Maharashtra Political Power Shiv Sena : தற்போது மஹாராஷ்டிர ஆட்சிக் கட்டிலை கைப்பற்றியிருக்கும் சிவசேனை தொடர்ந்து ஆட்சியில் இருக்க விரும்பினால் கட்சி ஆரம்பிக்கப் பட்ட போது எடுத்த மதவெறிக் கொள்கைகளை முழு வீச்சில் அமல் படுத்தக் கூடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆட்சியை பிடிக்கும் போது தனது நிலைப் பாட்டில் மறுநோக்கு நிலையை அமல் படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப் படுவது தற்போது சிவசேனாவுக்கும் நிகழலாம்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே. அவருக்கு மஹாராஷ்டிரா அரசியலும் வணிகமும் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு மாநிலம் என்பது தெரியும் . மஹாராஷ்டிர தொழிலதிபர்களை அரசியல் பாதிக்காத வரையே அங்கு சில விஷயங்கள் செல்லுபடியாகும். மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த அரசியல் நிகழ்வுகளுக்கு விரிவான விளக்கம் கிடைத்துள்ளது. அதன் அளவு இரண்டு வெவ்வேறு பரிமாணங்களை பிரதிபலிப்பது சுட்டிக்காட்டப் பட வேண்டும்.
முதலாவது மாநிலத்தின் மிக உன்னதமான உயர்ந்த முக்கியத்துவம். கடந்த 2000 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் இரண்டாக பிரிக்கப் பட்ட பிறகு மஹாராஷ்ட்ரா நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக மாறியது மட்டுமல்லாமல், அதன் தலைநகரான மும்பை நகரமும் அரசியல் நடத்த பணம் திரட்டவும் ஒரு மைய புள்ளியாக மாறியுள்ளது. இதை புள்ளிவிவர துல்லியத்துடன் நாம் நிரூபிக்க முடியா விட்டாலும் அரசியல் பார்வையாளர்களால் அதை மறுக்க முடியாது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற நகரங்கள் கடந்த முப்பதாண்டுகளில் பல மடங்கு பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால் அவர்களால் மும்பையின் பொருளாதார வளர்ச்சியுடனான செல்வத்துடன் எக் காலத்திலும் போட்டி போட முடியாது. இந்தியாவில் அரசியலும் வணிகமும் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருப்பது போலவே தான் மகாராஷ்டிரத்தில் இருக்கிறது. அனால் இந்தியாவின் பிற பகுதிகளை விட இங்கு சற்று அதிகம். சமீபத்தில் பாஜக நள்ளிரவு நேரத்தில் அதிகார பறிப்பு செய்ததை இதற்கு உதாரணமாக சொல்லலாம். செல்வச் செழிப்பை பொறுத்த வரை மும்பையை நியூயார்க்கின் சில பகுதிகளுடன் ஒப்பிடுவது வழக்கம். ஆனாலும் அமெரிக்காவிலும் கூட மும்பையில் நடக்கும் அரசியல் வணிகம் நடந்ததாக தெரிய வில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்த கில்டட் ஏஜ் எனப் படும் 1865 முதல் 1900 காலத்திய நேரத்தில் நாட்டின் மகத்தான பொருளாதார உயர்வுடன் அரசியலும் பணமும் சம்மந்தப் பட்டிருந்ததாக சொல்லப் பட்டதுண்டு.
இது மகாராஷ்டிரமாநில வளர்ச்சியின் இரண்டாவது பரிமாணமாகும், இந்த பரிணாம வளர்ச்சியில் மூன்று தசாப்சங்களாக நீடித்த பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்து, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி தோன்றியது . இதில் சரத் பவரின் என்.சி.பியும் சேர்ந்து கொண்டது. என்.சி.பி எந்த வழியிலும் சென்றிருக்கலாம். அப்படி செல்லாதது ஒரு பிராந்தியவாத உணர்வைக் குறிக்கிறது. அதையும் மீறி, அதற்கு பெரிய கருத்தியல் அடிப்படைகள் இல்லை. மகாராஷ்டிராவின் நலன்களுக்கு அத்தகைய நடவடிக்கை தேவை என்ற வாதத்தில் எந்தவொரு கூட்டணியையும் சிவசேனா நியாயப்படுத்த முடியும்.
இதற்கு நேர்மாறாக, சிவசேனா வலுவான கொள்கை அடிப்படையில் தான் அரசியலுக்கு வந்தது. 1980க்குப் பிறகு முஸ்லீம்-விரோத நிலைப்பாட்டுடன் தான் சிவசேனா இருந்து வந்தது. காங்கிரஸ் கடந்த காலங்களைப் போலவே கருத்தியல் ரீதியாக உறுதியற்றதாக இல்லாவிட்டாலும், நம்பமுடியாத அளவிற்கு பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆனால் காங்கிரஸ் சிவசேனாவைப் போல் அல்லாமல் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு கட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அது முஸ்லிம் வாக்குகளில் 38 சதவீதத்தைப் பெற்றது, முஸ்லீம்-விரோத சிவசேனாவும் முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற காங்கிரசும் எப்படி ஒரே அணியில் இருக்க முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதை வரலாற்று ரீதியாகவும் பார்க்கலாம். சிவசேனா, அதன் ஆரம்ப நாட்களில், கருத்தியல் ரீதியாக பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது. 1960 களின் பிற்பகுதியில் பால் தாக்கரேவால் உருவாக்கப் பட்ட சிவசேனாவின் அசல் கருத்தியல் கட்டமைப்பில் குறைந்தது மூன்று குறிக்கோள்கள் இருந்தன. இதை திபங்கர் குப்தா, ராம் ஜோஷி, மேரி கட்ஸன்ஸ்டைன் மற்றும் உஷா தாக்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள படைப்புகளில் நிரூபித்துள்ளனர்: மும்பையில் மகாராஷ்டிரர்களுக்கான வேலைகளில் முன்னுரிமை, கம்யூனிச எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பது போன்ற கொள்கைகளே சிவசேனாவின் செல்வாக்கை உயர்த்தின. சிவசேனாவின் அசல் இலக்குகள் தென்னிந்தியர்கள். அவர்கள் தமது தனித்த திறன்களால் மும்பையின் முக்கிய இலக்குகளை கைப்பற்றியதையும் சிவா சேனா உடைக்க திட்டமிட்டது.
1980களின் நடுப்பகுதியில்சிவசேனாவிற்கு ஒரு கருத்தியல் மறுசீரமைப்பு தேவைப்பட்டது. இடதுசாரி தொழிலாளர் சங்கங்கள் வீழ்ச்சியடைந்தன, தென்னிந்தியர்கள் மும்பையில் மட்டுமே செல்வாக்குடையவர்களாக இருந்தனர். அதேசமயம் சிவசேனா மாநில மட்டத்தில் அதிகாரத்தை விரும்பியது, வெறுமனே மும்பை மாநகராட்சி மட்டுமே அதன் குறியல்ல . 1980 களின் பிற்பகுதியில் பாஜக தலைமையிலான அயோத்தி இயக்கத்துடன் சேனா சேர்ந்து தனது செல்வாக்கை மேலும் பலப் படுத்தியது. அதன் தொடர்ச்சி தான் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மாநில அளவில் தற்போது அதிகாரத்துக்கு வந்திருப்பது.
To read this article in English
1990 க்கும் 2004 க்கும் இடையிலான ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும், பாஜகவை விட சேனா அதிக இடங்களை வென்றது. 2009 ல், இரண்டும் தோராயமாக சமமாக இருந்தன. ஆனால் மோடியின் எழுச்சிக்குப் பிறகு, பாஜக, சேனாவை கட்டுப் படுத்த ஆரம்பித்தது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சேனாவின் 63 மற்றும் 56 இடங்களுக்கு எதிராக, பாஜக 122 மற்றும் 105 இடங்களை வென்றது. அப்போது தான் சேனா தனக்கு ஒரு மறு அவதாரம் தேவை என்ற முடிவுக்கு வந்தது. இதற்கு காரணம் எதிர்கால வளர்ச்சி மற்றும் அரசியல் அதிகாரத்திற்காக தாங்கள் மறு அவதாரம் எடுத்து அதிகாரத்தை கைப்பற்ற சேனா அடுத்த முடிவை எடுத்தது.
சேனாவின் கொள்கைகளில் பிராந்தியவாதம் ஏற்கனவே இருந்தது. மும்பை மகாராஷ்டிராவில் தான் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா மும்பையில் இல்லை, இது மும்பையின் பிராந்திய இருப்பிடத்திற்கும் அதன் அகில இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் படையினருக்கும் இடையிலான முரண்பாட்டை பிரதிபலிக்கிறது. ஏனென்றால் மோடி சகாப்தத்தின் வேலைவாய்ப்பு நெருக்கடி மகாராஷ்டிரர்களை மேலும் கஷ்டப் படுத்தியது. இது உள்ளூர் மக்களை விட புலம்பெயர்ந்தோரின் அதீத திறனை முன்னிறுத்தியது. இதனால் தான் சேனா மகாராஷ்டிரர்களுக்கு 80 சதவீத வேலைகள் என்ற யோசனையையும் தனது கொள்கையாக கொண்டு தன்னை முன்னிறுத்த முயன்றது.
இரண்டாவதாக இவற்றையெல்லாம் செயல் படுத்த மக்களிடம் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம். சேனா ஒரு நகர்ப்புறக் கட்சியாக இருந்தால் மட்டுமே அது வளர முடியாது. கிராமப் புறங்களிடமும் ஊடுருவியாக வேண்டும். அதற்கு விவசாயம் சார்ந்த திட்டங்கள் தேவை. இத் ;திட்டங்களுடன் வலுவாக இருந்த என்.சி.பி போன்ற கட்சிகளிடம் அணி சேர்ந்து அதற்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தது சேனா.சுருக்கமாக, பாஜக-சேனா கூட்டணியின் சிதைவு மோடியால் இயக்கப் பட்டது. இரு கட்சிகளுக்குமே முஸ்லீம் விரோத கொள்கைகள் நிறைந்தவை. அதே நேரத்தில் இதில் பாஜக கையாண்ட யுக்திகளால் பாதிக்கப் பட்டது சேனா தான்.
அதே நேராத்தில் பாஜகவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் சேனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது சேனாவுக்கு அதிக அனுகூலம். அதன் விளைவு தான் சேனா பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிக செல்வாக்கை அடைந்த விதம்.. ஆனாலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்திருக்கும் சேனா விரைவில் தனது இந்து தீவிரவாத கொள்கையிலிருந்து வேகமாக வெளியேற வேண்டுவது அவசியம். வேகமாக இல்லா விட்டாலும் மெதுவாகவாவது வெளியேறுவது அவசர அவசியம் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து. இன்று இது சோதிக்கப் படும் இடமாக மகாராஷ்டிரா இருக்கிறது என்பதே உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.