2020-21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடியின் பாதையை மாற்றுமா?

Modi and Amit Shah plan பா.ஜ,க அல்லாத பிற கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றால் இந்த வெற்றி...

ப. சிதம்பரம்

இந்த இரண்டு மாதங்களில், ஹரியானாவில் பா.ஜ.க வெற்றிக்கு பங்கம் ஏற்பட்டது. மகராஷ்டிராவில் பா.ஜ.க-வுக்கு அரியணை மறுக்கப்பட்டது. ஜார்க்கண்ட்டில் தோல்வியடைந்தது. பா.ஜ,க அல்லாத பிற கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றால் இந்த வெற்றி மேலும் முன்னெடுத்துச்செல்லப்படும். இதன் அர்த்தம் என்னவெனில், பாண்டிச்சேரி, அசாம், கேரளா மாநிலங்களில் காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்குப் பின்னாலும் அணிதிரள வேண்டும். பீகார் , மேற்கு வங்க மாநிலங்களில் மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள், 2019-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நாளிதழ்களில் இரண்டு வரைபடங்கள் பிரசுரம் ஆகி இருந்தன. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 2018-ம்ஆண்டு 21 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது. 2019-ம் ஆண்டு கடைசியில் இந்த எண்ணிக்கை 15 ஆக குறைந்து விட்டது. 2018-ம் ஆண்டு 76.5 சதவிகித நிலப்பரப்பையும், 69.2 சதவிகித மக்களையும் பா.ஜ.க ஆட்சி செய்தது. 2019-ம் ஆண்டு இந்த சதவிகிதம் நிலப்பரப்பில் 34.6 சதவிகிதமாகவும், மக்கள் தொகையில் 42.5 சதவிகிதமாகவும் பா.ஜ.க-வின் ஆதிக்கம் குறைந்து விட்டது.

பெரிய மாநிலங்களில் (20 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் கொண்டவை) கர்நாடகா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. ஆந்திர பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய இதர மூன்று பெரிய மாநிலங்களின் ஆட்சிகள் தேசிய ஜனநாய கூட்டணியில் தோழமையாக இருக்கின்றன. ஆனால், எவ்வளவு நாளைக்கு அந்த ஆட்சியாளர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நீடிப்பார்கள் என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது.

அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு

2019-ம் ஆண்டு மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 353 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இதர அரசியல் கட்சிகளிடம் அதிர்ச்சியையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. பிரதமர் திரு.நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தேவைக்கு அதிகமாகவும் அனைத்தையும் வெற்றிகொள்ள வல்ல தோற்றத்தையும் பெற்றனர். எதிர்கட்சிகள் ஒரு ஓரமாக மூலையில் பின்தங்கினர். நேரத்தை வீண்டிக்காமல் முட்டாள் தனமான, இரக்கமற்ற ஆட்சியாளர்கள் என்று தங்கள் தோற்றத்தை வலுப்படுத்திக் கொள்ள. தீவிரத்தன்மையை ஒன்றன் பின் ஒன்றாக வெளிக்காட்டினர். தாங்கள் கடந்த கால அரசர்கள் போன்றவர்கள்தான் என்றும், இந்து ராஜ்யத்தை இந்து தேசத்தை கட்டமைப்பதே தங்கள் வேலை என்ற செய்தியை சொல்வதே அவர்கள் நோக்கமாக இருந்தது.

உடனடி முத்தலாக் சொல்வதை குற்றம் என்று சொல்லும் மசோதா முதல்படியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர கட்சிகளோ முத்தலாக்கை சட்டவிரோதமாக்குவதை எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தின்படி கணவர்களை சிறைக்கு அனுப்பும் பிரிவை மட்டும்தான் அவர்கள் எதிர்த்தனர். எனினும் அவை, விவாதத்தில் இருந்து வெளியேறியதால், இந்த தவறான, தீய நடைமுறைக்கு ஆதரவு அளிப்பது போன்ற தோற்றத்தை அளித்து விட்டது. அடுத்ததாக, அசாமில் நடைபெற்ற கொடூரமான தேசிய குடிமக்கள் பதிவின் காரணமாக, 19,06,657 பேர் குடியுரிமை அற்றவர்கள் அல்லது நாடற்றவர்கள் ஆகினர். ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய அரசியல் சட்டத்தின் மீதே பா.ஜ.க முன்எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்கள் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டனர். ஜம்மு&காஷ்மீரை சிதைத்தனர். மூன்று பகுதிகளை இரண்டு யூனியன் பிரதேசங்களாக குறைத்தனர். இறுதியாக குடியுரிமை (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்டு, 72 மணி நேரத்துக்குள் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதன்மூலம் குடியரசின் அடிப்படைக் கொள்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த செயல்கள் எல்லாம், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடையது அல்ல. அவை எல்லாம் அதிகாரபலம் பொருந்தியவர்களின் நடவடிக்கைகள். கொடுமைப்படுத்துதல் (‘bullying’) என்பதற்கு சொற்பொருள் அகராதியில் கட்டாயப்படுத்துதல் அல்லது தவறான முறையில் அச்சுறுத்தல், ஆக்ரோஷமாக ஆதிக்கம் செலுத்துதல் அல்லது மிரட்டுதல் என்று கூறப்பட்டுள்ளது. கொடுமைப்படுத்துபவர் அறிவுரையைக் கேட்கமாட்டார். எதிர்தரப்பின் கோணத்தை கொண்டிருக்க மாட்டார்கள். கருத்து வேறுபாட்டைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் கொடுமைப்படுத்த அனுமதித்தால், ஆதிக்கம் செலுத்துவோர் வெற்றி பெறுவர். தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆறுமாதங்களில் எதிர்கட்சிகளுக்கு என்ன நடந்ததோ அது நடக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன்.
மேற்கு வங்கத்தில் இருந்து முதல் எதிர்ப்பு அறிகுறி தோன்றுகிறது. பா.ஜ.க-விடம் இருந்து மம்தா பானர்ஜி என்ன பெற்றாரோ அதனை திருப்பிக்கொடுத்தார். மகாராஷ்டிரா தேர்தலில் சரத்பவார் தலைமையில் தீர்மானமான எதிர்மறை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்பை சரத்பவார் மேற்கொண்டு, அரசியல் யுக்தியால் பா.ஜ.க-வுக்கு முதல் முக்கியமான தோல்வியை கொடுத்தார். பாராளுமன்றம் வழியே குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த தருணத்தில்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மகராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் வெற்றி, குடியுரிமை சட்டத்திருத்த த்துக்கு எதிரான போராட்டங்கள், அனைத்து வகையிலும், ஜார்கண்ட் தேர்தல் காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கு ஊக்கமளித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கும் குறைவாக, (டிசம்பர் 12-24), தேசம் அதன் ஆத்மாவை கண்டறிந்திருக்கிறது. கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக நின்றது.
இந்த இடத்தில் இருந்து நாடு எந்த திசையை நோக்கிச் செல்லும். திரு. நரேந்திரமோடியின் மிச்சமிருக்கும் ஆட்சிகாலம் என்பது 4 ஆண்டுகள் 5 மாதங்கள். ஆகையால், டெல்லியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானதாக இருக்கும். என்ன சாத்தியம் என்றால், சில பார்வையாளர்களின் கருத்தின்படி, மக்களின் எதிர்குரல் காரணமாக திரு.நரேந்திரமோடி தன் பாதையை மாற்றலாம். என்றாலும் எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கிறது.

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முக்கியமானது

என்னுடைய கருத்தின்படி, 2020-2021ம் ஆண்டு ( அது ஒருபுறம் இருக்க, இப்போதைக்கு, தேர்தல்கள் 2022 மற்றும் 2023) நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள், மோடி தமது பாதையை மாற்றிக் கொள்ள அழுத்தம் தரக் கூடியதாக இருக்கும். நடைபெற வேண்டிய தேர்தல்கள் விவரம் இங்கே;
2020
ஜனவரி-பிப்ரவரி; புதுடெல்லி
அக்டோபர்-நவம்பர்; பீகார்
2021
பிப்ரவரி-மார்ச்; ஜம்மு&காஷ்மீர்
ஏப்ரல்-மே; அசாம், கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க தோற்கடிக்கப்படக் கூடியதாக இருக்கும். திரு.அமித்ஷா, பா.ஜ.க ஒரு வெல்லமுடியாத அரசியல் கருவி என்ற கட்டுக்கதையை உருவாக்குவார். பா.ஜ.க பணபலம் என்ற உறுதுணையால் வலுவைக் கொண்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்களின் எதிர்ப்பலை, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அதிருப்தி வேட்பாளர்கள், எதிர்பாளர்கள், கட்சிக்குள் பிளவு என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கே உரிய வழக்கமான பலவீனங்களின் தொற்றையும் பா.ஜ.க கொண்டிருக்கிறது. இந்த இரண்டு மாதங்களில், ஹரியானாவில் பா.ஜ.க வெற்றிக்கு பங்கம் ஏற்பட்டது. மகராஷ்டிராவில் ஆட்சி மறுக்கப்பட்டது. ஜார்கண்ட்டில் தோல்வியடைந்தது. பா.ஜ,க அல்லாத பிற கட்சிகள், தேர்தல் நடைபெறப்போகும் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றால் இந்த வெற்றி மேலும் முன்னெடுத்துச்செல்லப்படும். இதன் அர்த்தம் என்னவெனில், உதாரணத்துக்கு பாண்டிச்சேரி, அசாம், கேரளா மாநிலங்களில் காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க, பீகார் , மேற்கு வங்க மாநிலங்களில் மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இப்போதைய நிலையே நிலைத்திருந்தால், மேற்குறிப்பிட்ட எந்த ஒரு மாநிலத்திலும் பா.ஜ.க நிச்சயம் வெற்றிபெறாது.
இறுதி இலக்கு என்பது 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலாகும். இந்து ராஜ்ய திட்டம் 2024-ம் ஆண்டுக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 1865-ம் ஆண்டு அமெரிக்காவில் அபிரகாம் லிங்கன் செய்தது போல இந்திய அரசியலமைப்புச் சட்டம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாதுகாக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் சிதம்பரம், சிறந்த பொருளாதார நிபுணர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதியமைச்சராக பணியாற்றியவர்

தமிழில்; கே.பாலசுப்பிரமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close