Advertisment

புலம்பெயர் தொழிலாளர்களின் புகலிடமாக தமிழகம் உருவானது எப்படி?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரிப்பது பல்வேறு துறைகளில் சவால்களை ஏற்படுத்துகிறது. இந்த விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
புலம்பெயர் தொழிலாளர்களின் புகலிடமாக தமிழகம் உருவானது எப்படி?

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் (பிரதிநிதித்துவ படம்)

கட்டுரையாளர்: சுஷோவன் தார்

Advertisment

தமிழகத்தில் உள்ள இந்தி பேசும் தொழிலாளர்கள் பற்றிய குழப்பமான செய்திகள் கடந்த சில வாரங்களாக காற்றில் பரவி வருகின்றன. இத்தகைய கதைகள் உள்ளூர் அல்லது தேசிய தலைப்புச் செய்திகளில் வருவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் வைரலானபோது இது அனைத்தும் தொடங்கியது. வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் சரத்திற்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்களுக்கு வரிசையில் நிற்கும் படங்கள் முழு கதைக்கும் எரிபொருளைச் (எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல்) சேர்த்தன.

தமிழக அரசு புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்களை கடுமையாக நிராகரித்துள்ளது, வட இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் மாநிலத்தின் உள்கட்டமைப்பின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த பங்காற்றியவர்கள் என்பதை ஒப்புக்கொண்டது. மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பொய்யான செய்தியை பரப்பியதாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் சென்னையிலும் அதன் அருகாமையில் உள்ள தொழில்துறை தொகுப்பு மையங்களான திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டிலும் குவிந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் முக்கியமாக திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய ஜவுளி மற்றும் தொழில்துறை மையங்களில் வேலை செய்து வருகின்றனர். உண்மையில், ஹோட்டல் தொழில், ஜவுளி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிதும் சார்ந்துள்ளது.

வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆதாரமாக இருந்தது, முக்கியமாக கர்நாடகா மற்றும் கேரளாவிற்கும், குறைந்த அளவிற்கு ஆந்திராவிற்கும் ஆதாரமாக இருந்தது. இருப்பினும், 1990 களில் அதிகரித்த தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலுடன், தமிழகம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை அனுபவிக்கத் தொடங்கியது. இது நாட்டின் பின்தங்கிய தொழில்துறை மண்டலங்களில் இருந்து, முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து தொழிலாளர்களை ஈர்த்தது. ஒரு துளியாக ஆரம்பித்தது, இன்று தொழிலாளர் விநியோகத்தின் மிக முக்கியமான ஆதாரமாக வளர்ந்துள்ளது. சென்னையில் உள்ள மொத்த உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகளவில் நம்பியுள்ளன. இந்தத் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் சிறிய வேலைப் பாதுகாப்பு அல்லது ஒழுக்கமான ஊதியத்துடன் ஆபத்தான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும்கூட, இத்தகைய முறைசாரா வேலைவாய்ப்புகள், அவர்களது சொந்த மாநிலங்களில் பெரும்பாலான வாழ்வாதாரங்களுக்கு மிகக் குறைவான அணுகலைக் கொண்ட தொழிலாளர்களுக்கு ஒப்பீட்டளவில் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. அத்தகைய ஒரு தொழிலாளியின் வார்த்தைகளில், "சென்னையில், ஒரு நாள் வேலைக்கு ரூ. 400 முதல் ரூ. 600 வரை ஊதியம் பெறுகிறோம், பீகாரில் ரூ. 75 முதல் ரூ. 100 வரை ஊதியம் பெறுகிறோம்." உண்மையில், தமிழ்நாடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆதாரமாக இருந்து, பெருமளவிலான அமைப்புசாராத் துறை தொழிலாளர்களின் இலக்கு மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையே குடியேறுபவர்களில் 4 சதவீதம் பேர் செல்லும் இடமாக சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவது சவாலாக உள்ளது. முதலாளிகள் முதன்மையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உள்ளூர் மக்களை விட மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறார்கள். கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு நாளைக்கு 600 ரூபாய்க்கு வேலைக்கு அமர்த்தப்படலாம், அதே சமயம் உள்ளூர் தொழிலாளி தினசரி ஊதியம் 1,100-1,200 ரூபாயாகக் கோருகிறார். இரண்டாவதாக, அதிகரித்த ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது கண்ணியமான வேலை நிலைமைகளுக்கான கூட்டுக் கோரிக்கைகளுக்காக வெளியாட்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பது குறைவு. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தகைய கவலை புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புக்கு வழிவகுத்தது சாத்தியமில்லை.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் மற்றும் உண்மை ஆய்வாளர்கள், பரப்பப்பட்ட வீடியோக்கள் மாநிலத்தில் நிகழாத அல்லது அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைகளை சித்தரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், இதுபோன்ற பிரச்சாரங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன, அவர்களில் சிலர் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். உண்மைச் சரிபார்ப்பவர்கள் அந்த வீடியோக்கள் வேறு சூழ்நிலையில் இருந்தவை என்றும், தமிழ்நாட்டிலிருந்து அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வீடியோ கிளிப்புகள், அவற்றில் சில பழையவை, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவை மற்றும் இந்தி பேசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் தவறான கூற்றுகளுடன் எந்த தொடர்பும் இல்லை.

இரண்டாவதாக, மாநிலத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இலக்குத் தாக்குதல்கள் என்பது குறித்து அரசு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் விசாரணைகள் போதுமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதலாளிகள் மாநிலத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அவர்கள் தங்கள் தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் அல்லாத தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகளை துவக்கி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். உடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதையும், சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். இது "நமக்கு" மற்றும் "அவர்களுக்கு" இடையே உள்ள பதட்டங்களை அழிக்கவும் உதவும்.

எழுத்தாளர், இந்தியா லேபர்லைன் இயக்குனர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment