Amit Bhandari
ரஷ்யா-உக்ரைன் மோதல், இப்போது மூன்று மாதங்களை கடந்து விட்டது. இது உலகளாவிய எரிசக்தி மற்றும் பண்ட வர்த்தகத்தில் பெரிய, நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்தும். ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிசக்தி விநியோகத்தை பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகள் காரணமாக ஏற்கனவே சந்தை சிதைவுகளை கொண்டுள்ளதுடன், அதிக விலை ஏற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அவை பணவீக்கம் மற்றும் பரவலான நிதி நெருக்கடியைத் தூண்டத் தொடங்கியுள்ளன. இந்தியா, கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டு வரும்போது, அனைத்து பொருட்களுக்கான விலை அதிர்ச்சி, பொருளாதாரத்தை சீர்குலைக்கக்கூடும்.
இந்த மோதல் ஏற்கனவே உலகளாவிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை 2014 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது; எல்என்ஜியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது, உரம் மற்றும் உணவுகள் உயர்ந்துள்ளன மற்றும் நிக்கல் போன்ற பல பொருட்களின் சந்தைகள் சீர்குலைந்துள்ளன. பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. உதாரணமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.. இலங்கையைப் பொறுத்தவரை, உயர் பணவீக்கம் காரணமாக பொருளாதாரக் குழப்பம், அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததன் காரணமாக, அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் மோதல் தொடங்கும் முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. முந்தைய ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் போதுமான முதலீடு இல்லாததால் விலை உயர்ந்தது மற்றும் பற்றாக்குறை உணரப்பட்டது. பல ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அதாவது நார்வே இறையாண்மை சொத்து நிதி போன்றவை , பாரம்பரிய எரிபொருட்களான எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றில் இனி முதலீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. முதலீட்டாளர்கள் விலகி இருப்பதால், உக்ரைனில் மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. .
மோதல் இல்லாவிட்டாலும், மற்றொரு காரணி விலை அதிர்ச்சியைத் தூண்டியிருக்கலாம். இயற்கை எரிவாயு உரத்திற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவு விலை அதிர்ச்சியைத் தொடர்ந்து எரிசக்தி அதிர்ச்சி தவிர்க்க முடியாமல் வருகிறது.
எதிர்காலம் என்னவாக இருக்கும்? உக்ரைன் மோதலின் காலம், எவையெல்லாம் தீர்க்கப்படும் என்பதற்கான விதிமுறைகள், மற்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பதில், குறிப்பாக பொருளாதாரத் தடைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே நிலைமை எவ்வளவு மோசமாக மாறும் என்பது தெரியவரும்.
இந்த விளைவுகளை கணிக்க முடியாது என்றாலும், சில போக்குகள் தெளிவாக உள்ளன. முதலாவதாக, மோதல்கள் எப்படி நடந்தாலும், ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகள் தொடர்ந்து சிதைந்து கொண்டே இருக்கும். உடனடியான தேவை என்ற காலகட்டத்தில், மிக முக்கியமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற மூலப்பொருட்களுக்கான ஆதாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் தேட முயற்சிக்கும். தவிர உரம், விவசாய பொருட்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றை ரஷ்யாவுடன் தொடர்பில் இல்லாத நாடுகளின் வளங்கள் மூலம் பெற முயற்சிக்கிறது. ஏற்கனவே இயற்கை எரிவாயு சந்தையில் கடந்த ஆண்டில் 300 சதவீதம் உயர்வு காணப்பட்டது போல, இது உலக சந்தையில் அந்த பொருட்களின் மீது பாதிப்புகள், விலை ஏற்றத்தை ஏற்படுத்தும்,
இரண்டாவதாக, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் விரும்பிய அரசியல் முடிவை அடைய வாய்ப்பில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விரைவாக அமல்படுத்துகின்றன. இவை எப்போதாவது திரும்பப் பெறப்படுவது அரிது. ஈரான் 1979 முதல் அமெரி்க்காவின் பொருளாதாரத் தடையின் கீழ் உள்ளது, மேலும் வெனிசுலாவுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே தடைகள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், பொருளாதாரத் தடைகள் விரும்பிய அரசியல் முடிவை அடையத் தவறிவிட்டன - ஆட்சியில் மாற்றம் அல்லது அதன் நடத்தை.தடைகளால் பாதிக்கப்படுவது என்பதில் இரு நாடுகளை விட ரஷ்யா சிறந்த இடத்தில் இருக்கிறது. எனவே,, கட்டுப்பாடுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.
மூன்றாவதாக, எரிசக்தியின் அதிக விலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் ஆகியவை, உலகின் பெரும்பகுதி வளர்ந்து வரும் நாடுகள் தற்போதைய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏன் மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போக விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றன. . ரஷ்யா உலக நிலப்பரப்பில் 11 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் நிக்கல் போன்ற முக்கியமான பொருட்களின் ஏற்றுமதியாளர்களில் உலகின் முதல் ஐந்து உற்பத்தியாளர்களைக் கொண்டிருக்கிறது. இதற்கு மாறாக ஒரு சப்ளையர் என்ற அளவில் ஒன்றை கொண்டு ஈடுகட்ட முடியாது. மற்ற நாடுகளில் இருந்து வாங்கும் முயற்சிகள் சந்தைகளை மேலும் சிதைக்கும். 2010ம் ஆண்டில் துனிசியா மற்றும் பிற அரபு நாடுகளில் காணப்பட்டதைப் போல, வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், இது பொதுமக்களின் கோபத்தையும் அரசியல் அமைதியின்மையையும் தூண்டும்.
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள், உணவு, உரம் மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய பொருளாதார நலன்கள் மீதான தடைகளை புறக்கணிக்கும். குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த அத்தியாவசியங்களைச் சார்ந்திருப்பது அடுத்த 15-20 ஆண்டுகளில் அர்த்தமுள்ளதாகக் குறைய வாய்ப்பில்லை. தற்போது உடனடி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்ய வேண்டியது என்பது, ரஷ்யா உலகளாவிய பொருட்களின் சந்தைகளில் இருந்து தனித்து விடப்படவில்லை என்பதை உறுதி செய்ய நமது நாடு மற்ற ஒத்த பொருளாதார நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும். நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு, உலகளாவிய அரசியல் நெருக்கடிகளில் இருந்து அதன் விநியோகச் சங்கிலிகளை பாதுகாக்க பணியாற்ற வேண்டும்.
தமிழில்;ரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.