ஜம்மு-காஷ்மீரில் ஒரு நிருபருக்கு தனது சகோதரியின் கருச்சிதைவு பற்றிய செய்தி எவ்வாறு கிடைத்தது

என்  உயிர் வாழ்கையைக் கேள்வி கேட்க போதும் இந்த ஒரு சொல். எல்லாக் கதைகளிலும் ஒரு வகையான விரக்தி, வேதனை மற்றும் உதவியற்ற தன்மை போன்றவைகளே நிலவுகின்றன.

Adil Akhzer

கட்டுரை ஆசிரியர் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஸ்ரீநகர் பணியகத்தின் மூத்த நிருபர் ஆவார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய மகப்பேறு மருத்துவமனையான லால் டெட் நான் பணிபுரியும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திலிருந்து ஆற்றின் குறுக்கே  தான் உள்ளது. இருப்பினும், சிதைந்துபோக வைக்கும் அந்த ஒரு செய்தியை  என்னிடம் போட்டுடைக்க  என் குடும்பத்தினருக்கு  கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது…..  இருப்பினும்,  அவர்களால் முடியவில்லை.

ஆகஸ்ட் 20, செவ்வாய்க்கிழமை எனது இளைய சகோதரி அய்மன் (26) லால் டெட் மகப்பேறு மருத்துவமனையில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிசேரியயனுக்கு  ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று திட்டமிட்டிருந்தானர். அந்த மருத்துவமனையில் இருந்து பத்து கி.மீ தொலைவில் இருக்கும் எங்களது வீடு மிகவும் பரபரப்பாகவும், எதிர்பார்ப்போடும் இருந்தது. என் தங்கையின் அறை முழுவதும் வரவிருக்கும் குழந்தைக்கான உடைகள், டயப்பர்கள் மற்றும் பால் பவுடர்களால் நிரப்பப்பட்டிருந்தது.

ஆனால், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், நான் இரவு வேலைய முடித்த பின் எனது சகோதிரியைப் பார்க்க நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தேன்.

ஆகஸ்ட் 22, வியாழன்கிழமை அன்று, வழக்கம் போல் இரவு 10 மணிக்கு மேல் எனது சகோதிரியை சென்று பார்த்தேன். அப்பொழுது, மருத்துவமனையில் எனது சகோதிரி சில மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால். பின்பு, மருத்துவர்கள் என்னிடம் வந்து ” அய்மன் நல்ல முறையில் இருக்கிறாள், ஆனால், குழந்தையின் இருதய துடிப்பில் சில சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும், இது சமாளிக்கப் பட வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் , பயப்படவேண்டம்” என்று வாக்குறிதி அளித்தார். அந்த இரவில் எனது குடும்பம் அதிர்ந்தாலும், நல்லதே நடக்கும் என்ற தைரியத்தில் அன்றைய இரவை விடுவித்தோம்.

ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை – காஷ்மீரில் கடுமையான ஊரடங்கு உத்தரவு திரும்பியது. பொதுமக்களின் நடமாட்டம் முற்றிலும் தடைசெய்யப்பட்டு சாலைகள் கான்செர்டினா கம்பி மற்றும் உலோகத் தடுப்புகளால் நிரப்பப்பட்டன. நான், வழக்கம் போல், என் கதைகளுக்காக வெளியே சென்றேன்.

பின், இரவு 10.30 மணியளவில், என் கதைகளைத் தாக்கல் செய்தபின், என் சகோதரியை வழக்கமாக பார்க்கச் சென்றேன்.  மருத்துவமனைக்குள் அறைக்குள் நுழைந்தபோது, எல்லாம் சரியாக இல்லை என்பதை உணர்த்துவது போலவே அந்த மருத்துவமனை அறை இருந்தது. அறையின் மூலையில்,  சிமென்ட் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த எனது தந்தையை, இருதய நோயாளியான என் சகோதரியின் மாமியார் ஆறுதல்படுத்த முயன்றுக் கொண்டிருந்தார்.

“என்ன நடந்தது?” நான் அவர்களிடம் கேட்டேன். எனது குரலைக் கேட்டதும் எனது தந்தையின் மௌனம் உடைந்தது. “குழந்தைக்கு ஏதோ தவறு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்,” என்று அவர் கதறினார்.

என்னை அறியாமல்,  சட்டைப் பையில் இருக்கும் எனது செல்போனை எடுத்து டயல் செய்ய தயாரானேன்,  குழந்தை இறந்து விட்டது என்பதை இன்னும் தெரியாமல் பிறகு, வேகமாய்  ரெசிடென்ட் மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ) அலுவலகத்திற்கு விரைந்து, குழந்தைக்கு என்ன நேர்ந்தது?  என்று அவர்களிடம்  கேட்டேன். அவர் “மன்னிக்கவும்” என்று சொல்லி தனது  தலையை அசைத்தார்கள். என்  உயிர் வாழ்கையைக் கேள்வி கேட்க போதும் இந்த ஒரு சொல்.

சகோதரி அய்மன் மாடியில் இருந்தார். நேரே சென்று பார்க்க தைரியம் இல்லை. அங்கிரிந்த எனது இளைய சகோதரனிடம் நடந்ததைக் கேட்டேன். “அப்பா(என்னை பையா என்று கூப்பிடமாட்டான்), பிற்பகல் 2.30 மணியளவில், குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை, என்று மருத்துவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். குழந்தை உயிரோடு இல்லை என்பதையே இது உணர்த்துவதாய் இருப்பதாகவும் சொன்னார்கள்.  குழந்தை இறந்த அந்த நிமிடங்களைப் பற்றியும், என்னைத் தொடர்பு கொள்ளமுடியாததைப் பற்றியும் சொல்லும் போது என் மனம் வாழ்க்கையின் அடிப்படை இயல்பை இழந்தது என்றே சொல்ல வேண்டும்.

செல்போன்கள் வேலை செய்யாததால், என் சகோதரி குழந்தையின் இதயத் துடிப்பு பலவீனமானதை மூத்த மருத்துவரிடம் சரியான நேரத்தில் தெரிவிக்க முடியவில்லை. அவர்களை அழைத்து வர மருத்துவமனை ஒரு வாகனத்தை அனுப்பியது என்றாலும், அவர்கள் வர மாலை பொழுதானதால், குழந்தை எப்போதோ இறந்து விட்டது என்பதைத் தவிர வந்த அதிகாரியால்  வேறெதுவும் சொல்ல இயலவில்லை .

என் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு ஒரு தொலைபேசி வேலை செய்திருந்தால் தன் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்ற நினைவு அவர்களை இனி வாழவிடுவதாய் இல்லை.

ஆகஸ்ட் 24, சனிக்கிழமையன்று, கலக்கமடைந்த மருத்துவர்கள் பிரசவ வலியைத் தூண்டுவதற்காக என் சகோதரிக்கு மருந்து வழங்கினர். அது வேலை செய்தது. உயிரற்ற பொருளாய் என் சகோதிரியின் குழந்தை இவ்வுலகிற்கு வந்தது.

இந்த மருத்துவமனையில் இது எங்களுக்கான கதை மட்டுமல்ல. ஒவ்வொரு நோயாளிக்கும்  ஒவ்வொரு கதை உண்டு. பணம் இல்லாமல் போய்விட்ட ஒருவர் புல்வாமாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களை அடைய தீவிரமாக முயற்சித்து வந்திருக்கிறார்.  பாண்டிபூரைச் சேர்ந்த ஒரு அட்டெண்டர், இங்குள்ள  குழந்தையின் உடல்நிலை குறித்து  ஆம்புலன்ஸ் டிரைவர் மூலம் அந்த  குடும்பத்தினருக்கு செய்தியை அனுப்பி இருந்திருக்கிறார்.மருத்துவமனையில் தங்கியிருந்த எனது தாபீஷ், இதுபோன்ற  பல கதைகளை என்னிடம் சொன்னான். எல்லாக் கதைகளிலும் ஒரு வகையான விரக்தி, வேதனை மற்றும் உதவியற்ற தன்மை போன்றவைகளே நிலவுகின்றன.

எங்கள் குழந்தையின் உயிரற்ற உடலை என் மடியில் எடுத்துக்கொண்டு, நாங்கள் வாகனத்தில் ஏறி ஹம்ஹாமாவுக்குச் சென்றோம். என் மைத்துனரின் பெற்றோர் மற்றும் என் பெற்றோரின் கடைசி பார்வையில், ஈரமான கண்களால் கல்லறைக்குள் தாழ்த்தினோம்.

கல்லறையிலிருந்து,அதிக்காரப்பூர்வ  பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள நான் ஊடக வசதி மையத்திற்கு சென்றேன், அங்கு ஜே & கே அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால்,“நிலைமை மேம்பட்டு வருகிறது” என்று கூறினார்……

பின் குறிப்பு : என் சகோதரியின் கருச்சிதைவு ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. எங்கள் நெருங்கிய உறவினர்கள் இன்னும் இந்த செய்தி தெரிய வாய்ப்பில்லை.  அவர்கள் இன்னும் நல்ல செய்திக்காக காத்திருக்கலாம்.

 

இந்த கட்டுரை முதன்முதலில்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரிண்ட்  பதிப்பில்  ஆகஸ்ட் 28 ம்  தேதி அன்று ‘அந்த இதயத் துடிப்பு எப்போது குறைந்தது’ என்ற தலைப்பில் வெளிவந்தது

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kashmir article 370 issues normal life shut down emergency issues

Next Story
அம்பேத்கர் சிலை உடைப்பும் வளரும் கும்பல் வன்முறை மனநிலையும்Ambedkar statue vandalism, nagapattinam, அம்பேத்கர் சிலை உடைப்பு, நாகப்பட்டினம், வேதாரண்யம், vedaranyam, mob violence, ambedkar statue,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com