Advertisment

கற்றல் நிலத்தில் நஞ்சு!

பாகிஸ்தானியப் பள்ளிப் புத்தகங்களில், பாகிஸ்தானின் ஒற்றை சமயக் கொள்கை, நாட்டின் சித்தாந்தம் மற்றும் இஸ்லாமிய நெறிகளின் உருவாக்கம் ஆகியவற்றை விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hafiz-saeed

கலீத் அகமது

Advertisment

Snippet பாகிஸ்தானியப் பள்ளிப் புத்தகங்கள் அனைத்திலும், பாகிஸ்தானின் ஒற்றை சமயக் கொள்கை, பாகிஸ்தான் நாட்டின் சித்தாந்தம் மற்றும் இஸ்லாமிய மார்க்க நெறிகளின் உருவாக்கம் ஆகியவற்றை விவரிக்கும் விதமாக பாடப்பிரிவுகள் இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பாகிஸ்தானின் கல்வி அமைப்பின் இன்றைய நிலைப் பற்றி அறிந்து கொள்ள பாகிஸ்தான் அண்டர் சீஜ் : எக்ஸ்டீரிமிசம், சொசைட்டி, அண்ட் தி ஸ்டேட் (Pakistan under Siege: Extremism, Society, and the State ) இந்த புத்தகம் மிகவும் உதவும் என்று நம்புகின்றேன். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட மதிஹா அப்சல் இந்த புத்தகத்தினை எழுதியிருக்கின்றார். ப்ரூக்கிங்க்ஸ் இன்ஸ்டியூசன் வாஷிங்டனில் படித்துக் கொண்டிருக்கும், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் கல்வி நிறுவனத்தில் உலகக் கொள்கைப் பிரிவிற்கான துணைப் பேராரசியராக இருக்கும் மதிஹா அப்சல், பாகிஸ்தானின் தற்போதைய கல்வி நிலைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டார். ஜெனரல் ஜியா அவர்களின் ஆணைக்கிணங்க பாகிஸ்தானியப் பள்ளிப் புத்தகங்கள் அனைத்திலும், பாகிஸ்தானின் ஒற்றை சமயக் கொள்கை, பாகிஸ்தான் நாட்டின் சித்தாந்தம் மற்றும் இஸ்லாமிய மார்க்க நெறிகளின் உருவாக்கம் ஆகியவற்றை விவரிக்கும் விதமாக பாடப்பிரிவுகள் இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இந்த புத்தகத்தின் மூலம் தெளிவாகிறது.

ஹபீஸ் சயீத், உலக நாடுகளின் சபையில் தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவர். லாகூரில் இருக்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய துறைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர். அங்கு அவருடைய மாணவர்களை மூளைச் சலவை செய்து ஜிஹாதிகளாக மாற்றம் அடையச் செய்து, லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கினார். அவரின் செயல்பாட்டினால் ஊக்கமடைந்த இஸ்லாமிய குழு ஒன்று, மரணமடைந்த பஞ்சாப் மாகாணத்தின் கவர்னர், சல்மான் தஸீர் அவரின் மகனை கடத்திச் சென்றுவிட்டார்கள். மதத்திற்கு எதிராக அவர் பேசியதிற்கு அவருடைய மகனே பதில் கூறவேண்டும் என்று கூறி, ஆப்கானிஸ்தானில் ஒளிந்திருக்கும் அல்-கொய்தா இயக்கத்தினருக்கு ஆதரவு அளித்து இந்த செயலை செய்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய கல்வி நிறுவனங்களில் உண்மைக்கு புறம்பான நிறைய செய்திகள் பரப்பட்டு வருகின்றன. ஜின்னாவினால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்து அமைச்சர் பாகிஸ்தானில் இருந்து ஓடிவிட்டார் என்றும் அதில் எழுதப்பட்டிருக்கின்றது. 1962ல் ஜெனரல் ஆயுப் அவர்களின் ஆட்சியில் மதசார்பற்ற என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாமிக் குடியரசு என்றிருந்த பாகிஸ்தான், பாகிஸ்தான் குடியரசு என்று மாற்றி அமைக்கப்பட்டது. எழுத்தாளர் அப்சல், தன்னுடைய படைப்பிற்காக பாகிஸ்தானில் இருக்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் 1-10 வகுப்பினருக்கான புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். அதற்காக தன்னுடைய குழுவினரை பாகிஸ்தானில் இருக்கும் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் அமைப்பால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பி விபரங்களை சேகரித்திருக்கின்றார். அங்கிருக்கும் பாட அமைப்புகள் மதராஸாக்களில் அளிக்கப்படும் கல்வியிலிருந்து எப்படி வேறுபடுகின்றது என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.

தனியார் அமைப்புகளில் இயங்கும் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தால் இயக்கப்படும் பள்ளிகளுக்கும் இருக்கும் வித்யாசத்தினை அவர் கண்டறிந்திருக்கின்றார். இரண்டு புத்தகங்களிலும் கொள்கைகள், சித்தாந்தகள் என இரண்டும் இருக்கின்றது. ஆனால், அரசு பாடப்புத்தகங்களில் முதலில் பகுத்தறிவு தொடர்பான விளக்கங்களும், பின்பு உணர்வுப்பூர்வமான விளக்கங்களாலும் நிரம்பியிருக்கின்றது இந்த புத்தகங்கள். இம்ரான் கான் போன்ற அரசியல்வாதிகள், இரண்டு விதமான பாடத்திட்டங்கள், தேசத்தை இரண்டாக்கிவிடும் என்பதால் அதனை சரிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கின்றார். அதாவது பகுத்தறிவு என்று கூறிக்கொண்டே இஸ்லாமிய போதனைகளை பாடங்களில் கட்டாயமாக்ககூடும். இந்த ஆராய்ச்சிகளின் முடிவானது, இங்கிருக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அமெரிக்காவின் வெறுப்பினை மிக சிறப்பாக சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கின்றார்கள். 70 வருட போலித்தனத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த நாட்டில் தன்னுடைய கேள்விகளுக்கு 30% பயந்து கொண்டே பதில் கூறியிருக்கின்றார்கள். இந்த புத்தகம் பாகிஸ்தானிய மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றது. பாகிஸ்தானின் அதிகம் அறியப்பட்ட அரசியல்வாதியான திரு. இக்பால் அக்குந்த், அவர் சமீபத்தில் எழுதிய புத்தகத்தில், ஐன்ஸ்டீனின் புவியீர்ப்பு அலைகள் பற்றிய ஆராய்ச்சினை மேற்கொண்டிருக்கும் நர்கிஸ் மவல்வாலா என்ற பெண்ணைப் பற்றி பெருமிதமாக எழுதியிருக்கின்றார். பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட பார்ஸி இனத்தினைச் சேர்ந்த இப்பெண்ணை இவர் புகழ்ந்து பேச மற்றவர்களோ இப்பெண் இஸ்லாமியப் பெண் கிடையாது என்றும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி பாகிஸ்தான் புகழ்ந்து கொண்டாட என்ன இருக்கின்றது என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கட்டுரையாளர் கலீத் அகமது, கடந்த 40 ஆண்டுகளாக, பாகிஸ்தானில் இருந்து கருத்துக்களை எழுதி வருபவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 5.5.18 அன்று எழுதிய் கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் : நித்யா பாண்டியன்

Nithya Pandian Hafiz Saeed
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment