பூபேந்தர் யாதவ், கட்டுரையாளர்
இந்தியாவில் நிறைய பேர் பிப்ரவரி 19ம் தேதியை இந்தியாவின் உண்மை தேசபக்தரும், இந்தியாவின் தலைசிறந்த அறிவாளியுமான மாதவ் சாதாசிவ் கோல்வால்கரின் நினைவை போற்றுவர்.
குருஜி என்று அழைக்கப்படும் கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ ஆகியோரின் தத்துவங்களில் உள்ள தேசியவாத சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டார். அவர் சமூகத்திற்கும், தேச வளர்ச்சிக்கும் மறக்கமுடியாத அளவிற்கு ஒரு துறவியாக பங்களிப்பு செய்துள்ளார்.
துறவிகளின் வாழ்க்கையில் இருந்து பார்க்கும்போது இந்தியா மாறுபட்ட வண்ணங்கள் நிறைந்ததாக தெரியும். இந்த மாமனிதர்கள் அவர்களுக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு சுயநலமின்றி வாழ்ந்தவர்களுள் குருஜி முதன்மையானவராக கருதப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் எண்ணிலடங்கா தியாகங்களையும், தேச வளர்ச்சிக்காகவும் பங்களித்துள்ளார். 1906ம் ஆண்டு பிறந்த இவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தன் முதுநிலை கல்வியில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னை மையத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது. பொருளாதார தடையால், அவர் பாதியிலேயே தனது ஆராய்ச்சியை கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராக பணியாற்றினார். பின்னர், குருஜி என்று பிரபலமானார். அவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பண்டிட் மதன் மோகன் மால்வியாவுடன் நெருங்கிப் பழகினார்.
அவர் சட்டமும் படித்தார். ஆனால், சமூகத்தின் மோசமான மனநிலை குறித்து வருந்தினார். அப்போது இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததும் உண்மை. இந்த வருத்தமே அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமி அக்கான்தானந்தாவின் வழிகாட்டுதல்படி, ஆன்மிகத்தை நோக்கி செல்வதற்கு காரணமானது. தியாகம் மற்றும் பற்றற்ற நிலை ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை சுவாமி அக்கான்தானந்தாவின் வழிகாட்டுதல்படி உணர்ந்தார்.
அப்போது அவர், இந்திய கலாச்சாரத்தில் நிறைய தியாகங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒருவர் தனது கடமையை தியாகம் செய்வது பாவமாக கருதப்படுகிறது என்பதை உணர்ந்தார். ஒருவர் ஈகோவையும், தனிப்பட்ட ஆசைகளையும் துறப்பதே உண்மையான தியாகம் என குருஜி உணர்ந்தார். 1937-ம் ஆண்டு சுவாமி அக்கான்தானந்தா, குருஜியை முறையாக குருவாக அறிவித்தார். அதே ஆண்டில் சுவாமி தனது பூத உடலை துறந்தார்.
சங்கத்தின் தேச மற்றும் சமூக விழிப்புணர்வை எடுத்துச்செல்வதற்கு கேசவ் பாலிராம் ஹெட்ஜேவர் சிறந்தவர் என கோல்வால்கர் கண்டுபிடித்தார். கோல்வால்கர், ஹெட்ஜேவரிடம், சங்கத் தலைவரின் பணி, தன்னார்வலர்களை உருவாக்க வேண்டும் என்பது என்று கூறினார். அவர்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், தங்களிடம் ஒப்படைக்கப்ட்ட பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து முடித்துக்கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தேசத்திற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையுமே தியாகம் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். டாக்டர். ஹெட்ஜேவரால் அப்படிப்பட்ட தன்னார்வலர்களை உருவாக்க முடியும். முதலில் நான் அவரை நல்ல பணி செய்யக்கூடிய தலைவராக மட்டுமே கருதினேன். ஆனால், அவர் தனது தன்னார்வலர்களுக்கு நல்ல அம்மா, அப்பா மற்றும் குருவாகவும், அன்பின் திருவுருவாகவும் இருப்பார் என்பதை பின்னாளில்தான் உணர்ந்தேன் என்று குருஜி கூறுகிறார்.
கிளர்ச்சியான பேச்சுக்கள் குறுகிய கால பலன்களையே அளிக்கும். பேச்சில் பணிவு இருந்தால் மட்டுமே அது நீண்டகால பயனைத்தரும் என்ற ஹெட்ஜேவரின் நம்பிக்கை குருஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாட்டிற்காக நாம் உழைக்கும்போது, நமது பேச்சில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இளகிய மனம் கொண்டவராக இருக்க வேண்டும்.
ஸ்ரீ அரபிந்தோவின் படிப்பினைகளும் குருஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவரின் உலகை படைத்தவர், தாய் பகவதி, நாம் ஒழுக்கமுள்ள ஆன்மாக்களாக வாழ வேண்டும். எல்லா இடத்திலும் அன்பையும், நேர்மறை சிந்தனைகயையும் விதைக்க வேண்டும் என்ற அவரின் வாக்குகளை ஏற்றுக்கொண்டவர். இதிலிருந்து பார்க்கும்போது, அவரது தேசியவாதம், ஈகோ கொண்டதும், தங்களிடம் உள்ள படைகளை பயன்படுத்தி மற்றவர்களை ஆள்வதும் கிடையாது. அது ஆன்மிகம் கலந்த கலாச்சார தேசியவாதமாக இருந்தது. இந்த தேசியவாதம், அதன் மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்திலும், அவர்களை சிறந்தவர்களாக்குவதிலும், உலகத்திற்கே முன்னோடியாக இருந்த இந்தியாவின் பழம்பெருமையை மீட்டெடுப்பதிலுமே இருக்கும். நாடென்பது ஒரு துண்டு நிலமோ அல்லது அரசியல் ஆட்சி நடைபெறும் இடம் என்பதன் அர்த்தமோ அல்ல என்ற விவேகானந்தர் மற்றும் அரபிந்தோவின் வாக்குகளை ஏற்றுக்கொண்டார். நாடு நம்மை பேணிக்காக்கும் நமது தாய். இந்த நவீன காலத்தில், குருஜியின் தத்துவங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாட்டின் நன்மைக்காக, அவர் நம்மை சிறந்த மனிதராக இருக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறார். இந்திய பாரம்பரியத்தில் மனிதன் உயர்ந்தவன் இல்லை. ஒருவரின் சிறப்பான செயல்களை நாட்டிற்காக கொடுப்பதே சிறந்தது. நாட்டிற்கு நன்றியுடன் இருப்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குருஜி தேசத்திற்காக ஒற்றுமையை விரும்பினார். அவர் ஒரு உறுதியான கருத்தியல்வாதியாக இருந்தபோதும். வாழ்க்கை குறித்த அவரது புரிதல் ஒலி தர்க்கத்தில் மூழ்கியிருந்தது. இந்த நேரத்திற்கு தேவையான மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர் நம்பினார். மூடநம்பிக்கையின் அடிப்படையிலும், பகுத்தறிவுக்கு பொருந்தாத பாரம்பரிய விஷயங்களையும் அவர் ஒதுக்கினார்.
அவர் உலக வாழ்க்கையை துறந்தால், அவரது பரம்பரைக்கு என்னவாகும் என்று அவரது பெற்றோர் கூறியபோது, குருஜி எனக்கு குடும்பத்தில் நம்பிக்கையில்லை. எனது லட்சியம் சமூகத்தின் நலன் ஒன்றே என்று உறுதியாக கூறியதன் மூலம், அவரின் தேசப்பற்று எவ்வளவு சிறந்தது என்று தெரிகிறது.
குருஜி வர்ணாசிரம தர்மத்தை ஏற்கவில்லை. அவர் திறந்த மனதுடைய, பயமற்ற தேசியவாதி. கடவுளை உண்மையாக தொழுவது மனிதர்களுக்கு செய்யும் நண்மைகளிலே அடங்கியுள்ளது என்று குருஜி நம்பினார். மதம், ஜாதி பாகுபாடுகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. தேசத்தின் ஒற்றுமை மற்றும் நேர்மை தேசத்தின் இலக்கு, பணி மற்றும் கலாச்சார அடையாளங்களை மதிப்பதில் உள்ளது என்று நம்பினார். அவரின் ஆற்றலை முழுமையாக உணர இன்று இந்தியா அவரின் வாழ்க்கையை மீண்டும் சென்று வாழ்ந்து பார்த்து, அவர் போதித்தவைகளை முழுமையாக உணரவேண்டும்.
இக்கட்டுரையை எழுதியவர் பூபேந்தர் யாதவ், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்.
தமிழில்: R.பிரியதர்சினி.