Advertisment

கிறிஸ்துமஸ் பாட்டி/ தாய்!

Mother Christmas : கிறிஸ்துமஸ் (தாத்தா) சாண்டா கிளாஸை பொதுப்பாலினத் தன்மை கொண்டதாக ஆக்கவேண்டும் என்று உலக அளவில் சிறிது காலமாக ஒரு குரல் ஒலித்துவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
christmas, father christmas, santa claus, gender, gender battles, gender neutrality, indian express news

christmas, father christmas, santa claus, gender, gender battles, gender neutrality, indian express news, கிறிஸ்துமஸ், சான்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, பாலின சமநிலை

கிறிஸ்துமஸ் (தாத்தா) சாண்டா கிளாஸை பொதுப்பாலினத் தன்மை கொண்டதாக ஆக்கவேண்டும் என்று உலக அளவில் சிறிது காலமாக ஒரு குரல் ஒலித்துவருகிறது.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

சாண்டா கிளாசை கிறிஸ்துமஸ் தாத்தா/ தந்தை என முகநூல் தளத்தில் குறிப்பிட்ட ஒரு பெண்மணி, இணையத்தில் குடைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். பிரிட்டனின் பிளைமௌத் பகுதியில் வசிக்கும் அவர், ரேமண்ட் பிரிக்சின் புத்தகத்தில் இருந்ததையே தான் குறிப்பிட்டதாகச் சொன்னார். அந்தப் புத்தகத்தில்,“கிறிஸ்துமஸ் தந்தை என்பவர் ஒரு உழைக்கும் நபர். நாள் முழுவதும் கடினமாக உழைக்கிறவர்; அதுவும், மனைவியோ கலைமான்களோ எந்த உதவியும் செய்யாமல்! பரிசுப்பொருள்களின்றி ஏமாற்றத்துடன் தனிமையான கிறிஸ்துமசைப்போன்ற சூழலில் வீட்டுக்குத் திரும்புகிறார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இணைய உலகமானது, சிறிது காலமாக, ஒரு தாக்குதலைப்போல ஒன்றைச் சொல்கிறது. ” சாண்டா கிளாஸை பொதுப்பாலினத் தன்மை கொண்டதாக ஆக்கவேண்டும்’ என்று உலகின் ஒரு பகுதியில் சிறிது காலமாக ஒரு கோரிக்கை முகிழ்த்துவருகிறது. சாண்டா கிளாசின் மனைவி ஒரு நீண்டதொரு பெருமூச்சு விடுவதைக் கேட்டிருகிறோமா? அந்த ஒரு நாளுக்காக, அங்கே, அந்த மனிதர், பரிசுப்பொருட்களைக் கட்டியெடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடையச் செய்வதற்காக, மிகவும் குறைவான நேரமே தூங்கி, விடுமுறை நாளுக்கான விளையாட்டு முகமூடியை மாட்டிக்கொண்டு செல்வதை, குளிர்காலத்தின் கனப்பு அடுப்பின் நெருப்புக்கு அருகில் தன் கால்களை வைத்தபடி அவரின் மனைவி, புகைபோக்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிய பார்த்தபடி யோசித்துக்கொண்டிருக்கிறாள்.

எப்படியாக இருந்தாலும் பெரும்பாலான இணையக் கொந்தளிப்புகளுக்குப் பின்னால், சில கருத்துக்கணிப்பு இருக்கத்தான்செய்கின்றன. ஒரு வரைகலை நிறுவனம் அப்படியான ஒரு கருத்துக்கணிப்பை கடந்த ஆண்டு நடத்தியது. சாண்டா கிளாசை எப்படி மறு உருவாக்கம்செய்வது என்பதில், ஒல்லியான ஜீன்ஸ், டாட்டூ, ஐபோன், கிரஸ்ஸிங் டயட் ஆகியவற்றுடன் - பனிப்பொழிவின் மீது இல்லாதபடி, சாண்டா ஒரு பையைத் தூக்கிக்கொண்டுபோவது என சித்திரப்படுத்தியது. அதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. வேண்டாம், நன்றி. பாலினச் சண்டைக்குள் பெண்கள் இப்படி சொல்லக்கூடும்: ‘தந்தை கிறிஸ்துமஸ், தாய் கிறிஸ்துமஸ் அல்லது இடையிலான வேறொரு பெயர் என மறுபெயரிடுவது போன்ற பிரிவினைகள் அவ்வளவு நல்லது இல்லை.” கிறிஸ்துமசுக்கு முன்னர், கிறிஸ்துமசுக்கு முந்தையநாள் கொண்டாட்டமத் தயாரிப்புகள் இருக்கும். அப்போது, தந்தையர்கள் அவர்களின் காலணித்துணியை துவைத்து உலவரவைப்பதைப் பற்றி, அவர்களுக்கான ரொட்டிகளை அவர்களே செய்துகொள்வதைப் பற்றி, பாலைக் காய்ச்சிக்கொள்வதைப் பற்றி, பரிசுப்பொருள்களை அவர்களே எடுத்துக்கொள்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்லாமல், ஆண்டின் மற்ற நாட்களிலும் தாய்மார்கள் செய்யும் அனைத்தையும் அவர்களே செய்வதைப் பற்றி யோசிக்கலாமே!

பெண்கள் தங்கள் தலைமுடியை வெள்ளையாகவோ வாராமலோ வைத்துக்கொள்ளட்டுமே. அவர்கள் மனமார வெடித்துச் சிரிக்கட்டுமே! அவர்கள் வயிறு பெருத்துவிடுமென முன்பே சொல்லிக்காட்டாதீர்கள்.நள்ளிரவில் அவர்கள் திண்பண்டம் திண்பதைக் கண்டு முகம்சுளிக்காதீர்கள். இரவுநேரங்களில் பனிச்சறுக்கு வண்டிகளில் அவர்கள் சுதந்திரமாக சவாரிசெய்வதை இந்த உலகம் வரவேற்றால், அதுவே அவர்களுக்குப் போதுமானது.

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment