச் சேர்ந்தவர்களின் தேசிய ஒற்றுமை பற்றிய யோசனை மீது அது குறைந்ததாயில்லை. பாக்கிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை (1946) என்ற புத்தகத்தில், தேசியம் என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒருவகையான பிரக்ஞை உணர்வு என்றும் இந்த உணர்விற்கு ஒரு அரசியல் அமைப்பு இல்லாதது தேசியவாதத்தை வலுப்படுத்தக்கூடும், அதாவது அது தனி நாடு இருப்புக்கான ஒரு விருப்பமாக இருக்கிறது.

பொதுவான பிணைப்பை உருவாக்கி, பிளவுபடுத்துவதை சிதறடிப்பதன் மூலம் தேசியவாதம் தன்னைத்தானே செயல்படுத்துகிறது. தேசியவாத உணர்வை அடக்குவதற்கு படைகளைப் பயன்படுத்துவது எதிர்விளைவை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே பொதுவான விஷயங்கள் இருந்தபோதிலும், முந்தையவர்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதுவதற்கு அதிக அளவில் வந்துள்ளனர். அத்தகைய உணர்வைச் சரி செய்ய எந்தவிதமான பிரக்ஞையும் எதிர்வினை முயற்சியும் இல்லை. பிரிவினை தவிர்க்க முடியாதது என்றால், அது சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் மக்களை இடமாற்றம் செய்வதற்கும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகள் வைக்கப்பட வேண்டும்.

ஒரு தேசியம் அதன் வழியில் செல்ல விரும்பினால், ஒரு பொதுவான பிணைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் வீணானது. பிறகு அரசின் பாதுகாப்பும், அதன் குடிமக்கள்-சமூகத்தின் செழிப்பு ஒருவரை சிறிய தேர்வுடன் விட்டுவிடுகின்றன. ஆனால், அது வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் புதைகுழியில் சிக்குவதைவிட அது பகுதி வழிகளில் விடுகின்றன என்றும் அம்பேத்கர் வாதிட்டார். தேசியவாதம் குறித்த அத்தகைய கருத்தும், அதிலிருந்து வரும் விளைவுகளும் சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் அவரது அரசியல் சந்ததியினருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

Meta description: Babasaheb Dr B.R.Ambedkar and Kashmir issues: அம்பேத்கர் வாதிட்ட தேசியவாதம் குறித்த அத்தகைய கருத்தும், அதிலிருந்து வரும் விளைவுகளும் சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் அவரது அரசியல் சந்ததியினருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

 

#Jammu And Kashmir #Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment