Advertisment

இலங்கையில் பயத்தை விளைவிக்கும் பெரும்பான்மைவாத போக்கு!

கருத்து மாறுபாடு கொண்ட மக்களவை உறுப்பினர்கள் எப்பாடு பட்டாவது போராடி பெற்ற தாராளவாத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gotabaya rajapaksa, sri lanka president, sri lanka president gotabaya rajapaksa, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, sri lanka-india relations, Sri Lanka won’t do anything that will harm India’s interests, india-sri lanka relations, இலங்கை இந்தியாவின் நலங்களுக்கு எதிராக எதையும் செய்யாது, sri lanka elections, sri lanka presidential elections, world news, Tamil indian express

gotabaya rajapaksa, sri lanka president, sri lanka president gotabaya rajapaksa, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, sri lanka-india relations, Sri Lanka won’t do anything that will harm India’s interests, india-sri lanka relations, இலங்கை இந்தியாவின் நலங்களுக்கு எதிராக எதையும் செய்யாது, sri lanka elections, sri lanka presidential elections, world news, Tamil indian express

Ahilan Kadirgamar
Advertisment

கோத்தபய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இனி இலங்கையில் பெரும்பான்மைவாத போக்கு வளரும் என பலர் பயம் கொண்டுள்ளனர். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், அந்நாடு இரண்டு யதார்த்தங்களை எதிர்கொண்டுள்ளது. ஒன்று, புதிய ஆட்சி தனக்கு கிடைத்த பெருவாரியான அதரவு தளத்தோடு அரசியல் பிடியை இரும்புகரங்கொண்டு அனிதிரட்ட ஆவலாக உள்ளது. இரண்டாவது, எதிர்கட்சிகள் பெரும் குழப்பத்தில் உள்ளது. இது சில குடிமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி ஆனதை தொடர்ந்து, ஒருவழியாக தற்போது இலங்கை பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் வளத்தை பெறவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மற்றொரு புறம், ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) வேட்பாளர் சஜித் பிரமேதசா 42% ஓட்டுகளைப் பெற்று தோல்வியடைந்த நிலையில் அக்கட்சி சீர்குலைந்து போய் உள்ளது. பலமான எதிர்கட்சியாக இருப்பதற்கு பதிலாக, தலைமைப் பதவிக்கு தங்கள் கட்சிக்குள்ளேயே சண்டையிட்டு கொண்டு கீழ்நிலையில் உள்ளது.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

இரண்டு முக்கிய அரசியல் முகாம்களில் அதிகார அணிதிரட்டலும் அரசியல் குழப்பமும் நிலவுவதோடு தங்குதடையற்ற வெற்றிக்களிப்பும் வாக்காளர் பிரிவினால் ஏற்பட்ட பரவலான பயமும் கடந்த ஐந்து வருடங்களாக பெற்ற குறிப்பிடத்தகுந்த ஜனநாயக வெளிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ராஜபக்சேயின் விமர்சகர்கள் மற்றும் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள், தமிழர்கள் பெருவாரியாக கோத்தபய ராஜபக்சேக்கு எதிராக வாக்களித்த காரணத்தினால் அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் அஞ்சிய பெரும்பாண்மைவாத ஆட்சி தற்போது அவர்கள் முன்னாலேயே உள்ளது.

அதிபர் தேர்தல் முடிவடைந்ததும் புதிய அமைச்சர்களோடு இடைக்கால அரசாங்கம் அமைந்துள்ளது. பிரதமராக அதிபரின் சகோதரர் மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளும் அதிகார சமநிலையை வரவுள்ள பாராளுமன்ற தேர்தலே உறுதி செய்யும். இந்த ஆட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை பெற வேண்டும் என கண் வைத்துள்ளது. அப்போது தான் முக்கிய அரசியலமைப்பு மாற்றங்களை செய்ய முடியும்.

To read this article in English

பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் உடனடி ஆபத்தாக இருப்பது அரசியலமைப்பின் 13 மற்றும் 19-வது திருத்தங்கள். இவை அதிகார பகிர்தல் மற்றும் அரச அதிகாரத்தின் மீதான ஜனநாயக தடுப்புகளை பேசுகிறது. இந்த இரண்டு திருத்தங்களும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப விரைவாக நிறைவேற்றப்பட்டன. மேலும் இவை இரண்டும் முழுமை அடையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எனினும் ராஜபக்சே அரசாங்கம் இவற்றில் எதையாவது மாற்றம் செய்தால் அது பின்னடைவாகவே கருதப்படும்.  இதற்கிடையில், போருக்கு பிந்தைய பத்தாண்டுகளில் பல பொன்னான வாய்ப்புகளை இழந்ததை கருத்தில் கொள்ளாமல், இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மாற்றம் கொள்ள தொடங்கியுள்ளது. உலகளவில் பொருளாதர சரிவுக்கிடையே இலங்கையின் பொருளாதர பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முந்தைய தோல்விகளிலிருந்து புதிய அரசங்கம் பாடம் கற்றுக் கொள்ளுமா? அல்லது நீண்டநாள் சீர்கெட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதர சிக்கல்களை எதேச்சதிகாரத்தின் மூலம் தீர்க்கப் போகிறார்களா?

இந்த சூழலில், வரப்போகிற மாதங்கள் மிக முக்கியமாக இருக்கப் போகிறது. இந்த சமயத்தில் பாராளுமன்ற எதிர்கட்சிகளை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் குடிமக்களின் வாழ்க்கையில் ரானுவத்தின் பங்கை சோதனை செய்வதோடு நீதிமன்றமும் ஊடகமும் சுதந்தரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் எதேச்சதிகாரத்தை தடுக்கும் எதிர்ப்பை உயர்த்தி பிடிக்க வேண்டிய நேரமிது.

தேர்தலில் பெற்ற தீர்க்கமான வெற்றியின் மூலம் தன்னை யாரும் வெல்ல முடியாது என தலைவர் நினைக்கலாம். ஆனால் பொருளாதர சிக்கலை எப்படி தீர்க்கப் போகிறது என்பதில் தான் புதிய அரசாங்கத்தின் பலமும் ஸ்திரத்தன்மையும் உள்ளது. ஈஸ்டர் நாளன்று நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலிருந்து அரசின் வருவாய் கனிசமாக குறைந்துள்ளது. மேலும் தனது முதலீட்டை குறைத்துள்ளதோடு சிக்கன நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது அரசு. இலங்கையின் மெதுவான பொருளாதார வளர்ச்சி, உயர்ந்து வரும் வெளிநாட்டு கடன், உள்நாட்டு உற்பத்தியை அலட்சியம் செய்வது, கிராமப்புற பொருளாதரத்தை புறக்கணிப்பது என பல சவால்கள் உருவெடுத்துள்ளது. அதிபரின் அரிஞர்களோ அல்லது பிரதமரின் ஜனரஞ்சக நடவடிக்கைகளோ இந்தப் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை.

பின் எப்படி புதிய அரசாங்கம் அதிகாரத்தை ஒன்றுதிரட்ட முடியும்? தொழில்நுட்ப திறன் மற்றும் அரசியல் சார்பற்ற மறைமுக வாக்குறுதியோடு ஜனாதிபதியின் எதேச்சதிகார நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதமரின் தீவிர அரசியல் நடவடிக்கைகள் ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்கும். இரட்டை அதிகார மையங்கள் நீதிமன்றத்தையும் ஊடகத்தையும் மக்கள் இயக்கங்களையும் ஒழுங்குப்படுத்தவும் முடக்கவும் முயற்சிக்கும். மேலும் அவர்கள் பாதுகாப்பு வசதிக்காக என்று கூறி மறுபடியும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இதற்கு நிதி ஆதரவிற்காக இந்தியா, சீனா, அமெரிக்கா அல்லது முதலாளித்துவ சந்தைகளை சார்ந்து இருப்பார்கள்.

அகவே இப்போதைய உடனடி தேவை பராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் சமூகத்திற்குள்ளும் எதிர்ப்பு தேவை. பிரிவினையும் பிளவுகளும் அதிகார அணிதிரட்டலுக்கு இயங்கு சக்தியாக இருக்கும் போது, இன மற்றும் மத குழுக்களை கடந்து மக்களை ஒன்றிணைத்தால் மட்டுமே எதிர்ப்பு வலுவாக இருக்கும்.

கொள்கைரீதியாக, முதல் பாதுகாப்பு இஸ்லாமிய வெருப்பு சக்திகளுக்கு எதிராக இருக வேண்டும். இவை பெரும்பான்மை மக்களிடம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. அரசியல் ரீதியாக, கருத்து மாறுபாடு கொண்ட மக்களவை உறுப்பினர்கள் எப்பாடு பட்டாவது போராடி பெற்ற தாராளவாத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். நிருவன ரீதியாக, தொழிற்சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை அடியோடு மாற்றும் நவ தாராளவாதத்தை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் வாக்குரிமை என ஆசியாவிலேயே நீண்ட வரலாறு கொண்ட இலங்கையில், ஒவ்வொரு தேர்தல்களும் நாட்டை உற்சாகப்படுத்துகின்றன. வரவுள்ள பாராளுமன்ற தேர்தலும் அதில் எந்த வகையிலும் குறைவில்லை. ஜனநாயக கடிகாரத்தை மறுபடியும் சுழற்றுவது என்பது எவ்வுளவு திறமை வாய்ந்த எதேச்சதிகார ஜனரஞ்சக ஆட்சிக்கும் வேலை செய்யாது. ஆனால், இவையெல்லாம் எதிர்தரப்பு பாராளுமன்ற சக்திகளை மறுகட்டமைப்பு செய்வதன் மூலமும் மிக முக்கியமாக எதிர்ப்பை மழுங்கடிக்காமல் இருப்பதை பொருத்தே உள்ளது.

தமிழில் : கோபி மாவடிராஜா

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment