கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பெருமைகள் எல்லாம் கேரளாவில் வலுவான நிலையில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள், திறன் மிகுந்த சமூக கட்டமைப்பு, நன்றாக ஒன்றிணைக்கப்பட்ட பல அடுக்கு பொது சுகாதார கட்டமைப்பு ஆகியவற்றையே சாரும். இந்த மாநிலம் தொழிற்துறை உற்பத்தியில் பின் தங்கியிருக்கலாம். ஆனால், அதன் மனித வளர்ச்சி குறியீடுகள் மின்னுகின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஜான் பிரிட்டாஸ்
இதர இந்திய மாநிலங்களை விடவும் அதன் சமூக குறியீடுகள் மற்றும் அனுபவங்கள் அல்லது ஒரு பாடம் கற்றுக் கொள்ளுதல் மூலம் தைரியமான முறையில் மக்களிடம் அடிக்கடி கோரிக்கைகள் வைப்பதின் மூலம் வெற்றி பெறுகிறது. இத்தகைய அம்சங்களால் கேரளா விதிவிலக்கான மாநிலமாக இருக்கிறது. அமிர்தயா சென் போன்ற அறிஞர்கள் கூட, கேரளாவின் கதை குறித்து பரந்த அளவில் பேசுகின்றனர். கேரளாவின் பெரும் பகுதி மக்களிடம் ஒரு புதிய பெருமை உணர்வு உள்ளது. இந்த மாநிலத்தின் சமூக குறியீடுகள் நோர்டிக்(ஸ்காண்டிநோவியா, பின்லாந்து, ஐஸ்லாந்து, பரோயே தீவுகள் ஆகியவை நோர்டிக் நாடுகள் எனப்படுகின்றன) நாடுகளுக்கு இணையாக உள்ளன. இது தவிர கோவிட் 19-ஐ வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வித த்தில் பணக்கார நாடுகளை விடவும் கேரளா முன்னணியில் உள்ளது.
உலமே பெரும் அளவில் இந்த சுகாதார அவசர காலகட்டத்தை எதிர்கொள்வதில் மோசமான நிலையில் இருக்கும் நிலையில், கோவிட்-19-ஐ திறன்வாய்ந்த வகையில் கேரளா எப்படி எதிர்கொள்கிறது? கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் குணம் அடைவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. ஆரம்பத்தில் கேரளா இணக்கமான முறையில் செயல்பட்டதால் கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் அதிகரித்தது. அமெரிக்காவை போல 10 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே கேரளாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொற்றுப் பரவியவர்களை கண்டறிவதில் தீவிர தன்மை மற்றும் பெரும் அளவிலான மக்களை கண்காணிப்பில் வைத்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக கேரளாவில் சமூகப் பரவல் தடுக்கப்பட்டது. கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்துதான் 90 சதவிகிதம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒப்பீட்டு ஆய்வு என்பது, எப்போதும் பல்வேறு நாடுகளின் அனுபவங்களைப் புரிந்து கொள்வதற்கான அனுமானமாக ஆகிறது. நியூயார்க், கேரளா ஆகியவற்றின் அனுபவங்களை ஒப்பீடு செய்வது இரண்டு முறைகளின் முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமான அணுகுமுறைகளை அழுத்திக் கூறுவதாகும். கேரளாவின் மக்கள் தொகை என்பது 3 கோடியே 3 லட்சம் பேர் ஆகும். நியூயார்க்கின் மக்கள் தொகை ஒரு கோடியே ஒன்பது லட்சம் பேர் ஆகும். கேரளாவில் தனிநபர் வருவாய் என்பது 2,937 டாலராக இருக்கிறது. நியூயார்க்கின் தனிநபர் வருவாய் என்பது 88,981 டாலராக இருக்கிறது. கேரளாவில் ஆயிரம் பேருக்கு 1.8 மருத்துவப் படுக்கைகள் உள்ளன. நியூயார்க்கில் ஆயிரம் பேருக்கு 3.1 மருத்துவப் படுக்கைகள்தான் உள்ளன. கேரளாவில் ஆயிரம் பேருக்கு 1.7 மருத்துவர்கள் உள்ளனர். நியூயார்க்கிலோ 3.8 மருத்துவர்கள் உள்ளனர். எனினும் கேரளாவில் மே 11-ம் தேதி வரை மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 512-ஆக இருந்தது. நான்கு பேர் மட்டுமே நோய் தொற்றால் இறந்திருந்தனர். அதே தேதி வரை நியூயார்க்கில் 3.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. 27,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கான பெருமைகள் எல்லாம் கேரளாவில் வலுவான நிலையில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள், திறன் மிகுந்த சமூக கட்டமைப்பு, நன்றாக ஒன்றிணைக்கப்பட்ட பல அடுக்கு பொது சுகாதார கட்டமைப்பு ஆகியவற்றையே சாரும். இந்த மாநிலம் தொழிற்துறை உற்பத்தியில் பின் தங்கியிருக்கலாம். ஆனால், அதன் மனித வளர்ச்சி குறியீடுகள் மின்னுகின்றன.
இந்த உலகம் மீண்டும் ஒருமுறை கேரளாவின் கதையை விவாதிக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் இயற்கை சீரழிவு தொற்று நோய்களுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டம் ஆகியவற்றில்அதன் திறனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒளிவட்டத்தைப் பெற்றிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மாநில அரசு மக்களுடன் நெருங்கியதொடர்பை கொண்டிருந்தது. மழை வெள்ளம், நிபா வைரஸ், இப்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மனித, பொருளாதார இழப்புகளை குறைக்கும் வகையில் செயல்பட்டது. எதிர்பாராத விதமாக இதன் விளைவுகள் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் கருத்தரங்கு அறைகளில், தொலைகாட்சிகள், முக்கிய செய்தித்தாள்களின் அனைத்து கருத்தியியல் தூண்டுதல்களிலும் இப்போது கேரளா ஒரு விவாதப் பொருளாகி இருக்கிறது.
கேரளா அதிக அளவு அரசியல் விழிப்புணர்வு கொண்ட மாநிலம் என்று நாம் எளிதாக சொல்லிவிடுவோம். உண்மையில் மாநிலத்தின் அனைத்து விதமான வாழ்க்கை அம்சங்களிலும் அரசியல் பரவியிருக்கிறது. மக்களுக்கும், நிர்வாக அடுக்குகளுக்கும் இடையே ஒரு நெருங்கிய உள் இணைப்பு இருப்பதன் சாதகமான அம்சமாக அது இருக்கிறது. ஒரு பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் போன்ற பெரிய செயல்பாடுகளின்போது, மாநிலத்தில் இருக்கும் நிகழ்நேர தணிக்கை எளிதாக மாறுகிறது.
இடதுசாரிகள் எப்போதுமே, மறுவிநியோக அடிப்படையிலான பொருளாதார முறைக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் வளைந்த வளர்ப்பை கண்டித்தும் குரல் கொடுத்து வருகின்றன. இடது ஜனநாயக முன்னணி அரசுகள், எப்போதுமே பொதுக்கல்வி, பொதுசுகாதாரத்தை குறிப்பாக வலியுறுத்துகின்றன. எப்போதெல்லாம் இடதுசாரிகள் ஆட்சியில் அமர்கிறார்களோ, அந்த காலகட்டத்தின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையில் இருந்து தனியார் நிறுவனங்களை விடவும், மாநில அரசின் அமைப்புகளின் நிரந்தரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளில் பெரும் அளவில் மக்கள் பலன் அடைந்ததில் இருந்து, எதிர் அரசியல் கட்டமைப்பு கூட, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிரபலமான பின்னடைவு குறித்த பயம் காரணமாக மக்களை மையப்படுத்திய இடதுசாரிகளின் கொள்களை நீர்த்துப் போகச் செய்வதில்லை.
கேரளாவில் இருந்து வந்துள்ள செய்தி என்பது, இந்த மாநிலத்தில் உள்ள தொழிலில் குறிப்பாக சுற்றுலா, விருந்தோம்பல், கல்வி, சுகாதாரம், பயோடெக்னாலஜி, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகம் ஊக்குவிக்க வேண்டும். கேரளாவின் பருவநிலை, நேசத்துடன் பழகும் மக்கள், நிலையான சட்ட ஒழுங்கு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சங்களாக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்கள்இந்த சிறிய நிலப்பகுதி மீது ஆர்வமுடன் இருக்கின்றனர். அவர்கள் இந்த மாநிலத்துடன் தொடர்பில் இருக்க தூண்டப்படலாம். மேலும், பரந்த நிபுணத்துவம், அனுபவத்துடன் திரும்பி வந்த அந்த மலையாளிகளின் தொழில் முனைவு, பயனளிக்கும் நோக்கத்துடன் செலுத்தப்பட வேண்டும். சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மலையாளியும் ஒரு சுற்றுலா விடுதியைக் கொண்டு வர முடியும். பெருந்தொற்றின் காரணமாக இழப்பை சந்தித்த மாநிலம் ஒரு பெரிய அளவுக்கு ஈடு செய்யக் கூடியதாக இருக்கும்.
ஒரு சிக்கலான சூழலின் போது மனிதாபிமான முயற்சிகளில் மூழ்வதற்காக மலையாளிகள் ஒரு பயத்துடன் வேகத்தை கொண்டிருந்தனர் என்று பெரிதுபடுத்தி சொல்ல வரவில்லை. சாதாரண நிகழ்வுகளில் மாநிலத்தை பெருமைப்படுத்த அவர்கள் பெரும்பாலும் வாய்ப்புகளை வீணாக்கி இருக்கின்றனர். இது இன்னொரு வகையான கேரள முரண்பாடு! மலையாளிகள் சர்ச்சைகள் தங்களோடு இருக்க ஆசைப்படுவார்கள். இதன்காரணமாக நிர்வகிப்பவர்கள், முடிவுகளை எடுப்பவர்கள் அற்பமான விஷயங்களுக்காக நேரத்தை வீணாக்குகின்றனர் என்ற விளைவை ஏற்படுத்தும். கேரளாவின் முன்னாள் தலைமை செயலாளர் பவுல் ஆண்டனி, ஒருமுறை, இந்த மாநிலத்தில் செழித்துக் கொண்டு இருக்கும் ஒரே ஒரு துறை சர்ச்சைதான் என்று சொல்லி இருக்கிறார்.
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துகான பேருந்தை இழக்க விரும்பவில்லை எனில், மிகவும் வேகமாக மாறி வரும் உலகத்தில் அதன் வழியில் வரும் புதிய வாய்ப்புகளை கேரளா இழந்து விடக் கூடாது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி ஒருமுறை சொன்னார்; “சிக்கல் என்ற வார்த்தையை எழுதுவதற்கு சீனர்கள் இரண்டு கோடுகள் வரையும் தூரிகையைப் பயன்படுத்துவார்கள். ஒரு கோட்டின் தூரிகை அபாயத்தை குறிக்கும். இன்னொன்று வாய்ப்புகளைக்கானது. ஒரு சிக்கலின் போது அபாயம் குறித்த விழிப்புணர்வோடு இருங்கள். ஆனால், வாய்ப்புகளை அங்கீகரிக்க வேண்டும்.”சீன வார்த்தைகளை கென்னடி தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர் பேசியது குறித்த இரண்டாவது தூரிகையை கேரளா சார்ந்து இருக்க வேண்டும். தற்போதைய துன்பத்தை வாய்ப்பாக மாற்ற வேண்டும்.
இந்த கட்டுரை முதலில், கடந்த 13-ம் தேதியிட்ட நாளிதழில் ‘The Kerala way’என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் கைரளி டி.வி-யின் நிர்வாக இயக்குனர் மற்றும் கேரள முதல்வரின் ஊடக ஆலோசகராகவும் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.