Advertisment

50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கோர ஹெலிகாப்டர் விபத்து

குன்னூரில் நடந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் கொல்லப்பட்டது போல, பூஞ்ச்சில் நடந்த இதே போன்ற விபத்து நடந்தது. ஆனால், எப்படி விபத்து நடந்தது என்பது கூட தெரியவரவில்லை.

author-image
WebDesk
New Update
50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கோர ஹெலிகாப்டர் விபத்து

1963ம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்தில் இறந்த லெஃப்டினண்ட் ஜெனரல்கள் பிக்ரம் சிங் மற்றும் தௌலத் சிங்

 Man Aman Singh Chhina 

Advertisment

50 years ago another helicopter crash killing 5 : முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டது பாதுகாப்பு படையினருக்கு நடந்த மோசமான விபத்தாக கருதப்படுகிறது. இதே போல இந்தியா-சீனா இடையேயான போர் முடிவடைந்த ஒரு ஆண்டு கழித்து 1963ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் 1963ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மேற்கு விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தௌலத் சிங் மற்றும் மேற்கு விமானப்படை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் எர்லிக் பின்டோ ஆகியோர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். இதற்காக டெல்லியில் இருந்து டகோட்டா ஹெலிகாப்டரில் அவர்கள் வந்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் உள்ள சாவடிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில் ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்ட, ஜம்மு&காஷ்மீர் உத்தரவு விமான அதிகாரி ஏர் கமடோர் முராத் சிங் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங், ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், 15 கார்ப்ஸ் உள்ளிட்டோர் மற்றொரு டகோட்டாவில் உதம்பூரில் இருந்து வந்தனர்.

ஆபரேஷன்களின் போது அதற்கு பொறுப்பான 25வது காலாட் படை பிரிவு கட்டளை பொது அதிகாரி மேஜர் ஜெனரல் கே.என்.டி.நானாவதி அலௌட் ஹெலிகாப்டரில் பூஞ்ச் வந்தார். இது இறுதியில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த அனைத்து அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். பூஞ்ச் காலாட்படையின் தளபதி பிரிகேடியர் எஸ் ஆர் ஓபராய் மற்றும் விமானத்தின் லெப்டினன்ட் லால்வானி உள்ளிட்ட படை பரிவாரத்தின் ஒரு பகுதியாக இருந்த இதர அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

விமான லெப்டினன்ட் எஸ் எஸ் சோதி, விபத்து நடந்த ஹெலிகாப்படரை ஓட்டிசென்ற பைலட் ஆவார். ராணுவ ஜெனரல்கள் எங்கே ஆய்வில் ஈடுபட உள்ளார்களோ அந்தப் பகுதியில் நவம்பர் 19ம் தேதி உளவு பார்க்கும் பணியில் இவர் ஈடுபட்டார்.

இந்த ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற பிறகு அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஒய்.பி.சவான் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அறிக்கை தாக்கல் செய்தார்.

கிடைக்கப்பட்ட விவரங்களை அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆய்வுக்கு கிளம்பவுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, விமான லெப்டினன்ட் எஸ் எஸ் சோதியிடம், விமானப்படையின் துணை மார்ஷல் பின்டோ, இரண்டு ஹெலிகாப்டர்களையும் நீங்கள் பைலட்டாக இயக்கியிருக்கிறீர்களா என்று கேட்டார். லால்வானியால் இயக்கப்பட்ட மற்றொன்று ஜலாஸில் தரையிறங்க முடியுமா என்றும் கேட்டார். அதற்கு சோதி, சோதனை சாவடியில் உள்ள ஹெலிபேட் மிகவும் சிறியது. இரண்டு ஹெலிகாப்டர்களை நிறுத்த இயலாது என்று சொல்லி இருக்கிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் தௌலத் சிங்குடன் இது குறித்து பின்டோ ஆலோசனை செய்தார். முதல் பகுதி பயணத்தில் ஒரே ஒரு ஹெலிகாப்டரில் மட்டும் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் அருகில் உள்ள சூரன்கோட், ராணுவ நிலையத்துக்கு வந்த பின்னர் இரண்டாவது ஹெலிகாப்டரை உபயோகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏர் கமடோர் முராத் சிங் உடன் நேரடியாக சூரன் கோட் வந்துவிடும்படி பைலட் லால்வாணிக்கு அறிவுறுத்தப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல்கள் தௌலத் சிங் மற்றும் பிக்ரம் சிங், மேஜர் ஜெனரல் நானாவதி, ஏர் வைஸ் மார்ஷல் பின்டோ மற்றும் பிரிகேடியர் ஓபராய் ஆகியோர் சோதியின் ஹெலிகாப்டரில் ஏறினர். ஆய்வு பயணத்தின் முதல் பகுதி முடிவடைந்ததும், 15 மைலுக்கு அப்பால் உள்ள இரண்டாவது சோதனை சாவடிக்கு செல்வதற்காக மீண்டும் அவர்கள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். செல்ல வேண்டிய பாதை பூஞ்ச் நதியை ஒட்டி இருந்தது.வான்வெளியில் 3 நிமிடங்கள் பறந்த பிறகு, ஹெலிகாப்டர் வலதுபுறம் திரும்பியது.

அப்போது அந்த பகுதியில் , ஆற்றின் குறுக்கே இருந்த இரண்டு இணையான தந்தி கேபிள்களில் அது பறந்து சென்றதாகத் தெரிகிறது. ஒரு கேபிள் 300 அடி உயரமும், இன்னொரு கேபிள் 100 அடி உயரமும் கொண்டதாகும். 200-250 அடி உயரத்தில் கேபிளில் ஹெலிகாப்டர் மோதியது. இதனால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தோராயமாக 400 கெஜத்துக்கு அப்பால் ஆற்றுப்படுகையில் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி ஜெனரல் ராவத் மற்றும் அனைவரும் கொல்லப்பட்டது போல இந்த விபத்தும் நடந்தது. அதே நேரத்தில் இந்த பூஞ்ச் விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. 600 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர்பைலட் சோதி. அதே போல அவருக்கு ஜம்மு-காஷ்மீர் வான்வெளி முழுவதும் அத்துப்படியாக இருந்தது. நவம்பர்19ம் தேதி நடைபெற்ற உளவு பயணத்தின் போது கேபிள்களை அவர் கவனிக்கத் தவறி விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதில் மற்ற முரண்பாடுகளும் இருந்தன. 1953ம் ஆண்டு டெவோன் விமானம் விபத்துக்குள்ளானபோது, அதில் இருந்த பல்வேறு ராணுவ ஜெனரல்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். அப்போது ராணுவ தலைமையகம் வெளியிட்ட விரிவான உத்தரவுகளில், ஒரு விமானத்தில் ஒரே நேரத்தில் எத்தனை மூத்த அதிகாரிகள் செல்ல லாம் என்பது குறித்து கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவுகள் 1963ம் ஆண்டிலும் அமலில் இருந்தன.

“இந்த உத்தரவுகளில் ஹெலிகாப்டர் பயணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த உத்தரவுகளின் உணர்வுகளை அதிகாரிகள் அறிந்திருந்தனர். பூஞ்ச்சில் இரண்டு ஹெலிகாப்டர்கள் இருந்தன. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத அளவுக்கு குறுகிய இடமாக இருந்தது. எச்சரிக்கை அறிவுத்தல்களை மீறி ஒரே ஒரு ஹெலிகாப்டரில் பயணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது,”என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சவான் கூறியிருந்தார்.

விமானப்படையின் தளபதி உத்தரவின் பேரில் ஒரு நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. (இதில் கண்டுபிடிக்கப்பட்ட அம்சங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.)

தற்செயலாக, அந்த நாளில் பூஞ்ச் விபத்து ஒன்றும் மட்டும் நடக்கவில்லை. ஏறக்குறைய அதே தருணத்தில் பனிஹால் கணவாய் அருகே டகோட்டா விமானம் விபத்துக்கு உள்ளானது. அதில் இருந்த 8 பேர் கொல்லப்பட்டனர். விமானிகளுக்கு பயிற்சி அளித்த பறக்கும் அதிகாரி எஸ்.எஸ்.சித்து, பைலட் அதிகாரி டி.குப்தா, பைலட் அதிகாரி வி.கே.சஹஸ்ரபுதே, பைலட் அதிகாரி எம்.வி.சிங் மற்றும் ராணுவம் சாராத அரசு ஊழியர்கள் 4 பேர் ஆகியோர் உயிரிழந்தனர். நவம்பர் 24 அன்று செங்குத்தான மலையின் ஓரத்தில் விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.

தமிழில் ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bipin Rawat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment