புலம்பெயர்வு குறித்த ஆய்வில் மாற்றங்கள் தேவை...

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைகளை வெளிப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறி வருகின்றன.

சமீபகாலமாக, புலம்பெயரும் இந்தியர்கள் செல்லும் நாடுகளின் தேர்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு குறித்த சவால்கள் இருந்தபோதிலும் ஆங்கிலம் பேசாத நாடுகளுக்குச் செல்ல விரும்புவது அவர்களின் முதன்மை விருப்பமாக இருக்கிறது.
எஸ்.இருதய ராஜன், எச்.ஆரோக்கியராஜ்

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுக்கும், தாங்கள் வசிக்கும் நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகிறார்கள். தெற்கு ஆசியாவை பொறுத்தவரை இது உண்மையாக இருக்கிறது. அவர்களின் முயற்சிகளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் தேதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது.

பல ஆண்டுகளாகவே, தாய்நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோரில் அதிக அளவு பங்களிப்பை பெறும் நாடுகளில் இந்தியா உயர்ந்த இடத்தில் இருந்து வருகிறது. பாரசீக வளைகுடா பகுதிகளில் வசிக்கும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர்ந்தோரிடம் இருந்து அந்த மாநிலம் பெரிதும் பயனடைந்து வருகின்றது. இதே போல பிற மாநிலங்களும் பயன் பெற்று வருகின்றன. நாட்டில் இருந்து சர்வதேச புலம்பெயர்வை அதன் பன்முகத்தன்மையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்வோரின் தனித்துவமான பண்புகள் குறித்து அதாவது அவர்கள் செல்ல விரும்பும் நாடு, புலம்பெயர்வதற்கான நோக்கம், முறை ஆகியவை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இன்றைக்கு, இந்தியர்களின் சர்வதேச புலம்பெயர்வு என்பது தென்மாநிலங்களை சேர்ந்தவர்களாக மட்டுமே இல்லை. பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் புலம் பெயர்கின்றனர். இந்த மாநிலங்களின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட பகுதியினர் புலம்பெயர்கின்றனர. எனினும், இந்தியாவில் இருந்து புலம்பெயரும் முறைகளில் மாற்றம் குறித்த புரிதலின் மீதான ஆராய்ச்சிகளின் வழிகள் குறைவாகவே இருக்கின்றன.தேசிய, மாநில அளவுகளில் நமக்கு புதிய புரிதல் தேவை. ஆனால், நாம் அதனை மேற்கொள்ளும் முன்பு, இந்தியாவில் இருந்து புலன்பெயர்வோர் மீதான இப்போதைய நிலை குறித்து ஆலோசிப்பது முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கும்.

புலம்பெயர்ந்தோர் குறித்து கேரளா தொடர்ச்சியாக எட்டு கணக்கெடுப்புகளை மேற்கொண்டது. அதே நேரத்தில் தமிழகம், கோவா,பஞ்சாப், குஜராத் மாநிலங்கள் மாநில அளவில் ஒரே ஒரு முறை மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்வு என்பது மாறுதலுக்கு உட்பட்ட சூழல் கொண்டது. அதன் பன்முகத்தன்மையை புரிந்து கொள்ளுதலும், போதுமான இடைவெளிகளில் ஆராய்ச்சியும் தேவை. இதற்கும் மேலாக மாநில அளவிலான கணக்கெடுப்புகள் சட்டரீதியான, தாமாக முன் வந்து புலம்பெயரும் மக்களைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோகமாக க் கொண்டிருக்கின்றன. வீடுகளில் நடத்தப்படும் கணக்கெடுப்புகள் குடியேறியவர்கள் அல்லது புலம்பெயர்ந்து திரும்பி வந்தோரைப் பற்றிப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றன. கேரளாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மக்கள் புலம் பெயர்வதின் நோக்கம் குறித்து புரிந்து கொள்ள முயற்சிக்கப்பட்டது.

மேலும், புலம்பெயர்வு ஆய்வு என்பது தொழிலாளர் என்ற அளவில் நின்று விடுவதில்லை. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து மேலதிக பணிகள் இருக்கின்றன. சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் மனிதர்கள் குறித்து நாம் இன்னும் ஆய்வு நடத்த வேண்டும். ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்வுகள், பல்வேறு நாடுகளில் உள்ள சிறு, நடுத்தர இந்திய தொழில்முனைவோர், புலம்பெயரும் மாணவர்கள், குடும்பமாக புலம்பெயர்தல், கணவர்களை விட்டு விட்டுச் செல்லுதல், புலம்பெயர்ந்தோர் விசாரணையின் சவால்களை எதிர்கொள்ளல். இந்த கருத்தாக்கங்களில் நடைமுறை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். கணக்கெடுப்புகளை உருவாக்குவதற்கு அப்பால், கருத்தியல் ரீதியிலான இடம்பெயர்வு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதுவும் கூட முக்கியமானதுதான். வரலாற்று ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள், புவியலாளர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரின் பார்வையில் நாம் புலம்பெயர்த்தலை புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார வல்லுநர்கள், புள்ளியியலாளர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் இ ந்த களம் பலதுறைகள் சார்ந்த அணுகுமுறை காரணமாக மேலும் வளமுடையதாக இருக்கும்.

புலம்பெயர்வு முறையானது, பாலினங்களுக்கு இடையே ஒரே மாதிரியாக இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் ஆய்வுகள் பாலின ஆய்வு கண்ணோட்டத்தின் பலனிலிருந்து புலம்பெயர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வீட்டு வேலை பணியாளர்கள், செவிலியர்கள் போன்ற பணிகளுக்காக புலம்பெயரும் பெண்கள் குறித்து சிறிய துணை தொகை குறித்து மட்டும்தான் இப்போதய ஆய்வு கவனம் செலுத்துகிறது. எனினும், புலம்பெயர் பெண்கள் என்பது மாணவர்கள், உயர் பதவியில் இருப்போர், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள் அதே போல அழகுக் கலை வல்லுநர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஹோட்டல் தொழிலாளர்கள் போன்ற பணிகளில் ஈடுபடும் பெண்களையும் கொண்டுள்ளது.

வீட்டு வேலைகள் முதல் சட்டவிரோத செயல்பாடுகள் வரை பல்வேறு நோக்கங்களுக்காக வளைகுடாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பெண்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர். எனவே, புலம்பெயர்வு மற்றும் பாலினத்தில் நமக்கு ஆழமான புரிதல் அவசியம். சமீபகாலமாக, புலம்பெயரும் இந்தியர்கள் செல்லும் நாடுகளின் தேர்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு குறித்த சவால்கள் இருந்தபோதிலும் ஆங்கிலம் பேசாத நாடுகளுக்குச் செல்ல விரும்புவது அவர்களின் முதன்மை விருப்பமாக இருக்கிறது. இந்திய மாணவர்கள் சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் முந்தைய சோவித்யூனியனில் இருந்த நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்திய-நேபாள காரிடரில் தெற்கு-தெற்கு என்ற முறையில் மாணவர்கள் செல்வதையும் காணமுடிகிறது. எனவே, புலம்பெயர் ஆய்வுகளை ஆங்கிலம் அல்லாத நாடுகளில்தான் முதன்மையானதாக மேற்கொள்ள வேண்டும்.

ஆப்ரிக்க நாடுகளின் மாணவர்களுக்கான தேர்வாக இந்தியா இருக்கிறது. ஆனால், இதுபோன்ற புலம்பெயர்வுகள் பெரும்பாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. செவிலியர்கள், ஆசிரியர்கள் இந்தியாவில் இருந்து ஜாம்பியா, எத்தியோப்பியா, எரடிரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இந்திய தொழில் முறையாளரகள் மத்தியில், தென்கொரியா, தைவான் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் நார்வே, ஸ்வீடன், பெல்ஜியன் போன்ற ஐரோப்பிய நாடுகளை நோக்கி புலம்பெயர்வது மெதுவாக தோன்றியிருக்கிறது. எனவே, ஆங்கிலம் பேசாத நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்னைகள் சவால்களை நாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

அழுத்தத்துக்கு உட்பட்ட புலம்பெயர்வுகள் போதுமான அளவு கவனத்தை ஈர்ப்பதில்லை. கடத்தி செல்லப்படுவோர் , முறையான ஆவணங்கள் இல்லாத தொழிலாளர்கள், போர் பகுதிகளில் மாட்டிக் கொண்ட புலம்பெயர்ந்தோர் அல்லது பிரச்னைக்கு உரிய இடங்கள் அல்லது பணியிடங்களில் விபத்துகளில் சிக்குவோர் போன்ற புலம்பெயர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர். போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்படுவோர் அல்லது பல்வேறு நாடுகளில் சிறைகளில் இருக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நமக்கு ஏதும் தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகரித்திருப்பது நமக்குத் தெரியும். எனினும், உயிரிழந்த தொழிலாளர்கள் குறித்த தேசிய அளவிலான, மாநில அளவிலான புள்ளிவிவரங்களில் நம்மிடம் குறைபாடு நிலவுகிறது. அண்மைகாலமாக இந்திய தொழிலாளர்கள் , ஆப்ரிக்க நாடுகளின் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்படும் செய்திகளும் வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிரேக்கம், இத்தாலி நாடுகளுக்கு மனிதர்கள் கடத்தப்படுவது குறித்த செய்திகளும் வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைகளை வெளிப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறி வருகின்றன. பல்வேறு நிகழ்வுகளில், சமூக வலைத்தளங்களில் புலம்பெயர்ந்தோரின் நிலை குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. ஆனால், புலம்பெயர்ந்தோர் நலனுக்காக சமூக வலைத்தளங்களை உபயோகிப்பதை அதிகரிப்பது குறித்து புலம்பெயர் ஆய்வுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் ஆய்வு மையங்களை உருவாக்க முடியும். அண்மையில், திருவனந்தபுரத்தில் உள்ள வளர்ச்சி ஆய்வு மையத்தில் கேரளாவில் இருந்து சர்வதேச அளவில் புலம்பெயர்தல் குறித்த ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டது. முந்தைய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலனுக்கான அமைச்சகம் 2006-ம் ஆண்டு சர்வதேச புலம்பெயர் ஆய்வுப் பிரிவு ஒன்றை உருவாக்கியது.

புலம்பெயர்வு கணக்கெடுப்பில் அனைத்து மாநிலங்களும் கேரளமாநிலத்தை போல மேற்கொள்வது, அறிவு இடைவெளியை குறைக்க ஒரு வழியாக இருக்கிறது. இறுதியாக, புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒருங்கிணைந்த தேசிய புலம்பெயர் கொள்கையை வடிவமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த கட்டுரை முதலில் நாளிதழில் ‘The way we move’ என்ற பெயரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிரசுரம் ஆனது. ராஜன், கேரளாவில் உள்ள வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராக இருக்கிறார். ஆரோக்கிய ராஜ், ஜெர்மனியின் லைப்ஜிக்கில் உள்ள கிழக்கு ஐரோப்பிய உலகளாவிய பகுதியில் லீப்னிக்ஸ் அறிவியல் வளாகத்தில் Post Doctoral Fellow வாக இருக்கிறார்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – Migration studies need to put in perspective changing patterns of movement

தமிழில் மொழிபெயர்த்தவர் – பாலசுப்பிரமணி கார்மேகம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close